மேற்கத்திய தொலைக்காட்சிகளில் நடக்கின்ற ரியாலிட்டி ஷோக்கள் வேறு வேறு வடிவங்களில் தமிழ் தொலைக்காட்சியையும் ஆக்கிரமித்துவிட்டது. மெஹா சீரியல் அழுகைகளில் இருந்து மக்களை ஓரளவேணும் இந்த நிகழ்ச்சிகள் காப்பாற்றினாலும் அண்மைக்காலமாக இவை மக்களை ஏமாற்றுவதுபோல் தோன்றுகின்றது, கிரிக்கெட்டில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளிலும் இவர் தான் வெற்றியாளர் என்ற முடிவு நடுவர்களாக இருப்பவர்களால் முதலிலேயே எடுக்கப்பட்டு பின்னர் மக்களை ஏமாற்ற எஸ் எம் எஸ் வாக்களிப்புகள் இணையத்தில் வாக்களிப்புகள் என்ற கபட நாடகங்கள். ஒரு சிறிய தொகைமக்கள் தான் இந்த வாக்களிப்புகளில் கலந்துகொண்டாலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.
விஜய் டிவிதான் இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்த புண்ணியத்தைச் சேர்த்ததுடன் இந்நிகழ்ச்சிகளில் நாடகங்களையும் அழுகைகளையும் நிகழ்த்தி என்றும் முதல்வனானது.
ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் என்பவற்றை ஒளிபரப்பி தங்கள் கஸ்டத்தைக் காட்டியது. சிம்பு பிருத்திவிராஜ் உமா ரியாஸ் சண்டையும் அந்தச் சண்டையில் சிம்பு தனக்கு நடிக்கத்தெரியாது என்ற உண்மையைச் சொன்னதும் ஹைலைட்டான விபரங்கள். உமா ரியாஸ் பிருத்திவி ஜோடிக்கு முதல் பரிசுகொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின்னர் மக்களுக்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்ற முடிவு நடுவர்களின் காமெண்ட்ஸிலிருந்து தெரியவந்துவிட்டது.
சில நடுவர்கள் ஏதோ உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் பேசுவதும் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு மேடைக்குச் சென்று ஆண் பெண் வேறுபாடின்றி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதும் திரும்பதிரும்ப பார்க்க சகிக்கமுடியாத காட்சிகள்.
விஜயை வழக்கம் போல் காப்பி பண்ணி சன் ஒரு நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் கலைஞர் டிவி தன் பங்குக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நாலாவது பகுதியாக(சீசன் 4) நடத்துகின்றது.
மானாட மயிலாட சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அதில் ஆடிய சில கலைஞர்களுக்கு படங்களில் ந்டிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரின் கலைத்திறமையை உலகிற்க்கு காட்டும் நிகழ்ச்சிதான் ஆனால் தமிழருக்கு என்ரு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சாரத்தை அனேகமான தடவை இந்த நிகழ்ச்சி மீறியிருக்கின்றது. அதிலும் நமீதாவும் ரம்பாவும் நடுவர்களாக இருக்கின்றபோது உடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றே தோன்றுகிறது.
நடந்துமுடிந்த சீசன் 3 இறுதிப்போட்டியில் பலரின் பாராட்டைப்பெற்ற ஒரு ஜோடிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணம் அவர்கள் அதிகம் ஓட்டுப்பெறவில்லையாம். ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அறிவிக்கின்றார்கள். பரிசுத்தொகை 10 லட்சம் ஆகவே நடனம் ஆடும் ஒரு ஜோடி ஒரு லட்சம் பெறுமதியான ஓட்டுகளை தங்கள் மொபைலில் இருந்து அளித்து அந்தப் பணத்தைப் வெற்றியீட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.
சூப்பர் சிங்கர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இந்தமுறை வெற்றி பெற்றவரைவிட இன்னொருவர் மிக அழகாகப் பாடினார் ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்தில் இருந்து நடுவர்கள் அனைவரும் பெற்றி பெற்றவரையே புகழ்ந்து தள்ளினார்கள். இணையத்தளத்தில் ஏனோயோருக்கு வாக்களிக்கும்போது பக்கம் வேலை செய்யவில்லை ஆனால் அவருக்கு வாக்களித்தால் மட்டும் பக்கம் வேலை செய்து உங்கள் ஓட்டுக்கு நன்றிகள் என செய்தி வருகின்றது. (இந்தப் பிரச்சனை பற்றி விஜய் டிவியின் கருத்துக்களத்தில் பெரிய விவாதமே நடைபெற்றது).
பாடல்போட்டியில் பாடுபவருக்கு பின்னால் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவார்கள். இதெல்லாம் தேவையா பாடுகின்றவரின் கவனத்தை திசைதிருப்பாதா?
பெரும்பாலும் பாட்டுப்போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாடவும் வருகின்றார்கள் நடுவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை விஜய் டிவி சூப்பர் சிங்கரில் முன்னாள் தொகுப்பாளினிக்கு கல்தா கொடுத்த காரணமே இன்னொருவரை(பெரிதாக பாடமுடியாதவர்) நடுவர்கள் அடிக்கடி புகழ்ந்தது. இதனால் அவர் கோவித்துக்கொண்டுபோய்விட்டார்.
ரிமோட் உன் கையில் தானே இதெல்லாம் பார்க்கவேண்டுமா எனக்கேள்வி கேட்பவர்களுக்கு ஓரிருவர் பார்ப்பதனால் தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரிகின்றது.
நமது நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றார்கள். அவர்களின் எந்தக் கருத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கண்டுகொள்வதேயில்லை.
நமீதா ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த உடை
நல்லதொரு நிகழ்ச்சியைக் கத்தியே கொல்லவேண்டுமா அணுகுங்கள் டிடி
தமிழைக் கொல்வது இந்த நாயர் தம்பதிகளுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி.
யுகேந்திரனாக இருந்தவரை யுகேந்திரன் வாசுதேவ நாயராக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
3 கருத்துக் கூறியவர்கள்:
இந்த கருத்துக்கள் உளறலாக தெரியவில்லை.. உண்மையாகவே.......
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
உண்மையை சொல்லி இருக்கீங்க. இன்னொரு முக்கியமான விடயம் "மானாட மயிலாட " நிகழ்ச்சியை தொகுக்கும் ஆண் அறிவிப்பாளர் (அவரை அறிவிப்பாளர் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறது...) அவர் ஏதோ உளறிக் கொண்டே இருப்பார். அவர் பேசுவது அவருக்கே தெரியாது. (நானே நிறைய முறை யோசித்து இருக்கேன்...இது தமிழ் மொழியா என்று...) இவர்கள் எல்லாம் தேவை தானா தொகுப்பாளராக...(உங்களுக்கெல்லாம் சின்னத் திரையே போதும்... அங்க தான் பெண்களை கொல்றீங்களே.....ஏன் இங்கேயும்????)
வாழ்த்துக்கள் நண்பரே.... இப்படி சில குறைகளை சுட்டிக் காட்டுங்க.... சிலர் மாற்றம் பெறுவாங்க.....
Post a Comment