*** இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை ***

நடக்குமா நடக்காதா என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் தொடர்கள் வரும் மாதம் 9ந்திகதி பெங்களூரில் ஆரம்பிக்க் இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸி அணி இந்தியா வந்தடைந்தது. கடந்த முறை இந்தியா சென்ற அணியைவிட மிகவும் பலம் குன்றியதாகவே இம்முறை ஆஸி அணி காணப்படுகின்றது. இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் குறைந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவம் குறைந்தாலும் எந்த நேரமும் விஸ்வரூபம் எடுக்ககூடிய அணிவீரகளான மைக்கல் கிளார்க், சைமன் கட்டிச், ஷேன் வாட்சன்(ஐபிஎலில் கலக்கியவர்) ஹசி, ஸ்டுவேர்ட் கிளார்க், பிரட் ஹாடின் என இளைஞர்கள் பாண்டிங்குக்கும் ஹைடனுக்கும் கைகொடுப்பார்கள். பந்துவீச்சில் பிரட் லீ, மிக்சல் ஜோன்சன் என்ற வேகங்களுடன் புதிதாக சில வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சைமண்ட்ஸ் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக(மீன் பிடிக்க சென்ற பிரச்சனை) அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை இது ஆஸியைப் பொறுத்தவரை இழப்புதான். ரசிகளுக்கும் ஹர்பஜன் சைமண்ட்ஸ் தர்க்கம்களையும் தகராறுகளையும் பார்க்கமுடியாது .


இந்திய அணியைப் பொறுத்துவரை இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் இலங்கைஅணியிடம் வாங்கிக்கட்டினார்கள். முரளி, அஜந்தா மெண்டிஸ் சுழலில் கும்ளேயின் அணி பரிதாபமாகத் தோற்றது. ஆனால் இம்முறை சொந்தமண் என்ற பலமும் விக்கெட் காப்பாளர் டோணி மீண்டும் அணிக்கு வந்துள்ள பலமும் (இலங்கையில் தினேஷ் கார்த்திக்கும் பட்டேலும் சொதப்பினார்கள்)ஹர்பஜனின் சுழலும் கைகொடுக்கலாம்.

மும்மூர்த்திகளில் கங்குலிக்கு இடம் கொடுக்காதது இந்திய அணிக்கு சிலவேளைகளில் பாதகமாகமுடியலாம். இதேவேளை சச்சின், ராவிட் இந்த தொடரிலும் சோபிக்காவிட்டால் ஓய்வெடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். இலங்கையில் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் சொந்த மண்ணிலாவது அந்த சாதனையை முறியடிப்பாரா? பொறுத்திருந்துபார்ப்போம்.

ஆஸி அணிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் உதவி செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்தவர் என்பதால் வீரர்களின் பலம்,பலவீனம் நன்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கேர்ஸ்டனும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

அடுத்தமாதம் தொடக்க‌ம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கின்றது. வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? .


3 கருத்துக் கூறியவர்கள்:

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

கிரேக் சாப்பல் ஏற்கனவே இந்திய துடுப்பாட்ட பந்துவீச்சு தந்திரோபாயங்கள் குறித்து ரிக்கி பொண்டிங் உடன் கலந்துரையாடியுள்ளார். எனினும் இந்திய அணிக்கே வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

பொறுத்திருந்துபார்ப்போம் நிர்ஷன் இந்தியாவை திடமாக நம்பமுடியாது எப்போகாலைவாருவார்கள் எனத் தெரியாது. பலமுறை நண்பர்களுடன் பந்தயம் செய்து இந்திய அணி தோற்றபோதெல்லாம் தோற்றுப்போயிருக்கின்றேன்.

-/பெயரிலி. சொல்வது:

பதிவுக்கு நன்றி.

-/ இலங்காத்தமிழ்ப்பதிவன்.