நாளை விநாயக சதுர்த்தி வழக்கம் போல் நம்ம தொலைக்காட்சி முட்டாள் பெட்டிகள் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முதலாக திரைக்குவந்தே சில மாதங்கள் ஆனா டப்பா படங்களை ஒளிபரப்புவார்கள். நமீதா, ப்ரியாமணி, நயந்தாரா போன்ற நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி விஷ்சஸ் என தமிங்கிலிஸில் ஒரு வரி சொல்லிவிட்டு தங்கள் கலைச் சேவை பற்றி பேட்டிகொடுப்பார்கள். காலையில் மட்டும் ஒரு அரைமணி நேரம் ஒரு நூல் பூண்டவர் விநாயகர் பற்றி செத்துப்போன மொழியில் இருக்கும் ஸ்லோகங்களைக் கொண்டு ஏதோ சொல்வார்.
இது வழமையான நடைமுறை ஆனால் இம்முறை விநாயக சதுர்த்தியை கலைஞர் தொலைக்காட்சி மட்டும் வித்தியாசமாக விடுமுறைதினம் என ஏனோ அழைக்கின்றது. சகலதொலைகாட்சிகளும் விநாயகர் சதுர்த்தி என அழைக்க இவர்கள் மட்டும் விடுமுறைதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என விளம்பரம் செய்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி என அழைத்தால் இவர்களின் கட்சிக்கொள்கைக்கு பிழையானது என நினைக்கின்றார்கள் போல. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் பக்திப்படம் ஒளிபரப்புகின்றார்கள்.
ஏன் இந்த முரண்பாடு?
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
வந்தி,
தேவையான பதிவு.
சில ஊடகங்கள் மற்ற ஊடகங்களிலிருந்து தம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக இவ்வாறான வார்த்தைப்பிரயோக விளையாட்டுகளில் ஈடுபடுவதுண்டு. புரிதலிலும் யதார்த்தத்திலிருந்தும் வேறுபடும் சில விடயங்களால் சமுதாயத்துக்கும் மதத்துக்கும் பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தற்போதைய போக்கு மறைத்துவிடுகிறது.
//விநாயகர் சதுர்த்தி என அழைத்தால் இவர்களின் கட்சிக்கொள்கைக்கு பிழையானது என நினைக்கின்றார்கள் போல. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் பக்திப்படம் ஒளிபரப்புகின்றார்கள்.//
வெள்ளி ஞாயிறோ.. பக்திப்படம் என்பது பார்வையாளர்களுக்காக.! ஆனால் மதப்பண்டிகைகளை கொண்டாடாமல் இருப்பது என்பது கொள்கை முடிவு. ஆகவே சரியென்றே நினைக்கிறேன். எது எப்படியாயினும் மொக்கைப்படமும், நடிகைகள் பேட்டியும் உறுதி.!
புரிந்துணர்வுக்கும் கருத்துக்கும் நன்றிகள் நிர்ஷன்.
தாமிரா அவர்களே உங்கள் கருத்து எனக்குப் புரிகின்றது ஆனால் விடுமுறைதினத்தை முன்னிட்டு என்ற பதம் தேவையற்றது நாளை இந்த இந்த நிகழ்ச்சிகள் என விளம்பரப்படுத்தியிருக்கலாம். இதே நடைமுறையை கலைஞர் தொலைக்காட்சி தீபாவளிக்கு செய்யவில்லை. தீபாவளியும் மதப் பண்டிகை என நினைக்கின்றேன்.
இதே கருத்துதான் எனக்கும். :)
எனக்கும் இதே கருத்துதான். :)
ம்ம்ம் வியாபார நோக்கு தான் பிரதானம்..
Post a Comment