எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என கண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.
பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.
உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான். 
பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.
கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.
இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.
கிருத்திகன்
வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார்.
நாளை(06.06.2010) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு : பாடங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால் அண்மைக்காலமாக பதிவுகள் எழுதுவதை குறைத்திருந்தேன். ஆனாலும் இந்தப் பதிவு என் நட்புகளுக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவசரமாகவும் நெருக்கடியிலும் எழுதியது.
பின் பின்குறிப்பு : லோசன் பற்றியும் கிருத்தி பற்றியும் கவிதை (ஏன் இந்தக் கொலைவெறி என கேட்காதீர்கள்) தான் எழுத இருந்தேன். எது எனக்கு வருமோ அதுதான் சரி என்பதால் நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
உள்குத்து : லோஷனின் பச்சைக் கலர் படம் அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையுடன் தொடர்புடையது என நினைக்கவேண்டாம்.
Suriya takes Vishwanath & Sons home to Coimbator
-
Suriya spent every school summer of his childhood in Coimbatore, and on
Sunday evening he stood on a stage there and read the route back out from
memory:...
3 days ago


18 கருத்துக் கூறியவர்கள்:
//லோஷனின் பச்சைக் கலர் படம் அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையுடன் தொடர்புடையது என நினைக்கவேண்டாம்
அவ்வ்வ்வ்வ்வ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..
இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ஆஹா...
நன்றி. லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
ஆகா..
அத்தோட நிறுத்தியது நல்லதாப் போச்சு.. ;)
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா நன்றி ...
இன்று பரீட்சையை வைத்துக் கொண்டு லொள்ளைப் பாரேன்..
//இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு //
அவ்வ்வ்வ்..
அப்படியே லண்டனிலிருந்து வரும்போது நம் அன்புக்குரிய மாமாவும் தொப்பை என்ற உடன் வரனும்.. ;)
கீத் என்ற கிருத்திகனுக்கும் எனது முற்கூட்டிய வாழ்த்துக்கள்..
// " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்" //
இதைக் கற்பனை செய்து பார்த்தேன்...
இக்கி இக்கி இக்கி.... :D
// கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. //
அவ்வ்வ்...
இது எனக்குத் தெரியாதே குருவே?
பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா.... :)
மெய் சொல்லப் போறன் கிருத்திகனுக்கு முற்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... ;)
(கவிதையா?
கிருத்தி தானே? எழுத்துப் பிழை, குற்றுத் தவறவிடப்பட்டது எதுவும் இல்லைத்தானே சீனியர்? :P )
அண்ணல் லோஷனுக்கும், கீத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
//பாடங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால் அண்மைக்காலமாக பதிவுகள் எழுதுவதை குறைத்திருந்தேன்//
எங்கேயோ கேட்ட கேள்விக்கு இங்கே பதில் கிடைத்திருக்கிறது...:)
இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இரு சகோதரங்களுக்கும் அன்பு அண்ணனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மாமா இரண்டுபேரும் இன்று தான் உண்மை வயசை சொன்னிங்க. லோஷன் தாத்தா வந்தி தாத்தா இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள். அவருடன் சிறிது காலம் ஒன்றாய் இருந்தது ரொம்ப சந்தோசம்.
இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
லோஷன் அண்ணாவுக்கும் கீத்துக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
// எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து....
ஆகா... கீத்தைக் குழப்படிக்காரன் எண்டே முடிவு செய்திட்டியளோ? அவன் குறும்புக்காரன்... ரொம்ப நல்லவன்...(நக்கலுக்கு இல்லை) சகலகலா வல்லவன்...
வாழ்த்துக்கள் இருவருக்கும்
இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
லோஷன் அங்கிளுக்கும், கீத் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் என்பதை விட கிரிக்கட் பதிவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனலாம் என நினைக்கிறேன்
வந்தி அண்ணா, லோசன் அப்புச்சிக்கும் இல்லை இல்லை அண்ணாவுக்கும் கிருத்திகனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்
இருவருக்கும்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
:)
Post a Comment