பதிவரசியல்
சில நாட்களாக பதிவுலகம் கண்டங்களையும் தாண்டி அல்லோலபட்டுக் கொண்டிருக்கின்றது. வலை என்பது ஒன்லைன் டயறி என வரைவிலக்கணம் கொடுக்கின்றது புரொஜக்ட் மனேஜ்மெண்ட். வலையை தனிப்பட்ட விடயங்களை விட எத்தனையோ ஆக்கபூர்மான விடயங்களுக்கும் பயன்படுத்தலாம், பயன்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் குரோதங்களையும் காழ்ப்புணர்ச்சிகளையும் காட்ட வலையுலகை நாறடித்திருக்கின்றார்கள்.
வலை என்பது ஒருவர் தன்னுடைய கருத்துகளை அல்லது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். அவரின் கருத்துக்கள் பிடிக்கவில்லையா? வாசித்துவிட்டு சிரித்துவிட்டுப் போகவேண்டியதானே. அதனைவிட்டு விட்டு மற்றவர்களைத் தாக்கித் தான் ஏனையவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம். மற்றவர்களும் பாராட்டும் படி எழுதவேண்டும் அல்லது பலர் படிக்கும் திரட்டிகளில் இணைக்கவேண்டும் இதை எல்லாம் செய்யாமல் கடை விரித்தேன் கொள்வார் எவரும் இல்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.
அதிலும் அண்மைக்காலமாக மறைவாக்கு நேர்வாக்கு பிரச்சனைகளும் போலி ஐடிகளும் குழாயடிச் சண்டையாகவே மாற்றிவிட்டது. தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நிறுத்தும்படி சில சண்டைகள் நடந்துமுடிந்துள்ளன / நடக்கின்றன. இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருதரும் புரபெசனல் எழுத்தாளர்கள் அல்ல. பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்கு எழுதத் தொடங்கி தேர்ந்த எழுத்தாளர்களாகி புத்தகம் கூட வெளியிட்டுள்ளார்கள். ஒரு சிலரின் தேடுதல்கள் ஆச்சரியப்பட வைக்கும். எத்தனை விதமான விடயங்களை எழுதுகின்றார்கள். ஒரு சிலரோ தனது துறை சார்ந்த பதிவுகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். வாசகனுக்கு சலிப்பூட்டாமல் எழுதுவது என்பது ஒரு கலை.
சிலரோ தங்களின் சுயவிளம்பரத்திற்க்காக ஏனையோர்களால் கொஞ்சம் கவனிக்கப்படும் பதிவர்களைத் தாக்கி எழுதுவதும் அவரோ இவரோ எனக் குற்றம் சாட்டுவதும் அவர்களின் எதிர்காலம் அரசியலில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுகின்றது. பலரால் ரசித்து எழுதிய சிலர் ஒரே வகையான பதிவுகளினால் சலிப்பூட்டுகின்றார்கள் என்பது அவர்களின் பதிவுகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இருந்து விளங்குகின்றது.
வலைப் பதிவுகள் பற்றி ஆங்கிலத்தில் புத்தகங்கள் வந்தாலும் இன்னும் தமிழில் நல்லதொரு புத்தகம் வரவில்லை என நினைக்கின்றேன். அண்மைக்காலத்தில் அதிகரித்த வலைப்பதிவர்களின் எண்ணிக்கை ஆரோக்கியமானது தான் ஆனாலும் புதிதாக எழுத வருபவர்கள் இந்தக் குழாயடிச் சண்டைகளைப் பார்த்து ஒதுங்கிப் போனாலும் ஆச்சரியமில்லை.
சில காலத்திற்க்கு முன்னர் நண்பர் ஒருவர் "வலை எழுத எதாவது படித்திருக்கவேண்டுமா?" என என்னைக் கேட்டார். இதுவரை டிப்ளோமா இன் புளொக் என்ற கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை விரைவில் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் உங்களுக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனை எழுதுங்கள் என்றேன் இன்றைக்கு அவர் பலரால் கவனிக்கப்படும் ஒரு வலைப்பதிவராகிவிட்டார்.
மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல)
கால்ப்பந்து 2010
உலகத்தின் மிகப் பெரும் விளையாட்டுத் திருவிழா நாளை தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கின்றது. உலகத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 25% மக்கள் இந்த விளையாட்டை ரசிக்கப்போகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்கு பெற்றோல் விலை ஏற்றம், நயந்தாரா பிரச்சனை, ஜெனிலியாவின் பித்தலாட்டம், குளிர் போன்ற விடயங்களை விடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிப்பாரா? ரூனி தங்கக் காலணி வாங்குவரா? மீண்டும் ஆர்ஜென்டினா கப் தூக்குமா என்பவை தான் அனைவரினதும் பேச்சாக இருக்கும்.
செம்மொழி
சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள ஒரு நூலத்திற்க்கு செல்லவேண்டி இருந்தது. நூலகத்தின் முகப்பில் நூல் நிலையம் வரவேற்கின்றது என ஆங்கிலம், சீன, அரபி உட்பட 10 மொழிகளில் தமிழ் மொழியிலும் வரவேற்பு பலகை வரவேற்றது. 1934ல் கட்டப்பட்ட அந்த நூலத்தில் தமிழ் மொழி பார்த்ததும் புல்லரித்தது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என யார் சொன்னாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய தமிழ் என்றைக்கும் வாழும்.
ஐஃபா
சென்றவாரம் ஐஃபா விருதுகள் வழக்கம் போல் இந்திய திரைப்படங்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக தென்னிந்திய சினிமாவினர் இதனைப் பகிஸ்கரித்தாலும் இன்னொரு காரணம் ஐஃபா விருதுகள் பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்களுக்கே வழங்கப்படும். காரணம் இது சர்வதேச ஹிந்தியன் திரைப்பட விருது. ஆனாலும் இம்முறை சிறந்த நடிகைக்கான விருதை ஜெனிலீயா தவறவிட்டாலும் அவருக்கு இம்முறை ஆஸ்கார் கிடைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அவரின் நடிப்பு உலக மகா நடிப்பு. ட்விட்டரிலும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கின்றார்.
ரசித்தது
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
11 கருத்துக் கூறியவர்கள்:
ஹிஹிஹி... நான் தான் முதல்ல் :P
பதிவரசியல்: ஆளைவிடுங்க சாமி
கால்ப்பந்து: கொஞ்ச நாளைக்கு பொழுது போகும் :)
செம்மொழி: நூலகத்தில் மட்டுமில்லை அண்ணா, வைத்தியசாலை(NHS), போக்குவரத்து (TFL) போன்ற இடங்களிலும் தமிழை பயன்படுத்தி அவர்களது சேவையைப் பெறலாம். ஏன் ஒயிஸ்டர் புதுப்பிக்கும் தொடு உணர் இயந்திரத்தில் கூட தமிழ் மொழியில் அதனைப் பயன்படுத்த ஒரு அமைப்பு உள்ளதே கவனிக்கவில்லையா!!!
ஐஃபா: :)
ஏதோ ஒண்ணு குறையுதுங் ண்ணா...எதிர்பார்த்த ஒண்டு இல்லிங்ணா..ஆறதலா கடைசி மட்டும் படிச்சன் கடைசியில ஏமாத்திட்டீங்ளே...ஏன்..??ஏன்..?
பதிவரசியல் பத்தி ரொம்ப நல்லவே எழுதி இருக்கிங்க நண்பா..
//ஏனையோர்களால் கொஞ்சம் கவனிக்கப்படும் பதிவர்களைத் தாக்கி எழுதுவதும் அவரோ இவரோ எனக் குற்றம் சாட்டுவதும் அவர்களின் எதிர்காலம் அரசியலில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுகின்றது.//
சிலர் தாங்களே தங்களுக்கெதிரா தாங்களே கமண்ட் அடிக்கிறது.. பிறகு குய்யோ முய்யோ எண்டு கத்திறது.. பிறகு கமண்ட் அடிச்சவனைக் கண்டு பிடிச்சுத்தா எண்டுறது.. நாங்களும் பைத்திக்காரன் மாதிரி அவங்கள் சொன்னத நம்பி தொழிநுட்பங்களை வைச்சு IPய வைச்சுக்கண்டுபிடிச்சா அது நீதான் எண்டா.. கடைசில என்னயே சாட்டுறியா எண்டுட்டு எங்களுக்கு எங்கெங்க மைனஸ் வோட்டுப் போடமுடியுமோ போடுறது..
இது மட்டுமல்ல சில பிரபல பதிவர்களின் பெயரில் புளோக்கர் ID தொடங்கி தளங்களில் வந்து கமண்ட் அடிக்கிறது.. நேற்று என் தளத்தில நடந்தது... இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் சேவை எங்கள் நாட்டுக்குத்தேவை ஏதாவது கட்சில சேர்ந்தாங்கள் எண்டா பெரிய ஆளா வரலாம்.. அதை விட்டுட்டு ஏன் இங்க வந்து பதிவுலகத்தை நாசமாக்கிறாங்களோ
//மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல) //
அதே.. அதே..:))))
//கால்ப்பந்து 2010//
ஹிஹி இந்த விளையாட்டு விளையாட மட்டும் ஓரளவு தெரியும்.. மற்றபடி அறிவு பூச்சியம்.. பிடித்த அணி பிரேசில் சின்ன வயசில இருந்து..:)
//செம்மொழி//
தமிழ் வாழ்க..;)
//ரசித்தது//
NO COMMENTS..;)
பதிவரசியல் - குப்பை.
மொக்கைப் பதிவ - அதுவும் ஒருவகைதான். ஒன்று சிறந்தது இன்னொன்று தாழ்ந்தது என்றில்லை.
கால்பந்து - இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவிற்கு, கிறிக்கற் அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்று நம்புகிறேன். ;)
செம்மொழி - அழகு.
ஐஃபா - அரசியல்+சினிமா கலந்த கூத்து
ரசித்தது - :)))
கருத்துரைக்கு பிந்தியமைக்கு மன்னிக்கவும் சைக்கிள் கப்பில் ஒரு பதிவா? வாழ்த்துக்கள். பதிவுலக அரசியலா? இல்லை அது சாக்கடை மற்றும் படி வழக்கம் போல ஆனால் இம்முறை ஆண்டி மாறின படத்தை காணலையே மாமா
பதிவரசியல்:
என்னை போருத்தவரி ப்திவரசியல் ஆரோக்கியமாக இருக்கும் போல இருக்கு! பல தூங்கி கொண்டிருந்த பதிவர்களை அது எழுப்பி விட்டு இருக்கிறதே! :P
கால்ப்பந்து
:))))
செம்மொழி
அவர்கள் வளக்கிறார்கள்! நாங்கள்.....
ஜெனிலியாவுக்கு ஒஸ்காரில் சிறப்பு பரிசு இருக்குதாம்
சூப் பெயர் மாறிவிட்டதா?
பதிவரசியல் காரணமாக பதிவு எழுதுவுலகம் வெறுத்துவிடலாம்
கால்பந்து உலக கிண்ணம் - இனி கொஞ்ச நாள் கிரிக்கட்டை மறந்து இருக்கலாம்.
செம் மொழி - கருணாநிதி என்பவரின் மொழியை பற்றியா சொல்லியிருக்கிறீர்கள்
ஐபா - பெரிதாக பாதிப்பில்லை என்றே தோணுகிறது.
எங்கையா வழமையான படம்?????
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
யோ வொய்ஸ்
//எங்கையா வழமையான படம்?????
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
வை பிளட்? சேம் பிளம்..
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........
வலையுலக அரசியல் - இன்னும் கதைக்க வேண்டுமா? மனசை ஏன் மேலும் ரணப்படுத்த வேண்டும்?
ஆனால் வந்தி என்னைப் பொறுத்தவரை யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.. இதை எழுது இதை எழுதாதே என்று..
காரணம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகால்களே இந்த வலைத் தளங்கள்.
யாரும் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டுமே.
என்ன ஆகப் போகிறது?
தனிமனிதத் தாக்குதல்களா>? நீங்களும் பதில் கொடுங்கள்.
முடிந்தது.
நல்லவரா? ஒதுங்கி விடுங்கள். :)
மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல) //
உண்மை.. மிக உண்மை.
சீரியஸ் பார்ட்டிகளின் சில ரொம்ப சீரியசான விஷயங்கள் எங்களுக்கு மொக்கை ஆவதில்லையா? ;)
கால்ப்பந்து 2010 //
ஒரு ப் கூடி விட்டது ;)
நானும் இன்று ஒரு விரிவான பதிவு இடுகிறேன்.
ரசித்தது? = ஹீ ஹீ
Post a Comment