வணக்கம் என் பெயர் கிரீஷ். என்னை உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். பல்கலைக் கழகம் ஒன்றில் பொறியியல் படிக்கும் ஒரு சாமனியன். பின்னேரங்களில் வெள்ளவத்தைச் சந்தியிலும், இராமகிருஷ்ண வீதி கடற்கரையிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவன். இரவில் வலைகளில் மேய்வதும் ட்விட்டரில் ட்விட்டுவதும் பேஸ்புக்கில் உலாவுவதும் எனக்கு பிடித்தவை.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல் இருக்கின்றது அதுதான் என் சின்ன பிளாஷ்பேக்கை உங்களுக்குச் சொல்லபோகின்றேன். இந்தக் கதை நடந்து சில மாதங்களாகிவிட்டன ஆனாலும் இப்போதுதான் சொல்ல நேரம் வந்தது இல்லை இல்லை இப்போதுதான் என் பழைய பரணில் இருந்து தட்டி எடுத்தேன். முன்னுரை போதும் கதைக்கு வருகின்றேன்.
"ஹாய் ஆர் யூ இன் கொழும்பு?"
பேஸ்புக்கில் என் தேவதையிடம் இருந்து எனக்கு மெசேஜ் நடுநிசியில் வந்திருந்தது ஏனோ அந்த நேரம் என்னால் பதிலளிக்கமுடியாமல் "யா" என அடுத்த நாள் காலையில் பதிலளித்தேன்.
காலையில் அம்மாவின் சுப்ரபாதத்திற்க்கு முன்னம் என் போன் "நான் தேடும் செவ்வந்திப்பூ" ரிங்ரோனியது. புது நம்பர் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தபடி "ஹலோ" என்றால். "அடேய் இராட்சதன் எப்படி இருக்கின்றாய்" என அதே ஸ்வீட் குரல்.
"ஏய் நீ எப்படி லோக்கல் நம்பரில்" ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் நான்.
"ஹாஹா" என தன் ரேட்மார்க் சிரிப்புடன் தான் உறவினர் ஒருவரின் திருமணத்திற்க்கு கொழும்பு வந்திருப்பதாகவும் ஒரு சில நாட்கள் நாட்டில் நிற்பேன் எனவும் கூறினாள். பின்னேரம் நேரமிருந்தால் தான் தங்கியிருக்கும் உறவினர் வீட்டில் என்னைச் சந்திக்கச் சொல்லி விலாசத்தையும் சொல்லி பாய் சொல்லிவிட்டாள்.
கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின்னர் அவளைச் சந்திக்கும் ஆவலில் நான் நேரத்திற்க்கே பஸ் ஏறிவிட்டேன். பஸ்சினுள் அவளைச் சந்தித்த நாட்களை மீண்டும் நினைத்தேன்.
அவள் பெயர் ஜெசி. எங்கள் பாடசாலை மாணவர் ஒன்றுகூடலில் பக்கத்து பாடசாலையிலிருந்து வந்த தேவதை. அவளுக்கு அருகில் அமர்வதற்க்கு எங்கள் மாணவர்களிடையே பலத்த போட்டி. அதிர்ஷ்டம் எனக்கு ஏனோ அன்றைக்கு அடித்துவிட்டது. கோவில் திருவிழா காலத்தில் ஒன்றுகூடல் நடந்தபடியால் நான் விரதம் அதனால் மாமிசம் சாப்பிடாமல் சைவ உணவுப் பக்கம் சென்றுவிட்டேன். அங்கே அவளும் சைவ உணவு. அன்றைக்கு அவள் என்னருகில் சாப்பிடும்போது இளையராஜாவின் வயலின் ஆயிரம் தாமரை மொட்டுகளை பின்னணி இசைத்தது.
"ஹாய் நான் ஜெசி நீங்கள்"?
"நான் கிரிஷ் சுருக்கமாக கிரிதரன்"
அப்புறம் நான் எங்கே சாப்பிட்டது அவளின் பேச்சும் சிரிப்பும் என்னைச் சாப்பிடவிடவில்லை.
இப்படி ஆரம்பமான எங்கள் சந்திப்பு உறவினர் ஒருவரின் திருமண வைபத்தில் கொஞ்சம் கொஞ்சம் என்னுள் காதலாக மலர்ந்தது. ஏஎல் நேரம் காதல் கத்தரிக்காய் என விழுந்தால் படிப்புக்கு ஆபத்து என நினைத்து நான் என் காதலைச் சொல்லவில்லை.
என் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்ற சுயநலத்தில் நான் அன்றைக்கு என் காதலைச் சொல்லவில்லை. சில நாட்களின் அவளும் உயர்கல்விக்காக கனடாவிற்க்குச் சென்றுவிட்டாள் இடையில் சிலகாலம் ஈமெயில்கள் மூலம் எங்கள் தொடர்பு இருந்தாலும் பின்னர் காலமும் நேரமும் அவளை தற்காலிகமாக மறக்கச் செய்துவிட்டன. சில மாதங்களில் அவளின் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தபோது பேஸ்புக்கில் அவளைக் கண்டுபிடித்து பிரண்டாக்கினாலும் காதல் கத்தரிக்காயைப் பற்றிக் கதைக்க என் ஈகோ விடவில்லை.
இம்முறை எப்படியும் அவளிடம் என் காதலைச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் இறங்கவேண்டிய இடம் பழைய நினைவுகளை உதறவிட்டு அவளின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.
அழைப்பு மணியை அடிக்க திறந்தது என் தேவதை தான். முன்னர் பார்த்ததை விட அழகாக கொஞ்சம் குண்டாக அதே சிரிப்புடன் "வாங்கோ" என்ற படி கதவைத் திறந்தவள் உள்ளே அமரும் படி சொல்லிவிட்டு தன்னுடைய மடிக் கணணியில் ஏதோ பிரச்சனை சரி செய்யச் சொன்னாள்.
கணணியைச் சரி செய்தபடி சுற்றும் முற்றும் பார்த்தால் வீட்டில் ஏனையவர்களைக் காணவில்லை. எங்கே எனக்கேட்டாள் அனைவரும் சொப்பிங் சென்றுவிட்டார்கள் எனக் கூறினாள்,
டேய் கிரிஷ் இதுதான்டா நல்ல தருணம் உன் காதலைச் சொல்லிவிடு என என் மனம் சொன்னாலும் மூளையோ இப்போ வேண்டாம் எனத் தடுத்து வெற்றியும் அடைந்தது.
தனிமை முன்னாள் இருப்பதோ என் தேவதை ஆனாலும் என் காதலை கட்டுப்படுத்திக்கொண்டு நான் அவளைப் பார்க்க அவளோ நிலம் நோக்கி நான் நோக்காக் கால் என்னை நோக்கி நகுந்தாள்.
"நாளைக்கு நீங்கள் ப்ரியோ?"
அடிப்பாவி மவளே நீ கேட்டால் நான் எப்பவும் ப்ரீ என நினைத்துக்கொண்டே " இல்லை நாளைக்கு எனக்கு லெக்சர்ஸ் இருக்கு ஆனால் கட் பண்ணலாம்"
"அப்போ தன்னை எம்சிக்கும் ஹவுஸ் ஓவ் பாஷனுக்கும் கூட்டிக்கொண்டூ போவியளோ"
"சரி"
அடுத்தநாள் ஷொப்பிங் என அவளுடன் நான் அலைந்ததில் நாள் போனதே தெரியவில்லை. சில நேரம் தெரிந்தோ தெரியாமலோ என் கையைப் பிடித்தவள் எனக்கு பிடித்த ஐஸ்கிறீம் ஃபிளேவர் தான் தனக்கு பிடிக்கும் என என் ஐஸ்கிறீமை வாங்கிச் சுவைத்தாள்.
"படிப்பு முடிய என்ன பிளான் ஜெசி"
"வேறை என்ன நல்ல வேலை எடுக்கவேண்டும்"
"அதற்க்குப் பிறகு என்ன?" விடக்கண்டனாக நான்.
"ம்ம்ம் என்ன ஒன்றுமில்லையே" மெல்லிய நக்கல் சிரிப்புடன் "அக்கா அண்ணா சொல்கின்றவருக்கு கழுத்தை நீட்டவேண்டும்"
"ஏன் உனக்கென ஒரு விருப்பமும் இல்லையோ"
"ஹாஹா நான் நல்ல பிள்ளை எனக்கு எந்த விருப்பமும் இல்லை, நீங்கள் என்ன கேட்க வாறியள் என்பது புரிகிறது ஆனால் இப்ப என்னால் ஒன்றும் சொல்லமுடியாது, சரி சரி நேரம் போய்விட்டது இனிப்போவமோ" என நழுவிட்டாள்.
இதன் பின்னர் அவள் மீண்டும் கனடாவிற்க்கு திரும்பச் செல்லும் வரை அவளுடன் சுற்றித் திரிந்தாலும் நான் வாயே திறக்கவில்லை.
கனடா சென்றபின்னர் அவளிடம் இருந்து எனக்கு வந்த எஸ் எம் எஸ்
" ஐ மிஸ் யூ டா".
பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல.
அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
-
அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி
ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக்
ஜோகோவிச் எதிர...
12 hours ago
31 கருத்துக் கூறியவர்கள்:
நல்ல கதை, நல்ல கற்பனை....
அவ்வ்வ்வ்வ்...
missed it ..... being missed....
.... nice story. :-)
வந்திய தேவன் நல்ல சான்ஸ்... இந்த பதிவோட லிங்க அந்த பொண்ணுக்கு அனுப்பி வச்சா....ஐ லவ்யூடான்னு எஸ் எம் எஸ் வருதான்னு பாருங்க... ஆல்த பெஸ்ட்..
விடுபட்ட பிற்குறிப்புக்கள்:
1. காட்சிகள் கொழும்பில் அல்ல... லண்டனில் தான் நடந்தவை.
2. இந்தக் கதையை எழுதலாமோ என்ற நண்பர்களுடனான நீண்ட நாள் விவாதங்களின் பின்னர் தான் வந்தியாகிய உங்களின் கதை எழுதப்பட்டுள்ளது.
3. மாணவ ஒன்று கூடலில் ஒன்றாகவா??? சாத்தியமே இல்லை. ஆசிரியர் - மாணவி???
4. கனடா - அது உண்மை.
///பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல///
நம்பிட்டம்...:p
கதை அருமை... இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயாவா??? நாடு தாங்காது சாமி...
பார்ட் 2 வை எதிர்பார்க்கிறோம்... ஜெசி கிரீஸ் சேருவாங்களா சேர மாட்டாங்களா?
என்னாது? இவ்வளவு சொல்லிட்டு எல்லாம் கற்பனையா?
என்ன கொடுமை மாமா இது?
இலங்கையையும், க்ரிஷையும் பார்த்தால் இலங்கையின் பிரபல பின்னூட்டியை சுட்டுவது போல இருந்தாலும், இலங்கையை இங்கிலாந்தாகவும்,கிரிஷை வேறொரு பெயராகவும் மாற்றினால் & "நான் தேடும் செவ்வந்திப்பூ" ரிங்ரோனியது. எனக்குத் தெரிந்த இன்னொரு பிரபலம் ;) ஞாபகம் வருகிறது.
facebook இல் ஆராய்ந்து உண்மையைப் பிடிக்கிறோம்.. ;)
இப்பிடி எழுதுவதைத் தான் பின் நவீனத்துவ கதை என்கிறார்களோ? ;)
// . மாணவ ஒன்று கூடலில் ஒன்றாகவா??? சாத்தியமே இல்லை. ஆசிரியர் - மாணவி??? //
ROFL...
///பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல///
நம்பிட்டம்...:p
// ஜெசி கிரீஸ் சேருவாங்களா சேர மாட்டாங்களா? //
ரொம்ம்ம்மப முக்கியம்...
புள்ள குட்டி இருந்தா படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்படாப்பா...
//// கன்கொன் || Kangon said...
// ஜெசி கிரீஸ் சேருவாங்களா சேர மாட்டாங்களா? //
ரொம்ம்ம்மப முக்கியம்...
புள்ள குட்டி இருந்தா படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்படாப்பா...////
தம்பி டீ இன்னும் முழுசா வரல...:p:p:p
பாலகரே... நல்லாத் தான் கதைகட்டிறீங்கள்...
கதையாக பார்க்கும் பொது அருமை!
விடயம் தெரிந்தவர்கள் புள் டீடைல் ப்ளீஸ்
//கன்கொன் || Kangon said...
நல்ல கதை, நல்ல கற்பனை....//
நன்றிகள் ஜூனியர் கதை என ஒத்துக்கொண்டமைக்கு.
கற்பனையா? அடப்பாவி இந்தக் கதையை எனக்குச் சொன்னதே நீதானே?
//Chitra said...
missed it ..... being missed....
.... nice story. :-)//
Thanks for your kind support , yeah now he totally missed .
//ஜாக்கி சேகர் said...
வந்திய தேவன் நல்ல சான்ஸ்... இந்த பதிவோட லிங்க அந்த பொண்ணுக்கு அனுப்பி வச்சா....ஐ லவ்யூடான்னு எஸ் எம் எஸ் வருதான்னு பாருங்க... ஆல்த பெஸ்ட்..//
ஹாஹா அண்ணாச்சி வேறை வினையே வேண்டாம் அவளின் அண்ணன் பார்த்தால் க்ரிஷின் கதி என்னவாவது?
//ஆதிரை said...
விடுபட்ட பிற்குறிப்புக்கள்:
1. காட்சிகள் கொழும்பில் அல்ல... லண்டனில் தான் நடந்தவை.//
ஹாஹா தம்பி க்ரிஷ் பொறியியல் மாணவன் உங்களுக்கும் தெரியும்.
//2. இந்தக் கதையை எழுதலாமோ என்ற நண்பர்களுடனான நீண்ட நாள் விவாதங்களின் பின்னர் தான் வந்தியாகிய உங்களின் கதை எழுதப்பட்டுள்ளது.//
ஹாஹா சித்தப்பு கதைவிவாதம் செய்வது நமக்கு புதிசில்லையே.
//3. மாணவ ஒன்று கூடலில் ஒன்றாகவா??? சாத்தியமே இல்லை. ஆசிரியர் - மாணவி???//
நீங்கள் படித்த கல்லூரியின் ஒன்றுகூடல். இன்னொரு பதிவருக்கு அந்தப் பெண் உறவினர்.
//4. கனடா - அது உண்மை.//
ம்ம்ம்ம் இதுமட்டும் தான் சரி,. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
//Bavan said...
நம்பிட்டம்...:ப்//
நன்றிகள்
//கதை அருமை... இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயாவா??? நாடு தாங்காது சாமி... //
இது இன்னொரு காதலுக்கு மரியாதை சிலவிடயங்கள் நீளம் காரணமாக சென்சார் செய்யப்பட்டுவிட்டன.
//பார்ட் 2 வை எதிர்பார்க்கிறோம்... ஜெசி கிரீஸ் சேருவாங்களா சேர மாட்டாங்களா?//
சேர்வார்கள் வேறு வேறு இருவருடன்
// LOSHAN said...
என்னாது? இவ்வளவு சொல்லிட்டு எல்லாம் கற்பனையா?
என்ன கொடுமை மாமா இது?//
என்ன அண்ணா செய்வது நான் கற்பனையில் எழுதினாலும் உங்களைப்போல் பலர் நிஜம் என நினைக்கின்றார்கள்.
// LOSHAN said...
இலங்கையையும், க்ரிஷையும் பார்த்தால் இலங்கையின் பிரபல பின்னூட்டியை சுட்டுவது போல இருந்தாலும், இலங்கையை இங்கிலாந்தாகவும்,கிரிஷை வேறொரு பெயராகவும் மாற்றினால் & "நான் தேடும் செவ்வந்திப்பூ" ரிங்ரோனியது. எனக்குத் தெரிந்த இன்னொரு பிரபலம் ;) ஞாபகம் வருகிறது.//
ஹாஹா நான் அவனல்ல. ஆனால் அவருக்கும் எனக்கும் தொடர்பு உண்டு,
//facebook இல் ஆராய்ந்து உண்மையைப் பிடிக்கிறோம்.. ;)//
கன்றுபிடிப்பத்தை விட மாடு பிடிக்கவும்,.
//இப்பிடி எழுதுவதைத் தான் பின் நவீனத்துவ கதை என்கிறார்களோ? ;)//
அண்ணே இதனைக் கதையாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் ஆனால் என்னால் சாருபோல் பின்நவீனத்துவம் எல்லாம் எழுதமுடியாது வராது.
//கன்கொன் || Kangon said...
// . மாணவ ஒன்று கூடலில் ஒன்றாகவா??? சாத்தியமே இல்லை. ஆசிரியர் - மாணவி??? //
ROFள்...//
அடே ஜூனியர் ஆசிரியர் என்றால் கட்டாயம் பாடசாலை ஆசிரியராக இருக்கத் தேவையில்லை, காராட்டி யோகா சொல்லிக்கொடுப்பவர்களும் ஆசிரியர்கள் தான்.
//Subankan said...
///பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல///
நம்பிட்டம்...:ப்//
நல்லவர்கள் சொன்னால் நம்பவேண்டும்
//கன்கொன் || Kangon said...
// ஜெசி கிரீஸ் சேருவாங்களா சேர மாட்டாங்களா? //
ரொம்ம்ம்மப முக்கியம்...
புள்ள குட்டி இருந்தா படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்படாப்பா...//
அடேய் அவன் இப்போதுதான் தன்னைவிட வயது மூத்த பெண்ணுக்கு ரூட் விடுகின்றான் ஹிஹிஹி.
// Bavan said...
தம்பி டீ இன்னும் முழுசா வரல...:p:ப்:ப்//
எப்போ டீ வரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்,
//நிரூஜா said...
பாலகரே... நல்லாத் தான் கதைகட்டிறீங்கள்...//
ம்ம்ம் விரைவில் நீங்கள் வெட்மின்ஸ்டரில் உலாவிய கதை வரும்
//VARO said...
கதையாக பார்க்கும் பொது அருமை! //
நன்றிகள் . உங்களைப்போல் கதை எழுத முடியாது
//விடயம் தெரிந்தவர்கள் புள் டீடைல் ப்ளீஸ்//
கதையின் நாயகனை நாடவும் அவரைப் பற்றிய சின்ன க்ளூ அண்மையில் யாழில் இருக்கிறம் விநியோகித்தவர்.
// கதையின் நாயகனை நாடவும் அவரைப் பற்றிய சின்ன க்ளூ அண்மையில் யாழில் இருக்கிறம் விநியோகித்தவர். //
சீனியர்....
இது பிழையான செயற்பாடு....
நல்லா இருக்கு கதை...
இந்த பதிவை எப்படி நான் பார்க்காமல் விட்டேன். ஐயகோ இது ஒரு உண்மைச் சம்பவம் அல்லவா. இதை பதிவிட உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது. இருந்தாலும் சேர்வதற்கு வாழ்த்துக்கள். இது உட்குத்து வெளிக்குத்து நிறைய இருக்கும் போல.
//ஐ மிஸ் யூடா.. எதிர்ப்பார்ப்புக்கள் நிறைந்த ஏமாற்றம்.//
அவ்வ்வ்வ்வ்....
வந்தியண்ணா! ஈழமுற்றத்தில பதிவை காணம் எண்டு கேட்க கனக்க சோலி இருக்கு எண்டு சொன்னியள்.இப்ப தானே விளங்குது என்ன சோலி எண்டு..:P
Post a Comment