ஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010

அரசியல்

இந்தியாவின் போபால் நச்சுப்புகை சோகத்திற்க்கு இருபது வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. குற்றவாளி நிறுவனத்திற்க்கு கிடைத்த தண்டனையோ வெறும் 2 ஆண்டுகள் தான். இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்ட சோகத்திற்க்கு 20 வருடத்தின் பின்னர் வெறும் 2 ஆண்டுகள் தான் தண்டனை என்றால் மனுநீதி சோழனும் இராஜராஜனும் அசோகனும் இன்னும் பலரும் நீதி தவறாமல் ஆட்சி செய்த பாரத தேசத்தின் நிலையை நினைக்க வருத்தமாக இருக்கின்றது. இனிமேல் பாரதத்தை புண்ணியபூமி என அழைப்பது தவறாகும் போல் இருக்கின்றது.

இதைப் பற்றி அண்ணன் ஜாக்கி குமுறோ குமுறென்று குமுறியிருக்கின்றார். நீதித்துறையில் கூட பாரபட்சம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள். ஒரு தனிமனிதனுக்காக ஒரு இனத்தையே மாற்றம் தாய் மனப்பான்மையில் பார்ப்பவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா? ஒருகாலத்தில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருந்த இந்தியா அண்மைக்காலமாக சர்வாதிகார நாடாக மாறுவது கவலை அளிக்கின்றது. (மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்).

ஆன்மிகம்

44 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நித்தியானந்தா மீண்டும் தன் ஆசிரமத்திற்க்கு வந்திருக்கின்றார். வந்தவர் சும்மா இருக்காமல் அக்னி சூழ தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். துறவி என்ற பெயரில் நித்தியானந்தா செய்தவை கண்டிக்கப்படக்கூடியவையே. காரணம் துறவு என்றால் முற்றும் துறத்தல் என்பது அர்த்தமாகும் ஆனாலும் இக்கால துறவிகள் எதனையும் துறக்காமல் துறவியாகிவிடுகின்றார்கள். சீதை தீக்குளித்தது போல் நித்தியானந்தாவும் தனக்குத் தானே அக்னிப் பரீட்சை வைக்கின்றாரோ தெரியவில்லை. கடவுளை நம்பினாலும் நம்பலாமே ஒழிய இந்த கடவுளின் பெயரால் தங்களை வளர்ப்பவர்களை நம்பவே கூடாது. எத்தனை பிரேமானந்தாக்கள், கல்கிகள், பகவான்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

நித்தியானந்தா வெளியே வந்துவிட்டார், ரஞ்சிதா எப்போ மீண்டும் வெளிஉலகிற்க்கு வருவார்?

உலகக் கோப்பை

நேற்றுடன் சகல அணிகளும் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பலம் வாய்ந்த அணிகள் மிகவும் கஸ்டப்பட்டதையும், இரண்டாம் தர அணிகள் பலமாக இருந்ததையும் பார்க்கமுடிந்தது. வழக்கம் போல் அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக வந்தன. இங்கிலாந்து அமெரிக்காவை சமநிலைப் படுத்தியது, பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது. இம்முறை உலகச் சம்பியனாக வரும் எனப் பலரால் கணிக்கப்பட்ட ஸ்பெயின் பரிதாபமாக சுவிசிடம் தோற்றது. பிரேசில் பலத்த போராட்டத்தின் பின்னர் வடகொரியாவை வென்றது. நடப்புச் சம்பியன் இத்தாலியும் பரகுவேயை சமநிலைப் படுத்தியது.

இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆர்ஜென்டினாவும் ஜேர்மனியுமே பலமாக இருக்கின்றன. ஆனாலும் கால்ப்பந்தில் கடைசி நிமிடம் வரை எதையும் கூறமுடியாது என்பாதல் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆசியக் கிண்ணம்

உலக கோப்பை உதைபந்தாட்டப்போட்டிகளினால் பெரிதாக அறியப்படாத போட்டிகளாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அத்துடன் தம்ம்புள்ளை மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களும் எடுக்கமுடியாது (ஏன் தான் இங்கே வைக்கின்றார்களோ?). இதுவரை நடந்த 2 போட்டிகளையும் வைத்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது ஆனாலும் சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகின்றது. முரளிதரனும் நம்ம பாஉ போல் கொஞ்சம் களைப்படைந்துவிட்டது நேற்றைய போட்டியில் தெரிந்தது. எரியாத சுவடிகள் பவன், வலைமனை சுகுமார் நக்கலடிக்கமுன்னர் அவர் தன்னை மறுபரீசீலனை செய்வது நல்லது.

இராவணன்

இந்தவாரம் இராவணன் படம் வெளிவருகின்றது. அண்மைக்காலமாக எனக்கு ஏனோ மணிரத்னம் படங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அதிகமாக வரலாறுகளைத் திரிக்கின்றார். தமிழ் மன்னன், சிறந்த சிவபக்தன் இராவணனை வில்லனாக்கி ஆரியர்களின் மாயைக்கு உதவுகின்றாரோ தெரியவில்லை. இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். இராவணன் பற்றி விரைவில்(?) தனிப்பதிவே எழுதவேண்டும். இந்தவாரம் தமிழ்மணம், தமிழிஷ் எல்லாம் இராவணன் தான் அதிகம் அடிபடும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக எழுதலாம்.

திரையுலகிற்க்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது, மறக்காமல் உங்கள் வாக்குகளை சிறந்தவர்களுக்கு அளியுங்கள். மேலதிக விபரங்களுக்கு :




நறுமுகை

என்னுடைய உடன்பிறவாச் சகோதரன் அன்புத் தம்பி லெனினால் அண்மையில் நறுமுகை என்ற பெயரில் ஒரு இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகளுடன் கருத்துக்களம், திரட்டி, வலைப்பதிவர்கள், குறும்படம் என பல விடயங்கள் இருக்கின்றன. லெனினின் திறமைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவரின் நறுமுகை இணையமும் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என நம்புகின்றேன். என்னுடைய வலையினை அழகுற அமைத்துத் தந்தவர் லெனின் தான். லெனினுடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இதனைச் செய்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



ஜெசி ஜெசி என உருகினவர்களுக்கு மன்மதன் அம்பு திரிஷா
பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.

பின்குறிப்பு : நீண்ட நாட்களின் பின்னர் சூப் ரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

15 கருத்துக் கூறியவர்கள்:

SShathiesh-சதீஷ். சொல்வது:

மீண்டும் சூப். சந்தோசம் ரொம்ப சூடாய் இருக்கு பதிவும் படமும். அப்புறம் என்ன அந்த கடைசியாய் போட்டிருக்கும் ஆண்டி ஏன் இப்பிடி நைட் உடுப்போடு நிக்கிறா

தமிழினியன் சொல்வது:

//மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்//

அப்படித்தான்.

ஆதிரை சொல்வது:

//பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.//

இவர் எங்கே இதுக்குள்ள வந்தவர்??

ஆதிரை சொல்வது:

//பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.//

இவர் எங்கே இதுக்குள்ள வந்தவர்??

anuthinan சொல்வது:

சூப் ரசித்தேன் அண்ணா!

பதிவு கலக்கல்

maruthamooran சொல்வது:

////இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். ////

வணக்கம் வந்தி....!

இராமாயணத்தை நன்னூலாக அதாவது படிப்பினைகள் தரும் நூலாக எம்மிடையே வளர்த்து விட்டவர்கள் கேள்விகளுக்கு உள்படுத்தப்பட வேண்டியவர்கள்.

போர் தர்மம், செஞ்சோற்றுக் கடன் என்று பல முரண்களை அந்த இதிகாசத்தில் உள்ளிடக்கி தங்களுக்கு சாதகமாக இராமாயணம் வால்மீகி உள்ளிட்ட ஆரியர்களினால் எழுதப்பட்டது.

வாலியை எதிரில் வெற்றி கொள்ள முடியாத இராமன் மறைந்திருந்து தாக்கியதை கூறும் இராமாயணமே, சண்டைக்களத்தில் ஆயுதங்கள் அற்றிருந்த இராவணனை 'இன்று போய் நாளை வா' என்று இராமன் அழைத்தாக கூறுகிறது. இந்த இரண்டு விடயங்களுமே போர் தர்மங்கள் குறித்து கூறும் இராமாயணத்தில் இருக்கின்ற முரண்கள்.

அத்துடன், திராவிடர்களை அரக்கர்களாகவும், குரங்குகளாகவும் காட்டியதுவும் இந்த இராமயணமே. அதனை வழிமொழிந்த கம்பராமாயணமும் ஏற்றுக்கொள்ள முடியாதே. கவித்திறைமைகளுக்காக வேண்டுமானால் கம்பராமாயணத்தை கொண்டாடலாம். ஓரு வரலாற்று ஆதராமாக அல்லது தொடர்ச்சியாக எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய வாதம்.

சூப்பில் சூடு கொஞ்சம் தூக்கல்.

Subankan சொல்வது:

சூப் சூடாயிருக்கு மாமா, ஆனா அங்க போயும் தமிழ் நடிகைகளின் படமா? வீ வான்ட் லண்டன் நடிகை :p

Sukumar சொல்வது:

ஹி ஹி .. என்னை கூப்பிட்டீங்களா பாஸு...? சூப் சூப்பர்

Jackiesekar சொல்வது:

எனது பதிவை இனைத்தமைக்கும்.. திரிஷா போட்டோவுக்கும் நன்றிகள்..

Muruganandan M.K. சொல்வது:

"துறவிகள் எதனையும் துறக்காமல் ....." சுகித்து வாழ்கிறார்கள்.
பக்தர்கள்தான் துறக்கவும் துதிக்கவும் செய்கிறார்கள்.

காணிக்கைகள் பணமாக மாத்திரமா...?

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

மருதமூரானின் ராமாயணம் பற்றிய கருத்தோடு ஒருமிக்கிறேன்.

ஆசிய நாடுகளில் நீதி தூங்கி பல காலமாகிவிட்டது,

“நித்தியானந்தா” யாரவர் நக்கீரனில் இருந்தாரே அவரா?

உலக கோப்பை, இன்று ஆர்ஜன்டீனா அதிரடி தாண்டவம் ஆடியது, எனது விருப்பத்திற்குறிய வீரர் மெஸ்ஸிசை ரசித்தேன், இவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.

மெஸ்ஸியை ரசித்த என்னிடம் இப்படி ஜெசியை காட்டலாமா?

shabi சொல்வது:

பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது.///ipaathan inga match nadandhukittu irukku athukkulla epdi draw nnu podudirnga (uae time 23.15 first half ippathan mudiyuthu 0-0)

வந்தியத்தேவன் சொல்வது:

மன்னிக்கவும் மெக்சிகோவை அல்ல. உருகுவே என வரவேண்டும் தவறை உணர்த்தியமைக்கு நன்றிகள் ஷபி.

AkashSankar சொல்வது:

பதிவு அருமைங்க...

ARV Loshan சொல்வது:

போபால் - ஆறாத கொடுமை. ஆசிய நாடுகளுக்கே உரிய புறக்கணிப்பு.
ஆன்மிகம் - முடை நாற்றம்
ஆசியக் கிண்ணம் - இலங்கைக்கே :)
உலகக்கிண்ணம் - என் ஆதரவு ஆர்ஜெண்டீனாவுக்கு :)
ராவணன் - ஒட்டவில்லை

பாருங்கைய்யா கமலுடன் சேர்ந்த பிறகு த்ரிஷா கூட எவ்ளோ அழகாயிட்டார் ;)
மாமா கூட ரசிக்கிறார்.
அந்த மாலை நல்லா இருக்கு :)