சுறா திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு நேற்றுத் தான் கிடைத்தது. படம் பார்க்கும் முன்னர் ட்விட்டரில் சுறா படம் பார்க்கப்போகின்றேன் என்ற விடயத்தை ட்விட்டியதும் பலரும் ஏன் இந்த ரிஸ்க்? சொந்த செலவில் சூனியம் என என்னை எச்சரிக்கை செய்தும் ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுவதுபோல் என்பதால் ஒரு மாதிரி பார்த்து முடித்தேன்.
படத்தினை சாதாரணமாக பார்த்தால் வழக்கமான மசாலாப் படமாகத் தான் தெரியும் ஆனால் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நம்ம இளைய தளபதியின் அரசியல் நகர்வுகளையும் அவர் அந்தப் படத்தின் மூலம் சொல்லவந்த விடயத்தினையும் புரிந்துகொள்ளமுடியும். பேசாப் பொருளை இயக்குனர் பேசியிருக்கின்றார்.
முதல் காட்சியில் காட்டப்படும் மீனவக் குப்பத்தின் பெயர் யாழ் நகர். இந்தப் பெயர் ஒரு இனத்தின் குறியீடாக இங்கே உருவகிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர் மீனவர்கள் கடலில் காணாமல் போகின்றனர். பின்னர் சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது இந்திய மீனவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகின்றது. இதற்க்கு தோதாக இன்னொரு காட்சியில் டீ கடையில் விஜய் இருக்கும் போது ஒருவர் பத்திரிகையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்தியைப் படிக்கும் போது சுறா மக்களைப் பார்த்துக்கூறுவார் இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க விரைவில் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தலைவர் வருவார்.
சுறாவை வில்லனுடைய ஆட்கள் பின்னாலிருந்து தாக்கி நெருப்பு வைத்துக் கொல்கின்றார்கள். யாழ் நகர் குப்பம் முழுவதும் சுறா இறந்துவிட்டதாக நம்பி வில்லனாகிய மந்திரி கொடுக்கும் இடத்தில் தங்குவதற்க்கு சம்மதிக்கின்றார்கள். சில நிமிடங்களில் சுறா காளியின் அருளால் உயிர்தப்புகின்றார். உடனடியாக மக்கள் மீண்டும் சுறாவுடனேயே சேர்கின்றார்கள். இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது.
அதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார். அதாவது கஸ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதை இந்தக் காட்சியில் உணர்த்திய இயக்குனர் தமன்னாவின் மதத்தை கிறிஸ்தவமதமாக காட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தமன்னாவின் பெயரான பூர்ணிமாவில் உள்குத்து இருப்பதுபோல் தெரிகின்றது.
இறுதிக்காட்சியில் வில்லனுடன் சீனத்து முகச்சாயல் உட்பட பல வில்லனின் அடியாட்கள் மோதுகின்றார்கள். இது வில்லன் தான் மட்டும் தனியனாக சுறாவை எதிர்க்காமல் வெளிநாட்டு உதவிகளுடன் எதிர்த்ததாக காட்டப்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட காட்சிகளில் விஜயின் மக்கள் மீதான கரிசனையும் அக்கறையும் வெளிப்படுவதுடன் அவரது எதிர்காலம் அரசியல் தான் என்பதை தன்னுடைய ஐம்பதாவது படத்தில் உறுதி செய்கின்றார்.
கதாநாயகி தமன்னா தன்னுடைய செல்ல நாயைக் காணாமல் தற்கொலை செய்வதனைக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பிராணிகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதையும் கடலினுள் மூழ்கும் தமன்னாவையும் கடலின் ஆழத்தையும் மாறிமாறி காட்டுவதன் மூலம் பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்.
அத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார். எப்படி வாசனைத் திரவியங்கள் விளம்பரங்களில் வாசனைத் திரவியத்தை பாவித்தவுடன் அந்த ஆணின் பின்னால் பெண்கள் வருகின்றார்களோ அதேபோல் பிறருக்கு உதவி செய்தாலும் இளகிய மனம் படைத்த இளம் பெண்களைக் கவரலாம் என்பதை விஜய் கண் தெரியாத ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் தமன்னாவின் மனதில் இடம் பிடிக்கும் காட்சி மூலம் விளங்கப்படுத்தியுள்ளார்.
ஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது.
இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன்.
பின்குறிப்பு : இந்தப் பதிவை மொக்கையாக எடுக்க விரும்பினால் மொக்கையாகவே எடுக்கவும் அல்லது அரசியலாக எடுக்கவிரும்பினால் என்னைத் திட்டக்கூடாது.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
35 கருத்துக் கூறியவர்கள்:
நீர் ஒரு பின்நவீனத்துவச் சுறா ஐயா
//சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது //
அப்ப பிறகு மக்கள் எல்லாரும் சுறாதான் எங்கள் தெய்வம் என்பது? நானும் முதலில் பார்க்கும் போது இந்த சீனில் மீன் வரும் எதிர்பார்த்தேன்..:P
விஜய் வித்தியாசமாக ஜிராசிக் பார்க் மாதிரிப்படம் நடிச்சிருக்கிறார் எண்டு நினைச்சன்..:P
//எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா//
தமன்னாவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டி்கிறேன்..:P
//நாயைக் காணாமல் தற்கொலை //
அவ்வ்வ்.. அப்ப அந்த மேக்கப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்வது பற்றி??
//பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்//
பெண்களின் மனது கடலைப்போல என்று கடலை போட்டிருக்கிறார் இயக்குனர் எண்டுறீங்க..ம்ம்...
//அத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார்//
புதிய முயற்சி இப்படி ஒரு காட்சியை இதுவரை சினிமாவில் பார்த்ததே இல்லை...:P
//ஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது. //
இது பெண்களுக்கு கொடி இடை என்று காட்டுகிறதாம்...:P
//இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் //
விஜய் மட்டும் இந்தப்பதிவைப்பார்த்தார் அவரின் அடுத்த படத்தை உங்களைப் பார்க்க வைத்து குறியீட்டுக்காட்சிகளை மக்களுக்கு விளக்கவைத்து அதன் பிறகுதான் படத்தை போடுவார்..:P
பதிவு கலக்கல் குரு.. மரண மொக்கை..:)
இதுக்கு சுறா படமே பாக்கலாம் போல கிடக்குது.. நான் இன்னும் பாக்கவில்லை. :)
நீங்களும் ஏதோ சொல்ல வாரிங்க . சொல்லிட்டு போங்கோ..... அப்புறம் சுறா படத்தில இவாளவு விஷயம் இருக்கா இது தெரியாமல் போச்சே நமக்கு...ஹீ ஹீ ஹீ ஹீ
இப்படியும் சொல்லலாமா? :-)
ஆங்....
படம் பார்க்காதபடியா முழுமையா விளங்கேல...
பார்த்ததும் திரும்ப வந்து வாசிக்கிறன்... ;)
அரோகரா...
அண்ணே சுராக்கு இப்படியும் விமர்சனம் எழுதுவாங்க எண்டு விஜய் கனவுலையும் நினச்சு இருக்கமாட்டார் அண்ணா! அனேகமா அவர் இதை பார்த்தா அவரை இயக்கும் அடுத்த இயக்குனர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா!!!
//இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது. //
ஓ உங்களுக்கு இப்போ இது வெளிநாடா போச்சு போல்!
//அதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார்//
எங்கோ இடிக்குதே !
//இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன். //
ஐயோ அண்ணா! என்னமா கலக்குறிங்க !!!
நல்ல இருக்கு அண்ணா பதிவு
இவ்வளவு விஷயம் இருந்திருகே இந்த படத்துல.... நீங்க கலைகண்ணோடு பார்த்திருக்கீங்க...
நீங்கள் சொல்வது விளங்குவதற்காகவேனும், சுறா படம் பார்ப்பதாக முடிவு... :-)
எலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...!
அடேய் வந்தியண்ணா, பதிவு அருமை. டவுசர் கிழிந்தது.
குரு குருதான். தியேட்டரில பாத்த எனக்கே இதெல்லாம் விளங்கேல்லை, திருட்டு டவுன்லோடில பாத்த குருவுக்கு விளங்கியிருக்கே, குரு வாழ்க! சுறா வாழ்க!!
இதக்குதான் பின்நவீனத்துவ விமர்சனம் என்பதா?
ஆகா மீண்டும் ஒரு பின்நவீனத்துவமா?
பரீட்சைகள் தந்த விளைவுகள் இப்படிஎல்லாம் யோசிக்க வைக்குமா மாமா?
இல்லாவிட்டால் லண்டன் சம்மர் செய்யும் லீலையா?
டவுன்லோடில் பார்த்தால் எல்லாம் 'குறி'ஈடாத் தான் தெரியும் போல கிடக்கு..
கானா பிரபா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்..
சற்று முன் கிடைத்த செய்தி..
மீண்டும் சுறா டிக்கெட்டுக்கள் பர பர விற்பனை..
காவல்காரனில் வந்தி கௌரவ நடிகராக.. ;)
// கானா பிரபா said...
நீர் ஒரு பின்நவீனத்துவச் சுறா ஐயா//
நன்றிகள் ஐயா நல்ல காலம் பின்நவீனத்துவ சுனாமி என அழைக்கவில்லை. இதுதான் பின்நவீனத்துவமா? #சந்தேகம்
// Bavan said...
அப்ப பிறகு மக்கள் எல்லாரும் சுறாதான் எங்கள் தெய்வம் என்பது? நானும் முதலில் பார்க்கும் போது இந்த சீனில் மீன் வரும் எதிர்பார்த்தேன்..:ப் //
தம்பி நீ விஜயின் பல படங்கள் பார்க்கவில்லை போலிருகின்றது. இப்படி அதிக பில்டப் காட்டினால் அடுத்து விஜய் தான் வருவார் என்பது கோடம்பாக்க எழுதப்படாத விதி.
// விஜய் வித்தியாசமாக ஜிராசிக் பார்க் மாதிரிப்படம் நடிச்சிருக்கிறார் எண்டு நினைச்சன்..:ப்//
விஜயின் அடுத்த படம் ஜூராசிக் பார்க் ரீமேக்தானாம்.
//தமன்னாவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டி்கிறேன்..:ப்//
நான் எங்கே எங்கள் தலைவியை நக்கலடித்தேன்.
//அவ்வ்வ்.. அப்ப அந்த மேக்கப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்வது பற்றி?? //
அதற்க்குத் தானே அவரே விளக்கம் கொடுக்கின்றார். மேக்கப் அதிகம் பெண்கள் லூசாக இருப்பார்கள் என்பதைத் தான் அப்படி இயக்குனர் உவமிக்கின்றார்.
//இது பெண்களுக்கு கொடி இடை என்று காட்டுகிறதாம்...:ப்//
ஓ இதுதான் கொடி இடையோ அப்போ நமீதாவின் இடை ஆலமர இடையா? (நமீதாவின் தீவிர ரசிகர் லோஷன் கோபித்துக்கொள்ளப்போகின்றார்)
// விஜய் மட்டும் இந்தப்பதிவைப்பார்த்தார் அவரின் அடுத்த படத்தை உங்களைப் பார்க்க வைத்து குறியீட்டுக்காட்சிகளை மக்களுக்கு விளக்கவைத்து அதன் பிறகுதான் படத்தை போடுவார்..:ப் //
ஹாஹா அப்போ அடுத்த படத்திற்க்கு பிறகு எனக்கும் மக்கள் ஆப்படித்துவிடுவார்கள்.
//பதிவு கலக்கல் குரு.. மரண மொக்கை..:)//
அடப்பாவி சிஷ்யா அண்ணன் கானா பின்நவீனத்துவம் என்கின்றார் நீயோ மொக்கை என்கின்றாய் விஜய் படம் போல் குழப்பாமல் ஒரு முடிவைச் சொல்லவும்.
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
இதுக்கு சுறா படமே பாக்கலாம் போல கிடக்குது.. நான் இன்னும் பாக்கவில்லை. :)//
மதுயிசம், ஆதிரையிசம் எல்லாம் கொஞ்சம் கலந்திருப்பேன். பிறகு 18+ பதிவாக மாறிவிடும் அபாயம் இருந்தபடியால் கலக்கவில்லை. பயப்படாமல் படத்தைப் பாருங்கள்.
//SShathiesh-சதீஷ். said...
நீங்களும் ஏதோ சொல்ல வாரிங்க . சொல்லிட்டு போங்கோ..... அப்புறம் சுறா படத்தில இவாளவு விஷயம் இருக்கா இது தெரியாமல் போச்சே நமக்கு...ஹீ ஹீ ஹீ ஹீ//
நன்றிகள் சதீஸ் வழக்கமான ரசிகர்களைப்போல் திட்டாமல் ஏதோ சொன்னதற்க்கு.
Chitra said...
இப்படியும் சொல்லலாமா? :-)
இப்படித் தான் சொல்லி எம்மை நாமே தேற்றவேண்டும்.ஒரே கதையை எத்தனை தடவை பார்ப்பது.
//கன்கொன் || Kangon said...
ஆங்....
படம் பார்க்காதபடியா முழுமையா விளங்கேல...
பார்த்ததும் திரும்ப வந்து வாசிக்கிறன்... ;)
அரோகரா...//
படம் பார்க்கவில்லையா? ஓடிப்போய்ப் படம் பார்க்கவும் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பில்லை.
///ஓ இதுதான் கொடி இடையோ அப்போ நமீதாவின் இடை ஆலமர இடையா? (நமீதாவின் தீவிர ரசிகர் லோஷன் கோபித்துக்கொள்ளப்போகின்றார்)
////
ROFL
//அடப்பாவி சிஷ்யா அண்ணன் கானா பின்நவீனத்துவம் என்கின்றார் நீயோ மொக்கை என்கின்றாய் விஜய் படம் போல் குழப்பாமல் ஒரு முடிவைச் சொல்லவும். //
பின்நவீனத்துவம் என்றால் என்ன குரு? ஒரு வேளை பின்நவீன மொக்கையா இருக்குமோ?..:P
// Anuthinan said...
அண்ணே சுராக்கு இப்படியும் விமர்சனம் எழுதுவாங்க எண்டு விஜய் கனவுலையும் நினச்சு இருக்கமாட்டார் அண்ணா! அனேகமா அவர் இதை பார்த்தா அவரை இயக்கும் அடுத்த இயக்குனர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா!!! //
கங்கோனை பப்பாசி மரத்தில் ஏத்தியதுபோல் என்னையும் ஏத்தவேண்டாம். அவரை வைத்து காதலுக்கு மரியாதையை மீண்டும் எடுக்கவேண்டியதுதான்.
//ஓ உங்களுக்கு இப்போ இது வெளிநாடா போச்சு போல்!//
அப்படியில்லை சில விடயங்கள் நேரடியாக எழுதமுடியாது.
//
ஐயோ அண்ணா! என்னமா கலக்குறிங்க !!!
நல்ல இருக்கு அண்ணா பதிவு //
நன்றிகள்.
யோவ் வந்தி..
நான் எங்கே ஐய்யா இதுல வந்தேன்.. இரவு முழுக்க அந்த மனுசி நமீதாவை ட்விட்டரில் துரத்துவதேல்லாம் பண்ணி விட்டு இங்கே வந்து என்னை அந்தா ஆண்ட்டியோட முடிச்சுப் போடுறீர்..
லண்டன் சம்மர் நல்லாத் தான் படுத்துது போல..
//ராசராசசோழன் said...
இவ்வளவு விஷயம் இருந்திருகே இந்த படத்துல.... நீங்க கலைகண்ணோடு பார்த்திருக்கீங்க...//
இவ்வளவு மட்டுமல்ல இன்னும் பலவிடயங்கள் இருக்கின்றது. ப்திவு நீண்டு விடும் என நினைத்து எழுதாமல் விட்டுவிட்டேன். எந்தவோறூ விடயத்தையும் கொஞ்சம் ஊடுருவிப்பார்க்கவேண்டும்.
வந்தியத்தேவனின் பதிவில் ராசராசசோழனின் பின்னூட்டம் நன்றிகள்.
//ஆதிரை said...
நீங்கள் சொல்வது விளங்குவதற்காகவேனும், சுறா படம் பார்ப்பதாக முடிவு... :)//
சுறா தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றிகள்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...!//
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.
//சுவாமி லெனினானந்தா said...
அடேய் வந்தியண்ணா, பதிவு அருமை. டவுசர் கிழிந்தது.//
நன்றிகள் சுவாமி, எல்லாம் உங்களிடம் குடித்த யானப்பால் தான். ஆசிரமம் எப்படிப் போகின்றது.
//Subankan said...
குரு குருதான். தியேட்டரில பாத்த எனக்கே இதெல்லாம் விளங்கேல்லை, திருட்டு டவுன்லோடில பாத்த குருவுக்கு விளங்கியிருக்கே, குரு வாழ்க! சுறா வாழ்க!!//
நன்றிகள் சிஷ்யா. இப்படி எல்லாம் புகழக்கூடாது. நாம் புகழை வெறுப்பவர்கள். எதிலும் பற்றில்லாதவர்கள். அதனால் தான் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என ஆசிரமத்தில் அமைதியாக இருக்கின்றோம். எத்தனை புயலடித்தும் நாம் அசையவில்லை.
சிஷ்யா திருட்டு டவுண்லோட்டில் பார்க்கும் போது நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு சீனாக பார்த்து அலசலாம் நீ இன்னமும் வளரவேண்டி இருக்கின்றது.
//யோ வொய்ஸ் (யோகா) said...
இதக்குதான் பின்நவீனத்துவ விமர்சனம் என்பதா?//
அப்படித் தான் பெரிய அண்ணன் கானாவும் சொல்கின்றார்
//வந்தியத்தேவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...!//
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.//
எனக்கே அல்வாவா?
அந்தப் படத்த எடுத்ததே தப்பு! இதுல நேரங்கெட்ட நேரத்துல அதப்பத்தி தாறுமாறா மொக்க போட்டுக்கிட்டு இருக்கீங்க! போங்கய்யா போயி ஏதாவது ஏத்திக்கிட்டு வாங்க!
//LOSHAN said...
ஆகா மீண்டும் ஒரு பின்நவீனத்துவமா? //
லண்டன் காலநிலை பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் எல்லாம் சொல்லித் தரும். இது பற்றி பிரபல இத்தாலி எழுத்தாளர் டொமினிக்கோ கூட தன்னுடைய ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கின்றார் ( பின்நவீனத்துவம் என்றால் இப்படி ஒரு வெளிநாட்டு எழுத்தாளரின் பெயரைச் சொல்லவேண்டும் என்பது விதியாம்??)
//பரீட்சைகள் தந்த விளைவுகள் இப்படிஎல்லாம் யோசிக்க வைக்குமா மாமா?
இல்லாவிட்டால் லண்டன் சம்மர் செய்யும் லீலையா? //
இல்லை படம் பார்க்கும் போதே எனக்குப் புரிந்துவிட்டது இது ஒரு பின்நவீனத்துவப் படம் தான் என அதனால் கண் இமைக்காமல் பார்த்தேன்.
//டவுன்லோடில் பார்த்தால் எல்லாம் 'குறி'ஈடாத் தான் தெரியும் போல கிடக்கு..//
டவுண்லோட்டில் சிலவேளைகளில் ஸ்ரக்காகும் அதனால் டிவிடியில் தான் பார்த்தது.
//கானா பிரபா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்..//
நன்றிகள் அண்ணே.
//சற்று முன் கிடைத்த செய்தி..
மீண்டும் சுறா டிக்கெட்டுக்கள் பர பர விற்பனை..//
விஜய் என்னைத் தேடிவராவிட்டாலும் தமன்னா தேடிவந்தால் மகிழ்ச்சி அடைவேன். (அட பாராட்டத் தான்)
// காவல்காரனில் வந்தி கௌரவ நடிகராக.. ;)//
ஏனைய்யா இந்தக் கொலைவெறி ஒருவர் இயக்குனர் என்கின்றார் நீங்கள் கெளரவ நடிகர் என்கின்றார். நடிப்பதற்க்கு நான் ஒன்றும் கமல் (உலகநாயகன்) அல்ல.
இதுக்கு மேல சுறா பிரான்னு ஏதாவது பேச்சு வந்துச்சு, படுவா பிச்சுபுடுவேன் பிச்சு!
எல்லாம் போங்க போங்க, போயி தூங்குங்கப்பா!
அண்ணன் ராம்சாமி சொன்னபடியால் நான் தூங்கப்போகின்றேன்.
ஓக்கே அப்படியே மெய்ன்டெய்ன் பன்ணிக்கமா!
Post a Comment