1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிகர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வில்லு ப்ரிவியூ ஷோவில்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
புதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.
4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)
பிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்கள்
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது
14.பிடித்த மணம்?
ஜாஸ்மின்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.
17. பிடித்த விளையாட்டு?
கில்லி தாண்டு
18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சகல தெலுங்குப் படங்களும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்ஜீஆரின் வேட்டைக்காரன்
21.பிடித்த பருவ காலம் எது?
ஸ்விட்சர்லாந்தின் குளிர்காலம்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?
ஜிங்க் சக்
பிடிக்காத சத்தம்?
சைலண்ட்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரீமேக் படங்கள் தோற்பது
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போக்கிரி
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஈசிஆர் ரோட்டிலுள்ள பப்புகள்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பிரதம மந்திரியாக
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை ஒரு வட்டம்
http://enularalkal.blogspot.com/2009/06/32.html
பின்குறிப்பு : இது ஏற்கனவே எழுதிய ஒரு பதிவின் மறுபதிப்பு. சுறாவின் பிரமாண்ட வெற்றியைப் பார்க்கும் போது இன்னும் இளைய தளபதி விஜய் மாறவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த ஜூனில் அவர் அளித்த(கற்பனையில் தான்) பதில்கள் இன்றைக்கும் பொருந்துவதால் இந்த மீள்பதிவு.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
என்ன மாயமய்யா இது???
இது உங்களின் பங்கா? லோஷன் தன்பங்கிற்க்கு சுறாவை குழம்பு வைத்திருக்கின்றார். நீங்களோ பழைய கருவாட்டுப் பதிவை புதிசாக குழம்பு வைத்திருக்கின்றிர்கள். விஜய் போல் ஒரு அப்பாவி கிடைத்தால் போதும் அனைவரும் ஒரு காட்டுக் காட்டுகின்றீர்கள். இதனை ரஜனி கமல் படங்களுக்கு ஏனோ செய்வதில்லை.
ஹா ஹா ஹா....
என்ன கொடுமை வந்தியண்ணா இது....
பல இடங்களில் நிறையவே இரசித்தேன்...
எனது தெரிவுப் பதில் இது தான்...
//22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே //
அருமை....
ச்சீசீ... நானே விஜய்ட்ட கேள்வி கேக்குறது சரியில்லை... சைலன்ஸ்
18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.//
ha ha ha..
பெரி.மயூரன் என்ற பெரியவரும் பல வேளைகளில் கண்ணாடி அணிபவராம்.. ;)
----
தமிழ்நங்கை said...
இது உங்களின் பங்கா? லோஷன் தன்பங்கிற்க்கு சுறாவை குழம்பு வைத்திருக்கின்றார். //
நான் விமர்சனம் தானே செய்திருக்கிறேன்.. இதுக்குள்ளே என்ன குழம்பு,சொதி,சாம்பாருன்னு?
ஏதேது போறபோக்கப் பாத்தா வடிவேலு பொழப்ப விஜய் கெடுத்துடுவாரு போல இருக்கே? நம்ம கடையிலயும் சுறா மேட்டருதான் ஓடிகிட்டு இருக்குண்ணே!
எல்லாம் சரிதான், ஆனால் இளையதளபதி Dr.ஜோசப் விஜய் RC. Christian பறையன் தானே
Post a Comment