மும்முனைப்போட்டி - இங்கிலாந்து தேர்தல்

இன்று இங்கிலாந்து பாராளமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் நடைபெற்ற சூடான விவாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஆளும் லேபர் கட்சி இம்முறை வெல்வதற்கான அறிகுறிகள் இல்லையென கடைசி நேர கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.



ஆளும் லேபர் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரும் தற்போதைய பிரதம மந்திரியுமான கோர்டர் பிறவுணுக்கும் கொன்சவேர்ட்டி பார்ட்டி எனப்படும் பழமைவாதக் கட்சியின் டேவிட் கமரூனுக்கும் லிபரல் கட்சியின் நிக் கிளெக்கும் நடைபெறும் மும்முனைப்போட்டியில் கோர்டர் பிறவுண் பிந்தங்கி நின்கின்றார்.



ஆப்கான், ஈராக் பிரச்சனைகளும் பொருளாதார சிக்கல்களும் ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்தாலும் பழமைவாதக் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கைகள் முரண்பாடாக இருக்கின்றது. அதே நேரம் லிபரல் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்தில் புகழிடம் கோருகின்றவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள்.



கோர்டன் பிறவுண் தங்களால் மட்டும் தான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லமுடியும் என்கிறார். அத்துடன் தங்கள் கட்சி தோல்வி அடைந்தால் அது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியே ஓழிய கட்சியின் தோல்வி அல்ல என ஒரு அறிக்கையும் விட்டிருக்கின்றார்.

மாற்றம் தேவை என பழமைவாதக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். 1966 ஆம் ஆண்டு பிறந்த டேவிட் கமரூனுக்கும் அவரைவிட ஒரு வயது குறைந்த நிக் கிளெக்குக்கும் தான் தற்போது போட்டி அதிகமாக உள்ளது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் கோர்டன் பிறவுண் தோல்விகளைத் தழுவினாலும் ஆசிய மக்களின் வாக்குகளையும் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் வாக்குகளையும் பெரிதாக நம்பி இருக்கின்றார். கோர்டன் பிறவுணை மீண்டும் தெரிவு செய்தால் இங்கிலாந்து 1980களில் இருந்ததுபோல் இருக்கும் என டேவிட் கமரூன் கூறிவருகின்றார். அத்துடன் அவர் எம்ஜீஆர் பாணியில் சுப்பர்மார்க்கட்டுகளுக்கும் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து மக்களுடன் மக்களாக இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

நிறவாத கருத்துகளை உடைய கட்சி எனப் பலரால் குற்றம் சாட்டப்படுகின்ற பழமைவாதக் கட்சியில் சில ஈழத்தமிழர்களிம் இந்தியர்களும் போட்டி இடுகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலும் இங்கிலாந்துப் பத்திரிகைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. நேற்றைய மாலை லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்டின் ஆசிரியர் தலையங்கம் டேவிட் கமரூன் அடுத்த பிரதமராக வேண்டும் என எழுதியிருந்ததுடன், இறுதிக் கருத்துக் கணிப்பில் பழமைவாதக் கட்சி 36%, லேபர் 31% லிபரல் 27% என தெரிவித்திருந்தார்கள்.

அதே நேரம் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாது எனவும் தொங்குபாராளூமன்றம் ஏற்படலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எது எப்படியோ ஜோர்ஷ் புஷ் ஆப்கானில் இட்ட தீ இங்கிலாந்தின் ஆட்சி மாற்றத்திற்க்கு காரணமாக அமையலாம்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. வேட்பாளர்களே வீதியில் தனித்து நின்று(அல்லக்கை நொள்ளைக்கைகள் இல்லாமல்) துண்டுப் பிரசுரம் கொடுப்பதும் வீடுவீடாக ஏறி தங்களுக்கு வாக்கு கேட்பதும் அதிரடியான தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்த எமக்கு ஆச்சரியம் தான். இதே நேரம் பழமைவாதக் கட்சியினர் லேபர்க் கட்சியையும் கோர்டன் பிறவுணையும் நக்கலடித்து பல இடங்களில் பெரிய கோர்டிங்குகள் வைத்திருந்தார்கள். இதனைப் பலர் ரசிக்கவில்லை என்பதாலோ என்னவோ சில நாட்களில் அவற்றை எடுத்துவிட்டு தங்களின் வாக்குறுதிகளை வைத்திருக்கின்றார்கள்.

நான் இருக்கும் பகுதியின் வேட்பாளர் தமிழ்மொழியில் கடிதம் எழுதி ஏன் தனக்கு வாக்களிக்கவேண்டும் என விளக்கம் கொடுத்திருந்தார். எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள்.யார் வெல்கின்றார்கள் இதன் பின்னர் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"Only a vote for Labour will keep our society fair " - Gorden Brown



"Tactical voting could mean five more years of Gorden Brown" - David Cameron


"Vote with your hearts, vote for what you believe in" - Nick Clegg

6 கருத்துக் கூறியவர்கள்:

நிரூஜா சொல்வது:

பாலகர் நல்லா தான் கணிக்கிறீர் எண்டு நின்னைக்கிறன். 2ம் திகதியும் ஒண்டு நடந்ததாம். அதுக்கும் உங்க பாணியில ஒண்டை எதிர்பாத்தன்...!

கன்கொன் || Kangon சொல்வது:

அவ்வ்வ்வ்வ்வ்.....

கன்கொன் || Kangon சொல்வது:

http://www.facebook.com/pages/Not-Voting-for-David-Cameron/499680250216

இப்பிடி ஒரு குழுமம் இயங்குது மாமா...
நீங்கள் இருக்கிறியளா?
ஏன் இவர் 'some of my best friends are poor' எண்டு சொன்னவர்? ;)

SShathiesh-சதீஷ். சொல்வது:

இதுவரை உள்ளூர் குப்பையை கிளறினிங்க இப்போ வெளியூர் குப்பையா? சரி சரி நானும் வாரன் சிறந்து கிளறுவம்.... நான் சொன்னது அரசியலை.

Chitra சொல்வது:

நான் இருக்கும் பகுதியின் வேட்பாளர் தமிழ்மொழியில் கடிதம் எழுதி ஏன் தனக்கு வாக்களிக்கவேண்டும் என விளக்கம் கொடுத்திருந்தார். எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள்.யார் வெல்கின்றார்கள் இதன் பின்னர் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


....... Interesting..... mmmm....

balavasakan சொல்வது:

அதுக்குள்ள இந்தளவுக்கு அலசி ஆராஞ்சிட்டீங்களா... வந்தியண்ணே...!!