பார்படோசின் அழகிய கடற்கரையில் தலைக்கு முக்காடு இட்டபடி சிலர் இருந்து ஆலோசிக்கின்றார்கள். கிட்டத்தில் போய்ப் பார்த்தால் நம்ம சூப்பர்சிங்கம் டோணி தலைமையில் இந்திய அணியினர் தங்கள் தோல்விக்காண காரணங்கள் பற்றி கலந்தாலோசிக்கின்றாகள்.
தினேஷ் கார்த்திக்: (முரளி விஜயைப் பார்த்து) எல்லாம் இவனால் தான் வந்தது டீமின் முதற்பெயரே விஜய் என்றிருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும், இவனுக்குப் பதிலாக சேவாக் இருந்தாலும் ஏதோ இரண்டு வாணவேடிக்கை காட்டியிருப்பார்.
டோணி : டேய் டேய் நமக்குள்ளை சண்டைவேண்டாம், முரளி ஐபிஎல்லில் நல்லாத் தானே அடித்தவர் ஏதோ அவரின்டை கஸ்டகாலம் சமியும்,ரோச்சும் நான்ஸும் இப்படி பந்துபோட்டால் எப்படி அடிப்பான்.
ஹர்பஜன் : முதலில் எல்லாவற்றையும் மாற்றவேண்டும். ஐசிசிக்கும் மோடியையே தலைவராக்கவேண்டும்.
விஜய் : அடேய் மோடியையே தூக்கிவிட்டார்கள்,
யுவராஜ் : பிடிக்கல்லை எனக்கு பிடிக்கல்லை
கம்பீர் : ஆமாம் சில நாட்களாக உனக்கு பேட் பிடிக்கவே தெரியவில்லை,
யுவராஜ் : சியர்ஸ் லீடராக ஆடுபவர்களைப் பிடிக்கல்லை. எல்லாம் சப்பை பிகர்கள்.
சவ்லா : ம்ம் நல்ல பிகர்கள் ஆடினாலும் நீ ஆடிவிடுவாய், உன் ஆட்டத்தைதான் ஐபிஎல்லில் பார்த்தேனே.
டோணீ : ஹேய் ஹைய்ஸ் எங்கடை அணிக்கு இனி ப்ரீத்தியோ அல்லது ஷில்பாவோ தான் ஓனர் என மாற்றினால் கோப்பை எமக்குத் தான்.
ஜடேஜா: அண்ணே எப்படி அண்ணே உங்களால் மட்டும் இப்படி யோசிக்கமுடிகின்றது. சூப்பர் ஐடியா.
ரோகித்: அடே அகர்கார் ராசிக்காரா, இது ஒன்றும் ஐபிஎல்ல் அல்ல நம்ம நாட்டு டீம். இதற்க்கு ஓனர் மன்மோகன் சிங் தான்.
ஷாகீர் : முதலில் இவன் ஜடேஜாவை நிப்பாட்டினால் எல்லாம் சரிவரும் பேட்டிங்கும் சொதப்பல் போலிங்கும் சொதப்பல்.
ரெய்னா : பிராண்ட் அம்பாசிடர் போல் எங்கள் டீம் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராயையோ இல்லை லஸ்மிராயையோ சேர்த்தால் எல்லாம் சரிவரும்.
லஸ்மிராய் என்ற பெயரைக் கேட்டு ஜேர்க்கான டோணி ரெய்னாவை முறைக்கின்றார்.
ரெய்னா : சாரி பாஸ் ஒரு ப்ளொவிலை சொல்லிட்டான்.
ஹர்பஜன் : அட ஒருதரும் கிடைக்கவில்லை என்றால் நம்ம நீதா அம்பானியை அம்பாசிடராக்கினாலும் சூப்பர்.
யுவராஜ் : பஜ்ஜி ஏன் இந்தக் கொலைவெறி.
விஜய் : த்ரிஷாவை நம்ம அம்பாசிடராக்கினால் எப்படியிருக்கும்?
தினேஷ் : அடப்பாவி மக்கா அவங்க பார்த்த சென்னை மேட்ச் எல்லாம் நாம் தோத்ததை மறந்துவிட்டியா?
விஜய் : அப்போ நமீதாவைப் சேர்த்தால் நல்லாயிருக்கும் ஒரு அவசரத்துக்கு சைட் ஸ்கிறினாகவும் பாவிக்கலாம்.
யூசுப் : அடப்போடா நமீதா மச்சான் மச்சான் என்பார் அந்தக் கனவிலையே பந்தைக் கோட்டைவிட்டுவிடவேண்டியதுதான்.
டோணி : ஷாகீர் நீ என்ன சொல்கின்றாய் உன்ரை ட்விட்டர் பிரண்ட்ஸ் என்ன சொல்கின்றார்கள்.?
யுவராஜ் : இவன் எங்கே கிரிக்கெட் பற்றி ட்விட்டுகின்றான் நீச்சலடித்த கதை, படம் பார்த்த கதைதான் ட்விட்டுகின்றான்.
ஷாகீர் : ஆமாம் அங்கே மட்டும் என்ன வாழ்கிதாம் தம்பி நீயும், டிஸ்கோதே போன கதையும் பிகர் கதையும் தானே எழுதுகின்றாய்.
தம்பி என்றா வார்த்தையைக் கேட்டு காண்டான யுவி மீட்டிங்கை விட்டு எழும்பிப்போக ஹர்பயன் அவரைத் தடுக்கின்றார்.
டோணி : சும்மா விசர்க் கதையை விட்டுவிட்டு தோல்விக்கான காரணம் என்ன என ஆரோயுங்கோ. இல்லையென்றால் அவன் அவனே நெட்டில் தாளித்து தள்ளிவிடுவார்கள்.
கார்த்தீக் : ஓம் சுகுமார் வலைமனையிலும் பவன் எரியாத சுவடியிலும் போட்டுத் தாக்கிப்போடுவார்கள்,
நெஹ்ரா : முதலில் இவன் ஜடேஜாவைத் தூக்கிவிட்டு என் நண்பன் அகர்காரை டீமில் சேர்த்தால் கோப்பை நமக்குத் தான்.
யூசுப் : அண்ணாச்சி கங்குலி இதைக் கேட்டால் பிளைட் பிடித்து வந்து உங்களை உதைப்பார்.
ஹர்பஜன் : நல்ல ஐடியா நம்ம குறூப்புக்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கனடா போன்ற அணிகளைச் சேர்த்தால் வெற்றி எமக்குத் தான்.
டோணி : சரி சரி எப்படியோ பாகிஸ்தானும் இம்முறை அரையிறுதிக்கு போகல்லை அந்த சந்தோஷத்தில் நம்ம வீடுகள் தப்பிவிட்டன.
ஷாகீர் : முதல்முறை நாம் அடுத்த முறை பாக்கி இந்த முறை ஸ்ரீலங்கா கோப்பையை எடுக்குமென எதிர்பார்த்தால் அவங்களும் தோத்துப்போனார்கள்.
ரெய்னா : அடுத்த மேட்ச் எமக்கும் அவங்களுக்கும் தான். கவனம் எல்லாவற்றையும் சேர்த்து எமக்குத் தந்துவிடுவார்கள்.
ஹர்பஜன் : ச்சீச்சீ சனத் இருக்கும் வரை பயப்படத் தேவையில்லை.
நெஹ்ரா : பஜ்ஜி அவர் இப்போ எம்பி கவனமாக கதை.
டோணி : சரி சரி விட்டால் நீங்கள் இன்னும் கதைப்பியள் நாளைக்கு ஸ்ரீலங்காவை எப்படி சாமளிப்பது என விட்டத்தைப் பார்த்தபடி யோசிப்போம்.
கடற்கரை மண்ணைத் தட்டியபடி எழும்பிய இந்திய அணியினர் அடுத்த பக்கத்தில் பாகிஸ்தானும் ஸ்ரீ லங்காவும் இதே போல் ஆராய்வதைப் பார்த்து எடுத்தார்கள் ஓட்டம்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
7 கருத்துக் கூறியவர்கள்:
சரி சரி விட்டால் நீங்கள் இன்னும் கதைப்பியள் நாளைக்கு ஸ்ரீலங்காவை எப்படி சாமளிப்பது என விட்டத்தைப் பார்த்தபடி யோசிப்போம்.
....ha,ha,ha,ha,ha... :-)
ஹா ஹா சூப்பர் அப்பு சூப்பர்.............
அண்ணே...
சில நுண்ணிய விடயங்களைக் கவனமெடுத்து எழுதியிருந்ததை இரசித்தேன்...
கலக்கல்....
// லஸ்மிராய் என்ற பெயரைக் கேட்டு ஜேர்க்கான டோணி ரெய்னாவை முறைக்கின்றார்.
ரெய்னா : சாரி பாஸ் ஒரு ப்ளொவிலை சொல்லிட்டான். //
// ஹர்பஜன் : அட ஒருதரும் கிடைக்கவில்லை என்றால் நம்ம நீதா அம்பானியை அம்பாசிடராக்கினாலும் சூப்பர். //
// யுவராஜ் : இவன் எங்கே கிரிக்கெட் பற்றி ட்விட்டுகின்றான் நீச்சலடித்த கதை, படம் பார்த்த கதைதான் ட்விட்டுகின்றான். //
// தம்பி என்றா வார்த்தையைக் கேட்டு காண்டான யுவி //
// கார்த்தீக் : ஓம் சுகுமார் வலைமனையிலும் பவன் எரியாத சுவடியிலும் போட்டுத் தாக்கிப்போடுவார்கள், //
கலக்கலுங்ணா....
அட அட அட.... தாங்கமுடியல சாமி... அண்ணே உண்மையச் சொல்லுங்க இது கதையல்ல நிஜம்தானே..:p
இந்தியப் பூனை இளைத்தால் லண்டன் எலி எம்பிக் குதிச்சு விளையாடுமாம்.. ;)
back to form Vanthi.. welcome
அவ்வ. லண்டனுக்கு போன பின் பக்கா போர்மில் ஒரு பதிவு. அப்பிடியே போர்ம் பற்றி போர்ம் இழந்திருக்கும் இந்திய வீரர்களுக்கும் நம்ம இலங்கை சிங்கங்களுக்கும் சொல்லிக்கொடுங்க. அடுத்த ஐ.பி.எல்லில் ஆடும் எண்ணம் எனக்கு உண்டு மாமா தங்களுக்கு எப்பிடி?
வந்தியண்ணா பக் டு த போம் !!!
Post a Comment