புதிய வாழ்க்கை.
கொஞ்சம் கொஞ்சமாக வெயில் வரத்தொடங்கிவிட்டது ஆனாலும் இன்னும் குளிர் குறையவில்லை சென்ற வாரத்தில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசில் வெப்பம். நாலு ஐந்து உடைகள் என அணிந்தவர்கள் இப்போது ஒவ்வொன்றாக குறைக்கத்தொடங்கிவிட்டார்கள். சமர் தொடங்க அணியும் உடைகளின் அளவும் எண்ணிக்கையும் மாறிவிடும். பெயர் தான் வளர்ச்சியடைந்த நாடு ஆனாலும் களவுகளும் குப்பைகளும் ஆசிய நாடுகளுக்கு நிகரானவைதான், மாயா, கரவைக்குரல் இருவரும் தொடர்புகொண்டார்கள். சதீஸ் வந்தபின்னர் சிலவேளைகளில் நாலுபேர் கொண்ட பதிவர் சந்திப்பு நடைபெறலாம். நீருஜாவும் சந்திப்பு நடத்தவேண்டும் எனப் பதிவு இட்டிருந்தார். காலம் கனிந்தால் லண்டன் பிரிட்ஜில் சந்திக்கலாம்,
எனக்கு ஏனோ இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. என் கல்வி முடிய மீண்டும் சொந்தநாட்டுக்கு வந்தாலும் வருவேன் (சிலவேளைகளில் நல்ல எதிர்காலம் கிடைத்தால்(வேலையைத் தான் சொல்கின்றேன்) இங்கே சிலகாலம் வசிக்கலாம் ). உங்கள் வாழ்க்கையில் இதுவரை அடிபடாமல் எந்தவிதமான போராட்டங்களையும் சந்திக்கவில்லையென்றால் நிச்சயம் நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் செல்லுங்கள் வாழ்க்கையின் இன்னும் சிலவிடயங்களை அனுபவிக்கலாம்.
நிலத்தின் கீழ்ச் செல்லும் புகையிரதம், இரட்டைத் தட்டு பேருந்து, அவசர கதியில் உண்ணும் உணவுகள், ஆங்கிலம், பிரெஞ்ச், டொட்ச், ஹிந்தி, தமிழ், மலையாளம், சைனீஸ் என்ற கதம்பமொழிகள் பல நிறமனிதர்கள் என பலவற்றை அனுபவிக்கலாம்.
ஐஸ்லாந்து எரிமலையின் சீற்றம் இங்கிலாந்தை நன்றாகவே பாதித்து விட்டது. வழக்கமாக தலைக்கு மேலால் இடைவெளி இல்லாமல் பறந்து செல்லும் விமானங்கள் கடந்த ஒரு வாரமாக செல்லாமல் வானமே அமைதியாக இருக்க்கின்றது. நேற்று வழக்கம் போல் சேவை மீண்டும் ஆரம்பித்தாலும் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பதை வானம் சொல்கின்றது.
எரிமலையால் நம்ம தமிழ்க் கடைகளுக்குத் தான் விற்பனை அதிகம் இலங்கை, இந்தியாபோன்ற நாடுகளில் இருந்து தமிழ் உணவுகள் சில நாட்களுக்கு வராது என்பதால் பலர் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி ஏற்கனவே நிறைந்துபோயுள்ள குளிரூட்டிகளை நிறைத்து வைத்துள்ளார்கள்.
கிரிக்கெட்
இம்முறை ஐபிஎல் ஒரு விருப்புடன் பார்க்கமுடியவில்லை. கல்வி வேலை என நேரம் போனபடியால் நெட்டில் இடைக்கிடை முடிவுகளை அறிந்துகொண்டேன், சிலவேளைகளில் கங்கோனின் ட்விட்டுகளில் என்ன நடக்கின்றது என்பது நன்றாகபுரிந்தது. மோடியும் சசிதரூரும் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். இந்தவார விகடனில் மோடி அமெரிக்கா சிறையில் 3 வருடங்கள் இருந்தவர் என்ற மேலதிக விபரம் இருக்கின்றது. எது எப்படியோ மோடி முடிவு செய்தபடி இம்முறை மும்பாய் இந்தியன் கோப்பையை வெல்லும். கிரிக்கெட் சூதாட்டம் போல் மாறிவிட்டது.
சினிமா
சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் படிக்கும் பாகிஸ்தான் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்திய சினிமாக்கள் பற்றிய பேச்சும் வந்தது, அவர் ஹிந்தி சினிமாவுடன் தமிழில் எங்கள் உலகநாயகன் நடித்த படங்கள் மட்டும் பார்ப்பதாக கூறினார். தசாவதாரம், அவ்வை சண்முகி பல தடவை பார்த்ததாகச் சொல்லும் போது மொழி, தேசம் கடந்து உலகநாயகனின் புகழ் பரவியிருப்பது பெருமையாக இருந்தது.
அண்மையில் கலைஞர் டிவியின் புண்ணியத்தில் மதராசப் பட்டணம் படத்தில் பாடல் வெளியீடு பார்க்க கிடைத்தது. ஆரியாவின் தோற்றம் லகான் அமீர் கானை நினைவுபடுத்துகின்றது. நா.முத்துக்குமாரின் அழகிய தமிழ் வார்த்தைகளை உதித் நாராயணனைக் கொண்டு ஜிவிபிரகாஷ் ஏன் பாடிவித்தாரோ?
குறிப்பு : பல நாட்களுக்கு முன்னர் எழுதியவற்றில் சிலவற்றை நீக்கி சிலவற்றைச் சேர்ந்து பதிவிட்டிருக்கின்றேன். இன்றுதான் கோர்ஸ்வேர்க் முடிந்து கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. அடுத்த பதிவு எப்பவோ?
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
12 கருத்துக் கூறியவர்கள்:
Best wishes! :-)
//கொஞ்சம் கொஞ்சமாக வெயில் வரத்தொடங்கிவிட்டது ஆனாலும் இன்னும் குளிர் குறையவில்லை சென்ற வாரத்தில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசில் வெப்பம்.//
அப்போ இவ்வளவு நாளும் குளிக்காமல் இருந்திட்டு இப்போதான் குளிக்கப்போரிங்க என்று சொல்லுங்க.
// சதீஸ் வந்தபின்னர் சிலவேளைகளில் நாலுபேர் கொண்ட பதிவர் சந்திப்பு நடைபெறலாம்//
எங்க போனாலும் விடமாட்டாங்க போல கிடக்கு....சரி சரி வந்த பிறகு களை கட்டுவம்.. ஆமா இதில சதீஷ் யாரு மாமா?
//லவேளைகளில் நல்ல எதிர்காலம் கிடைத்தால்(வேலையைத் தான் சொல்கின்றேன்) இங்கே சிலகாலம் வசிக்கலாம் )//
ஒன்றை பார்த்து கட்டிட்டிங்க என்றால் நிறைய வேலை வரும்தானே மாமா..அப்புறம் எங்க வாறது சொல்லாமல் சொல்றிங்க. விரும்பினா அம்மாட்ட சொல்லிவிடுகின்றோம் நீங்களே உங்கை ஒன்றை பார்க்க.
//இந்தவார விகடனில் மோடி அமெரிக்கா சிறையில் 3 வருடங்கள் இருந்தவர் //
விகடனிலும் நீங்கள் உங்கள் சூப்பில் முன்னர் போடும் படங்கள் போல வருகின்றதா. இந்த நயன்தாரா ஆண்டி, அனுஷ்கா அக்கா படங்கள் தான் மாம்ஸ்.
வர முன்னமே பயப்படுத்திரிங்களே, மாம்ஸ் தைரியம் சொல்லி வரவைப்பிங்க என்று பார்த்தால் இப்பிடி கவுக்கிரிங்களே. அதுசரி உங்களுக்கு பக்கத்ஹ்டு சீட்டில் உங்கள் கொலிஜில் இருக்கும் அந்த அந்த பொன்னை கேட்டதா சொல்லுங்க.
//எனக்கு ஏனோ இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. என் கல்வி முடிய மீண்டும் சொந்தநாட்டுக்கு வந்தாலும் வருவேன் (சிலவேளைகளில் நல்ல எதிர்காலம் கிடைத்தால்(வேலையைத் தான் சொல்கின்றேன்) இங்கே சிலகாலம் வசிக்கலாம் ). உங்கள் வாழ்க்கையில் இதுவரை அடிபடாமல் எந்தவிதமான போராட்டங்களையும் சந்திக்கவில்லையென்றால் நிச்சயம் நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் செல்லுங்கள் வாழ்க்கையின் இன்னும் சிலவிடயங்களை அனுபவிக்கலாம்
யதார்த்தம்.. :)
உங்கள் வாழ்க்கையில் இதுவரை அடிபடாமல் எந்தவிதமான போராட்டங்களையும் சந்திக்கவில்லையென்றால் நிச்சயம் நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் செல்லுங்கள் வாழ்க்கையின் இன்னும் சிலவிடயங்களை அனுபவிக்கலாம். //
அண்ணை 15 வருசமா அனுபவிச்சுக் கொண்டு தானே இருக்கிறம், நீங்க முன்னால போங்க நாங்க பின்னால வாறம் ;)
மாமா வணக்கம். (அங்கிள் என்பதன் தமிழ்ப்பதம். மற்றும்படி ஒருவரின் தொழில்ரீதியான பெயரை அழைத்து இழிவுபடுத்தும் ஈனப் புத்தி எனக்குக் கிடையாது. :P )
பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
அங்கால இங்கால உடுப்புகளப் பாக்கிறத விட்டிற்று படியுங்கோ. :D
//சிலவேளைகளில் நல்ல எதிர்காலம் கிடைத்தால்(வேலையைத் தான் சொல்கின்றேன்) இங்கே சிலகாலம் வசிக்கலாம்//
ஓம் ஓம்.
நாங்கள் சந்தேகப் படேல... கவலைப்பட வேணாம்.
//சிலவேளைகளில் கங்கோனின் ட்விட்டுகளில் என்ன நடக்கின்றது என்பது நன்றாகபுரிந்தது.//
அய்...
மகிழ்ச்சி.... :)
//அடுத்த பதிவு எப்பவோ? //
ஆறுதலா போடுங்கோ...
பதிவில் சந்தித்ததில் மகிழ்ச்சி...
நலம் நலமறிய ஆவல். :)
நாலு ஐந்து உடைகள் என அணிந்தவர்கள் இப்போது ஒவ்வொன்றாக குறைக்கத்தொடங்கிவிட்டார்கள்//
லண்டன் போன பிறவிப்பயனை அடையப்போகிறீர்கள். கொடுத்து வைத்தவறையா நீர்...
அப்ப எப்ப சந்திப்பம் ???
வணக்கம் அண்ணோய், பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி :)
//உங்கள் வாழ்க்கையில் இதுவரை அடிபடாமல் எந்தவிதமான போராட்டங்களையும் சந்திக்கவில்லையென்றால் நிச்சயம் நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் செல்லுங்கள் வாழ்க்கையின் இன்னும் சிலவிடயங்களை அனுபவிக்கலாம்//
ஸ்பொன்சர் ப்ளீஸ் :p
// கன்கொன் || Kangon said...
அங்கால இங்கால உடுப்புகளப் பாக்கிறத விட்டிற்று படியுங்கோ. :D
//
சாமி வரம் கொடுத்தாலும் இந்தப் பூசாரி விடமாட்டான் போல கிடக்கு :P
ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவிட்டுள்ளீர்கள், தொடர்ந்த எழுதுங்கள்
உங்கள் வாசகன்
கனகாலத்துக்கு பிறகு பதிவில சந்திச்சதில மிக்க மகிழ்ச்சி வந்தியண்ணா... :-)
ஹாய் வந்தி அண்ணே..!
நீண்ட நாடகளுக்கு பிறகு உங்கள் பதிவு படித்தேன் மகிழ்ச்சி..!
##ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவிட்டுள்ளீர்கள், தொடர்ந்த எழுதுங்கள்
உங்கள் வாசகன்##
யாரது என்பேர்ல பின்னூட்டம் போடறது...!!!
கொஞ்சம் நாட்டில வெய்யில் வர ஆளும் பதிவில முகம் காட்டுது போல!
பதிவு கண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கோ.
ஐஸ்லாந்து எரிமலையால ஐரோப்பிய வான் வெளியையே ஸ்தம்பிக்க வச்ச இயற்கை ஐஸ்லாந்து விமான நிலையத்தை ஒரு சேதமும் பண்ணேல்லை.கவனிச்சனீங்களோ?
அது தான் இயற்கையின்ர பாசை போல.
Post a Comment