இளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்

வணக்கம் ங்ண்ணா

நலம் நலமறிய ஆவல், வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடுவதால் சந்தோஷமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் ஒரு சராசரி சினிமா ரசிகன். அதிகமாக தமிழ்ப் படங்களையும் சில தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கிலப் படங்களையும் பார்ப்பவன். அண்மைக்காலமாக உங்கள் படங்கள் ஒரே வகையான படங்களாக வருவது கவலையளிக்கின்றது. வருங்கால சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என எதோ ஒரு அமைப்பு சில காலம் முன்னர் உங்களுக்கு விருது வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.



ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்பு போட்டு மிகவும் சாதாரண நடிகனாக இருந்த உங்களை விக்ரமனின் பூவே உனக்காக படம் தான் அடுத்த கட்டத்திற்க்கு உயர்த்திச் சென்றது. அந்தப் படத்தினால் பல ரசிகர்கள் உங்களுக்கு உருவானார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நன்றாகவே நடித்திருந்தீர்கள்.

கமல், ரஜனி படங்களுக்குப் பின்னர் காதலுக்கு மரியாதை படம் தான் அதிகம் தடவை சிடியில் நான் பார்த்த படம். ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை போன்ற ரீமேக் படங்களில் உங்கள் பங்கு சிறப்பாகவே இருந்தது.

இடையிடயே மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, உதயா போன்ற சில பப்படங்களைக் கொடுத்தாலும் ரசிகர்களின் மனதில் கில்லியாக உங்களை உயர்த்தியவர் தரணிதான். கில்லி படம் போல் விறுவிறுப்பான வேகமான திரைக்கதையுடன் அண்மைக்காலங்களில் உங்கள் எந்தப் படங்களும் வரவில்லை. சிலர் போக்கிரியை கில்லியின் வேகத்துக்கு ஒப்பிட்டாலும் கில்லிதான் என்றைக்கும் முதல்வன்.

அண்மைக்காலமாக அதிரடி மசாலாப் படங்களில் அதிகம் நடிக்கும் நீங்கள் ஏன் தற்போது பிரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே போன்ற நல்ல காதல் கதைகளில் நடிப்பதில்லை. நீங்கள் குருவாக நினைக்கும் ரஜனிகாந்த் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்திருக்கின்றார். அவரின் மசாலாப் படங்களில் கதையும் திரைக்கதையும் லாஜிக்குடன் பெரும்பாலும் இருக்கும். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒருநாளும் லாஜிக் மீறி ஓடும் ரயிலுக்குத் தாவுவதோ, அருவில் குதித்து உயிர் தப்புவதோ இல்லை.

நீங்கள் மசாலாப் படம் நடிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை, இடையிடையே நல்ல கதை அம்சமுள்ள படங்களிலும் நடிக்கலாமே இதுதான் இப்போதைய பல ரசிகர்களின் கருத்து.

நீங்கள் நடித்த ஆதி, குருவி, மதுர, வில்லு போன்ற படங்களை நீங்கள் மீண்டும் ஒரு தடவை பார்த்தீர்களா? அப்படிப் பார்க்கவில்லை என்றால் மீண்டும் ஒரு தடவை பாருங்கள்? எங்கே நீங்கள் சறுக்கியிருக்கின்றீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

இனியாவது உங்களை சூப்பர் ஸ்டார் உயரத்திற்க்கு வைத்துக் கதை சொல்பவர்களிடம் இருந்து தப்பி பாசில், சித்திக், செல்வபாரதி போன்றோரின் நல்ல இயக்குனர்களிடம் பேரரசு போன்ற மசாலப் படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல படங்களில் நடியுங்கள். இல்லையென்றால் விஜய டி. ராஜேந்தர் போல் இணையங்களிலும் எஸ் எம் எஸ்களிலும் உங்களை பலர் வேட்டையாடுவார்கள்.

உங்களிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மிகவும் சாதாரண ரசிகர்களை இனியும் ஏமாற்றிவிடாதீர்கள்.

மீண்டும் என்னைக் கடிதம் எழுதவைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.

நன்றிகள்

இங்ஙனம்
உங்களின் ரசிகன்

பின்குறிப்பு : தயவு செய்து உங்கள் படங்களை சன் குழுமத்துடன் கொடுத்து வெற்றி என்ற மாயையில் விழுந்துவிடாதீர்கள்

32 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

என்னண்ணே விஜயம் மீது திடீரெண்டு பாசம்?

எனக்கும் மசாலாப் படங்கள் மீது பிரச்சினை இல்லை, ஆனால் சின்னப்பிள்ளைத்தனமான யதார்த்த மீறல்கள் வேண்டாம்....

விஜயம் திருந்துகிறாரோ பார்ப்போம்...

புல்லட் சொல்வது:

என்ன நடந்தது? ஆனந்த சங்கரிக்கு போட்டியா இறங்கிட்டியளோ?

ப்ரியமுடன் வசந்த் சொல்வது:

//மீண்டும் என்னைக் கடிதம் எழுதவைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்//

அதெப்பிடி விடமாட்டோம்டியோவ்...!

டாக்டர் விஜய் சொல்வது:

ங்கண்ணா,

உங்க கடிதம் வாசிச்சு கண்ணு கலங்கிட்டுங்கண்ணா. சங்கீதா அழுவுறத பாக்க மனசு தவிக்குது. நா இனி பேரரசு படத்துலயே தொடர்ந்து நடிக்குறன். உங்க பாசத்துக்கு நன்றிங்கண்ணா.

டாக்டர் விஜய்.

Bavan சொல்வது:

என்னங்ணா..
விஜக்கு ஏன் தொடர் ஆப்புகள் வருகிறது எனத்தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்..

ம்ம்..பார்ப்போம் விஜயின் அடுத்த படம் சுறா துள்ளுமா, கருவாடாகுமா என்று..;)

Subankan சொல்வது:

விஜயின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக எல்லாம் எனக்கு பிடித்தவை. ப்ரன்ட்ஸ், வசீகரா படங்களின் காமடிகள் கலக்கல். இவற்றை விட்டுவிட்டு ஹீரோயிசம் என்ற மாயையில் விழுந்துவிட்டார்.

அதுசரி, இப்போதெல்லாம் அடிக்கடி கடிதம் எழுதுகிறீர்களாமே?

balavasakan சொல்வது:

இது என்னண்ணே எனகு வந்து அடவைஸ் பண்ணினீங்கள் இப்ப விஜயக்கு அடவைஸ் பண்ணிறியள் என்ன நடக்குது ...

சரவணன். ச சொல்வது:

ரஜினி செய்து கொண்டிருப்பதை கண்டிப்பாக விஜய் தொடருவார்.

1. ரசிகர் என்னும் சிறு வட்டத்துக்காக நடிப்பது

2. அரசியலுக்கு வருவேன் என்று புருடா விடுவது (60 வயது வரை)

இன்னும் பல

Vathees Varunan சொல்வது:

உண்மையிலேயே ரஜனியுடைய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அவர் படத்துக்கு படம் வித்தியாசங்களை வழங்கி வருபவர்.. ஆனால் விஜய் தொடர்ந்து ஒரேமாதிரியா நடித்து வருவது இறுதியில் அவருக்கே ஆப்பாக போய் முடியலாம். அந்த வகையில் ஒரு சாதாரண சினிமா ரசிகனாக இருந்துகொண்டு இப்படியான ஒரு மடலை எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.

விஜய் சொல்வது:

என்னுடைய நாளைய தீர்ப்பு செந்தூரபாண்டி, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், நண்பர் அஜித்துடன் நடித்த ராஜவின் பார்வையிலே போன்ற சிறந்த படங்களை நீங்கள் பார்க்கவில்லையா?

கரன் சொல்வது:

நல்ல கடிதம்.
கடிதத்துக்கு நன்றி.

வந்தியத்தேவன் கூறியது…
//ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்பு போட்டு மிகவும் சாதாரண நடிகனாக இருந்த உங்களை…//

படங்களில் கமல் செய்யாத இந்தமாதிரி சேட்டைகளையா விஜய் செய்தார்.
ஏனைய்யா…?
விஜய், தான் நடித்த ஆரம்பகால மிகச்சில படங்களில் தான் இந்தமாதிரி மோசமான காட்சிகளில் நடித்திருந்தார்.

வந்தியத்தேவன் கூறியது…
//நீங்கள் குருவாக நினைக்கும் ரஜனிகாந்த் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்திருக்கின்றார். அவரின் மசாலாப் படங்களில் கதையும் திரைக்கதையும் லாஜிக்குடன் பெரும்பாலும் இருக்கும். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒருநாளும் லாஜிக் மீறி ஓடும் ரயிலுக்குத் தாவுவதோ, அருவில் குதித்து உயிர் தப்புவதோ இல்லை.//

80 – 90 களில் கதாநாயகர்கள் பறந்து பறந்து சண்டை போட்ட படங்களை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லது மறந்து விட்டீர்களா?(ரஜினி, கமல் நடித்த சில மசாலாப் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல)

மற்றது,
ஓடும் ரயிலில் ஏறுவது எப்படி logic மீறல் ஆகும்?
சாதாரணமாக இலங்கை இந்தியாவைப் பொறுத்தவரை சில இடங்களில்(பாலங்கள், புகையிரதக்கடவைகள் போன்றவற்றில்) சில நேரங்களில் புகையிரதங்கள் மெதுவாகச் செல்வதுண்டு. இதை நானே பல தடவை பார்த்ததுண்டு. (அந்த நேரம் எனக்கும் புகையிரதத்தின் மேல் தாவும் எண்ணம் ஏற்படுவதுண்டு)

குருவி படத்தில் அந்தமாதிரி ஒரு பாலத்தில்/மேம்பாலத்தில் ஓடும் ஒரு புகையிரதத்தில் ஒருவன் பாய்ந்து ஏறுவதற்கான வாய்ப்பு உண்டா? இல்லையா?
தசாவதாரம் படத்தில் கூட, கமல் ஒரு புகையிரதக்கடவைப் பகுதியில் ஒரு ஓடும் புகையிரதத்தின் மேல் தாவி ஏறுகிறார்(கூடவே அசினும்).

குருவி படத்தில் கட்டடத்திலிருந்து பாலத்துக்கு பாய்வதற்கான காட்சியில்தான் யதார்த்த மீறல்கள் இருக்கலாம்(பாலத்துக்கு மிக அருகிலுள்ள கட்டடமாக இருப்பின்).
ஏனென்றால்,
பொதுவாக பாலத்துக்கு மிக அருகாமையில் கட்டடங்கள் இருப்பது இல்லை.

மிகப்பெரிய பிரச்சினை விஜய் நடிக்கும் படங்களின்(அ-த, கு, வி) திரைக்கதையிலும் சில காட்சியமைப்புகளிலும்தான்.

மாற்றங்களும் தேவைதான்,
எல்லோருக்கும்.

Unknown சொல்வது:

//படங்களில் கமல் செய்யாத இந்தமாதிரி சேட்டைகளையா விஜய் செய்தார்.
ஏனைய்யா…?
விஜய், தான் நடித்த ஆரம்பகால மிகச்சில படங்களில் தான் இந்தமாதிரி மோசமான காட்சிகளில் நடித்திருந்தார். //

கமல் தனது முதலாவது படத்திலே, அதுவும் 5 வயதிலேயே தேசிய விருது வாங்கினார் அண்ணே...
அவர் நடிச்சுக் கொண்டு உதுகளும் செய்தார்... உவர் உதுகள மட்டுமெல்லே செய்தார்?
கமல் செய்தா நானும் செய்வனெண்டா கமல் செய்த எல்லாத்தையும் செய்யோணும்.....


//80 – 90 களில் கதாநாயகர்கள் பறந்து பறந்து சண்டை போட்ட படங்களை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லது மறந்து விட்டீர்களா?(ரஜினி, கமல் நடித்த சில மசாலாப் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல)//

பறப்பது பெரிதல்ல...
திரைப்படமென்பதே யதார்த்த மீறல்தான் சகோதரா...
எந்தளவுக்கு மீறுகிறோம் என்பதுதான் பிரச்சினை...
படத்தில் கதாநாயகன் நினைத்தவுடன் பாடுவதெல்லாம் யதார்த்தமா? கனவில் மெட்டமைப்பது?


//மற்றது,
ஓடும் ரயிலில் ஏறுவது எப்படி logic மீறல் ஆகும்?
சாதாரணமாக இலங்கை இந்தியாவைப் பொறுத்தவரை சில இடங்களில்(பாலங்கள், புகையிரதக்கடவைகள் போன்றவற்றில்) சில நேரங்களில் புகையிரதங்கள் மெதுவாகச் செல்வதுண்டு. இதை நானே பல தடவை பார்த்ததுண்டு. (அந்த நேரம் எனக்கும் புகையிரதத்தின் மேல் தாவும் எண்ணம் ஏற்படுவதுண்டு) //

எந்தளவுக்கு?
மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்தில்?
தூரஇருந்து பார்க்கும்போது புகையிரதத்தின் வேகம் தெரியாது, ஏறமுயற்சித்துப் பாருங்கள்...
அதுசரிண்ணே,
குருவிப் படத்தில எப்பிடின்ணே அந்த உயர்த்தி அறுந்து உள்ள போனதும் அதுக்குள்ள போய்ற்று அவரின்ர அப்பா பற்றிக் கதைக்கிறது தண்ணிக்குள்ளால ஊடுருவி அவருக்குக் கேட்டு வெளில பாய்ஞ்சு பறந்து வந்தார்?
எப்பிடின்ணே வில்லுப் படத்தில விமானம்/உலங்குவானூர்தியில எல்லாம் தாவித்தாவி ஓடுறார்?
கீழ இருந்து பாக்க விமானம் மெதுவாப் போற மாதிரித்தானன்ணே இருக்கும், தப்பித்தவறி உள்ளுக்குள்ள இருந்து குதிச்சுப் பாத்திராதயுங்கோ....

அந்தாப் பெரிய அருவிக்குள்ள மனுசன் ஒருத்தன் விழுந்து உடன எழும்பி ஒடுவானா?
தப்பினான், பெரிய காயம், வைத்தியசாலையில் என்றால் சரியெண்டு பாத்திற்றுப் போகலாம்...


//மிகப்பெரிய பிரச்சினை விஜய் நடிக்கும் படங்களின்(அ-த, கு, வி) திரைக்கதையிலும் சில காட்சியமைப்புகளிலும்தான்.//

அதத்தானண்ணே நாங்களும் சொல்றம்...
விஜய் எந்தக் கதையில (அப்பிடியெண்டா?) நடிக்கிறதெண்டும், அந்தக் கதையில தனக்கேற்ற மாற்றங்கள இந்த மாஸ் நாயகர்கள் செய்வார்கள் என்பதும் உலகறிந்தது.
இயக்குனர் சொல்லும் கதையை அப்படியே கேட்டுவிட்டு அவர்கள் சொன்னபடி நடிக்கும் கதாநாயகர்கள் தமிழில் இல்லவே இல்லை எனலாம்...


//மாற்றங்களும் தேவைதான்,
எல்லோருக்கும்.//

இது தேர்தல் பிரச்சாரம் மாதிரி இருக்கண்ணே...
கவனம்...
எல்லாருக்கும் வேணுமண்ணே....
பின்னூட்டம் போடுறவங்களுக்கும்....

கரன் சொல்வது:

கனககோபி கூறியது…
//கமல் தனது முதலாவது படத்திலே, அதுவும் 5 வயதிலேயே தேசிய விருது வாங்கினார் அண்ணே...
அவர் நடிச்சுக் கொண்டு உதுகளும் செய்தார்... உவர் உதுகள மட்டுமெல்லே செய்தார்?
கமல் செய்தா நானும் செய்வனெண்டா கமல் செய்த எல்லாத்தையும் செய்யோணும்.....//
அதைத்தான் நானும் கூறினேன்.
கமல் செய்த எல்லாவற்றிலும் ஒரு நிறைவு இருந்தது.
கமல் செய்த எல்லாவற்றையும் செய்யமுடியாது என்று விஜய்க்கு தெரிந்திருந்ததால் தான் தனது ஆரம்பகாலப் படங்களோடு அந்த சேட்டைகளை பின்னர் நிறுத்தி விட்டார் போலும். (பிறகு நடிப்பிலும் தொடரும் நிலை வருமாகையால் ஹீ…ஹீ…ஹீ…)

கமல் 250 வரையான படங்கள் நடித்துள்ளார்.
அவற்றில், நல்ல(கதையில்) படங்கள் என 50-70 எண்ணிக்கையிலான படங்களைக் கூறலாம்.(இது, எனது பார்வையில்)

விஜய் 49 படங்கள் நடித்துள்ளார்.
அவற்றில், நல்ல(கதையில்) படங்கள் என 7-12 எண்ணிக்கையிலான படங்களைக் கூறலாம்.

நல்ல படங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் வித்தியாசம் இருப்பினும், விகிதாசாரத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

இந்தவகையில், சூர்யாவின் நல்ல படங்களின் விகிதாசாரம் கமலைவிட(நடிப்பிலல்ல) அதிகம்.(மொத்தம் 24. நல்ல படங்கள் 7-10)

*கமலின் சேட்டைகள் நிறைந்த படங்களின் விகிதாசாரம் மிக அதிகம்
(ஆனால், அவற்றில் ரசனையும் அழகும் இருந்தது என்பது வேறு விடயம்.)

நெருடலான logic மீறல், ஒரு படத்திலென்றாலும் அதுவும் நெருடல்தானே.

திரையுலக அறிவுஜீவியாகக் கருதப்படும் கமலின் படங்களிலேயே இந்தமாதிரியான நெருடல்கள் சில நேரங்களில் வரும்போது, விஜய் எம்மாத்திரம்?

மொத்தத்தில் விஜய் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் (250 படங்களுக்கும்).

பார்ப்போம்…?

கனககோபி கூறியது…
//இது தேர்தல் பிரச்சாரம் மாதிரி இருக்கண்ணே...//

எப்ப தேர்தல்…?


***நான் அண்ணையல்ல. சின்னப்பையன், உங்களைவிட…

கடைக்குட்டி சொல்வது:

பாப்போம்.. சொல் பேச்சு கேக்குறாரான்னு...

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

y y y y

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
என்னண்ணே விஜயம் மீது திடீரெண்டு பாசம்?//

பாசம் என்றில்லை நான் நல்ல படங்களின் ரசிகன் அது யார் நடித்தாலும் பார்ப்பேன், விஜய் பல நல்ல படங்களைக் கொடுத்தவர் இப்போது தடம் மாறுகின்றார் அதுதான் அவருக்கு ஒரு கடிதம்.

//எனக்கும் மசாலாப் படங்கள் மீது பிரச்சினை இல்லை, ஆனால் சின்னப்பிள்ளைத்தனமான யதார்த்த மீறல்கள் வேண்டாம்....//

அதே தான் அந்த நாளில் எத்தனை அர்ஜீன் விஜயகாந்த் படங்கள் விரும்பிப் பார்த்திருப்போம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
என்ன நடந்தது? ஆனந்த சங்கரிக்கு போட்டியா இறங்கிட்டியளோ?//

ஐயோ கடவுளே ஏனப்பு தேசிய மட்டத்தில் சிந்திக்கின்றீர்கள். சர்வதேச மட்டத்தில் கருணாநிதிக்கு போட்டியோ எனக் கேட்டிருக்கலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//பிரியமுடன்...வசந்த் said...

அதெப்பிடி விடமாட்டோம்டியோவ்...!//

ஏன் அண்ணை இந்தக் கொலை வெறி.

வந்தியத்தேவன் சொல்வது:

// டாக்டர் விஜய் said...
ங்கண்ணா,

உங்க கடிதம் வாசிச்சு கண்ணு கலங்கிட்டுங்கண்ணா. சங்கீதா அழுவுறத பாக்க மனசு தவிக்குது. நா இனி பேரரசு படத்துலயே தொடர்ந்து நடிக்குறன். உங்க பாசத்துக்கு நன்றிங்கண்ணா.

டாக்டர் விஜய்.//

உங்கள் நக்கலுக்கு நன்றிங்ண்ணா

வந்தியத்தேவன் சொல்வது:

//Bavan said...
என்னங்ணா..
விஜக்கு ஏன் தொடர் ஆப்புகள் வருகிறது எனத்தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்..//

கருத்துகளை புரிந்துகொண்டமைக்கு நன்றிகள்.

//ம்ம்..பார்ப்போம் விஜயின் அடுத்த படம் சுறா துள்ளுமா, கருவாடாகுமா என்று..;)//

பொறுத்திருந்து பார்ப்போம் எஸ்.பி.ராஜ்குமார் மசாலாப் படங்கள் இதுவரை கொடுக்கவில்லை ஆகையால் துள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
விஜயின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக எல்லாம் எனக்கு பிடித்தவை. ப்ரன்ட்ஸ், வசீகரா படங்களின் காமடிகள் கலக்கல். இவற்றை விட்டுவிட்டு ஹீரோயிசம் என்ற மாயையில் விழுந்துவிட்டார். //

ம்ம்ம் அதுதான் அவர் விழுந்த மாயையில் இப்போ சின்ன, புரட்சி, குட்டித் தளபதிகளும் விழுந்து எம்மைப் பாடாய்ப் படுத்துகின்றார்கள்.

//அதுசரி, இப்போதெல்லாம் அடிக்கடி கடிதம் எழுதுகிறீர்களாமே?//

இது என்ன புதுச் செய்தியாக இருக்கின்றது. நான் ஈமெயில் தான் அதுவும் இல்லையென்றால் குறும் செய்தி மட்டும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// Balavasakan said...
இது என்னண்ணே எனகு வந்து அடவைஸ் பண்ணினீங்கள் இப்ப விஜயக்கு அடவைஸ் பண்ணிறியள் என்ன நடக்குது ...//

அட்வைஸ் பண்ணவேண்டும் போல் இருந்தது அதுதான் அட்வைஸ். மற்றும் படி ஒன்றுமில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//சரவணன். ச said...
ரஜினி செய்து கொண்டிருப்பதை கண்டிப்பாக விஜய் தொடருவார்.//

ம்ம்ம் ரஜனி வழியில் செல்வதில் தப்பில்லை ஆனால் ஒரே கதையை திரும்ப திரும்ப எடுப்பதுதான் வேதனை

//1. ரசிகர் என்னும் சிறு வட்டத்துக்காக நடிப்பது//

இதுதான் தமிழ் நடிகர்களின் பிரச்சனை ரசிகர் மன்றங்களுக்காக படம் நடிப்பது. இந்த மாயையில் இருந்து வெளியேறினால் தமிழிலும் இன்னும் நல்ல படங்கள் வரலாம்.

//2. அரசியலுக்கு வருவேன் என்று புருடா விடுவது (60 வயது வரை)//

பாவம் விஜய் அவரின் அப்பாவிற்காக அரசியல் பல்டி அடிக்கின்றார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//வதீஸ் said...
உண்மையிலேயே ரஜனியுடைய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அவர் படத்துக்கு படம் வித்தியாசங்களை வழங்கி வருபவர்.. ஆனால் விஜய் தொடர்ந்து ஒரேமாதிரியா நடித்து வருவது இறுதியில் அவருக்கே ஆப்பாக போய் முடியலாம். அந்த வகையில் ஒரு சாதாரண சினிமா ரசிகனாக இருந்துகொண்டு இப்படியான ஒரு மடலை எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.//

வழிமொழிகின்றேன் வதீஸ், விஜய் தன்னுடைய ரசிகர்களை மட்டுமே குறிவைத்து படம் எடுக்கின்றார் இது விஜய்க்கு மட்டுமல்ல ஏனைய குட்டி தலை தளபதிகளுக்கும் பொருந்தும் ஏனைய சராசரி ரசிகர்களையும் சிந்தித்தால் இப்படியான படங்கள் வராது.

வந்தியத்தேவன் சொல்வது:

//henry J said...
தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.ஹ்ட்ம்ல்///

நன்றிங்ண்ணா நானும் ஒரு 5$ பெற முயற்சி செய்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//விஜய் said...
என்னுடைய நாளைய தீர்ப்பு செந்தூரபாண்டி, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், நண்பர் அஜித்துடன் நடித்த ராஜவின் பார்வையிலே போன்ற சிறந்த படங்களை நீங்கள் பார்க்கவில்லையா?//

மன்னிக்கவும் விஜயின் ஆரம்பகாலப் படங்கள் பெரிதாக நான் பார்த்ததில்லை. கேடிவியில் ஒளிபரப்பானாலும் டிஸ்கவரிக்கு மாற்றிவிடுவேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

கரன் உங்கள் கேள்விக்கு கனககோபி அளித்துள்ள பதில்களே என் பதிலும் மீண்டும் ஒரே விதமான பதில் வேண்டாம் என நினைக்கின்றேன். நிச்சயமாக கமல் ரஜனி கூட ஆரம்ப நாட்களில் மசாலாப் படங்களில் நடித்தாலும் அவை ஒரே மாதிரிப் படங்கள் அல்ல. கொஞ்சமாவது அந்தப் படங்களில் கதையும் யதார்த்தமும் இருந்தன.

அதே நேரம் ஒரு நடிகரை இன்னொரு நடிகருடன் ஒப்பிடுவது தவறானது.

வந்தியத்தேவன் சொல்வது:

//கடைக்குட்டி said...
பாப்போம்.. சொல் பேச்சு கேக்குறாரான்னு...//

நீங்கள் கடைக்குட்டி என்பதால் சிலவேளைகளில் சொல் பேச்சுக் கேட்கலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வொய்ஸ் (யோகா) said...
y y y y //

இல்லை இல்லை எல்லாம் வேட்டைக்காரன் பார்த்த எபெக்ட் தான்

ARV Loshan சொல்வது:

ஹா ஹா ஹா.. வந்தி இது ஒரு பின்நவீனத்துவ நக்கல் தானே?
அருமையான புள்ளி விபரங்கள்..

உங்களை ஆனந்த சங்கரியாக்கிய புல்லட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. உங்கள் வீரத்தில் நீங்கள் ஒரு சிவாஜிலிங்கம்.. முடிவுகளை விரைந்து எடுப்பதில் ஒரு சம்பந்தன்.. தெளிவாகப் பேசுவதில் நீங்கள் ஒரு பிள்ளையான்.. இதுக்கு மேல சொன்னா வம்பு..

நான் ரசித்த உங்கள் பஞ்ச் - //மன்னிக்கவும் விஜயின் ஆரம்பகாலப் படங்கள் பெரிதாக நான் பார்த்ததில்லை. கேடிவியில் ஒளிபரப்பானாலும் டிஸ்கவரிக்கு மாற்றிவிடுவேன்.//

Anonymous சொல்வது:

Thanks for taking the time to debate this, I feel strongly about it and love learning more on this topic. If attainable, as you achieve experience, would you mind updating your blog with additional data? It is extremely helpful for me.

Anonymous சொல்வது:

Great blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple tweeks would really make my blog shine. Please let me know where you got your design. Cheers

[url=http://t2.caafrica.com/]pay day loans[/url]

payday loans