ஜனாதிபதித் தேர்தல்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. பிரதான கட்சிகள் தங்கள் இதுவரை செய்த அபிவிருத்தியை விட எதிர்க் கட்சியியைத் திட்டுவதையே பெரும்பாலும் செய்கின்றன. தொலைக்காட்சிகள் செய்திகளின் போது சிலரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தணிக்கை செய்தே வெளியிடுகின்றார்கள்.
இணையத் தளங்களில் வெளியிடப்படுகின்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளில் சரத் பொன்சேகாவிற்கு அதிகம் வாக்குகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலான இணையக கருத்துக் கணிப்புகளில் படித்த நகரவாசிகளே கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் வாக்கு வங்கி கிராமங்களிலையே இருக்கின்றது. இதனால் இந்தக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே மாறுகின்றன. அதே நேரம் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள்(முஸ்லீம்கள் உட்பட) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது போன்ற சில கருத்துக் கணிப்புகளும் வெளிவருகின்றன. இவை சிலவேளைகளில் திட்டமிட்ட செயல்பாடுகள் போல் தெரிகின்றன.
மெஹா ஜோக் :
"ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வராதாம்" சொன்னவர் அவசரகாலச் சட்டத்திற்க்கு எதிராகவோ சார்பாகவோ வாக்களிக்க வக்கில்லாத ஐதேக எம்பி.
3 Idiots
அமீர் கான், மாதவன், ஷர்மான், போமன் இரானி மற்றும் கரினாவின் தேர்ந்த நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மீண்டும் ஹிந்தித் திரையுலகம் வித்தியாசமான ஒரு படத்தை தந்துள்ளது. முன்னாபாய் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இந்தப் படமும் நகைச்சுவையுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கின்றது. படத்தின் பலமே அமீர்கானின் நடிப்பும் இளமையும் தான். சில இடங்களில் அமீர்கானை விட மாதவன் நன்றாக நடித்திருக்கின்றார்.
அண்மைக் காலமாக நல்ல படங்களைத் தந்துகொண்டிருக்கும் ஹிந்தித் திரையுலகை தமிழ்த் திரையுலகம் பார்த்து சில நல்ல படங்களை ரீமேக் செய்தாலோ அல்லது அதேபோன்ற் வித்தியாசமான கதையை எடுத்தால் தமிழ்த் திரையுலகம் கதை விடயத்தில் இன்னமும் முன்னேறலாம். இல்லையென்றால் வழக்கமான டெம்ளேட் கதைகளையும் அதீத விளம்பரத்தையும் நம்பி பத்தோடு ஒன்றாக மாறவேண்டும் தான்.
கிரிக்கெட்
சங்ககாரவின் குழந்தைகள் அணி டோணியின் இளமை அணியை நேற்று துவைத்து எடுத்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒருநாள் தொடரில் வெற்றியைத் தவறவிட்ட இலங்கை முதல் போட்டியில் வங்கதேசத்தையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவையும் இலகுவாக வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் நேஹ்ராவை இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை யாரும் தீர்ப்பீர்களா? இந்தியாவில் கூட இலங்கை வீரர்கள் அவரின் பந்துவீச்சை துவம்சன் செய்யததை மறந்துபோய் மீண்டும் நேற்று விளையாடி அடிமேல் அடிவாங்கினார்.
அத்துடன் இந்திய வீரர்களின் களத்தடுப்பு ரொபின்சிங்கின் விலகலின் பின்னர் மிகவும் பிந்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை புதியவர்கள் இளம் கன்று பயமறியாதது என்பது போல் சகல துறைகளிலும் கலக்கியே வருகின்றார்கள். நேற்று டில்ஷான் விளையாடமால் போனாலும் சமரவீராவின் அதிரடியும் சங்ககாரவின் பொறுப்பான ஆட்டமும் வெலகெதரவின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. ஏனைய போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் இதே ஆக்ரோசத்துடன் விளையாடுகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
5ஆவது திருமணம்
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா தன்னுடைய 67 வயதில் 5ஆவது தடவையாக 37 வயதுப் தோபியா மடிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் அண்மையில் தென்னாபிரிக்காவில் பாராம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஏற்கனவே இவர் தோபியாவுடன் தொடர்பு இருந்து 3 குழந்தைகள் இருப்பதும் நீண்ட நாள் குடும்பம் நடத்திய பின்னரே இந்தத் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரசித்த கவிதை
அரசியல்வாதிகளில் பலர்
அரக்கர்கள் என்பதாலேயே
ராட்சஸ வடிவில்
கட் அவுட் கட்டப்படுகின்றது
எலெக்ஷன் என்றதுமே
கலெக்சன் ஆரம்பம் - அவர்கள்
கொடுப்பது வாய்க்கரிசி
பெறுவது வாக்குச் சீட்டு
சுவரொட்டி ஒட்டியவன்
வயிறு ஒட்டி வாடுகின்றான்
ஊர்வல்ம் தொண்டனுக்கு
கார்வலம் தலைவனுக்கு
தலைவனை வாழ்க என்று சொல்லி
தான் மட்டும் வீழ்பவன் - இவனைத்
தொண்டன் என்றழைப்பதா?
முண்டம் என்று சொல்வதா?
கைதியின் தவறுகளுக்கு
நீதிபதிக்கு தண்டனையா?
தலைவனின் ஊழல்களுக்கு
தொண்டனின் தீக்குளிப்பா?
கும்பகர்ணக் குடிமகனே
புரிந்து கொண்டால்
விழித்துக் கொள்வாய்
விழிக்காவிட்டால் டாஸ்மார்க்கோடு
அழிந்துபோவாய்.
எழுதியவர் பிரபல க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமார்.
அன்பு நண்பர் சுபாங்கனின் அன்புக்காக இந்த அசல் நாயகி பாவனாவின் படம் பட உதவியும் அவரே தான். நன்றி சுபாங்கன்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
18 கருத்துக் கூறியவர்கள்:
//ஜனாதிபதித் தேர்தல்//
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
******
//3 Idiots //
பாத்திடுவோம்
******
//கிரிக்கெட் //
தொடரட்டும் இலங்கையின் பணணி வாழ்த்துக்கள், டில்சான் இல்லாமல் நேற்று வென்றது கலக்கல்..;)
******
//பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
புயலுக்கு வாழ்த்துக்கள் புயல் தொடர்ந்து வீசட்டும்..;)
*******
//5ஆவது திருமணம்//
கொடுத்து வைத்தவர்..ஹிம்ம்
*******
//ரசித்த கவிதை//
சூப்பரு..;)
******
//படம்//
எனக்கு ஏமாற்றம்..;)
(பவன், பாவனா எப்புடி பொருத்தம்..:p)
இலங்கைத் தேர்தல்களில் கட்சிகள் பொறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு அதிக காலம் அண்ணா...
எதிர்க்கட்சிகளைக் கேவலமாகத் திட்டித்தான் வாக்குச் சேகரிப்பது...
இணையத்தளங்களில் நகரவாசிகள் என்பதால் சரத் இற்கு ஆதரவு இருப்பது உண்மைதான், ஆனால் அதற்காக சரத் இற்கு கிராமங்களில் ஆதரவே இல்லை என்று கருதமுடியாது தானே அண்ணா? சிலஇடங்களில் சரத் இற்கு தனியவே கட் அவுட் வைத்தது ஞாபகம் இரு்ககிறது,
அத்தோடு என்னதான் வலுவிழந்திருதாலும் ஜே.வி.பி இற்கும் சிறிது கிராமத்து வாக்குகள் இருக்கின்றன தானே?
பார்ப்போம்....
ஐ.தே.கட்சி சிறிது குழப்புகிறது தான்...
பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஏன் அதை வாக்களிப்பில் காட்டக்கூடாது?
சினிமா எனக்குத் தெரியாதண்ணே...
நகைச்சுவைப்படமெண்டு சொல்றாங்கள்...
பாப்பம் பாப்பம்...
நம்ம மாதவன் நடிச்சிருக்கிறார் எண்டடியா நம்மட படம் மாதிரித்தானே? ;0
அண்ணே...
கலக்கீற்றாங்களண்ணே...
நேற்று விளையாடி இலங்கை அணி உண்மையில் குழந்தைகள் தான்...
திரிமன்னே முதற்போட்டி,
ரன்டீவ் 6ஆவது,
லக்மால் 5ஆவது,
திஸ்ஸர 'கொலைகார அடிகாரன்' பெரேரா 3 ஆவது,
புஷ்பகுமார 3 ஆவது,
வெலகெதர 6 ஆவுது போட்டி என்று கத்துக்குட்டிகள் அண்ணா...
(அதுக்குப் பிறகும் கண்டம்பி 28 ஆவுது, சமரவீர 30 ஆவது, துஸார 33 ஆவது.... இந்தியாவை ஒப்பிடமுடியாதண்ணா...)
தலைவா....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புயலே...
5 ஆவதா?
மனுசன் பெரி கெட்டிக்காரனா இருக்கும்போல?
அண்ணே...
உந்தக் கவிதைய வாசிச்சிற்றா கவிதை எழுதப் போறன் எண்டு அடம்பிடிக்கிறீங்க?
நல்ல பகிர்வு... நல்லா இருக்கு...
மது அண்ணா கூப்பிடுறார், ஒருக்காப் போட்டு வரவே? ;)
இல்லயாம், அவர் ஒண்டும் இல்ல எண்டுறார்... பிரச்சினையில்லாம்.... ;) :P
சூப் நல்லா இருக்கு....
neenga Kalki padipeengala. appo Maniam varaintha (kalkiyil, ponniyin selvanukkaaga) vanthithevan padathai podaamal yen kamal padathai podureenga.
mmm nalla pathivu. Bollyvudilum iruppathu neraiya thamizhargal yendru maranthu vidaathir.
Subramanyapuram, chennai 28, naan kadavul, katrathu thamizh ithu poola hindiyil try panna maattaanga. Muyarchi panninaalum odathu.
Arunthathi maathiri padangal Telungil thaan yedupaargal,
Hindhi Tahmizh ithu rendum veru kalangal. Mothathil Inthiya padangal yendru paarka vendum.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது வாழ்த்துக்களும்
கவிதை சூப்பர்..
படம் சூடாக இல்லை கொட் என்ற தலைப்பிற்கு பொருத்தமாக இல்லை இனி சுபாங்கன் பேச்சை கேட்கவேண்டாம் உங்கள் ரசனை தான் சூப்பர் ..
//ஜனாதிபதித் தேர்தல்//
ராமனும், ராவணனும்
******
//3 Idiots //
பாக்கத்தான் வேண்டும்
******
//கிரிக்கெட் //
கலக்கல்!!
******
//பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இசைப்புயலே!!!
*******
//5ஆவது திருமணம்//
ம்ஹும்... பெருமூச்சு
*******
//ரசித்த கவிதை//
நல்லாருக்கு
******
//படம்//
என்னா ஒரு வில்லத்தனம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
//இந்தப் படமும் நகைச்சுவையுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கின்றது.//
அதுதானே ராஜ்குமார் ஹிரானியின் ஸ்டைல்
//பந்துவீச்சாளர்களில் நேஹ்ராவை இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை யாரும் தீர்ப்பீர்களா?//
அந்த மூன்றாவது பவர் ப்ளேக்கு முன்பு வரை அவர் நன்றாகத்தான் அண்ணா பந்து வீசியிருந்தார்.
மொசார்ட் ஒப் மெட்ராசுக்கு என் வாழ்த்துக்களும்
சூப்பை அருந்தி முடிக்கையில் சப்பென இருக்கு I mean படம் அவ்வளவு ஹாட் ஆகா இல்லை
//Bavan said...
எனக்கு ஏமாற்றம்..;)//
உங்களுக்கு மட்டுமல்ல பவன் பலருக்கும் ஏமாற்றம் தான். என்ன செய்வது சுபாங்கனி ரசனை அப்படி
//(பவன், பாவனா எப்புடி பொருத்தம்..:ப்)//
அடே பாவனா உனக்கு அக்கா போல் இருப்பார். ஏனைய ஒரு வரிக்கருத்துகளுக்கு நன்றிகள்.
//கனககோபி said...
மது அண்ணா கூப்பிடுறார், ஒருக்காப் போட்டு வரவே? ;)
இல்லயாம், அவர் ஒண்டும் இல்ல எண்டுறார்... பிரச்சினையில்லாம்.... ;) :ப்//
சரி விளங்கிவிட்டது, ஆனாலும் எனக்கு மதுயிசம் எழுதுவது கொஞ்சம் கஸ்டம்.
சில காலங்களாக கனககோபியின் பின்னூட்டங்கள் ஒரு பதிவு போல் பெரிதாக வருகின்ற காரணம் என்னவோ?
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Raji said...
neenga Kalki padipeengala. appo Maniam varaintha (kalkiyil, ponniyin selvanukkaaga) vanthithevan padathai podaamal yen kamal padathai podureenga.//
வந்தியத்தேவனின் படம் என்னிடம் இருக்கின்றது ஆனாலும் கமல் என் ஆதர்ச நாயகன் என்பதால் அவரின் சிறிய வயதுப்படம் போட்டிருக்கின்றேன்.
//mmm nalla pathivu. Bollyvudilum iruppathu neraiya thamizhargal yendru maranthu vidaathir.//
ஆமாம் ஆமாம் நிச்சயமாக இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் முரளிதரனும் தமிழர் இன்னொரு பிரதான பாத்திரம் ஏற்ற மாதவனும் தமிழர். என்னுடைய பிரச்சனை அவர் தமிழரா ஹிந்திக்காரரா என்பது இல்லை. ஏன் தமிழில் இப்படியான சில நல்ல முயற்சிகளுக்கு வரவேற்ப்பு கிடைப்பதில்லை.
//Subramanyapuram, chennai 28, naan kadavul, katrathu thamizh ithu poola hindiyil try panna maattaanga. Muyarchi panninaalum odathu.
Arunthathi maathiri padangal Telungil thaan yedupaargal,
Hindhi Tahmizh ithu rendum veru kalangal. Mothathil Inthiya padangal yendru paarka vendum.//
நீங்கள் சொல்வது உண்மைதான்.
// Balavasakan said...
படம் சூடாக இல்லை கொட் என்ற தலைப்பிற்கு பொருத்தமாக இல்லை இனி சுபாங்கன் பேச்சை கேட்கவேண்டாம் உங்கள் ரசனை தான் சூப்பர் ..//
யானைக்கும் அடி சறுக்கும் இனிமேல் சுபாங்கனின் பேச்சைக் கேட்கமாட்டேன். நீங்கள் ட்விட்டரில் அனுப்பிய படம் போடவோ
//Subankan said...
என்னா ஒரு வில்லத்தனம்//
தம்பி உன்னால் என் சூப் பாழ் என பலர் கவலைப் படுகின்றார்கள். அடுத்த முறை நல்ல படம் அனுப்பவும்.
பவனுக்கு போட்டியாக ஒரு வரி விமர்சனங்களா?
//யோ வொய்ஸ் (யோகா) said...
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் யோகா.
//தர்ஷன் said...
அந்த மூன்றாவது பவர் ப்ளேக்கு முன்பு வரை அவர் நன்றாகத்தான் அண்ணா பந்து வீசியிருந்தார்.//
உண்மைதான் ஆனால் சமீபகாலங்களாக நெஹ்ராவால் தொடர்ச்சியாக பந்துவீச முடியாமல் களைத்துப்போகின்றார். இர்பான் பதானையும் யூசுப் பதானையும் இந்திய அணி நிறுத்தியது தவறானது.
//சூப்பை அருந்தி முடிக்கையில் சப்பென இருக்கு I mean படம் அவ்வளவு ஹாட் ஆகா இல்லை//
இந்தமுறை சூப் செய்முறையில் சின்னத் தவறு ஏற்பட்டுவிட்டது. அடுத்த முறை சூப்ப் எப்படியும் அனைவரையும் எப்படியும் கவரும் ஹிஹிஹி
//சில காலங்களாக கனககோபியின் பின்னூட்டங்கள் ஒரு பதிவு போல் பெரிதாக வருகின்ற காரணம் என்னவோ? //
எல்லாம் சொந்தமாகப் பதிவு எழுதமுடியவில்லை என்ற கவலையின் காரணமாகத்தான்... ;)
உண்மையில் எனக்கு பதிவெழுதுவதை விட பின்னூட்டமிடுவது பிடிக்கும் அண்ணா, அதனால் தான் பின்னூட்டமென்றவுடன் ஓடிவருவது....
அமீர்கான் கலக்கிட்டார் சங்கா டோணி வயத்த கலக்கிட்ட்டர் ,எ.ர் உலகையே கலக்கிட்ட்ர் நீங்க ----------- கலக்கிட்டிங்க
அரசியலில் அனல் பறக்கிறது.. :)
கருத்துக் கணிப்புக்கள் பற்றி நீங்கள் சொன்னது சரி.. படிக்காத,கிராம மக்களின் கருத்துக்கள் கடைசியில் தானே வரும்..
மூன்று இடியட்ஸ் அருமை.. இங்கேயே அதிகம் சொல்லமாட்டேன்.. ;)
ஐந்தாவது திருமணம் பற்றி சொல்லும்போது பதிவிலிருந்து அனல் பெருமூச்சொன்று வருவதை அவதானித்தேன்.. ;)
ராஜேஷ்குமார் கவிதையெல்லாம் வேறு எழுதுகிறாரா? ;)
இது தான் கவிதையா?
சூப்பில் இந்த முறை காரம் கொஞ்சம் தூக்கல் :-)
Post a Comment