இவ்வளவு ராகத்துடன் அழகாக ஆனால் பட்டுவேட்டிக்கு பொருத்தமில்லாமல் கூலிங் கிளாசுடன் வழிபாடு செய்பவர் யார் எனப் பார்த்த்தால் அது அதிரடிப் பதிவர் புல்லட். புல்லட்டும் இவர்கள் இருவரையும் கண்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார். மூத்த அனுபவம் உடையவர் என்றபடியால் கங்கோனின் பிரச்சனைக்கு புல்லட்டிடம் ஐடியா கேட்டார்கள் இருவரும்.
புல்லட்டும் தன்னுடைய சில சொந்த அனுபவங்களை நண்பர்களின் கதை போல் சொல்லிவிட்டு, கங்கோனிற்க்கு வலிகாமத்தை விட வடமராட்சியில் கங்கோனிற்க்கு பொருத்தமானவர் கிடைப்பார், ஆகவே வந்தி அல்லது ஆதிரையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அத்துடன் ஆதிரையைத் தொடர்புகொண்டால் அவர் விடயத்தை வெளியில் கசிய விட்டுவிடுவார் வந்திதான் ரகசியம் காப்பதில் வல்லவர் நல்லவர் ஆகவே வந்திக்கு உடனடியாக கோல் பண்ணவும் வந்தி உதவுவார் என வந்தியை வலையில் மாட்டிய சந்தோஷத்தில் தான் உடனடியாக நெடுந்தீவுக்கு போகவேண்டும் ஆகவே உங்களைப் பின்னர் சந்திக்கின்றேன் என விடைபெற்றார்.
புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வாருக்கு தன்னுடன் வர பாலாவையும் கேட்டால் பாலா கொஞ்சம் பின்னடித்தார். பாலா பின்னடிப்பதைப் பார்த்த கோபி பாலாவிற்க்கு ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தால் தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் புல்லட் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு இவ என்ரை பட்ச் மேட் கண்ட இடத்திலை ஐஸ்கிறீம் குடிக்க வந்தோம் சமாளிக்க கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள். அதே நேரம் புல்லட் போல் பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார்.
ஞாயிற்றுக்கிழமை கங்கோனும் பாலாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வல்லிபுர ஆழ்வார் நோக்கி வல்லை வெளியூடாக பயணத்தைத் தொடங்கினார்கள். வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார். கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார். ஆச்சியைக் கண்ட அதிர்ச்சியிலும் இங்கேயும் ஒன்றும் சரிவராது என்ற விரக்தியிலும் கங்கோனும் பாலாவும் நாமத்தை பட்டையாக நெற்றியில் இட்டபடி வீடு திரும்பினார்கள்.
அதே நேரம் ஃபேஸ்புக்கில் புல்லட் நெடுந்தீவில் வெங்காயம் உரித்து கதறிக் கதறி அழுத கதையும் குதிரையில் ஏறி விழுந்த கதையும் பரபரப்பாக நண்பர்கள் வட்டாரத்தில் அடிபட்டது. புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார்.
கங்கோனும் தன்னுடைய கமேராவில் யாழ்ப்பாணத்தின் அழகையும் அழகானவர்களையும் படம் பிடித்தபடி நேற்று கொழுபுக்கிற்க்கு வெறும் கையுடன் வந்து சேர்ந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் ட்விட்ட அவரின் பயணம் ஏன் வெற்றி அளிக்கவில்லை என ஆதிரை காரணம் கண்டுபிடித்துவிட்டார்.
கங்கோன் யாழ் செல்லும் போது விசாப் பிள்ளையாரை வணங்காமல் சென்றதுதான் காரணமாம். அதனால் விசாப் பிள்ளையாரை வணங்கிவிட்டு மீண்டும் பொங்கல் நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அத்துடன் தானும் அவருடன் வருவதாகவும் கங்கோனிற்க்கு உறுதி மொழி அளித்தார்.
அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.
பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள். மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல.
பகுதி 1 : கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
29 கருத்துக் கூறியவர்கள்:
//அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து //
நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான்
//தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன.//
ஆமாம், அதே வந்தி வழியில் பேஸ்புக் ஸ்டேட்டஸ்சை மாற்றவும் திட்டமாம்
//புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்//
கங்கோனும் வழிபாட்டுக்குத்தான் போனவன். நீங்கள் சொன்னதும் வழிபாடுதானே? அம்மன் வழிபாடு
//அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார்//
இங்கயும் நீலமாஆஆஆ?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
##அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார்##
ஆமா நல்ல சகஜமாக கதைத்தார்..
##சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் ##
ஞாயந்தான்...
##யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன.##
அங்கேயாவது கிடைக்க அந்த முருகன் தான் வழி பண்ணனும்..
/// தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார்.///
இதுவேறயா?
///வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார்///
ஹீஹீ... அப்ப அவர் விழவில்லையா..:p
///கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார்///
ஆச்சியிட்ட கச்சானும் கடனுக்கு வாங்கியதாக தகவல்..
//////அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து ////
அடக்கடவுளே இது என்ன கொடுமை,
பின்குறிப்பு - நவம்பர் மாதம் யாழ் வந்த மன்மதன் பவனை யாழ் பெண்கள் பார்த்துவிட்டதால் கோபி அண்ணாக்கு யாரும் அகப்படவில்லையாம்..ஹீஹீ
புல்லட் அண்ணாவையும் கும்மிக்கு இழுத்ததில் மிக்க சந்தோசம்....
//கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள்.//
உது பொய்....
அங்க ஒழிச்சிருந்து என்ர சோப்பு டப்பா கமராவால அந்த லீலைகள படம்பிடிச்சுக் கொண்டு வந்தன்.... விரைவில் வெளியிடப்பட வாய்ப்புக்கள் உண்டு... ;)
// பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார். //
உண்மையாத்தான் வந்தியண்ணா....
யாழ்ப்பாணம் கொங்சம் மாறிப்போட்டுது....
'காதலும் வாழ்க.... காதலர்களும் வாழ்க..., என் கண்ணுக்கு எட்டாத தூரத்தில்....' எண்ட படிச்ச கவிதை தான் ஞாபகம் வந்திச்சு...
புல்லட் அண்ணாவின் வெங்காயமுரிக்கும் படம் அருமை.... அவரின் கவனம் முழுவதும் வெங்காயத்தில் இருக்கிறது பார்த்தீர்களா? இதைத்தான் மனதை ஒருதிடப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவது என்பர். :)
//எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.//
விழாமலே இருக்க முடியுமா..... ;)
//பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள்.//
எதிரிகள்..... துரோகிககள்.... ;)
//மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல. //
இத வேற அடிக்கடி சொல்லி என்ர இமேஜ நாறடிக்கப்படாது,...
எண்டாலும் கலக்கல் பதிவு வந்தியண்ணா....
புல்லட் அண்ணாவையும் இழுத்ததால் மனநிறைவு அடைகிறேன்.... ;)
//பின்குறிப்பு - நவம்பர் மாதம் யாழ் வந்த மன்மதன் பவனை யாழ் பெண்கள் பார்த்துவிட்டதால் கோபி அண்ணாக்கு யாரும் அகப்படவில்லையாம்..ஹீஹீ//
Who let the dogs out
(woof, woof, woof, woof)
(woof, woof, woof, woof)
(woof, woof, woof, woof)
(woof, woof, woof, woof)
யோவ் இங்கு பையன்கள் எல்லாம் கற்பைக்காப்பாற்ற காற்சட்டையை பொத்தியபடிஓடித்திரிகிறார்கள்.. இதற்குள் நீலச்சட்டைக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தந்து மடக்க வேண்டிய அவசியம் ஏது?
அத்துடன் மக்களே! பெண்ணெண்றால் தாய்க்குலம் என்று பத்தடி தள்ளி நின்று வாய்பொத்தி கதைக்கும் என்மீது இத்தகைய குற்றச்சாட்டு என் சீதனத்தைக்குறைக்கும் சதி முனைப்பாடாகவே கருதுகிறேன்..
அத்துடன் வெங்காணம் வெட்டம் படம் மூலம் சந்தையில் என் ரேட் உயர்ந்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
இனிய புத்தாண்டு 2010 வாழ்த்துக்கள்.
கலகலப்பான பதிவாக இருக்கிறது.
///புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார்.///
ம்ம்ம்... அது சரி வந்தி அண்ணா குதிரை மேல ஏறியிருந்தால் ஒரு குதிரை மேல யானை போகுது என்று நக்கலடிச்சிருப்பாங்க அப்படீன்னு மக்கள் பேசிக்கொள்ளிறாங்க....
////எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.////
சரி...சரி... நாங்களும் வாழ்த்துகிறோம்...
நல்ல பம்பல் பதிவு...
இனிய புதுவருட வாழ்த்துக்கள்..
திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.
சின்ன வயசில படிக்கும்போது ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியின் பாடலைக்கேட்டே.... ஓடி, ஓடி விளையாடிய நம்ம கோபி இப்போ இந்தபோபாடல் மட்டுமல் ஓடி... ஓடி... விளையாடு என்று எந்தப்பாடல் வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கிறார்.
தொடர்ந்து படிக்க...
http://shanthru.blogspot.com/2010/01/blog-post_02.html
நல்ல நகைச்சுவை! இரசித்தேன்... சிரித்தேன்...:)
//Subankan said...
நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான்//
இனி உங்களுடன் தொடர்பு வைப்பதைக் குறைக்கின்றேன்.
//Subankan said...
ஆமாம், அதே வந்தி வழியில் பேஸ்புக் ஸ்டேட்டஸ்சை மாற்றவும் திட்டமாம்//
ஆஹா நான் அடிக்கடி ஸ்டேட்டஸ் மாத்துவது எனக்கே ஆப்பாகிவிட்டதா?
// Subankan said...
கங்கோனும் வழிபாட்டுக்குத்தான் போனவன். நீங்கள் சொன்னதும் வழிபாடுதானே? அம்மன் வழிபாடு//
அதே அதே பெரும்பாலானவர்கள் பிள்ளையார் கோயிலுக்குச் செல்வது அம்மனை வழிபடவே.
// Subankan said...
இங்கயும் நீலமாஆஆஆ?//
தம்பி நீலம் காத்தல் கடவுள் விஷ்ணுவின் கலர் ஆகவே எங்கேயும் வியாபகித்திருக்கும்.
// அண்ணாமலையான் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
நன்றிகள் தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாமலையாரே
// Balavasakan said...
ஆமா நல்ல சகஜமாக கதைத்தார்..//
உண்மை வெளிப்படுகின்றது நன்றிகள் வாசகன்.
//ஞாயந்தான்... //
நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கிறீங்கள் இப்படி எல்லாம் உண்மையைச் சொல்லகூடாது.
//அங்கேயாவது கிடைக்க அந்த முருகன் தான் வழி பண்ணனும்..//
சிங்கை முருகனை நம்புவதை விட டொன் லீயை நம்பவும், அவர் வழி செய்வார்.
//Bavan said...
இதுவேறயா?//
இதுதான் மெயின் கதையாக வரவேண்டியது கங்கோனின் அவசரத்தால் உபகதையாகிவிட்டது.
//ஹீஹீ... அப்ப அவர் விழவில்லையா..:ப்//
விழவில்லையாம்
//ஆச்சியிட்ட கச்சானும் கடனுக்கு வாங்கியதாக தகவல்..//
காசு இன்னும் கொடுக்காமல் தப்பி வந்த கங்கோனை ஆச்சி சகல கோயில்களிலும் தேடுகின்றாராம்.
//பின்குறிப்பு - நவம்பர் மாதம் யாழ் வந்த மன்மதன் பவனை யாழ் பெண்கள் பார்த்துவிட்டதால் கோபி அண்ணாக்கு யாரும் அகப்படவில்லையாம்..ஹீஹீ//
பவனைப் பார்த்த பெண்கள் அனைவரும் இப்போது அங்கொடையில் இருப்பதாக தகவல்
//கனககோபி said...
புல்லட் அண்ணாவையும் கும்மிக்கு இழுத்ததில் மிக்க சந்தோசம்....///
இதுதான்டா தமிழனின் உண்மையான குணம். தான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.
//உது பொய்....
அங்க ஒழிச்சிருந்து என்ர சோப்பு டப்பா கமராவால அந்த லீலைகள படம்பிடிச்சுக் கொண்டு வந்தன்.... விரைவில் வெளியிடப்பட வாய்ப்புக்கள் உண்டு... ;)//
உடனடியாக வெளியிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
//உண்மையாத்தான் வந்தியண்ணா....
யாழ்ப்பாணம் கொங்சம் மாறிப்போட்டுது....
'காதலும் வாழ்க.... காதலர்களும் வாழ்க..., என் கண்ணுக்கு எட்டாத தூரத்தில்....' எண்ட படிச்ச கவிதை தான் ஞாபகம் வந்திச்சு...//
கோபி இந்த விடயத்தை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லத்தான் இந்தப் பதிவே என்ன மொக்கை கொஞ்சம் அதிகமாகி பதிவில் உள்ள நல்ல மெசேஜை விட பம்பல் கூடிப்போச்சு.
//புல்லட் அண்ணாவின் வெங்காயமுரிக்கும் படம் அருமை.... அவரின் கவனம் முழுவதும் வெங்காயத்தில் இருக்கிறது பார்த்தீர்களா? இதைத்தான் மனதை ஒருதிடப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவது என்பர். :)//
ஓமோம் அவர் எது செய்தாலும் மனதை ஒருமைப் படுத்திதான் செய்வார்.
//விழாமலே இருக்க முடியுமா..... ;)//
அதுதானே ஆனால் மவனே நீ விழுந்தால் நில நடுக்கம் அல்லவா ஏற்படும்.
//எதிரிகள்..... துரோகிககள்.... ;)//
ஆனாலும் சொந்தச் செலவில் விடயத்தை உளறியவர் சாட்சாத் தாங்கள் தானே.
//இத வேற அடிக்கடி சொல்லி என்ர இமேஜ நாறடிக்கப்படாது,...//
நான் பெரும்பாலும் உண்மைதான் பேசுவது, அதுசரி உன்ரை இமேஜை எப்படி நாறடிப்பது அது ஏற்கனவே நாறித்தான் உள்ளது/
//எண்டாலும் கலக்கல் பதிவு வந்தியண்ணா....
புல்லட் அண்ணாவையும் இழுத்ததால் மனநிறைவு அடைகிறேன்.... ;)//
பாராட்டுக்கு நன்றிகள். புல்லட்டைத் தான் கதாநாயகனாக்கி கங்கோனை இரண்டாவது கதாநாயகனாக்கி எழுதத்தான் இருந்தேன்.
//புல்லட் said...
யோவ் இங்கு பையன்கள் எல்லாம் கற்பைக்காப்பாற்ற காற்சட்டையை பொத்தியபடிஓடித்திரிகிறார்கள்.. இதற்குள் நீலச்சட்டைக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தந்து மடக்க வேண்டிய அவசியம் ஏது? //
உண்மைய ஒத்துக்கொண்டதற்க்கு நன்றிகள். உங்கள் யாழ் விஜயம் பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
//அத்துடன் மக்களே! பெண்ணெண்றால் தாய்க்குலம் என்று பத்தடி தள்ளி நின்று வாய்பொத்தி கதைக்கும் என்மீது இத்தகைய குற்றச்சாட்டு என் சீதனத்தைக்குறைக்கும் சதி முனைப்பாடாகவே கருதுகிறேன்..//
இல்லையே மொரட்டுவப் பக்கம் கதை வேறை மாதிரி அடிபடுகின்றது.
//அத்துடன் வெங்காணம் வெட்டம் படம் மூலம் சந்தையில் என் ரேட் உயர்ந்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..//
விளக்கம் தரவும்/
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
இனிய புத்தாண்டு 2010 வாழ்த்துக்கள்.//
நன்றிகள் டொக்டர் தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//கலகலப்பான பதிவாக இருக்கிறது.//
பாராட்டுக்கு நன்றிகள்.
// மயில்வாகனம் செந்தூரன். said...
ம்ம்ம்... அது சரி வந்தி அண்ணா குதிரை மேல ஏறியிருந்தால் ஒரு குதிரை மேல யானை போகுது என்று நக்கலடிச்சிருப்பாங்க அப்படீன்னு மக்கள் பேசிக்கொள்ளிறாங்க....//
ஏன் இந்தக் கொலைவெறி அப்படியென்றால் குதிரை மேல் லோஷன் ஏறியிருந்தால் டைனோசர் போகுது என்பார்களா?
//சரி...சரி... நாங்களும் வாழ்த்துகிறோம்...//
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் கங்கோன் போன்ற எல் போர்ட் பார்ட்டிகளுக்குத் தேவை.
//நல்ல பம்பல் பதிவு... //
நன்றிகள்.
//இனிய புதுவருட வாழ்த்துக்கள்..//
நன்றிகள் தங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
11:51 PM, January 02, 2010
//சந்ரு said...
திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள். //
வாசித்துவிட்டேன் இதனைத் தேவையானவர்களுக்கு போர்வேர்ட் செய்துள்ளேன்.
// யாழினி said...
நல்ல நகைச்சுவை! இரசித்தேன்... சிரித்தேன்...:)//
பாராட்டுக்கு நன்றிகள்,
enjoyed a lot while reading this
நல்ல பம்பல்.
இனிய பொங்கல் வாழத்துக்கள்....
Post a Comment