நேற்றைய சென்னை மேட்சில் இந்திய அணி சாதனை படைத்ததும் சச்சின் தனது 41 ஆவது சதத்தை அடித்ததும் பழைய கதைகளாகிவிட்டது. சச்சினின் சாதனைகளையோ திறமையையோ யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது.
அதே நேரம் நேற்றையபோட்டியில் ஒரு கட்டத்தில் யுவராஜ் 78 ஓட்டங்களும் சச்சின் 84 ஓட்டங்களும் பெற்றிருந்தார்கள். அணிக்கு வெற்றி பெறத் தேவையான ஓட்ட எண்ணிக்கை 40. இருவரும் சதமடிக்க போதுமான ஓட்டங்கள். இருவரின் துரதிஷ்டமோ ஒரு பந்து லெக் பையாக 4 ஓட்டங்களை எடுத்துக்கொடுத்தது. யுவ்ராஜ் தன் பங்கிற்க்கு ஒன்று இரண்டு என ஓட்டங்கள் எடுக்கின்றார். அமைதியாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் திடீரென பனேசரின் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி தன் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றார்.
சச்சின் 98 ஓட்டங்கள் எதிர்முனையில் யுவராஜ். சச்சின் யுவராஜிடம் சென்று ஏதோ சொல்கின்றார். அடுத்த 4 பந்துகளை யுவராஜ் மெல்லத் தடுத்து ஆடுகின்றார். அடுத்த ஓவர் முதல் பந்தில் சச்சின் ஒரு ஓட்டம் எடுத்து 99ல் நிற்கின்றார் யுவராஜோ மீண்டும் தடுப்பாட்டம் ஆடுகின்றார். வெற்றிக்குத் தேவையான ஓட்டங்கள் 4. மீண்டும் அடுத்த ஓவர் சச்சின் 4 ஓட்டங்கள் அடித்து தன் சதத்துடனும் இந்திய வெற்றியுடனும் பேருவகை கொள்கின்றார். வழக்கமாக தன் சதத்துக்கோ அல்லது அணியின் வெற்றிக்கோ சச்சின் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு சிரிப்பு சூரியனை மேலே பார்ப்பார் அவ்வளவுதான். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சச்சின் துள்ளிக் குதித்ததைப் பார்க்கும் போது ஏதோ ஒரு பிளாஸ்பேக் இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகின்றது.
காரணம் சச்சின் ஒருபோதும் தன் சொந்த சாதனைக்காக ஆடியது கிடையாது. அதே நேரம் நேற்று யுவராஜின் காதில் சொன்னது நீ அடித்து ஆடு என்பதா? அல்லது எனக்கு சதமடிக்க சந்தர்ப்பம் கொடு என்பதா? அல்லது வேறு ஏதாவதா? என்பது அந்த இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சச்சினைக் குறைகூறும் நண்பர்கள் கூறிய கருத்துக்களே இவை.
அதே வேளை சச்சின் சதமடிக்காமல் ஆட்டமிழக்காமல் 90களில் இருந்தாலும் யுவராஜைக் குறைசொல்வார்கள். அதே குறைசொல்பவர்கள் இன்றைக்கு சச்சின் தன் சுயனலத்திற்காக ஆடி சதமடித்தார் எனக் குறை சொல்லும்படியாகிவிட்டது.
உண்மையில் நடந்தது என்ன? சச்சினை சதமடிக்கும் படி வீரர்கள் ஓய்வறையில் இருந்து தகவல் வந்ததா? காரணம் வர்ணனையாளர்கள் ஒருதரம் தண்ணீர் கொண்டுசெல்லும் வீரர் ஏதோ ஒரு தகவலுடன் சென்றிருக்கின்றார் அது பெரும்பாலும் சச்சினை சதமடிக்க முயற்சி செய்யவும் என்ற தகவலாக இருக்கும் எனவும் சொன்னார்கள்.
நேற்றிரவு ஹைலைட்ஸ் பார்த்தும் என்ன நடந்தது என்பது புரியாமல் இருக்கின்றது.
வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு சச்சின் அவலாகிவிட்டார். இதே விடயம் ஆஸி மேட்சில் நடைபெற்றிருந்தால் பாண்டிங்கும் ஏனைய ஆஸி பத்திரிகைகளும் இதற்க்கு முக்கியம் கொடுத்திருப்பார்கள்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
8 கருத்துக் கூறியவர்கள்:
சூடான இடுகைக்கு முயற்சியா வந்தியத்தேவன்?
ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் இது போல் தடுப்பாட்டம் ஆடினால் தவறு
நேற்று சச்சின் 98 ஓட்டங்கள் எடுத்த போது இந்திய வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது
சாதனை செய்வதில் என்ன தவறு
--
இதே தடுப்பாட்டத்தை அவர் ஒரு நாள் போட்டியின் முதல் இன்னிங்க்சில் ஆடினால் தவறு
Yuvraj himself told in an interview that sachin told him that the game was not over yet as he himself experienced in the past and so not to relax until they actually have won.
Conspiracy is an interesting thing... but sachin has not turned that cheap, atleast not yet!
//
அதே நேரம் நேற்று யுவராஜின் காதில் சொன்னது நீ அடித்து ஆடு என்பதா? அல்லது எனக்கு சதமடிக்க சந்தர்ப்பம் கொடு என்பதா? அல்லது வேறு ஏதாவதா? என்பது அந்த இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சச்சினைக் குறைகூறும் நண்பர்கள் கூறிய கருத்துக்களே இவை.
//
வெற்றியின் முடிவில் இதெல்லாம் தூக்கியெறிய வேண்டிய கருத்துக்கள்
இந்த முயற்சியால் தோல்வியடையும் வாய்ப்பு துளி கூட இல்லாத நிலையில் இது சும்மா....... ஜாலிக்காக............... பேசி தன்னைத் தானே பலகீன, கேவலப் படுத்திக் கொள்ளும் வரிகள்
குற்றச்சாட்டுகள் ஒன்றும் சச்சினுக்கு புதிதல்ல. அந்தக் குற்றச்சாட்டுகளை தன் துடுப்பால் இலாவகமாக திருப்பிவிடுவது இவரின் ஸ்டைல். டாக்டர் புருனோவின் கருத்துக்களுடன் நான் உடன்படுகின்றேன்.
எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்..
நீங்கள் சொன்னது போல ஒரு கட்டத்திலே இருவருமே சதம் பெறும் வாய்ப்பு இருந்தது.. ஆனால் அப்போது வெற்றி என்பதே முதல் நோக்காக இருந்தது.
பின்னர் சச்சினுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்ததால் யுவராஜ் எப்படியும் சச்சினுக்கு சதம் பெறுவதற்கு வாய்ப்புக் கொடுத்தே இருக்க வேண்டும்..
சச்சின் தானாகக் கேட்டிருப்பார் என்பதை நானும் நம்பத் தயாராக இல்லை..
ஆனால் எதுவுமே சொல்ல முடியாதே.. ;)
சச்சின் யுவராஜிடம் கேட்டிருந்தால் என்ன, கேட்காமல் இருந்தால் என்ன ??? சச்சின் சதம் அடித்து விட்டார், வெற்றிக்கான ரன்களை அவரே எடுத்து ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியும் இந்தியாவுக்கு கிடைக்கச் செய்தார். நமக்கு வேறு என்ன வேண்டும் ? :)
வெற்றி குறித்து என் பதிவு:
http://balaji_ammu.blogspot.com/2008/12/487.html
// வர்மா said...
சூடான இடுகைக்கு முயற்சியா வந்தியத்தேவன்?//
ஹிஹிஹி
//புருனோ Bruno said...
ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் இது போல் தடுப்பாட்டம் ஆடினால் தவறு நேற்று சச்சின் 98 ஓட்டங்கள் எடுத்த போது இந்திய வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது சாதனை செய்வதில் என்ன தவறு //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் டாக்டர். நிச்சயமாகத் தவறில்லை நான் என் நண்பரின் கருத்தைத் தான் பதிவு செய்திருந்தேன். அவருடன் வாதாடினேன் ஆனால் என்னால் முடியவில்லை. காரணம் நண்பர் தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்பவர்.
சின்னக் குறிப்பு : என் நண்பர் ஆஸி அணியின் தீவிர ரசிகர்.
// Prosaic said...
Conspiracy is an interesting thing... but sachin has not turned that cheap, atleast not யெட்! //
வழிமொழிகின்றேன்.
// SUREஷ் said...
வெற்றியின் முடிவில் இதெல்லாம் தூக்கியெறிய வேண்டிய கருத்துக்கள்
இந்த முயற்சியால் தோல்வியடையும் வாய்ப்பு துளி கூட இல்லாத நிலையில் இது சும்மா....... ஜாலிக்காக............... பேசி தன்னைத் தானே பலகீன, கேவலப் படுத்திக் கொள்ளும் வரிகள் //
டாக்டர் புருனோவுக்கு கொடுத்த பதில்கள் தான் உங்களுக்கும் சுரேஷ்
// வர்மா said...
குற்றச்சாட்டுகள் ஒன்றும் சச்சினுக்கு புதிதல்ல. அந்தக் குற்றச்சாட்டுகளை தன் துடுப்பால் இலாவகமாக திருப்பிவிடுவது இவரின் ஸ்டைல். டாக்டர் புருனோவின் கருத்துக்களுடன் நான் உடன்படுகின்றேன். //
நன்றிகள் வர்மா.
// LOSHAN said...
வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்..
நீங்கள் சொன்னது போல ஒரு கட்டத்திலே இருவருமே சதம் பெறும் வாய்ப்பு இருந்தது.. ஆனால் அப்போது வெற்றி என்பதே முதல் நோக்காக இருந்தது.
பின்னர் சச்சினுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்ததால் யுவராஜ் எப்படியும் சச்சினுக்கு சதம் பெறுவதற்கு வாய்ப்புக் கொடுத்தே இருக்க வேண்டும்..
சச்சின் தானாகக் கேட்டிருப்பார் என்பதை நானும் நம்பத் தயாராக இல்லை..
ஆனால் எதுவுமே சொல்ல முடியாதே.. ;) //
சச்சின் தன் ஓய்வின் பின்னர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது இதனைப் பற்றியும் நிச்சயம் எழுதுவார். காரணம் அவராலும் இந்திய அணியாலும் மறக்கமுடியாத ஒரு ஆட்டம் சென்னை டெஸ்ட் போட்டி,.
// enRenRum-anbudan.BALA said...
சச்சின் யுவராஜிடம் கேட்டிருந்தால் என்ன, கேட்காமல் இருந்தால் என்ன ??? சச்சின் சதம் அடித்து விட்டார், வெற்றிக்கான ரன்களை அவரே எடுத்து ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியும் இந்தியாவுக்கு கிடைக்கச் செய்தார். நமக்கு வேறு என்ன வேண்டும் ? :) //
அதுதானே வெற்றி பெற்றாகிவிட்டது இனி என்ன கவலை.
Post a Comment