அதிரடி சேவாக், அபார யுவராஜ்,அனுபவ சச்சின், அதிர்ஷ்ட டோணி


சவாலான இலக்கு இறுதி நாள் ஆட்டம் இதுவரை உபகண்டத்தில் நாலாம் இனிங்கிஸ்சில் வெல்லப்படாத ஓட்ட இலக்கு என 387 ஓட்டங்களை நேற்று இங்கிலாந்து அணி இந்தியாவிற்க்கு நிர்ணயித்தது, சேவாக், கம்பீர், யுவராஜ், சச்சின் போன்றவர்களின் சிறப்பான ஆட்டங்களால் புதிய உபகண்ட சாதனை படைத்தது இந்திய அணி.




முதல் இனிங்கிஸில் 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி அடுத்த இனிங்கிஸிலும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிடும் என்ற பீட்டர்சனின் கனவை முதலில் தவிடுபொடியாக்கியவர் சேவாக். சேவாக்கின் நேற்றைய அதிரடி ஆட்டம் தான் இன்றைய வெற்றிக்கு காரணம் என்றால் மிகையாகாது. முதல் இனிங்கிசில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சேவாக் இரண்டாம் இனிங்கிஸில் பொறுப்பாகவும் அதே நேரம் அதிரடியாகவும் ஆடி இந்திய அணிக்கு சிறந்த அடித்தளம் இட்டுக்கொடுத்தார். சேவாக்கின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.



இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பெரும் சுவர் என அழைக்கப்பட்ட ராவிட் மீண்டும் தன் பலவீனத்தைக் காட்டி முதல் இனிங்கிசை விட ஒரு ஓட்டம் கூடுதலாக எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இருந்து அடுத்து ஓய்வு பெறப்போகும் வீரர் அல்லது நிறுத்தப்படும் வீரர் பட்டியலில் ராவிட்டின் பெயர் முதலாவதாக இருக்கும்.



லக்ஸ்மன் கம்பீருடனும் சச்சினுடனும் சில நிமிடங்கள் நின்றாலும் தன் பங்கிற்க்கு இன்னொரு அடித்தளம் இட்டுக்கொடுத்தார் என்றே சொல்லவேண்டும்.

லக்ஸ்மன் ஆட்டமிழந்தவுடன் தன் இருப்பை தக்க வைத்திருக்கவேண்டிய கட்டாயத்துடனும் எப்படியும் ஆட்டத்தை வெல்லவேண்டும் என்ற உறுதியுடனும் ஆரம்பம் முதலே யுவராஜ் சிங் அடித்து ஆடத்தொடங்கினார்.

சச்சினும் தன் 19 வருட அனுபவ ஆட்டத்தை ஆடி 41 ஆவது சதத்தைக் கடந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சச்சின் சதமடிப்பதற்க்கு வசதியாக யுவராஜ் இறுதி ஓவர்களில் பெரும் உதவி செய்தார்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தாலும் வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சாலும் டோனியின் அதிர்ஷ்டத்தாலும் இந்திய ஒரு சாதனை வெற்றியை சென்னை சேப்பாக்கத்தில் ஈட்டியது.

நடந்தது டெஸ்ட் மேட்சா இல்லை ஒரு நாள் ஆட்டமா என மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் திகைக்கவைத்தார்கள். டெஸ்ட் மேட்சுக்கு அவ்வளவு கூட்டம்.

மெஹாலியில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துபார்ப்போம்.

2 கருத்துக் கூறியவர்கள்:

ஆதிரை சொல்வது:

டோனிக்கு எப்படியப்பா இப்படியெல்லாம் முடியுது? பலரும் விடை தேடும் கேள்வி.

மெஹாலியில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இறுதிப் பத்து நிமிடங்களுக்கு ராவிட் அணியின் தலைமையேற்றாலும் ஆச்சரியமில்லை. :)

வந்தியத்தேவன் சொல்வது:

வாங்கோ ஆதிரை
இன்றுதான் உங்கள் வலைப் பக்கம் எட்டிப்பார்த்தேன். இன்னும் எழுதுங்கள்.
சிலவேளைகளில் ராவிட் மெஹாலி டெஸ்டிலிருந்து நிறுத்தப்படுவார் கடைசி சில நிமிடங்கள் அணித் தலைவராகச் செயற்படுவார். எப்படியிருந்த ராவிட் இப்படி ஆவார் என யார் நினைத்தார்கள்.