6 கோடி = ஒரு ஓட்டம் ஐபிஎல்

இன்றைய போட்டியில் ஐபிஎல்லின் விலை உயர்ந்த துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் டோணி எடுத்த ஓட்ட எண்ணிக்கை 1 மட்டுமே.


டோணி இது சரியா?

நண்பர் ஒருவரின் குறிப்பு
இந்த ஐபிஎல் கிரிகேட் போட்டிக்கள் இந்திய அணியின் வீரர்களுக்கு ஈகோவை உண்டு பண்னிவிடலாம். இப்போது நடக்கும் போட்டியில் கங்குலி அணி எல்லா அணியையும் வெற்றிகண்டு பரிசை வென்றால் இந்திய ஒருமித்த அணியில் தோனி இடம் கொடுப்பாரா என்று சந்தேகம் உண்டு. அதேபோல தோனியை வெற்றிகொள்ளும் எந்த ஐபிஎல் அணி கேப்டனுக்கும் சுண்ணாம்புதான் என்று பட்சி சொல்கிறது. முக்கியமாக ஈகோவில் கபடியாடும் யுவராஜ், கங்குலி போன்றோர் தோனியை நொறுக்க இதுதான் வாய்ப்பென காத்துகொண்டிருப்பதாக இணைய உளவாளர் ஒருவர் கூறுகிறார்.

4 கருத்துக் கூறியவர்கள்:

சுந்தரா சொல்வது:

ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்க...

ஒண்ணு இல்ல, எடுத்தது ரெண்டு ஓட்டம் :)

தமிழன்-கறுப்பி... சொல்வது:

என்ன தேவர் இன்னும் ஆட்டம் முடியலை அதுக்குள்ள செய்தியாக்கிட்டிங்க என்ன ஒரு கடைமை உணர்ச்சிப்பா உங்களுக்கு...

இந்தியாவின் கிரிக்கெட் ரசிக முட்டாள்கள் இதுக்கப்புறம்னாலும் திருந்தலாம்னு நினைக்கிறேன்)

வந்தியத்தேவன் சொல்வது:

//சுந்தரா said...
ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்க

ஒண்ணு இல்ல, எடுத்தது ரெண்டு ஓட்டம் :)//

MS Dhoni lbw b Hopes 1 3 0 0 33.33
இல்லையே டோணி ஒரு ஓட்டம் தான் எடுத்தார். நிச்சயம் டோணி கொஞ்சம் அவதானமாக விளையாடியிருக்கலாம் காரணம் இந்தப்போட்டிகளில் சீனியர் ஜூனியர் வீரர்களுக்கு இடையில் ஈகோ பிரச்சனை வரலாம். நேற்றைய போட்டியில் ஆட்டம் முடிந்தபின்னர் ராவிட்டின் முகத்தைப்பார்த்தால் புரியும்.

வந்தியத்தேவன் சொல்வது:

மை ஹசி ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள், தமிழக வீரர் பத்ரினாத் தன் இருப்பை இந்தியத் தேர்வுக்குழுவுக்கு காட்டியுள்ளார், இவர் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். இனியாவது வெங்சகாரின் கண்களுக்கு இவரைத் தெரியுமா எனப்பார்க்கவேண்டும். சென்னை கிங்ஸ் மொத்தமாக 5 விக்கட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை எடுத்துள்ளது.