"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.
தூக்க கலக்கத்துடன் "ஹலோ"
"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"
"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "
"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"
"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"
"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"
"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"
"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்"
பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.
"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"
"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"
"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ"
மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான்.
நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன்.
ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.
பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.
"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"
"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"
"என்னடா?"
"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "
ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான்.
"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்".
"ம்ம்"
"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.
"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"
அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"
"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்
சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள்.
இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள்.
இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள்.
ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள்.
சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,
இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்.
பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார்.
பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது.
பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது
" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?"
தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது
"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "
"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.
இரவு படுக்கும் போது
"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"
"என்னாடா ?"
"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"
எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.
காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்
என்ற மெசேஜ் இருக்கின்றது.
டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
மாப்புபுபுபுபுபு....வச்சிட்டீங்களே ஆப்புபுபுபு... அவ்வ்வ்வ்
பப்சர் பந்துவீச்சைக் கண்டுபிடித்த பவன் வாழ்க..:P
என்னுடன் சேர்த்து அனைவரையும் போட்டுத்தாக்கிய உங்கள் இராஜதந்திரத்தை ரசித்தேன்..:P
//பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள். //
//இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்//
:-O அதிர்ச்சி
//எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.//
கிர்ர்ர்ர்ர்ர்..!#@^%%*
வடபோச்சே..:D
ஹா ஹா ஹா.. ரசித்தேன்..
குஞ்சு பஞ்சர் ஆகிவிட்டான்..(இந்தப் படங்கள் எல்லாம் பில்ட் அப்பாக குஞ்சு பவனே தந்ததோ??)
ஆனால் சித்தூவின் நெல்லியடிப் பயணம் பற்றிக் கதைச்சு நீங்கள் சொ.செ.சூ வாங்கிக் கொண்டதாக நினைக்கிறேன்.. மாம்ஸின் திருவிளையாடல்கள் பற்றி 'பிரமிப்பூட்டும்' புனைவு ஒன்று நெல்லியடியில் இருந்து தயாராகுதாம்..
தாங்கள் தானே சங்கீத ரசிகர்? ஓ உங்கள் சங்கேத தாகத்துக்கு நான் சீடீ கொடுத்துவிட்டதாக சொல்லியுள்ளீர்களா?
என்ன இருந்து என்ன? கச்சேரி உங்களால் செய்ய முடியாமப் போச்சே மாமா
கிரேசி மோகனின் பாதிப்பு (கிச்சா + கிரிக்கெட் தானே?) பல இடங்களில் தொனித்ததை உங்கள் கீழ்க் குறிப்புக்கு முன்னரே உணர்ந்து கொண்டேன்..
//"Bye Young man" //
நல்லா வாயில வருது.... ங்கொயால
//நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.//
சில்கட் பேர்ப்பிள் ஒரு பண்டுல் வாங்கி அனுப்பவும் :P
//பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்//
நல்ல கலவை
மரியா ஷரபோவாக்கு ரெம்பவே வயசாகிவுட்டுது மாம்ஸ். வேறு யாரையாவது தேர்ந்தெடுக்கவும்.
கலகலகல.......! சூப்பர் தலைவா.
கலக்கல்...
btw,
// "நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது //
Situation song_ஆ?
//"Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு//
இந்த சீனிலயே தெரிஞ்சிருக்க வேண்டாம் அது கனவுதான் எண்டு :P
மாமா,
பவன் இங்கிலாந்து டயானாவைச் சந்திக்க உங்களை அழைத்ததாகவும், நீங்கள் மறுத்துவிட்டதாகவும் ஒரு கதை அடிபடுகுதே....
//நோ மணி நோ ஹனி" //
உண்மை உண்மை உண்மை...உங்களிடம் இரண்டும் இல்லையே மாம்ஸ்
//ஹாய் மாம்ஸ்//
எனக்கு மட்டும் என்பது மாறி இப்பா ஊருக்கேவா?
//"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "//
18+
//"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"//
மாஸ் டச்
//நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"//
அவனா நீங்க ஒ இப்ப தடை இல்லை தானே
//ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ//
என்ன தம்பி சீயாக்காய் பவுடர் முடிஞ்சு போச்சோ
//நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு//
அது அது அதுதானே
//பிக்காடிலி //
பூமியை அழைக்கின்றேன்.
//ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.
//
சிரித்தேன்
//பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி//
பத்தி எரிஞ்சிருக்குமே
// "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.//
இது தொண்ணூறு வயது பாட்டி தானே
// டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "
//
ராஜா ராஜ நீ நடத்து
//ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார்//
haa haa
//லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம்//
நான் இந்த விளையாட்டுக்கு வரல
//நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.//
Piccadilly????????????????
//வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள். //
தங்கள் கிரிக்கெட் ஞானம் கண்டு வியந்தேன். அண்டி பிளவர் கேட்டால் உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போடுவார்.
//மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன்,//
விழுந்து விழுந்து சிரித்தேன்
//வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.//
சொ.செ.சூ
சொ.செ.சூ
கலக்கல் பதிவு. சிரிச்சு சிரிச்சு முடியலை.
//தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.
//
அசல் கிரிக்கெட்டர்??? இதான் அதுக்கு லட்சணமா?
//"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் //
சாரா இந்த பெயர் எங்கேயோ இடிக்குதே
பப்சர் பந்து கண்டு பிடித்த பவன் வாழ்க
வாசித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
குஞ்சு வாழ்க...
ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..
ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...
வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..
அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்
நன்றி
http://vallinamguna.blogspot.com/
Post a Comment