ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011

அரசியல்

இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது.

ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.

இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.

கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது.

விளையாட்டு

ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன்.

நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை.

அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது,

சினிமா

அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ?

இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது.

வலையுலகம்

சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.

என் உளறல்

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது.

படித்ததில் சிரித்தது

திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

படித்ததில் ரசித்தது.

கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)

பார்த்ததில் ரசித்தது

இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.

12 கருத்துக் கூறியவர்கள்:

நிரூஜா சொல்வது:

பின்னூட்டத்திற்காக

ஆதிரை சொல்வது:

//எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது.//

:-)))))))))))))))))

எஸ் சக்திவேல் சொல்வது:

பூர்ணிமா ஜெயராமன் நடித்தபோது நான் சிறுவன். இப்ப நடுத்தர வயசு "இளைஞன்" . அப்ப நீங்களும் இப்ப நடுத்தர வயசு ஆசாமியா? :-)

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

soup after long time :)

ARV Loshan சொல்வது:

பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே. - அதே.. :) ஆனால் செம காமெடி தான் அது..

ராசிக்கார கப்டன். - திறமையும் இருக்கு மாம்ஸ்.. திறமையானவர்களைத் தட்டிக் கொடுக்கும் தலைவரும் கூட..

அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது, //

படம் எடுத்து அனுப்பவும். சாக முதல் ஒரு தடவையாவது லோர்ட்சில் ஒரு போட்டியாவது பார்க்கவேண்டும்

//பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
//
ம்ஹூம்.. திருந்துவதாக இல்லை. நீங்கள் அங்கே செல்ல முதல் பிய பிய்த்துக்கொண்டு ஓடி விடுவார் மாமா

வலையுலகம் - ஹீ ஹீ ;)

பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.//

அங்கிள்மாரின் ஆண்டி ரசனை..

Unknown சொல்வது:

//பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.//

ஆன்டிகள் அழகாகதான் இருக்கிறார்கள் தங்களுக்கு நிச்ச்யம் ஒரு ஆன்டிதான் ஏன் எனில் தங்கள் மூஞ்சிபுத்தகத்தில் அனைவரும் திருமானமானவர்கள் ஆச்சே!

கன்கொன் || Kangon சொல்வது:

:-)))))

// ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது )சந்தேகமே //

ஐயயோ, பதிவுலகை விட்டிற்றுப் போயிடாதேங்கோ....
நீங்களில்லாட்டி பதிவுலகம் எப்பிடிப் பிழைக்கும்?
ஐயயோ..... ;-)

யுவகிருஷ்ணா சொல்வது:

நறுக்கென்று வந்திருக்கிறது இப்பதிவு. தொடர்ச்சியாக எழுத வாழ்த்துகள்!

anuthinan சொல்வது:

Follow up comments :)

கார்த்தி சொல்வது:

என்னசார் உங்கட வழமையான கிளுகிளு படங்கள் மிஸ்ஸிங் இணைக்க கடைசி நேரத்தில் மறந்துட்டீங்க போல! அந்த படங்களை ஆவலோடு பாக்க வந்தும் ஒண்டு கூட கிடைக்கல! :(
எனக்கு தெரிந்த சிங்கள நண்பர்களே சிங்கள கலைஞர்களை மதிப்பதில்லை உந்த விசரனிண்ட கதையை யாரு கேக்க போயினம்?
CSK வெண்டது பெரிய சந்தோசம் ஏதோ தமிழர்களே வெண்டதுமாதிரி பெருமிதம்!
எனக்கு கோ அயனையும் விட வேகமான சுவாரஸ்யமான திரைக்கதையா இருந்தது!
சிவகார்த்திகேயனுக்கு இப்ப ரசிகர்கள் நல்லா கூடிட்டு வருது!! நல்ல கலைஞர்.

Bavan சொல்வது:

//விளையாட்டு//

இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தெரிவு படு சொதப்பல்ஸ் என்று நினைக்கிறேன்..:-) நோபோல் BOYயையாவது போட்டிருக்கலாம், அந்தாள் நோபோல் போட்டாலும் விக்கெட்டாவது எடுத்திருக்கும்..:(

***

//சினிமா//

//பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார்//

மாம்ஸ் சுத்தியல் தூக்கிறதுக்காவது என்னையும் சேர்க்கவும்..:P #பியா_ரசிகன் :P

***

//சின்னத்திரை// And //வலையுலகம்//

#DamnItsTrue :-))

***

//என் உளறல்//

தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் #வந்தியத்தேவன்_ரசிகர்மன்றம்_திருகோணமலைக்கிளை :-))

***

//படித்ததில் ரசித்தது. //

:D

Unknown சொல்வது:

///அங்கிள்மாரின் ஆண்டி ரசனை///
தாறுமாறாக வழிமொழிகிறேன்... கார்த்திகா அவாட அம்மாவவிட வடிவு அங்கிள். (என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே)