நிழலைத் திருடும் மழலை

"என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது,

"ஹலோ"

"டேய் நாதாரி என்னடா செய்கின்றாய்" என மறுபக்கம் கேட்ட வசனத்தை வைத்தே அந்தப் பக்கம் கதைப்பது ஆருரன் என்பது புரிந்தது. அவன் தான் ஹலோவுக்குப் பதிலாக நாதாரி என அழைப்பது அவன் ஒருத்தன் தான்.

"மச்சான் நான் கொழும்பிலை தான் நிற்கின்றேன் பின்னேரம் வெள்ளவத்தை கோசிக்கு வா, இதுதான் என்ரை நம்பர் ஓகேடா"

இதுதான் இவன்டை கெட்டபழக்கம் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணிவிடுவான்.

கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன்.

ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன்.

மாறன் ஆருரன் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாகவே படித்தவர்கள். இருவரும் உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள், ஆருரன் மருத்துவத்துக்கு முதல் தரத்திலேயே எடுபட்டுவிட்டான். மாறனோ இரண்டாம் தடவையுடன் இதற்க்கு மேல் முயன்றால் ஒன்றும் கிடைக்காது என அந்தமுறை கிடைத்த விஞ்ஞானபீடத்துக்கு போய்விட்டான். இடையில் எதாவது பார்ட்டிகளில் சந்தித்தால் உண்டு. மற்றும்படி இருவரும் வெவ்வேறு துறைகளில் என்றபடியால் சந்திக்கவாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆருரன் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தபின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் ஏனோ தொடர்புகள் கால நேர மாற்றங்களினால் அறுந்துவிட்டன.

சரியாக 7 மணிக்கு ஆருரன் கோசிக்குள் நுழைய பின்னால் இருந்து ஒருதன் கட்டி அணைத்து மச்சான் எனக் கத்தினான்.

"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்

"இது உன்ரை அமெரிக்காஇல்லை இங்கே அன்பை எப்படியும் சொல்லலாம்."

ஓகேடா நல்ல டேபிளாக பார்த்து இருப்பம் என்றபடியே இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.

மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.

"சொல்லு மச்சான் எப்படி அமெரிக்க வாழ்க்கை?

"அடபோடா ஹாஸ்பிட்டல் வீடு என வாழ்க்கை போகின்றது,வீக் எண்டில் சிலவேளை பிரண்ட்ஸ், ரிலேட்டிவ் வீடுகளுக்கு விசிட் அடிக்கின்றது, சிலவேளை ஒன் கோல் என்றால் அதுவும் கட் தான்"

"ம்ம்ம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் 9 தொடக்கம் 5 வரை வேலை" பிறகு வெள்ளவத்தையில் ரோட்டு அளத்தல் நைட் ஏதாவது படம் பார்த்தபடி தூங்கிவிட வேண்டியதுதான், அது சரி மச்சான் நீ ஏன் இன்னும் கட்டவில்லை?"

"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"

"என்னாது அவளா? யாரடா அவள்?" கதை கேட்கும் ஆவலில் மாறன் எதிர்க்கேள்வி கேட்டான்.

"அவள்தாண்டா எங்களுடன் படித்த இந்துமதி."

"யூமீன் டொக்டர் இந்து? எனக்கு இந்தக்காதல் கதை தெரியாதே?"

"சொறிடா மச்சான் இந்தக் கதை எனக்கு மட்டும் தான் தெரியும் இப்ப உனக்கு மட்டும் சொல்றேன்டா"

மெழுகுதிரி சுழன்றது.


ஆகஸ்ட்டில் பைனல் சோதனை என்பதால் தாவரவியல் வகுப்பில் மாணவர்கள் படுமும்முரமாக வருங்கால மருத்துவர்கள் ஆக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார்கள். வகுப்புத் தொடங்கி சில நிமிடங்களில் ஆருரன் கிரிக்கெட் உடையுடன் களைச்சு விழுந்து வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த ஆசிரியர்

"நீ தேறமாட்டாய்? எக்சாமுக்கு இன்னும் 7 மாதம் தான் இருக்கு நீ இப்பவும் கிரிக்கெட் அடி பெரிய அசாருதீன் என நினைப்பு" என திட்டலுடன் நக்கலடிக்க வகுப்பே சிரித்தது.

ஆருரன் வந்த சில நிமிடங்களில் இந்துமதியும் "எக்ஸ்யூமி சேர்" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"வாம்மா கவிதாயிணி உனக்கு என்ன கவியரங்கம், பட்டிமன்றமா? பிறகேன் வயோ படிக்க வந்தாய் போய் ஆர்ட்ஸ் படித்திருக்கலாம் தானே" மீண்டும் வகுப்பு சிரித்தது.

இந்துமதி அந்நியன் சதா போல இருப்பாள் சராசரியான உயரம், நீண்ட தலைமுடி, மின்னலடிக்கும் கண்கள், ஆனால் எந்த நேரமும் முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருக்கும், புத்தபெருமானின் மறு அவதாரம் என வகுப்பு ஆண்கள் நக்கலடிப்பது. சாதாரண தரத்தில் எட்டுப் பாடங்களில் அதிதிறமைச் சித்தி எடுத்து சாதனை படைத்தவள். வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என கடினமாகப் படிப்பவள் ஆனாலும் கவிதை, பட்டிமன்றம் என பலவிடயங்களில் ஆர்வம் திறமை இருப்பதால் அவற்றிலும் சில மணி நேரம் செலவளிப்பவள்.

ஆருரனுக்கு சில நாட்களாக இந்துமதியைக் கண்டால் மனதுக்கு ஏதோ இரசாயன பெளதிக வேதியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இதற்க்குப் பெயர் தான் காதல் என அவனின் மானசீக எழுத்தாளர் சுஜாதாவும் அனிதாவின் காதல்களில் எழுதியது ஞாபகத்துக்கு வர காதலர் தினம் அன்று எப்படியும் தன் காதலை இந்துமதிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இன்டெர்மொட்டுக்குள் நுழைந்து அழகிய வெலன்டை கார்ட்டை அக்கம் பக்கம் யாரும் பாக்கின்றார்களோ என்ற பதற்றத்துடன் வாங்கிவிட்டான்.

இரவு பழைய விகடனில் இருந்த

"எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் எம்மைப்
பார்த்துக்கொள்ளட்டும்
காதலிப்போம் வா "

என்ற கவிதையைச் சுட்டு கார்ட்டில் எழுதி அடுத்தநாளுக்காக கனவுடன் தூங்கிவிட்டான்.

பலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் வழக்கம்போல் அந்த 14.02 விடிந்தது. லில்லி அவனியூ மூலையில் இந்துமதிக்காக ஆருரன் காத்துக்கொண்டிந்தான். நெஞ்சோ தடக்படக் என அதிவேகமாக அடிக்கத் தொடங்கியது. லில்லி அவ்னியூவுக்குள் இந்துமதி நுழையக் கண்டவுன் கொஞ்சம் முகத்தில் புன்னகை காதலடுன் அவளை நோக்கி நடந்தான்.

"எக்ஸ்க்யூஸ் மீ இந்து"
"ம்ம்ம் என்ன " கொஞ்சம் இறுக்கமாகவே இந்து கேட்டாள்.
"இல்லை இந்த கார்ட் உங்களுக்காக பிளீஸ் அக்செப்ட் இட்"
"வெரி சொறி எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதிலும் நம்பிக்கை இல்லை" என்றபடி ஆருரன் நீட்டிய கார்ட்டை நாலாக எட்டாக கிழித்து ரோட்டில் வீசிப்போட்டு,
"இனிமேல் இப்படி நடந்து உங்கள் மேல் இருக்கும் மரியாதைக் குறைக்கவேண்டாம், ஒழுங்காக படித்து டொக்டராகவும், என் கனவும் அதுதான்" என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

ஒரு சிலநாட்கள் இந்தக் காதலின் வலி இருந்தாலும் தன் கனவுக்காக ஆருரன் நன்றாகப் படித்து மருத்துவனாகிவிட்டான். ஆனாலும் இன்னும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை.

"ம்ம்ம் இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கா? பரவாயில்லை விடடா உனக்கு என ஒரு தேவதை உந்த உலகத்தில் எங்கே ஒரு இடத்தில் காத்திருப்பாள் தேடு" மாறன்.

"அடே உனக்கு கலியாணம் முடிஞ்சுதா?" ஆருரன்
"ஓமோம் புரோபோசல் தான் நாளைக்கு நீ லஞ்சுக்கு வீட்டை வாடா"

அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை ஆருரன் அடித்தான்,

"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,

(யாவும் கற்பனையல்ல.)

டிஸ்கி : இதை சிறுகதையாகவோ புனைவாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ எடுப்பது வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

17 கருத்துக் கூறியவர்கள்:

Ashwin-WIN சொல்வது:

நான்தான் முதல் போங்கா? இருங்க மாமா வாசிச்சுடு வாறன்.

Ashwin-WIN சொல்வது:

//அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை மாறன் அடித்தான்,

"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,//
அஹா பிநிசிங்குல சத்தமில்லாம டுவிஸ்ட வச்சுட்டேலே. இது நீங்க வச்ச டுவிஸ்டா? இல்லை நேச டுவிஸ்டா?

Ashwin Win
அஷ்வின் அரங்கம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை மாறன் அடித்தான், //

மாத்திவிட்டேன் அஷ்வின். இது நான் வச்ச டுவிஸ்ட் தான் ஆனால் உண்மையில் நடந்தது வேறை ஹிஹிஹி.

SShathiesh-சதீஷ். சொல்வது:

//என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது//

கல்யாணம் முடிஞ்சும் அவர் இந்த பாட்டோ வச்சிருக்கார்.

//கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன்.//

நீங்கள் தான் ஆரூரன் என்பதை உலரிட்டின்களே மாம்சு

//ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன். //

இது அநியாயமாய் இடிக்குதே.

//"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்
//

இதில நெடுநாளாக எங்களுக்கு ஒரு சந்தேகம்

SShathiesh-சதீஷ். சொல்வது:

// இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.

மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.//

அவ் நல்ல காலம் சொடீசநிசத்தில எழுதி இருந்திங்க அசிங்கமாகி இருக்கும்.

//"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"
//

சிங்கம் சிக்காதிள்ள என்று சொன்னாலும் மேட்டர் அதில்லையே பாஸ்

//"என்னாது அவளா? யாரடா அவள்?" //

என்ன கொடுமை இது ஒருமையில் கேட்டு இப்படியா அவம்னானப்படுத்துவது. பன்மையில் கேட்கவேண்டும்

//வாம்மா கவிதாயிணி//

இது வேற மாதிரி இடிக்குதே...

மொத்தத்தில வடை போச்சா மாம்ஸ்....ஆமா கதையில தான் சொன்னேன்

Subankan சொல்வது:

:-)
will comment later

Bavan சொல்வது:

//"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,//

:-O
நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை..:P

sinmajan சொல்வது:

அந்த ட்விஸ்ற் பிடிச்சிருக்கு..

Muruganandan M.K. சொல்வது:

எதிர்பாராத திருப்பத்துடன் கதையை முடித்தது நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

ஷஹன்ஷா சொல்வது:

//"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,//

என்ன கொடுமை சார் இது... இப்படி நடக்கும் எண்டு நான் நினைக்கவே இல்ல...

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

:P

Unknown சொல்வது:

யோவ்...

எஸ் சக்திவேல் சொல்வது:

நட்புக்கு இலக்கணம்?

ARV Loshan சொல்வது:

ஆகாகா.. என்னா ஒரு திருப்பம்..
இந்துமதி, மாறன், ஆரூரான் - யாரா இருந்தால் என்ன, கதை நல்லா இருக்கு :)

Vathees Varunan சொல்வது:

கதை நன்றாக இருக்கிறது ஆனால் யாரந்த இரு நண்பர்களும் என்றுதான் புரியவில்லை

vidivelli சொல்வது:

nallayirukkunka...


namma pakkamum kaaththirukku!!

Unknown சொல்வது:

கதை நல்லாயிருக்கு :) ஆனால் ஆரூரனை நினைக்கும்போதுதான் :-(