சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர் கால நேர சூழ்நிலைகள் காரணமாக தன் திறமைக்கு ஏற்றது போல ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஆசிரமம் நடத்திக்கொண்டிருப்பவர். அதனால் சில பல சீடர்களையும் ஓரிரு குருவை மிஞ்சிய சீடர்களையும் வைத்திருப்பவர். அவர் இடையிடையே உதித்த தத்துவ முத்துக்களை அவரின் அனுமதியுடன் பொறுக்கி இங்கே தத்துவ மாலையாக தந்திருக்கின்றேன். இங்கேயுள்ள கருத்துக்களுக்கு சுவாமி வந்தியானந்தாவே பொறுப்பு.
ஒரு பெண் எம்மைக் காதலிப்பது முக்கியமல்ல நாம் எத்தனை பெண்களைக் காதலித்தோம் என்பதுதான் முக்கியம்
ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்
கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி கவிராஜன் எல்லாம் இருக்கின்றார்கள் ஆனால் ஏன் கவி இளவரசன் மட்டும் இன்னும் இல்லை #சந்தேகம்
ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்
மதுவைப் போதைக்காக குடிக்காமல் மேசைக் கலாச்சாரத்துக்காக (Table Manners ) குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல,
தமிழ்சினிமாவின் கனவுக்கன்னிகள் ஏன் எப்போதும் பிறமொழிக்கன்னிகளாகவே இருக்கின்றார்கள் #சந்தேகம்
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்
உணவு உடை உறையுள் போய் இனி பேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என மாறும் #அத்தியாவசியம்
நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம்
சன் டீவியும் கலைஞர் டீவியும் முடக்கப்பட்டால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள் பெண்கள் தற்கொலை செய்வார்கள் #மெஹா சீரியல்
Google+ புதுப் பொண்டாட்டி மாதிரி ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கும் But Facebook காதலிபோல எல்லாமே பழகிவிட்டது #அவதானம்
குருவே பட்டும் தெளியாமல் இருக்கும் போது சிஷ்யன் மட்டும் படாமல் எப்படித் தெளிவது (என் முதன்மைச் சிஷ்யனுக்கு கூறியது)
அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்
ஐஸின் குழந்தையும் ஐஸ் பிறந்த அதே நவம்பரில் தானாம் டெலிவரி #அழகானவர்கள் அறிவானவர்கள் நவம்பரில் தான் பிறப்பார்கள்.
வங்கியில் பணம் மட்டுமல்ல காதலையும் வைப்புச் செய்யலாம். (விரைவில் இல்லறத்தில் இணையவிருக்கும் நண்பர் ஒருவருக்கு அருளியவாக்கு)
Box Office- Aug-4-2025
-
Box Office: Kingdom, House Mates, Thalaivan Thalaivi ,Maha Avatar
Narashimha,
4-Day Collection- Housemates -1.2 Cr(Approx)
5-Day Collection- Kingdom- 42...
3 hours ago
8 கருத்துக் கூறியவர்கள்:
////நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம் ////
கட்டாயம் தண்டிக்க வேண்டும் சுவாமிஜீ!
நல்லாயிருக்கு... இண்ட்லி`யில் இணைக்கல்லையா????
:-))
//ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்//
அவ்வ்வ்வ்..
குருவா கொக்கா.. கலக்கல்ஸ் குரு..:D
//ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்//
குருவுக்கே புரியவில்லை என்றால் எங்களுக்கு எப்படி புரியும் :P
வந்தியானந்தா சேவை தொடரட்டும்!!!
//சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர்//
எனக்கு வேறு சில ஆனந்தாக்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை ;-)
//ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்
//
வெளுத்ததெல்லாம் பால் அல்ல எண்டு கந்தசாமி அண்ணை சொல்லச்சொன்னார் :P
இதென்ன விவகாரமான சாமியாரா இருப்பார் போல இருக்கே. ஆனால் வெறும் தத்துவம் தான் ஆனால் பேஸ்மென்ட் வீக் என்கிறாங்களே? அப்பிடியா? ;)
அது சரி,
நித்தியானந்தா, பிரேமானந்தா, வந்தியானந்தா - இம்மூவ்ரைக்கிடையில் ஒற்றுமைகள், வேற்றுமைகள் இருக்கா?
(கேள்வி உபயம் -சாவகச்சேரி சின்ன மாமா)
அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்//
//
ஹா ஹா ஹா
அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்//great tweet
/"நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம்"/
முதலில் நல்லவனா மாறுங்க.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
Post a Comment