சரியாக ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுக்கு வருகின்றேன். இரண்டாம் பகுதியில் என்னுடைய ஏனைய வலையுலக நட்புகள் தொடர்கின்றன. சில நாட்களாக வலையுலகம் எனக்கு தூரமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலும் பதிவுகள் வாசிக்கின்றேன், சிலதுக்கு மட்டும் பின்னூட்டம் இடுகின்றேன். நேரமின்மை முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் முன்னையதைப்போல் ஏனோ இப்போ எழுதமுடியவில்லை, என்ன காரணமோ யாம் அறியோம். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. இந்தக் கதைகளை விட்டுவிட்டு விடயத்திற்க்கு வாறன்.
மது
பெயரைப் போலவே இவரின் பேச்சும் போதை தரும். மதுவின் கருத்துக்களின் பெரும்பாலும் அவருக்குரிய மதுயிசம் இருக்கும்(மதுயிசம் என்ன என அறியவேண்டியவர்கள் தங்கள் மின்னஞ்சலுடன் என்னை அல்லது கோபியைத் தொடர்பு கொள்ளுங்கள்). இவருக்குத் தெரியாத சந்துபொந்துகள் இல்லை (தொழில்நுட்பத்தில்). பெரிய்ய ஹக்கராகவேண்டியவர், நேர்மையான மனிதர் என்றபடியால் அதனை செயல்படுத்துவதில்லை.
டொக்டர் எம்.கே.முருகானந்தன்
இவரை வலையுலகிற்க்கு வரமுன்னரே ஒரு எழுத்தாளராக தெரியும் பின்னர் வைத்தியராக அவரிடம் பலமுறை வைத்தியம் கூடப் பார்த்தேன். தன்னுடைய கடினமான வேலைப் பளுவிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தன்னுடைய வலைப்பதிவு முகநூல் என அனைத்திலும் எழுதிக்கொண்டிருக்கின்ற கலை இவருக்கு மட்டுமே கைவந்தது. இவரின் எளிமையான தமிழில் பாமரனுக்கும் புரியும் படி எழுதும் மருத்துவப் புத்தகங்களும் கட்டுரைகளும் என்றைக்குமே மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கும். இவரின் சினிமா விமர்சனங்களை வாசித்து நான் பல படங்கள் பார்த்திருக்கின்றேன்.
மாயா
என்னை வந்தியத்தேவனாக மாறவைத்தவர்களில் இவரும் ஒருவர். பதிவுலகின் இன்னொரு மயூரன். ஆரம்பகால இலங்கைப் பதிவர்களில் ஒருவர், தற்போது லண்டனில் உயர்கல்விக்காக வசிக்கின்றார்(புலம் பெயர்ந்து அல்ல). இப்போது அடிக்கடி தொலைபேசியில் உரையாடினாலும் இன்னமும் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.
நிர்ஷன்
வலையுலகின் மூலம் அறிமுகமானவர். 2007ல் ஒழுங்குபடுத்த முயன்ற பதிவர் சந்திப்பின் மூலம் தொலைபேசி மின்னஞ்சல் என தொடர்பில் இருந்தாலும் சென்ற வருடம் தான் நேரில் சந்தித்தேன். பதிவுலகத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொள்வோம். இவரின் துணிச்சல் வியக்கத்தக்கது.
நிலா
பின்நவீனத்துவ கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மூலம் கலக்கிக்கொண்டிருப்பவர். இவரின் சில கட்டுரைகளுக்கு அவரிடம் பேச்சுத்தமிழில் விளக்கம் கேட்டுக்கூட இருக்கின்றேம். சங்க இலக்கியங்கள் எல்லாம் முகநூலில் இட்டு தன் திறமையை அடிக்கடி காட்டுகின்றவர்.
சினேகிதி
நம்ம ஊரு சீனியர். வலையுலகில் பலகாலமாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் தத்தக்கபித்தக பதிவர். மின்னஞ்சல்கள், முகநூல் அரட்டைகள் என அடிக்கடி பேசுகின்ற ஒருவர். பதிவுகளில் காத்திரமாக இருந்தாலும் அரட்டைகளில் நகைச்சுவையாகவும் பேசுவார். அண்மைக்காலமாக இவரும் எழுதுவதைக் குறைத்துவிட்டார்.
சதீஸ்
இன்றைக்கு பிறந்தநாள் காணும் என் வலையுலக மருமகன். இவரைச் சந்தித்ததே சென்ற வருட அவரின் பிறந்தநாள் அன்றுதான். எவ்வளவு நக்கலடீத்தாலும் கோவம் பத்தாது. பதிவுலக நண்பர்களை உறவினராக்கிய பெருமை சதீசைத் தான் சேரும். காதலுக்கு மரியாதை கொடுப்பவர், சிறந்த கிரிக்கெட் வீரராம், என்னை மாமோய் என அழைக்கும் அழகோ அழகு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.
சுபாங்கன்
ஐந்தறைப் பெட்டியில் வசித்தவர் பவனின் வாஸ்து காரணமாக தரங்கத்தவராகிவிட்டார். சுபாங்கனுடன் எனது முதலாவது சந்திப்பு என்றைக்கும் மறக்கமுடியாமல் இருக்கிறன்(ம்). பழக நல்ல பொடியன் என நான் கூறினால் பவன் கோபிப்பான். எனக்கு சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தந்தவர். என்னைப்போல் இன்னொரு டயலொக்கின் 1000 நிமிடங்கள் வாடிக்கையாளர்.
தூயா
தமிழ்நாடுடோல்க் மூலம் அறிமுகமான இன்னொரு உறவு. மின்னஞ்சல் அரட்டைகள், முகநூல் என எங்கள் நட்பு இன்னமும் தொடர்கின்றது. இவரின் சமையல் குறிப்புகளைப் பார்த்து நானும் சிலதை முயற்சி செய்திருக்கின்றேன். என்னை முகநூலில் ஒரு சிறந்த விவசாயியாக மாற்றிய பெருமை என் அன்புச் சகோதரி தூயாவிற்க்கே சேரும். அனானித் தாக்குதல்கள் நடந்தால் ஆறுதல் கூறுகின்றவர்.
யோகா
யோகாவினையும் வலையுலகின் மூலம் அறிந்தாலும் பின்னர் நேரடியாக தொலைபேசியில் மின்னஞ்சலில் என நட்பு தொடந்துகொண்டேயிருக்கின்றது. சில தொழில்நுட்ப சிக்கல்களால் அண்மைக்காலமாக எழுதுவதை குறைத்துக்கொண்டமை கவலையளிக்கின்றது.
இவர்களை விட பலர் பின்னூட்டங்களின் மூலமும் முகநூலிலும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் பட்டியல் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் மிகவும் நீண்டது. இங்கே பட்டியலில் இருக்கும் நண்பர்கள் ஏதோ ஒருவகையில் என்னுடன் தொடர்புடன் இருப்பவர்கள் மாத்திரமே.
என்னுடைய உளறல்களை தங்களுடைய பொன்னான நேரத்தை பயன்படுத்தி வாசிக்கும் அனைவருக்கும் என்னைப் பிந்தொடரும் அப்பாவிகள் 153 பேருக்கும் பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
பின்குறிப்பு : நேரமும் காலமும் கைகொடுத்தால் இங்கிலாந்து பற்றிய ஒரு தொடர் என் பார்வையில் எழுத இருக்கின்றேன். ஏதாவது உருப்படியாகவும் எழுதவேண்டும் தானே.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
10 கருத்துக் கூறியவர்கள்:
முதலில் உங்கள் நட்பு வட்டத்தில் என்னை இணைத்தமைக்கு நன்றிகள். அடுத்து என்னை பற்றி இரண்டு பந்தி எழுதுகின்றேன் என சொல்லிவிட்டு ஒரு பந்தி எழுதியமைக்கு கண்டனங்கள்.
கடந்த வருட என் பிறந்தநாள் மறக்கமுடியாதது தான். வெற்றி எப் எம் நடத்திய புட்சாலில் அறிவாளி(எந்த உள்குத்தும் இல்லை) வந்தி மாமாவை சந்தித்தஹு சந்தோசம். உங்களுக்கு யார் சொன்னது எனக்கு கோபம வராது என்று. எனக்கு கோபம வந்தால் யாருமே தான்கமாட்டாங்க. மாமோய் நண்பர்களை உறவினர் ஆக்கியது நானென்று சொல்லி எங்கேயோ மாட்டி விட போறிங்க போல
மாமோய் என்னது காதலுக்கு மரியாதையா? அவ்வ்வ்வ்வ்வ்வ் கடந்த காலங்களை மீட்டு பார்க்க வைத்து விட்டீர்களே. அப்புறம் யாரது சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற புரளியை கிளப்பியது.
மாமோய் மாமோய் மாமோய் மீண்டும் நன்றிகள்.
:)
அவ்வ்வ்வ்வ்....
என்னை ஏன் மாட்டிவிடுகிறீர்கள்?
மது அண்ணா பற்றி அறிய வந்தியண்ணாவை மட்டும் தொடர்புகொள்ளவும். #தப்பித்தல்
சதீஷ் அண்ணாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றாலும் ஏதோ வெளியாள் மாதிரி வாழ்த்துச் சொல்லியிருப்பதற்குக் கண்டனங்கள்.
உரிமை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? ;) #கும்மி :P
எழுதுங்கோ இங்கிலாந்து பற்றி...
எண்டாலும் நிறைய மினக்கிடாம கும்மியில மின்கெடுங்கோ. :P
ஹா ஹா.. போகிற போக்கில மதுஇஸம் என்பதை அகராதியிலேயே சேத்துடுவீங்கள் போல...
எங்கள் நட்பு கருத்துவேறுபாட்டில்தான் ஆரம்பித்திருந்தது. நீங்கள் போட்ட பில்கேட்ஸின் மகள் பதிவுக்கு நான் காரசாரமாக இட்ட பின்னூட்டம் நினைவிருக்கிறதா? :))
எனக்கு வலையுலகில் கிடைத்த முதல் நண்பர்களில் நீங்களும் ஒருவர். எனது அபிமான பதிவரான நீங்கள் என்னை பற்றி எழுதியது மகிழ்ச்சி வந்தி.
எனக்கு ஒரு முறை ஏற்பட்ட பிரச்சினையில் என்னை தனியே விடாமல் நாங்களும் உன்னுடன் இருக்கிறம் என அறிய தந்தீர்கள்
சதீஷ்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அடுத்த பாகமும் கலக்கல் ;)
கலக்கல் வந்தி...
உங்களை பதிவராக சந்தித்து இன்றுடன் ஒரு வருடமாகி விட்டது... அந்தச் சந்திப்பின் பயனாக பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.
என்றைக்கும் இந்த நாளை சதீஸின் பிறந்தநாள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கும்.
ஒரு மாத இடைவெளியில் வாசிப்பது மகிழ்ச்சி..
வழமையான நளினங்களுடன் எழுதியுள்ளீர்கள்..
நிறைய ரசித்தேன்.. ;)
அப்போ தரங்கமாக பெட்டி மாறிய கதை அதானா? ;)
//என்றாலும் ஏதோ வெளியாள் மாதிரி வாழ்த்துச் சொல்லியிருப்பதற்குக் கண்டனங்கள்.
உரிமை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? ;) #கும்மி :ப//
ரிப்பீட்டு ;)
//தனியே விடாமல் நாங்களும் உன்னுடன் இருக்கிறம் என அறிய தந்தீர்கள்
//
;)
..
உங்களுடைய நான்காம் ஆண்டு நிறைவில் என்னுடைய முதலாம் ஆண்டு நிறைவும் .....
எனக்கு வலைப்பதிவு எழுதத் தொடங்கிய ஆரம்பத்தில் கிடைத்த நல்ல நண்பர்களில் நீங்களும் ஒருவர் அண்ணா.
அதிகளவு ஊக்கப்படுத்துபவரும் கூட.
இன்னும் தொடர்ந்து வலை உலகில் நீண்ட காலம் எமக்கு பல ஹாட் அண்ட் சவர் சூப்புகளை பரிமாற்ற நிறைந்த வாழ்த்துக்கள் .
Post a Comment