அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.
நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?
கிரிக்கெட்
இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.
எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.
யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
சினிமா :
அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.
நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.
பதிவுலகம்
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.
சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
28 கருத்துக் கூறியவர்கள்:
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
நோ போல் சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு கூகுளில் ரண்டீவ் சம்மந்தமாக தேடிப்பார்த்தேன். அவ்வளவு தேடல் முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் நேற்றுத் தேடிப்பார்த்தேன். அப்பப்பா.. எவ்வளவு தேடல் முடிவுகள்.
களவாணி பார்க்க வேண்டும். மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கவேண்டுமே.. தில்லாலங்கடி பார்ப்பதாக இல்லை.
இலங்கைப்பதிவர் சந்திப்பு - முதலாவதில் கலந்துகொள்ளாவிட்டாலும் அதனால் ஏற்பட்ட நன்மைகளை அனுபவித்திருக்கிறேன். அடுத்த சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துவிடுங்கள்.
அரசியல் - பொதுவாக எல்லா நாடுகளிலும் அப்படித்தான் குருவே.
இங்கும் அப்படித்தான்.
போலிச் சுதந்திரங்கள்....
கிறிக்கற் - :)))
விடுங்க குருவே. :-)
என்னது பிரபலவா?
அவ்வ்வ்வ்...
// யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும். //
நாடே எதிர்த்த அவுஸ்ரேலிய வீரர்கள் விளையாடவில்லையா?
பணத்துக்காக மாறிவிடுவார்கள்.
பாவம் இரசிகர்கள் இந்த அரசியலைப் புரிந்து கொள்வதற்குள் எல்லாமே முடிந்துவிடும்.
ஓவல் - பாருங்கோ குருவே.
கடைசிநாள் போட்டிக்கு 16 பவுண்ட்ஸ் உக்கு கிட்ட எண்டாங்கள்.
எண்டாலும் 5ஆம் நாள் நடக்குமோ தெரியாது. ;-)
சினிமா - அந்தப் பாடல் அருமை. :-)
பதிவுலகம் - பதிவர் சந்திப்பு ஒன்று வேண்டும்தான்.
ஆகக்குறைந்தது இணையம் மூலமாகவாவது நடத்த வேண்டும்.
23ம் திகதி திங்கட்கிழமை வருகிறது.
வேண்டுமானால் 22ம் திகதி?
குழுமத்தில் கலந்துரையாடுவோம்.
விளக்கம். :-)
புரிதல் உண்டு.
அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.
நிறையப் பேர் தேடி இல்லை என்று கண்டனம் தெரிவிக்கப் போகும் விடயம் இல்லாமைக்கு எனது நன்றிகள். :P இப்படியே இருக்கவும்.
////அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?////
அப்பிடியா? சொல்லவேயில்ல்ல்ல்ல்ல (வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்)
/////வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
///////
நீங்கள் மகளிர் டெனிஸ் செய்திகளை இங்கிலாந்து பத்திரிகைகளில் தேடுகிறீர்களாமே? உண்மையா?
/////சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், ///// இப்போதைக்கு எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல் இதுதான்
////இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்./////
யார் மணி கட்டுவது
அம்மாவுக்கு என் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அம்மாவுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!
//இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?//
அங்க இருக்கறது குண்டு துளைக்காத கண்ணாடி இல்லை!!! சப்பாத்து உள்ளே வராத கண்ணாடி!!!
//யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.//
யார் கண்டது அவரை இக்கட்டான நேரத்தில் சேவாக் பந்து வீச அழைக்கலாம். ஜிந்தா அக்கா கட்டி பிடிக்கலாம்!!!
//பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான்.//
???????
//, அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். //
சிந்திக்க வேண்டிய விடயம்
தங்கள் அம்மாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லி விடவும்
//இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?//
நியாயமான் சந்தேகம்............ நானும் அடிக்கடி யோசிப்பதுண்டு,,..
---------------------------.
---------------
களவாணி சூப்பர்...
-----------------
அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.. ( ரொம்ப பிடித்த பாடல் பகிர்வுக்கும் நன்றி).
//யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.//
ஹிஹி டில்சான் 99 அடித்திருக்கும் போது ரன்டிவ் சேவாக் சொல்லி நோபோலும் போடக்கூடும் யார் கண்டது..:P
//சினிமா //
தமிழ்ப்படங்கள் பார்ப்பது குறைவு சாரி..:P
//சந்திப்பு//
சென்றமுறை குழுமத்தில் நாங்கள்(வதீஸ் அண்ணா, அனுதினன்) சந்திப்புப்பற்றி கேட்டபோது ஒரு சிலரைத்தவிர பலரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை..:(
//இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.//
அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.. அப்படியே கேக்கு கோக்குகளையும் அனுப்பி வைக்கவும்..ஹிஹி
அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இந்த பிறந்தநாள் பரிசாக நல்ல மருமகள் ஒருவரை அவருக்குத் தேடிக் கொடுங்கள்..
(அது குஜராத்தியாக இருந்தாலும் பரவாயில்லை.. மருமகளாக இருக்கட்டும் ;))
//பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும்//
இந்த வரிசையில் என்னை கோபிக்கு இணையாக சேர்த்ததுக்கு கண்டனங்களும் கண்கோனிடம் மன்னிப்பும்.
உலகில் ஒரேயொரு சூரியன்.. தமிழ்ப் பதிவுலகில் ஒரேயொரு அனலிஸ்ட்.. அது கங்கோன் மட்டுமே.
பாடல்கள் - ரசித்தேன்..
பதிவுலகம் - என்ன நடக்கிறது?அடுத்த சந்திப்பு திருமலையில் என்று ஓரளவு தீர்மானிக்கப்பட்டது.. வெயிட்டிங்..
திருமலை சிங்கங்களே அழையுங்கள்.வருகிறோம்..
//ஓய்வெடுக்கின்ற பதிவர்களை // யூ மீன் புல்லட் அண்ட் ஆதிரை?
சிறு விளக்கம் - நம்பினோம்.. இப்போ நீங்கள் அதிகம் பிசி எனத் தெரியும்.. முக்கியமான காலம் தானே.. மேலும் கவனம் தேவை.. ;)
LOSHAN
www.arvloshan.com
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
ரன்தீவ் விவகாரம் ஆரம்பத்தில் ரன்தீவ் செய்தது தவறு என நினைத்த என்னை அவனுகளுக்கு செய்தது சரிதான் என நினைக்குமளவுக்கு மாற்றியிருக்கிறது இந்திய ஊடகங்களின் சலசலப்பு.
ஒரு போட்டித்தடைக்கும் நூறு சதவீத தண்டப்பணம் என தண்டிக்கப்பட்டிருக்கிறார் ரன்தீவ். தான் தெரிந்தே செய்தேன் என அவர் பெருந்தனமையாய் ஒத்துக் கொண்டதால்.
மற்றும்படி பதிவு நன்றாயிருக்கிறது.
உங்களை போல நானும் நான் மகான் அல்ல படத்துக்கு வெயிட்டிங்.
வம்சம், களவாணி, பாணா காத்தாடி எல்லாம் ஓகே..;)
உங்களோட சேர்ந்து நானும் அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி ஒரு வணக்கத்தையும் சொல்லிக்கிறேன் ;)
// இந்த வரிசையில் என்னை கோபிக்கு இணையாக சேர்த்ததுக்கு கண்டனங்களும் கண்கோனிடம் மன்னிப்பும்.
உலகில் ஒரேயொரு சூரியன்.. தமிழ்ப் பதிவுலகில் ஒரேயொரு அனலிஸ்ட்.. அது கங்கோன் மட்டுமே. //
Eh...? :-o
அவ்வ்வ்வ்வ்...
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
//கிருத்திகன் said...
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிகள் கீத் அம்மா இந்தப் பதிவை வாசித்தவர்.
//Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
நோ போல் சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு கூகுளில் ரண்டீவ் சம்மந்தமாக தேடிப்பார்த்தேன். அவ்வளவு தேடல் முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் நேற்றுத் தேடிப்பார்த்தேன். அப்பப்பா.. எவ்வளவு தேடல் முடிவுகள்.//
சில நாட்களாக ரந்தீவ் தான் ஹாட் ரொபிக். கங்கோனின் ட்விட்டுகளை வைத்தே ஒரு பதிவு எழுதலாம்,
//களவாணி பார்க்க வேண்டும். மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கவேண்டுமே.. தில்லாலங்கடி பார்ப்பதாக இல்லை.//
மூன்று மணி நேரம் என்பது பெரிய்ய விடயம் தான். தமன்னாவுக்காக தில்லாலங்கடி பார்க்கவும்.
//Subankan said...
இலங்கைப்பதிவர் சந்திப்பு - முதலாவதில் கலந்துகொள்ளாவிட்டாலும் அதனால் ஏற்பட்ட நன்மைகளை அனுபவித்திருக்கிறேன். அடுத்த சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
நீங்கள் தானே இரண்டாவதின் கதாநாயகன். அடுத்த சந்திப்பு???? பொடியள் உசாரில்லை இதற்க்குதான் எம்மைபோன்ற யூத்துகள் வேண்டும்.
//அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துவிடுங்கள்.//
நன்றிகள் நிச்சயம் தெரிவிக்கின்றேன்.
//கன்கொன் || Kangon said...
அரசியல் - பொதுவாக எல்லா நாடுகளிலும் அப்படித்தான் குருவே.
இங்கும் அப்படித்தான்.
போலிச் சுதந்திரங்கள்....//
ம்ம்ம்ம் உண்மைதான்
/என்னது பிரபலவா?//
ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை.
//நாடே எதிர்த்த அவுஸ்ரேலிய வீரர்கள் விளையாடவில்லையா?
பணத்துக்காக மாறிவிடுவார்கள்.
பாவம் இரசிகர்கள் இந்த அரசியலைப் புரிந்து கொள்வதற்குள் எல்லாமே முடிந்துவிடும்.//
நீயும் இந்த வகைகுள் வருகின்றாயா? #சந்தேகம்
//ஓவல் - பாருங்கோ குருவே.
கடைசிநாள் போட்டிக்கு 16 பவுண்ட்ஸ் உக்கு கிட்ட எண்டாங்கள்.
எண்டாலும் 5ஆம் நாள் நடக்குமோ தெரியாது. ;)//
இதே நீ பிரபல அனாலிஸ்ட் என்பதற்க்கு இன்னொரு எடுத்துக்காட்டு இன்றுடன் ஓவல் போட்டி முடிவடைந்துவிடும். பாகிஸ்தானுக்கு இன்னும் 131 ஓட்டங்கள் தான் தேவை.
//சினிமா - அந்தப் பாடல் அருமை. :)//
இசை எங்கள் ராஜாவின் இளவல் அல்லவா,
//பதிவுலகம் - பதிவர் சந்திப்பு ஒன்று வேண்டும்தான்.
ஆகக்குறைந்தது இணையம் மூலமாகவாவது நடத்த வேண்டும்.
23ம் திகதி திங்கட்கிழமை வருகிறது.
வேண்டுமானால் 22ம் திகதி?
குழுமத்தில் கலந்துரையாடுவோம்.//
வெறும் கலந்துரையாடல்கள் மட்டுமே அடுத்த சந்திப்புக்கு நடந்தன ஆனால் இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.
//விளக்கம். :-)
புரிதல் உண்டு.//
நன்றி உன்னைப்போன்ற புரிதல் உடைய சீடன் கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்.
//அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.//
தெரிவித்துவிடுகின்றேன்...
//நிறையப் பேர் தேடி இல்லை என்று கண்டனம் தெரிவிக்கப் போகும் விடயம் இல்லாமைக்கு எனது நன்றிகள். :P இப்படியே இருக்கவும்.//
மீண்டும் என் சீடனின் புரிதல்களுக்கு நன்றிகள்.
வரவர உன் பின்னூட்டங்கள் பதிவு போல் பெரிதாக இருக்க என்ன காரணம்? சில இடங்களில் பின்நவீனத்துவமும் புகுந்துவிளையாடுகின்றது #இன்னொரு சந்தேகம்.
//யோ வொய்ஸ் (யோகா) said...
அப்பிடியா? சொல்லவேயில்ல்ல்ல்ல்ல (வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்)//
வேணாம் வலிக்கிது அழுதுடுவேன் (சேம் வடிவேலு ஸ்டைல்)
//
நீங்கள் மகளிர் டெனிஸ் செய்திகளை இங்கிலாந்து பத்திரிகைகளில் தேடுகிறீர்களாமே? உண்மையா?//
இருக்கலாம்,
//இப்போதைக்கு எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல் இதுதான்//
ஏதாவது பிளாஷ் பேக் இருக்கோ...
//யார் மணி கட்டுவது//
மேர்வின் சில்வாவை விடுவோமா?
//அம்மாவுக்கு என் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
நிச்சயமாக தெரிவித்துவிடுகின்றேன்.
//ஆதிரை said...
அம்மாவுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!//
நன்றிகள் ஆதிரை, அண்மைக்காலமாக தாங்களும் எழுதுவதை ஏனோ குறைத்துவிட்டீர்கள், என்ன காரணமோ???
//Anuthinan S said...
அங்க இருக்கறது குண்டு துளைக்காத கண்ணாடி இல்லை!!! சப்பாத்து உள்ளே வராத கண்ணாடி!!!//
ஹிஹிஹி எப்படியெல்லாம் சிந்திக்கின்றீர்கள். முதுகெலும்பு இல்லாதவருக்கு எதால் எறிந்தாலும் நிமிரமாட்டார்.
//யார் கண்டது அவரை இக்கட்டான நேரத்தில் சேவாக் பந்து வீச அழைக்கலாம். ஜிந்தா அக்கா கட்டி பிடிக்கலாம்!!!//
முரண்பாடு இது சேவாக்கின் டீமில் ஜிந்தா அக்கா இல்லை.
//சிந்திக்க வேண்டிய விடயம்//
இன்னும் எத்தனை நாளைக்கு சிந்திக்கபோகின்றீர்கள். சட்டுப்புட்டென மேட்டரை முடியுங்கள்.
//தங்கள் அம்மாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லி விடவும்//
நன்றிகள் நிச்சயம் தெரிவித்துவிடுகின்றேன்.
9:56 AM, August 19, 2010
//பிரபா said...
நியாயமான் சந்தேகம்............ நானும் அடிக்கடி யோசிப்பதுண்டு,,..//
ரொம்ப யோசியாதையுங்கோ. ஏனென்றால் இவர்கள் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்டிக்கொண்டு சர்வாதிகாரம் செய்பவர்கள் அதனால் எதிரிகள் அதிகம்.
---------------------------.
---------------
//களவாணி சூப்பர்...//
அதே அதே
-----------------
//அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.. ( ரொம்ப பிடித்த பாடல் பகிர்வுக்கும் நன்றி).//
நன்றிகள். இசைராஜாவுக்கும் கே.ஜே.யேசுதாசுக்கும் தான் நன்றிகள் கூறவேண்டும்,
//Bavan said...
ஹிஹி டில்சான் 99 அடித்திருக்கும் போது ரன்டிவ் சேவாக் சொல்லி நோபோலும் போடக்கூடும் யார் கண்டது..:ப்//
ஹாஹா நடக்கலாம்.
//தமிழ்ப்படங்கள் பார்ப்பது குறைவு சாரி..:ப்//
தெரியும் தெரியும் நீங்கள் கடைசியாகப் பார்த்த படம் உயிருள்ள வரை உஷா தானே,
//சென்றமுறை குழுமத்தில் நாங்கள்(வதீஸ் அண்ணா, அனுதினன்) சந்திப்புப்பற்றி கேட்டபோது ஒரு சிலரைத்தவிர பலரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை..:(//
உன்னைச் சின்னபொடியன் என நினைத்து பலர் பதில் தரவில்லையோ மீண்டும் முயற்சிக்கவும்,
//அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.. அப்படியே கேக்கு கோக்குகளையும் அனுப்பி வைக்கவும்..ஹிஹி//
நன்றிகள் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னாது உனக்கு கங்கோன் கோக்குகள் கேக்குகள் கொடுக்கவில்லையா? அவன் தான் என் சார்பில் ட்ரீட் கொடுக்கின்றேன் என்றான். அவனைக் கண்டால் கண்டிக்கவும்.
//LOSHAN said...
அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இந்த பிறந்தநாள் பரிசாக நல்ல மருமகள் ஒருவரை அவருக்குத் தேடிக் கொடுங்கள்..
(அது குஜராத்தியாக இருந்தாலும் பரவாயில்லை.. மருமகளாக இருக்கட்டும் ;))//
வாழ்த்துக்கு நன்றிகள். ஏன் இந்தக் கொலைவெறி நான் தமிழன். ஆகவே மொழிப் பிரச்சனை வரலாம் ஆனாலும் உலகமயமாக்கல் என்னவும் நடக்கலாம்.
//பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும்//
இந்த வரிசையில் என்னை கோபிக்கு இணையாக சேர்த்ததுக்கு கண்டனங்களும் கண்கோனிடம் மன்னிப்பும்.//
ஹாஹா நல்லா காட்டுறாங்கள் ப்லிம். இருவரும் நல்ல க்கிரிக்கெட் ரசிகர் என்பது நிலாவில் இருப்பவர்களுக்கே தெரியும்.
//உலகில் ஒரேயொரு சூரியன்.. தமிழ்ப் பதிவுலகில் ஒரேயொரு அனலிஸ்ட்.. அது கங்கோன் மட்டுமே.//
கங்கோன் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி கிடைத்திருக்கின்றது வாழ்த்துக்கள்.
//பாடல்கள் - ரசித்தேன்..//
நீங்கள் ஒரு கலா ரசிகன் என்பது உலகறிந்த விடயம்.
//பதிவுலகம் - என்ன நடக்கிறது?அடுத்த சந்திப்பு திருமலையில் என்று ஓரளவு தீர்மானிக்கப்பட்டது.. வெயிட்டிங்..
திருமலை சிங்கங்களே அழையுங்கள்.வருகிறோம்..//
திருமலைச் சிங்களே அறைகூவலை ஏற்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
/// யூ மீன் புல்லட் அண்ட் ஆதிரை?//
தொப்பி யாருக்கு அளவோ போட்டுக்கொள்ளவும். புல்லட் என்ற பதிவரை கொஞ்சம் ஞாபகம் இருக்கின்றது.
//சிறு விளக்கம் - நம்பினோம்.. இப்போ நீங்கள் அதிகம் பிசி எனத் தெரியும்.. முக்கியமான காலம் தானே.. மேலும் கவனம் தேவை.. ;)//
நீங்கள் குறிப்பிடுவது படிப்பைத் தானே ஓம் கடைசி செமஸ்டர் கவனம் தேவைதான்.
//தர்ஷன் said...
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிகள் தர்ஷன்.
//ரன்தீவ் விவகாரம் ஆரம்பத்தில் ரன்தீவ் செய்தது தவறு என நினைத்த என்னை அவனுகளுக்கு செய்தது சரிதான் என நினைக்குமளவுக்கு மாற்றியிருக்கிறது இந்திய ஊடகங்களின் சலசலப்பு.//
இந்திய ஊடகங்கள் செய்வது வியாபாரம் தானே, வியாபாரிகளிடம் நடுநிலைமையை எதிர்பார்க்கலாமா?
// கோபிநாத் said...
உங்களை போல நானும் நான் மகான் அல்ல படத்துக்கு வெயிட்டிங். //
நல்லா இருக்கு என விமர்சகர்கள் சொல்கின்றார்கள்.
//வம்சம், களவாணி, பாணா காத்தாடி எல்லாம் ஓகே..;)//
அப்படித்தான் அறிந்தேன் இன்னும் பாணாவும் வம்சமும் பார்க்கவில்லை.
//உங்களோட சேர்ந்து நானும் அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி ஒரு வணக்கத்தையும் சொல்லிக்கிறேன் ;)//
நன்றீகள் உங்கள் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் கோபி.
//கன்கொன் || Kangon said...
Eh...? :-o
அவ்வ்வ்வ்வ்...//
உன்னை லோஷனுடன் சேர்த்தது என் தப்புத்தான் ஹர்ஷா போகலே, ரவி சாஸ்திரி போன்றவர்களுடன் தான் சேர்த்திருக்கவேண்டும் அடுத்த பதிவில் மாற்றுவிடுகின்றேன்.
// SShathiesh-சதீஷ். said...
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிகள் சதீஸ்? லண்டன் குளிர் எப்படி?
Post a Comment