ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010

அரசியல்

மீண்டும் இலங்கையின் அரசியல் அரங்கு சூடு பிடித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆளும் கட்சியுடன் இணையப்போவதாக வந்த செய்திதான் இதற்கான காரணம். ஐக்கியதேசியக் கட்சியில் போட்டிபோடும்போதே பிரபா கணேசனுக்கு தெரிந்திருக்கும் எப்படியும் தாம் எதிர்க்கட்சிதான் என ஆனாலும் வெற்றி பெற்று சில நாட்களின் பின்னர் என்ன காரணத்துக்காகவோ அவர் ஆளும் கட்சியில் இணைய முனைகின்றார். ஏற்கனவே இவரின் அண்ணன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் ரணில் இடம் கொடுக்கவில்லை என பிரச்சனைப் பட்டார்கள். இந்த கட்சி தாவும் நபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா? ஆகக்குறைந்தது மக்களுக்கு திருப்பி அழைக்கும் அதிகாரம் தேவை? மக்கள் பிரபா கணேசனை ஆளும் கட்சி எம்மியாக பாராளமன்றத்துக்கு அனுப்பவில்லை? ஆளும் கட்சியில் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர் வேண்டுமென்றால் இராதகிருஷ்ணனையே அனுப்பியிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் பலர் ஆளும் கட்சிக்கு தாவ இருக்கின்றார்களால். ரணில் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு துறவியாகலாம்.

அரசியல் சண்டியன் மேர்வின் சில்வாவை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. காலம் பிந்திய முடிவு தான் ஆனாலும் பாராட்டவேண்டிய முடிவு. சென்ற வியாழக்கிழமை மேர்வின் சில்வாவின் புகழ் லண்டன் புகையிரதங்களிலும் நீளத்துக்கீழ் புகையிரதங்களிலும் மேலும் பரவி இலங்கைக்கு மேலும் புகழ் சேர்த்தது. இங்கே புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மெற்ரோ எனப்படும் பத்திரிகை இலவசமாக கிடைக்கும். அந்தப் பத்திரிகையில் மேர்வினின் படத்துடன் அவர் சமுர்த்தி உத்தியோகத்தரைக் கட்டிப்போட்ட செய்தி வெளியாகியது. இந்த ஜோக்கரை பாராளமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான். சந்திரிக்கா செய்த எத்தனையோ பிழைகளில் இந்தப் பிழையும் ஒன்று, கடைசியில் சந்திரிக்காவையே திட்டி அரசியல் நடத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றவர் மேர்வின் சில்வா. இவரை சில நாள் ஊடக அமைச்சராக்கி அழகு பார்த்த ஜனாதிபதி இப்போ அவரின் சண்டித்தனம் கூடக்கூட இடை நிறுத்தியிருக்கின்றார். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன.

சினிமா

எந்திரன் இசை வெளியீடு பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றன. வழக்கம்போல் ரகுமானின் பாடல்கள் முதன்முறை கேட்கும் போது அவ்வளவு இதமாக இருக்கவில்லை. விண்ணைத்தாண்டி வருவாய், இராவணன் பாடல்கள் சில உடனடியாக பிடித்தது போல் எந்திரனில் எந்தப் பாடலும் முதலில் கவரவில்லை. கொஞ்சம் கொஞ்சம் கேட்டபின்னர் புதிய மனிதாவும் பூம்பூம் ரோபோடாவும் நல்லாயிருக்கு. எப்படியும் ஷங்கர் பாடல்களை அழகாக படமாக்கி ஹிட்டாக்கிவிடுவார். போதாக்குறைக்கு உழக அழகியும் இருக்கின்றார் சொல்லவா வேண்டும். எந்திரனின் வெற்றிக்கு காரணம் ஷங்கரா? சூப்பர் ஸ்டாரா? இல்லை சன் குழுமத்தின் ஓவர் டோஸ் விளம்பரமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மொக்கைப்படங்களான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, அம்பா சமுத்திரம் அப்பானிக்கே படம் வெளியாகி அடுத்த நாளே வெற்றிப்படம் என விளம்பரம் கொடுத்தவர்கள். ரோபோவுக்கு சும்மாவா இருப்பார்கள் அதிலும் சொந்தப்படம் வேறை பாவம் சன் நெட்வேர்க் இணைப்புகள் இருப்பவர்கள்.

நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.

கிரிக்கெட்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் பலம் குறைந்த நியூசிலாந்திடம் 200 ஓட்டங்களால் அவமானத் தோல்வியைத் தழுவியது. நியூசியின் புதிய தலைவர் ரோஸ் டைலரின் 95 ஓட்டங்களும் ஸ்டைரிசின் 89 ஓட்டங்களும் நியூசிக்கு 288 என்ற நல்ல ஓட்ட எண்ணிக்கையை கொடுக்க இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், டோணி, ரைனா இலகுவாக இந்த எண்ணிக்கையை கடப்பார்கள் என நினைத்தால் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுவிட்டார்கள்.

இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் எட்பக்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்கிசில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் புரோட் பந்துவீசும் போது பாகிஸ்தானிய வீரர் ஹைடரை நோக்கீ பந்தால் எறிந்தவிடயத்தில் ஐசிசி இங்கிலாந்துக்கு சார்பாக நிற்பதுபோல் தோன்றுகின்றது. கனவான்கள் ஆட்டம் என்ற நிலையில் இருந்த கிரிக்கெட்டில் புரோட் செய்தது பாரிய தவறாகும் இன்னொரு வீரரை காயப்பட்டுத்தும் நோக்கில் எறிந்த பந்துக்கு வெறும் அபராதத்துடன் புரோட் தப்பிவிட்டார். ஆகக்குறைந்தது அவரை இந்த தொடரில் இருந்து நீக்கி இருக்கவேண்டும் ஆனால் ஏனோ ஐசிசி செய்யவில்லை. சில இங்கிலாந்து வீரர்களும் பத்திரிகைகளும் புரோட்டுக்கு ஆதரவாக அவர் மன அழுத்தத்தால் அப்படிச் செய்தார் என்றும் பின்னர் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. வெள்ளைத் தோலுக்கு என்றைக்கும் மதிப்பு அதிகம் தான்.

பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று. பட உதவி செய்த இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு நன்றிகள்.


20 கருத்துக் கூறியவர்கள்:

கன்கொன் || Kangon சொல்வது:

அரசியல் - :(
எல்லாம் தனிப்பட்ட நன்மைகளை நோக்கிய வாழ்க்கை....
வாழ்க....

சினிமா - :( :)
பார்ப்போம் என்ன நடக்குது எண்டு. :)

புரோட் - மாமோய்...
உங்கட நாட்டுக்காரர்தான். காஞ்சம் இரக்கமா நடவுங்கோ.
புரோட் செய்த குற்றம தேவையற்று பந்தை எறிந்தது, அது கெய்டர் மேல் பட்டது தான்.
இரண்டாம்நிலைக் குற்றம், அதற்கு அபராதமோ அல்லது அபராதமும் தண்டனையுமோ கொடுக்கலாம்.
புரோட் மன்னிப்புக் கெட்டதால் அபராதத்துடன் தப்பிவிட்டார். :)

பேஸ்புக் - ஹி ஹி...
அதில குழுமங்களின்ர முகவரிகளையும் போட்டிருக்கு போருங்கோ.
அதப் பாடமாக்கி உந்தக் குழுமங்களில சேர்றதுக்கிடையில மனுசன் செத்திருவான். :)

ARV Loshan சொல்வது:

அரசியல்?
அது இனி 'ராஜ'தந்திரம் தான்.. ;)
எல்லாம்,எல்லாரும் ராஜவசம்..

டாக்டர் மேர்வின் மீது விசாரணை நடக்குது.. ;)

இந்திரன் - பாடல்கள் நல்லாவே இருக்கு..
இசை அறிமுக விழாவில் ரஜினி பாவம்.. சன் தான் ஹீரோ..
ரஜனி ரசிகர்கள் பொங்கி வரப்போறாங்க.. பார்த்து..

ஆனால் ப்ரோடை இதுவரை எந்தவொரு போட்டித் தீர்ப்பாளரும் தண்டிக்காத நேரம் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல இங்கிலாந்தில் வைத்துக் கண்டித்து தண்டித்த துணிச்சலைப் பற்றி சொல்ல மாட்டீர்களே..
ரஞ்சனைப் பல விமர்சகர்களும் பாராட்டி இருக்கிறார்களே..

//என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது //
;) அதுக்கு இது அட்டாக்கா? ம்ம்ம்

பேஸ்புக் ;)
இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு//
தம்பி புல்லட் வந்தியிடம் ஒரு சிரட்டை வாங்கி தண்ணி நிரப்பி குதிச்சு சாவடா

anuthinan சொல்வது:

//அரசியல்//
:)))

//சினிமா//

//நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.//

பாஸ் காசு குடுத்து வாங்கி இருக்காங்க!!! அவங்களே வெற்றி படம் இல்லை எண்டு சொன்னா யார் போய் பாக்கிறது!!!

//இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. //

இப்படி எல்லாம் சொல்லப்பாடாது!! பிறகு நீங்கள் இலங்கை வரும் போது ஆதிரை அண்ணாவை விட்டு உங்கள்ளுக்கு பந்து வீச சொல்லுவோம்!!!

//
பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று.//

நானும் பார்த்தேன்!!! எங்க ஊரிலும் எந்திரன் படம் வரும் போது ஏதோ பண்ண போறாங்களாம்!!! என்ன எண்டு பார்ப்போம்!!!

தர்ஷன் சொல்வது:

உண்மையிலேயே எந்திரன் பாடல்கள் பிடிக்கவில்லையா? சரி மற்றும்படி அரசியல் விளையாட்டு சம்பந்தமான அலசல்கள் எல்லாம் அருமை. ஆமா வழமையாக கடைசியில் ஒரு படம் போடுவீர்களே எங்கே ?

கன்கொன் || Kangon சொல்வது:

// வழமையாக கடைசியில் ஒரு படம் போடுவீர்களே எங்கே ? //

இம்முறையும் போட்டிருக்கிறார் தானே கடைசியில் ஓர் படம்? ;)

என்.கே.அஷோக்பரன் சொல்வது:

பிரபா நிறைய அம்பலப்படுத்தப்போவதாகச் சொன்னார், அதற்கிடையில் தடுத்துவிட்டார்கள்.

கிரிக்கட் - எனக்கு சச்சின், முரளி தவிர அதிகம் தெரியாது

எந்திரன் - எனக்கு 2 பாடல்கள் கேட்டவுடன் பிடித்தது - காதல் அணுக்கள் மற்றும் கிளிமஞ்சாரோ! இப்போது கேட்கக் கேட்க எல்லாப் பாடல்களும் பிடிக்கிறது. ரஹ்மான் பாடல்கள் வைனைப் போன்றது, எவ்வளவு பழசோ அவ்வளவு ருசி!

ஃபேஸ்புக் - தமிழன் இந்த பனர் கட்டுற கலாசாரத்தை எண்டைக்கு விடப்பொறானோ தெரியவில்லை....

ARV Loshan சொல்வது:

வந்தி தம்பிமார் இப்படி கேக்கிறாங்கள் எல்லே?உங்கள் ரசனையின் படி ஒரு சி--- படம் போடுங்களேன்.. ;)

கன்கொன் || Kangon சொல்வது:

// LOSHAN said...

வந்தி தம்பிமார் இப்படி கேக்கிறாங்கள் எல்லே?உங்கள் ரசனையின் படி ஒரு சி--- படம் போடுங்களேன்.. ;) //

தனிப்பட்ட விருப்பப்படங்களை பதிவில் போடுவதில்லை என்று வந்தியண்ணா முடிவு.
நீங்கள் கேட்ட படம் அவருக்கு மட்டுமே உரியது.
மன்னிக்கவும்.

___
வந்தியண்ணா சார்பாக அவரது சீடன்.

ஆதிரை சொல்வது:

//புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே//

காலம் மாறும்...
காத்திருங்கள்.

ARV Loshan சொல்வது:

ம்ம் .. மாறுது.. எல்லாம் மாறுது.. ;)
இல்லையா ஆதிரை?

ARV Loshan சொல்வது:

நீங்கள் கேட்ட படம் அவருக்கு மட்டுமே உரியது.
மன்னிக்கவும்.

___
வந்தியண்ணா சார்பாக அவரது சீடன்.

//

நீயுமா? சீடன்? that means.. same taste?
ம்ம்ம் புரியுது..
அப்போ புகைவதுக்குப் பின் நெருப்பு உள்ளது உண்மை தான்.. ;)

ஆதிரை சொல்வது:

பிரபா கணேசன் + மனோ + ரணில்...

நாடகம் முடியட்டும்...

கன்கொன் || Kangon சொல்வது:

// நீயுமா? சீடன்? that means.. same taste?
ம்ம்ம் புரியுது..
அப்போ புகைவதுக்குப் பின் நெருப்பு உள்ளது உண்மை தான்.. ;) //

நித்தியானந்தாவிற்கு லெனின் போன்ற சீடன்.
இருவரின் விருப்புக்களும் வேறுபாடானவை. :)

நெருப்பு இங்கு இல்லை, புகைவதற்கு வாய்ப்பே இல்லை. :)

Subankan சொல்வது:

//படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்//

மாம்ஸ், எந்திரனுக்கு படம் வெளியாக முதலேயே அதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், கவனிக்கலயா? மற்றபடி பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கிறது.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ரொம்ப நாளைக்கு பிறகு வந்த சூப் அல்லவா, நல்லாயிருக்கு...

அரசியலா... அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்....

கமல் ரசிகனான நீங்கள் எந்திரனை எப்படியும் முதல் நாள் பார்த்துவிடுவீர்கள், காரணம் உங்களது கனவுகன்னி ஐஸ் நடித்திருப்பதால்....

ஆமாம், உங்கள் ஐஸுக்கு 39 வயதாகிறதாமே உண்மையா?

எந்திரன் பாட்டு கலக்கல் தல, அதிலும் எஸ்.பீ.யும் ரகுமானும் கலக்கும் “புதிய மனிதா” பாடல் அருமை. எஸ்.பீ.யின் குரல் இந்த பாடலில் இன்னும் இளமையாகிவிட்டது போலிருக்கிறது.

படம் வந்த அடுத்த நாளே எப்படி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்ற உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம்

“படத்தை நல்ல விலைக்கு தியேட்டர்களுக்கும், விநியோகத்தர்களுக்கும் விற்று அவங்களை குழியில் தள்ளி விட்ட பிறகு, யாருக்கு லாபம் கிடைக்கிறது”


கிரிக்கட்...
இலங்கை இந்திய போட்டிகளை பார்த்து பார்த்து அலுத்து விட்டது.

சூப்பின் கடைசியில் ஜில் ஜில் ஜிகா ஜிகா படமொன்றை போடாமைக்கு கண்டிப்பு தெரிவிப்பதுடன், எதிர் வாக்கும் குத்த போகிறேன்

SShathiesh-சதீஷ். சொல்வது:

நோ கொமேன்ட்ஸ் :) என்ன மாமோய் தண்ணி எல்லாம் குடிக்கிரியலாம்.

Unknown சொல்வது:

ப்ரோடுக்கு தண்டனை காணாது. நான் பார்த்த எந்தப் போட்டியிலும் ப்ரோட் எல்.பி.டபிள்யூ கூட அம்பயரிடம் கேட்பதில்லை. என்னைக் கேட்டால் ப்ரோட்டை ஒன்றிரண்டு வருடங்களுக்கு கிரிக்கெட்டை விட்டு விலத்தி வைப்பேன். (ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வாழ்க்கைக்கும் கிரிக்கெட்டை நினைக்கக்கூடாது)

Prapa சொல்வது:

நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.

Sri சொல்வது:

/*எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன*/

மிகவும் நல்லாயிருக்கு

எம்.எம்.அப்துல்லா சொல்வது:

//நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.

//


வந்தியண்ணா, நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க?? இப்பல்லாம் படம் வருவதற்கு முதல் நாளே “இமாலய வெற்றி”னு விளம்பரம் வருது :))