இன்றைக்கு வெளியான தமிழக அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் ஐஸ்வர்யா தனுஷின் பெயரைப் பார்த்தது அதிர்ச்சியாகிவிட்டேன். இவர் சாதாரண ஒரு குடும்பப்பெண்(ரஜனி மகள் என்பதைத் தவிர )இவருக்கு எந்த வகையில் விருது கொடுத்திருக்கின்றார்கள்.
விருது பெறும் ஏனையவர்கள்.
அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர்
சேரன் - திரைப்பட இயக்குனர்
சுந்தர்.சி - நடிகர்
பரத் - நடிகர்
நயன்தாரா - நடிகை
அசின் - நடிகை
மீரா ஜாஸ்மின் - நடிகை
பசுபதி - குணசித்திர நடிகர்
ஷோபனா - குணசித்திர நடிகை
வையாபுரி - நகைச்சுவை நடிகர்
சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்
பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர்
சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர்
நவீனன் - பத்திரிகையாளர்
சீனிவாசன் - ஓவிய கலைஞர்
சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர்
திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர்
பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா
அபிஷேக் - சின்னத்திரை நடிகர்
அனுஹாசன் - சின்னத்திரை நடிகை
அமர சிகாமணி - சின்னத்திரை
என்ன கொடுமை இது?
ஸ்பெயினின் தங்க மகன் ரஃபெல் நடால் ஓய்வு பெற்றார்
-
மலகாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் களிமண் ராஜா
ரஃ...
4 hours ago
24 கருத்துக் கூறியவர்கள்:
Is it not enough that she is wife of Dhanush??!!
எவ்வளவு (செலவு) ஆச்சாம் ?
சுந்தர் சி.க்குக் கூட :(
கலைமாமனி= கலைஞரை கண்டு ஒழி
தெரிந்தவர்களுக்கு old news. தெரியாதவர்களுக்கு scoop news http://tinyurl.com/c493xw
இதில் ஒருவர் கலைமாமணி விருது பெறுபவர் http://is.gd/kHhh
இது கலைமாமணி இல்லை, விலைமாமணி.
சிறந்த நடனமணி சொர்ணமால்யாவிற்க்கு இந்த விருது கொடுக்காத தமிழக அரசுக்கு கண்டனங்கள்.
ஒருவருக்கு கலைமாமணி விருது வழங்குவதற்கும், அதை பெறுவதற்கும் என்ன தகுதி இருக்கவேண்டும் என்று தெரியவில்லை...
தன்மானமுள்ள உண்மையான கலைஞர்கள் கலைமாமணி விருதை புறக்கணிக்க வேண்டும்...
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குஷ்புவுக்கும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்திரா பார்த்தசாரதி அந்த விருதை புறக்கணித்தார்.
அதற்கு அவர் சொன்ன காரணம் ”கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்த குஷ்பு போன்றவர்களுடன் என்னைப்போன்ற சாதாரண நபர்களுக்கு எல்லாம் விருது வழங்கினால் அவர்கள் வருத்தப்படுவார்கள் அவர்கள் மனது புண்படும் ஆதலால் அந்த விருது எனக்கு வேண்டாம்” என்று கூறினார்.
எதிர்காலத்தில் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்கள் வரி பணத்தில் நடக்கும் அனைத்து அரசு விழாக்களும் அரசு தொலைக்காட்சியான "பொதிகை" டிவி யில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரலாமே.
71 லட்சம் பரிசு தொகை + விழா செலவு இரண்டு கோடிக்கு மேல் --- இது நம் வரிப்பணம். இந்த நிகழ்ச்சியை அப்படியே கலைஞர் டிவி இல் நான்கு மணி நேரம் காட்டி விளம்பரம் மூலம் இருபது கோடிக்கு மேல் கருணாநிதி குடும்பத்துக்கு சொத்தாக மாறி விடும் -- புரிகிறதா? முதலீடு இல்லாத வியாபாரம். மக்களுக்கு பட்டை நாமம். !!!
// Arivazhagan said...
Is it not enough that she is wife of Dhanush??!!//
இதனைவிட வேறு ஏதாவது தகுதி இருக்கின்றதா?
//ஒரு காசு said...
எவ்வளவு (செலவு) ஆச்சாம் ?//
யாருக்குத் தெரியும்.
//எம்.ரிஷான் ஷெரீப் said...
சுந்தர் சி.க்குக் கூட :(//
ரிஷான் குஷ்பு பல காலத்திற்க்கு முன்னர் கலைமாமணி இப்போதுதான் அவரின் கணவருக்கு இந்த விருது. சுந்தர்.சி எல்லாவற்றிலும் தன் மனைவியை விட கொஞ்சம் பின்னுக்குத் தான் நிற்கின்றார்
// Anonymous said...
கலைமாமனி= கலைஞரை கண்டு ஒழி//
அனானி கருணாநிதியை விட ஜெயலலிதாவும் இந்த விருதுகளை கேவலப்படுத்தியவ்ர்.
அடுத்த அனானி தகவல்களுக்கு நன்றி
// Anonymous said...
இது கலைமாமணி இல்லை, விலைமாமணி//
எவ்வளவு விலை என்பதை எனக்குச் சொல்லுங்கோ.
கரிகாலன் உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றிகள்.
// சொர்ணமால்யா ரசிகன் said...
சிறந்த நடனமணி சொர்ணமால்யாவிற்க்கு இந்த விருது கொடுக்காத தமிழக அரசுக்கு கண்டனங்கள்//
நல்ல கருத்து சொர்ணமால்யா ஐஸ்வர்யா தனுஷை விட சிறந்த நாட்டியதாரகை. ஹிஹிஹி
நியூஸ் பண்ணையில் இணைக்கின்றேன் நன்றிகள்.
அனானி உங்கள் கருத்து பொதுமக்களைச் சிந்திக்கவைத்தால் பயந்தரும் ஆனால் அவர்களைச் சிந்திக்கவிடாமல் கலைஞர், சிரிப்பொலி, இசையருவி என பல சானல்கள் திசை திருப்புகின்றன.
ஒரு சில பெயர்களை இந்த குப்பைப் பட்டியலில் சேர்த்து அவர்கள் செய்த சாதனைக்கு
இந்த துப்புக் கெட்ட அரசு தேய்ந்த விளக்குமாறால் அடித்துள்ளது.
ஈழத்தில் இரண்டரை லட்சம் பேர் இன்றோ நாளையோ என்றிருக்கும் நேரத்தில் உங்களை போன்ற ஈழத்து உறவுகளும் இதுபோல பதிவு போடுவது கஷ்டமாக இருக்கிறது. இதெல்லாம் தேவையா?
போனமுறை கஞ்சா கருப்புக்கு கலைமாமணி விருது கொடுத்தபோது யாருமே கண்டுக்கலை. இந்த முறை வையாபுரிக்குகூட கலைமாமணி. இது பற்றி யாருமே பேசலை. இவ்வளவு ஏன்? கமலும் விவேக்கும் ரஹ்மானும் பத்மசிறீ. ஹூம் இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகக்கூடாது.
you know Devipriya?
she also got the award.
வெட்கத்தைவிட்டு கேட்கின்றேன். யாராவது எனக்கு கலைமாமணி வாங்கித் தரமுடியுமா?
தமிழ்மணத்தில் என் பின்னூட்டம் வருகிறதே போதாதா?
புள்ளிராஜா
ஐஸ்வர்யா தனுஷின் செல்ல மகன், ரஜினியின் முழு முதல் பேரன் யாத்ராவுக்கு கலை மாமணி விருது கொடுக்காமல் இருப்பதில் ஏதோ சதி வலை பின்னப்பட்டு இருக்கிறது,
//Anonymous சொல்வது:
ஈழத்தில் இரண்டரை லட்சம் பேர் இன்றோ நாளையோ என்றிருக்கும் நேரத்தில் உங்களை போன்ற ஈழத்து உறவுகளும் இதுபோல பதிவு போடுவது கஷ்டமாக இருக்கிறது. இதெல்லாம் தேவையா?//
அனானி நண்பருக்கு
இவற்றைத் தவிர ஏனைய பதிவுகள் நாம் போடமுடியாது. காரணம் புரியும் என நினைக்கின்றேன்.
மற்ற அனைவருக்கும் எந்த பிரிவில் கொடுத்தார்கள் என்று எப்படியோ தேடி கண்டுபிடித்தும் உங்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ்க்கு எந்த பிரிவில் கொடுத்தார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லயா?? இல்லை தெரிந்து அதை இங்கே சொல்லவில்லையா???
மற்றவருக்கு எந்த பிரிவில் தந்தார்கள் என்று படித்தீரோ அங்கேயே தேடுங்கள்..
அந்த பிரிவையும் போட்டுவிட்டு , நீங்கள் கேள்வி எழுப்பினால் நியாயம்.. கேள்வி எழுப்பி ஒரு பதிவு போடவேண்டுமே என்று நீங்கள் அதை மறைத்தது தான் செம காமெடி
சுந்தர் ராசிபுரம் அவர்களே
நான் இந்த செய்தியை எடுத்து தட்ஸ்தமிழ் இணையத்திலிருந்து அதில் ஐஸ்வர்யாவுக்கு எந்தப் பிரிவில் விருது வழங்கினார்கள் என இருக்கவில்லை. அத்துடன் இவர் முன்னாள் நடனமணி தற்போது நடனம் ஆடுவதில்லை, ந்டனத்தில் இவர் என்ன சாதனை புரிந்தார் என்பதையும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்
ஐயோ
ஒரு திருமதி .சரோஜா தேவி எங்கே மற்றவர்கள் எங்கே.அட கடவுளே
முறையாய் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம்
என்று பாடி நடித்த ஒரு மாமேதைக்கும்
ஒரு சின்ன பெண்ணிருக்கும் ஒரே விருதா
என்ன கொடுமை
இதை அந்த மேதை வாங்க வேண்டுமா
வாங்கினால் அவர்களை இந்த தமிழ் சமூகம் மன்னிக்காது .
உமா தாய்லாந்து
பெருமைப்படுங்கள், கலைமாமணி விருது கிடைக்காதவர்கள்!!!
கொடுமைதான்.
இங்க பொங்கியிருக்கேன் -
http://surveysan.blogspot.com/2009/02/blog-post_25.html
கலைமாமணி விருதுப் பட்டியல் குறித்த எனது பதிவு
http://vurathasindanai.blogspot.com/2009/02/blog-post.html
Post a Comment