தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும் சுஹாசினி(கமலின் அண்ணன் மகள்) இந்த ஒப்பீட்டை கூறியது பலதரப்பட்ட மக்கள் வலைகளை மேய்கின்றார்கள் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது.

ஏற்கனவே எழுத்துலகிலும் வலையிலும் பிரபலமாக இருக்கும் ஜெயமோகன், எஸ்,இராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மாலன் போன்றவர்கள் இந்தப்படத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏனோ?

த‌சாவ‌தார‌ம் ப‌ற்றிய‌ நுண்ண‌ர‌சிய‌லை எழுத‌ முய‌லும் போது இத‌னை இந்த‌ வ‌லைப்ப‌திவாள‌ர் கூறிவிட்டார், இத‌னை இவ‌ர் கூறிவிட்டார் என்ற‌ ஞாப‌க‌ம்க‌ள் வ‌ருவ‌தால் புதிதாக‌ என்ன‌ கூற‌முடியும். அத‌னால் த‌சாவ‌தார‌ம் வெற்றிக்கு என்ன‌ கார‌ண‌ம்? ?(ஆசிப் அண்ணாச்சி போல் இல்லாம‌ல் நிய‌மான‌ கார‌ண‌ங்க‌ள்).

1. கமல் என்ற உலக நாயகன்.
ஒரு வேடத்தில் நடிக்கவே மிகவும் கஸ்டப்படும்போது(சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டால் அவர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள், நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை) அசால்டாக 10 வேடங்கள் சில வேடங்கள் ஏற்கனவே கமலின் சில படங்களில் பார்த்திருந்தாலும், மாறுபட்ட குரல்களும் உடல் அசைவுகளும் பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. ( டாக்டர் புருனேயின் பதிவில் லக்கி லுக் பிளட்சரின் ஸ்டைலை ரஜனியுடன் ஒப்பிடுகின்றார்). சிலவேடங்கள் மைதா மாவு மேக்கப் என்றாலும் கமல் தன் நியமுகத்துடன் மைக்கல் மதன காமராஜனில் செய்ததுபோல் கலிபுலாகானையும் தன் நிய முகத்துடன் உயரமாக காட்டியிருக்கலாம். ப்ளைட்சர், சீன நரஹி போன்றவை எப்படியோ முகம் மாற்றவேண்டியவை. ஆனாலும் படத்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்கள் ஒரே ப்ரேமில் வருவதுதான்.

2. திரைக்கதை
கேஎஸ்ரவிகுமார், மதன், மறைந்த சுஜாதா, கிரேசிமோகன் போன்ற பலர்திரைக்கதைவிவாதத்தில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார்கள்(தகவல் கேஎஸ்ரவிகுமார் ஜெயா டிவி ஹாசினி பேசும்படம்). ஆனாலும் கேஎஸ்ரவிகுமார் கூறியதுபோல் திரைக்கதைக்கு கமல் தான் முழுச் சொந்தக்காரர். காரணம் கமலின் திரைக்கதைக்கு தாங்கள் ஒரு சிற்பியைப்போல் தேவையற்ற சிலவற்றையும் தேவையான சிலவற்றையும் செதுக்கியதாகவும் கூறினார். ஏற்கனவே விருமாண்டியில் இருவரின் பார்வையில் திரைக்கதை அமைத்த கமல் இதில் ஒரே வேகத்தில் அமைத்த திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரியது. அதிலும் 12 நூற்றாண்டுக்காட்சிகள் தவிர்த்து பின்னர் படம் அமெரிக்காவிலிருந்து சென்னை வரை ஒரே ஓட்டமாகத்தான் ஓடுகின்றது. கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

3. வசனம்
கமலின் வசனங்கள் பல புரட்சிகரமான அல்லது முற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டிருக்கின்றது. அதிலும் பலராம் நாயுடு அடிக்கும் பஞ்ச்கள் ஓஹோ ரகம். வசனங்களை எழுதிவாசகர்களை சலிப்படைய வைக்கவிரும்பவில்லை. படத்துடன் கூடிய சில வசனங்களில் கிரேசி மோகன்தனம் இருந்தாலும், இன்னொரு பதிவர் கூறியதுபோல் சிலவேளைகளில் கிரேசிமோகன் வசன எழுதிய படங்களில் கமலின் தலையீடு இருந்திருக்கலாம். ஆதலால் கமலின் வசனங்கள் கிரேசிமோகனின் வ்சனங்கள் ஆக மாறியிருக்கலாம். சில இடங்களில் சுஜாதா சாயல் அடிக்கின்ற அதே வேளை படத்தில் அடிக்கடி அசின் பெருமாளை கூவிகூவி அழைத்தது எங்கேயோ இடிக்கின்றது.

4. ஒளிப்பதிவு
ரவிவர்மனின் காமேரா பல இடங்களில் அசரவைக்கின்றது. அதிலும் ஆரம்ப காட்சிகளிலும் சென்னையை ஏரியல் வ்யூவில் எடுத்த காட்சிகள் புதுமை. அதேபோல் கல்லைக்கண்டால் பாடலிலும் ஒரு காட்சி கோவில் வாசலிலில் இருந்து கோபுரத்திற்க்கு மேலால் சென்று அடுத்த பக்கத்தில் நிற்கும் மக்களிடையே செல்லும் ஒரே ஷாட்டில் எடுத்த காட்சியும் மனதில் நிற்கிறது. இதில் கிராபிக்ஸ் வர இடமில்லை. அத்துடன் கிராபிக்சையும் இயற்கையான ஒளிப்பதிவையும் பல இடங்களில் கலந்து எது நியம் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்கமுடியாமல் செய்தது தொழில் நுட்பத்தின் உட்சக்கட்டம்(தமிழ் சினிமாவில்).

5. இயக்குனர் கே எஸ் ரவிகுமார்.
வரலாறு என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த உடனேயே இந்தப்படத்தில் தொடர்ந்து உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தெனாலி என ஏற்கனவே கமலுடன் இணைந்திருந்தாலும் இப்படத்தில் கேஎஸ்சின் ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் எப்படி மேக்கப் போடுகின்றார்கள் என்பதைக் காட்டியது மட்டும் இவரின் ஸ்பெசல்.

6. ஏனையவை:
முதலில் பாடல்களை இடைச்செருகாமல் படத்தின்போக்கோடு இணைத்தது அருமை. இல்லையென்றால் படத்தின் ஓட்டம் நிச்சயம் தடைப்பட்டிருக்கும் காரணம் பாடல்கள் கேட்கும் அளவுக்கு தரமில்லாதுதான். இப்படியான ஒரு படத்தில் பாடல்கள் மெஹா ஹிட்டாக இருக்கவேண்டும் ஆனால் இங்கே எதிர்மறை அதனால்தானோ முகுந்தா முகுந்தாபாடலும் ஒரு சரணத்துடன் முடிந்துவிட்டது. உலக நாயகனே பாடலையும் இடையில் செருகாமல் முடிவில் செருகியது நல்லதொரு ஐடியா.

காமெடி ட்ராக் பெரும்பாலான கமல் படங்களுக்கு காமெடியன்கள் தேவையில்லை. அவரே சச்சின்போல் தனித்துஆடுவார். இங்கேயும் சில இடங்களில் அசினின் பார்டனர்சிப்புடன் கமல் சிக்ஸ்சர் அடித்துள்ளார். வையாபுரி, சிட்டிபாபு போன்றோர் இருந்தாலும் ஸ்கோர் பண்ணியது என்னவோ எம் எஸ் பாஸ்கர் தான். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாததும்(சிலர் இருக்கு என்கிறார்கள் எங்கே என்பதை நான் அறியேன்ஆனால் இரட்டை அரசியல் அர்த்த வசனங்கள் நிறைய உண்டு) விவேக் இல்லாதது மிகப் பலம். சில நாட்களாக விவேக்கின் காமெடி அசிங்கங்களீன் உச்சம். (சிவாஜியில் கூட விவேகின் இடத்திற்கு வடிவேல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்).

க‌வ‌ர்ச்சி குத்தாட்ட‌ம் இல்லாத‌து. ம‌ல்லிகாவின் ஆட்ட‌ம் குத்து வகைக்குள் அட‌ங்காத‌து. அசினை ஒரே ஒருதாவ‌ணியுட‌னே முழுப்ப‌ட‌த்திலும் (இறுதி உல‌க‌ நாய‌க‌னே ப‌ட‌ல் த‌விர‌)ப‌ய‌ன்ப‌டுத்திய‌தும் ஒரு வித்தியாசாமன முயற்சிதான். ஆனாலும் ஏனோ அசின் இன்னமும் எம் குமரன், க‌ஜ‌னி ப‌ட‌ங்க‌ள் பாதிப்பில் இருந்து விடுப‌ட‌வில்லைபோல் தெரிகின்ற‌து.இந்தப்படத்துடன் சிம்ர‌ன், ஜோதிகாவின் இட‌த்தை பிடிப்பார் என‌ எதிர்பார்த்தால் சோக‌ம் தான் மிச்ச‌ம்.

இறுதியாக உலகத்தரம் உலகத்தரம் என பலரும் கூக்குரலிடுகிறார்கள். உலகத்தரம் என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றது. வெறுமனே தமிழ் சினிமாவை மட்டும் பார்த்தவனுக்கு இந்தப்படம் முற்றுமுழுதாக வித்தியாசாமாக இருக்கும். தமிழ்சினிமாவுடன் தென்னக சினிமா மற்றும் ஹிந்தி சினிமா பார்த்தவர்களுக்கு ஓரளவு வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் தாரே ஜமீன் பார், லகான் போல் இந்தப்படத்தை எதிர்பார்த்திருந்தால் தோல்வியே மிஞ்சும். காரணம் இது முற்றுமுழுதான ஒரு பொழுதுபோக்குப்படமே ஒழிய கலைப்படமல்ல. லகான், சக்தே இந்தியா போன்ற படங்களை கமல் எடுக்கவேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏற்கனவே கமல் எடுத்த அன்பேசிவம், விருமாண்டி போன்ற நல்ல கருத்துச் சொல்லும் படங்களை மறந்தது ஏனோ. உலகத்தரத்தில் ஆங்கிலப்படங்கள் தொழில் நுட்ப ரீதியிலான போட்டியில் இருந்தாலும் இரான் படங்கள் போல் கலைப்படங்கள் தான் தரமானவை. இப்படியான படங்கள் பார்த்தவர்களால் இதனை உலகத்தரம் என ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமென்றால் இந்தியத் தரத்தில் சிறந்த தரம் இது என ஒப்புக்கொள்ளலாம்.

பொதுவாக பெரும்பாலான ஆங்கிலப்படங்கள் 1000கோடி பட்ஜெட்டில் எடுப்பவை. இவற்றுடன் 100கோடிகளுக்குள் அட்ங்கும் தமிழ்ப் படங்களை ஒப்பிடமுடியாது. யாராவது கமலுக்கு 1000கோடியும் ஷங்கர் போன்ற தொழில் நுட்பத்தில் வல்ல இயக்குனர் ஒருவரையும் கொடுங்கள் கமல் வாழ்நாள் சாதனையாக நல்லதொரு படம் கொடுப்பார். மருதநாயகம் அந்த கவலையைப்போக்கும் என நினைக்கின்றேன் எப்போது என்பதுதான் ????

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

டிஸ்கி :கமல் மேல் காண்டு கொண்டுள்ளவர்களிடம் ஒரு கேள்வி?
கமலை ஒரு தமிழனாக நினைத்து ஏன் உங்களால் இந்த வெற்றியை ஜீரணிக்கமுடியவில்லை?
இது பற்றி லக்கி லுக்கின் பதிவு உங்கள் பார்வைக்கு

தசாவதாரம் விமர்சனங்கள் - செம காண்டு மச்சி!

13 கருத்துக் கூறியவர்கள்:

சரவணகுமரன் சொல்வது:

//கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

இதற்கு முக்கிய காரணம் ரவிக்குமார் என்றே நினைக்கிறேன்.

//க‌வ‌ர்ச்சி குத்தாட்ட‌ம் இல்லாத‌து. ம‌ல்லிகாவின் ஆட்ட‌ம் குத்து வகைக்குள் அட‌ங்காத‌து.

ஏன்? இது மற்ற கவர்ச்சி ஆட்டங்களை விட ரொம்ப மோசம்.

வெண்பூ சொல்வது:

walla anAlasiS.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

//நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை)//

ஏன் சூப்பர் ஸ்ராரை மட்டும் சுட்டியிருக்கிறர்கள்?


//கமலை ஒரு தமிழனாக நினைத்து ஏன் உங்களால் இந்த வெற்றியை ஜீரணிக்கமுடியவில்லை?
//
நடிப்பின் உச்சத்திலுள்ள கமலை விஞ்ச முடியாதவர்களால் ஜீரணிக்க முடியாதிருக்கும் வந்தி. ஆனால் தமிழனின் படைப்பு என்று நோக்கும்போது இனம்புரியாத சந்தோஷம் எழுவதை தவிர்க்க முடியாது.
கமல் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்பவர்கள், கமல் தன் நடிப்பில் மேலும் பல உருவங்களாக பரிணமித்துள்ளார் என்று சொல்வதே பொருத்தமான வசனமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நல்லதொரு பதிவு வந்தி.

வந்தியத்தேவன் சொல்வது:

சரவணகுமார் வெண்பூ, நிர்ஷன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

//இறக்குவானை நிர்ஷன் said...
ஏன் சூப்பர் ஸ்ராரை மட்டும் சுட்டியிருக்கிறர்கள்?//

ஏனெனில் சூப்பர் ஸ்ராரின் முள்ளும் மலரும், தில்லு முல்லு, அபூர்வராகங்கள் படங்களில் அவர் நிறைவான நடிகான நடித்திருப்பார்.பின்னர் ரஜனி என்ற நடிகர் காணாமல்போய் சூப்பர் ஸ்ரார் என்ற இமேஜைக் கட்டிக்காட்க அவருக்குள் இருந்த நடிகனைப் பிந்தள்ளிவிட்டு ஸ்டைல் வெளிவந்துவிட்டது. எப்படி எம்ஜீஆரையும் சிவாஜியையும் ஒப்பிட முடியாதோ அதேபோல் தான் கமலையும் ரஜனியையும் ஒப்பிட முடியாது.

வந்தியத்தேவன் சொல்வது:

//சரவணகுமரன் said...
ஏன்? இது மற்ற கவர்ச்சி ஆட்டங்களை விட ரொம்ப மோசம்.//

இதனைவிட எத்தனையோ ஆபாசக் காட்சிகள் தமிழ்ப் படங்களில் வரவில்லையா? ஹிந்திப்படங்களில் இதனைவிட ஆபாசம் இருக்கின்றது. அந்த நடனத்தை அப்படித்தான் ஆடவேண்டும் என்கிறார்கள் நடன வல்லுனர்கள். சல்சா நடனம் என நினைக்கின்றேன்,

வந்தியத்தேவன் சொல்வது:

// நடிப்பின் உச்சத்திலுள்ள கமலை விஞ்ச முடியாதவர்களால் ஜீரணிக்க முடியாதிருக்கும் வந்தி. ஆனால் தமிழனின் படைப்பு என்று நோக்கும்போது இனம்புரியாத சந்தோஷம் எழுவதை தவிர்க்க முடியாது.
கமல் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்பவர்கள், கமல் தன் நடிப்பில் மேலும் பல உருவங்களாக பரிணமித்துள்ளார் என்று சொல்வதே பொருத்தமான வசனமாக இருக்கும் என நினைக்கிறேன்.//

நிச்சயமாக கமல் ஒரு சகாப்தம். இவரை இன்னமும் நம்மவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான காரணங்கள் என் முதல் பதிவில் இருக்கின்றது. நிச்சயம் ஒரு நாள் இவரிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு.

Unknown சொல்வது:

உங்கள் விமர்சனம் அருமை...

ஸ்ரீ சொல்வது:

kamala paatha ellarumkum Gandu enbadhu unmai dhaanga. Enna seyya porama pidichavanga ivanunga. Nalla vimarsanam

வந்தியத்தேவன் சொல்வது:

ஷண் சிவா, ஸ்ரீ வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்

அனைவருக்கும் கமலின் மேல் காண்டு இதனையே ஒரு கான் நடிகர் நடித்திருந்தால் ஆஹோ ஓஹோ எனப்பாராட்டுவார்கள். ஒரு சிலர் வேண்டுமென்றே தசாவதாரத்துக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஐயா கமல் எதிரிகளே கமலை ஒரு நடிகனாகப் பார்க்காவிட்டாலும் ஒரு தமிழனாகப் பாருங்கள். ஒரு சில விஷமிகள் அனைவரது பதிவிலும் பல இடங்களில் கமலுக்கு எதிரான வாந்தி எடுக்கிறார்கள். என்ன செய்வது இவ்வளவு பொறாமை அவர்களுக்கு. தமிழனின் முன்னேற்றத்துக்கு இன்னொரு தமிழன் தான் தடை.

chandru / RVC சொல்வது:

நண்பருக்கு, என் வலைப்பூவில் தசாவதரம்- விமர்சனங்கள் தேவை மீள்பார்வை பதிவில் நண்பர் ஜமாலன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து சுதந்திரம் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

Unknown சொல்வது:

வந்திக்கு...வணக்கம்..!மிக அற்புதமாக எழுதுகிறீர்கள்...தசாவதாரம் குறித்த விமர்சனங்கள் என்னை வெகுவாக பாதித்தது ஆதலால்தான் நான் தசாவதாரம் Vs விமர்சனங்கள் பதிவிட்டேன்...தசாவதாரம் preview show வில் நான் இயக்குனர் KS ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து பேசினேன்.,மிகவும் வருத்தப் பட்டார்..எது எப்படியோ உங்களைப் போன்ற தரமான தமிழ் ரசிகர்கள் கூட்டம் இன்னும் பெருக வேண்டும்...ஊடகத் தன்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்...

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றி ச‌ண் ஷிவா. ஒரு கமல் ரசிகனாக இல்லாமல் சாதாரண மனிதனாகப் பார்த்தாலும் இந்தப் படம் திருப்தி அளிக்கின்றது. பொதுவாக இணையத்தில் எதிராக அல்லது சற்று வித்தியாசமாக எழுதினால் தான் பலரைக் கவனிக்கச் செய்யமுடியும் அல்லது தமிழ்மணம் சூடான இடுகையில் வரும் என்ற ஆசையில் பலர் எழுதுகிறார்கள் எழுதியிருக்கிறார்கள். தசாவதாரத்தை எதிர்த்த இவர்கள் அன்பேசிவம், விருமாண்டி, ஹேராம், மகாநதி போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்க்கு காரணம் சொல்லமாட்டார்கள். வலைப்பூக்களுக்கு முன்னர் வந்த படங்கள் என்றாலும் இவர்களால் தசாவதாரத்தை எதிர்க்கும்போது மற்றப்படங்கள் நல்லவை எனச் சொல்ல மனம் தடுக்கின்றது. காரணம் கமலை எதிர்க்கவேண்டும் என்ற நல்எண்ணத்தில் விமர்சனம் எழுதுகிறார்களே ஒழிய, கமல் என்ற தமிழனின் உழைப்பு இவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள். இணையக் கனவான்களை விட ஆனந்த விகடன் இந்தச் செயலை மிகவும் நன்றாகச் செய்கின்றது. கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டியில் இந்த சிறுபான்மையினர் பற்றி கமல் அழகாகச் சொல்லியிருப்பார். இவர்கள் மைனாரிட்டிப் பீப்பிள் இவர்களை நாம் இக்னோர் செய்வதே மேல்.

Anonymous சொல்வது:

nan oru kamal veriyan. since 1988 i cant miss first day first show of kamal movie. even if the movie is sema flop i will watch atleast three times in THEATER even if i am not in tamil nadu. same goes well for thasavatharam. padam oru unathamana muyarchi than. esp the concept from where he starts till where he ends with tsunami. sella palla periya nerudalkal irunthuthu padathil. was wondering if it will be anotehr navarathiri kind. ( navarathiyai 8 murai parthavan nan - i guess only for this movie sivaji got sevalieeyar award) ellam irunthum kamal yen inum sella avarukay uriya senima vatathil irunthu velli varavellai. sella cinema thanam ellatha oru padam ethur parthen.. anbay sivam mathiri oru padam. simple movie anna uyarntha karuthu ( okay communisa pathipu irunthuchu - oru capitalist communisa kolkai pesarathu konaj khastam than - i mean in person in my view kamal is a capitalist - he captialise things that no one will object) irunthallum neriya yedathil tamil cinemavukay uriya cinema thanam. esp that rape attempt in river bed - kamaluma intha cinema attempt but oru sutchamam he used manal thirutu mattera correct in that point anna oru reel rape attempt use panitaru tamil cinimavukay uriya oru jolly scene . varatum marma yogi athayum first day first show kandipa parthiduven enga irunthallum . if one has to be unbaised this movie should be a great hit but it is not just what kamal is capable of. annal ithu oru super hit padama odanaum oru kamal athi theevera veriyanai asai.