நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி மிக இலகுவாக வென்றது அனைவரும் அறிந்ததே. இந்த மேட்சில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா இந்த போட்டியில் தான் தன் அதிரடியைக் காட்டினார். அவர் 50 அடித்தபோது கூட இருந்த சச்சின் சும்மா ஒரு போமலிட்டிக்காக அவரது கைஉறையில் ஒரு தட்டு மட்டும் தட்டினார். மற்றவர்கள் போல் கட்டி அணைக்கவில்லை. பின்னர் சச்சின் அவுட்டானதும் ஜெயசூரியா சதமடித்து போட்டியை நிறைவு செய்தபின்னர் போலக் போன்ற வீரர்கள் ஜெயசூர்யாவை கட்டி அணைத்துப்பாராட்டினார்கள் ஆனால் சச்சின் ஜஸ்ட் ஒரு சிரிப்புடன் கைகொடுத்து மட்டும் விட்டுவிட்டார். என்ன காரணமோ?
இதற்கு முதல் நாள் கோல்கத்தாவில் நடந்த போட்டியில் கங்குலியின் கோல்கத்தா சேவாக்கின் டில்லை அணியை வென்றதும் அதற்க்கு காரணமான பாகிஸ்தானின் வேகம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரை கங்குலி ஷாருக்கான் உட்பட அனைவரும் கட்டி அணைத்தது ஒருவர் மேல் ஒருவர் தாவியும் தங்கள் அன்பையும் பாராட்டையும் செலுத்தினார்கள். இத்தனைக்கும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய வீரரான சேவாக்கை டக் அவுட் செய்ய ஈடன் கார்டனில் ஏற்பட்ட மக்களின் சத்தம் ராவல்பிண்டிக்கே கேட்டிருக்கும்.
கங்குலிக்கு இருக்கும் பெரும்தன்மை ஏன் சச்சினுக்கு இல்லை?
வேதனையுடன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்
-
*கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த
இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து
ஓய்வுபெற...
2 days ago
3 கருத்துக் கூறியவர்கள்:
கடைசி வரை விறுவிறுப்பாக நடக்கும் ஆட்டங்களில்தான் இந்த தாவி குதிப்பது , கட்டிப்பிடிப்பது போன்றவை நடக்கும்.
முதலிலேயே முடிவு தெரிந்தால் சுவாரசியம் கிடையாது
உதாரணமாக 2003 ஜூலையில் கங்குலி சட்டையை சுழற்றினார். அதன் பின் உலக கோப்பையில் பாகிஸ்தானை வென்றபோது யாரும் குதிக்கவில்லையே (ஏனென்றால் அந்த போட்டியின் முடிவு 20வது ஓவரிலேயே தெரிந்து விட்டது)
எதிரணிக்கு 4 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயசூர்யா ஒரு ஒவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினால் சச்சின் கட்டி பிடிப்பார் :) :) :)
எங்க நம்மாள ரொம்ப நாளா காணல்லையே னு பார்த்தேன். வந்திட்டீங்களா?
சச்சின் கட்டிப்பிடிக்கவில்லை என்பது உறுதியாக தெரியுமா?
வாருங்கள் புருனே
உங்கள் வரவை எதிர்ப்பார்த்தேன். ஆட்டம் முடிந்தபின்னர் தான் போலக் உட்பட ஏனைய வீரர்கள் ஜெயசூரியாவை கட்டிப்பிடித்தார்கள் ஆனால் சச்சின் யாரையும் சீண்டவில்லை.
நிர்ஷன் நான் கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு முழு ஆட்டத்தையும் பார்த்தேன் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இன்றைய ஆட்டத்தில் பார்ப்போம் சச்சினும் கங்குலியும் மோதுகின்றார்கள்.
Post a Comment