2009ல் நடைபெறவிருக்கும் விருதுவழங்கும் வைபத்திற்கான ஒரு முன்கூட்டிய செய்தி.
2008ல் வெளிவந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் நேரு உள்ளரங்கத்தில் கடந்தவாரம் இடம் பெற்றது. முதல்வர் கலைஞர் அவர்களின் கைகளினால் தமிழ்திரைத்துறை சார்ந்தவர்கள் விருது பெற்றார்கள்.
கலைஞர் டிவி தொகுப்பாளினி பிரியதர்சினி நிகழ்ச்சிகளை தன் அடைத்த குரலினால் தொகுத்து வழங்கினார்.
உலக சினிமா வரலாற்றில் தாத்தா கையால் பேரன் வாங்கும் விருது இதுவாகும். இன்னாள் முதல்வர் வருங்கால முதல்வருக்கு விருது அளிக்க இருக்கின்றார்.
சிறந்த படம்: குருவி.
சிறப்பு விருது : குசேலன்.
சிறந்த நடிகர் விருது : இளைய தளபதி விஜய்.(குருவி)
சிறப்பு விருது : சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த்.(குசேலன்)
சிறந்த நடிகை : திரிஷா(குருவி)
விருது வாங்கிய பின்னர் இளையதளபதி விஜய் பேசும்போது:
ங்ண்ணா இந்த விருதை நான் எதிர்ப்பார்த்தேன். நான், தரணி, திரிஷா, வித்யாசாகர் கூட்டணி ஒருபோதும் சோடை போனதில்லை என்பதை நாம் மீண்டும் நிருபித்துவிட்டோம் மீண்டும் ஒரு முறை நாம் இணைய இருப்பதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இணையத்தில் எம்மை கிண்டல் செய்தவர்களுக்கு இந்த விருதின் மூலம் நாம் பதிலடி கொடுத்துள்ளோம். என் நண்பர்கள் சிலர் இந்தப்படம் தேசிய விருது பெறும் தகுதி இருப்பதாக கூறினார்கள். என்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றிகள்.
அடுத்த நாள் தினமலரில் திரிஷாவின் படம் ஒன்றுடன் கீழ்வரும் செய்தி பிரசுரமாகும்:
விருது வழங்கும் விழாவில் அரைகுறை ஆடையுடன் திரிஷா. முதல்வர் முன்னாள் மீண்டும் ஒருமுறை அரைகுறை ஆடைப் பிரச்சனை போர்கொடி பிடிக்கின்றது கலாச்சார அமைப்புகள்.
டிஸ்கி: வெறும் நகைச்சுவையே ஒழிய வேறு எந்த நுண்ணரசியலும் இல்லை.
வேதனையுடன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்
-
*கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த
இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து
ஓய்வுபெற...
2 days ago
5 கருத்துக் கூறியவர்கள்:
:-))))))))))))))
கிட்டத்தட்ட இதயமே நின்னுடுச்சு போங்க. நல்லவேளை டிஸ்கி போட்டீங்க :):)
:))
சிறந்த பாடலாசிரியர்: பா.விஜய்
சிறந்த அறிமுக நாயகன்: பா.விஜய்
சிறந்த வளரும் நாயகன்: ரித்திஸ்
வாங்க பிரபா.
இதையெல்லாம் மறந்துவிட்டேன். சிலவேளைகளில் அடுத்த வருடம் இந்த விருதுகள் கொடுக்கப்படும்போது எம்மை அழைத்தாலும் அழைப்பார்கள். முன் கூட்டியே விருது வாங்கியவர்களை கண்டிபிடித்ததற்காக.
ச்சின்னப்பையன், கப்பிபய சின்ன அம்மணி வருகைக்கும் தங்களே மேலான (??)கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment