எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என கண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.
பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.
உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான்.
பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.
கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.
இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.
சயந்தன்
ஆரம்பகால மூத்த பதிவர், சாரலின் உரிமையாளர். இப்போது இலங்கைப் பதிவர்களின் அனைத்துலக சங்கத்தின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு பதிவுலகத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவர். நல்ல சிறுகதை எழுத்தாளர். இன்றைக்கு கூட முகநூலில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். நன்றாக நடனமாடக்கூடியவர் ஒருமுறை தன்னுடைய நடனம் ஒன்றை யூடூயூப்பில் இட்டு ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஒரு காணொளி மூலம் பல்லாயிரக்கணக்கான பிந்தொடர்பவர்களைப் பெற்றவர்.
தனது பிறந்தநாளுக்கு தன்னுடயகாதலி ஐபொட் பரிசாக தருவார் எனக் கனவு கண்டு அந்தக் கனவை இன்று நனவாக்க இருக்கின்றார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயந்தன்.
கிருத்திகன்
வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார். அடிக்கடி சமூகத்தின் மீது தார்மீக கோபம் கொள்வது கிருத்திக்கு மிகவும் பிடித்த விடயம்.
நாளை(06.06.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Box Office Report - Coolie- Aug 21
-
𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁, 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲, 𝗪𝗮𝗿𝟮
𝟴[image: 🇩][image: 🇦][image: 🇾]- 𝗖𝗢𝗢𝗟𝗜𝗘-[image: 🇨][image: 🇴]
[image: 🇱][image:...
1 day ago
11 கருத்துக் கூறியவர்கள்:
Add my wishes too :-)
BTW, 'punivu' arumai :p
மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படியே எத்தினாவது பிறந்தநாள் என்று சொன்னால் புண்ணியமாகப்போகும் :-)
நன்றி நன்றி நன்றி..
@எஸ்.சக்திவேல்... என்றும் 65..சீ சீ.. 16
3 பேருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
my wishes to them
http://sshathiesh.blogspot.com/2011/06/blog-post.html
16,17,18 வயது பையன்கள் மூவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.....
ஆகா.. நன்றி மாமா..
இதைத் தான் மீள் 'புனைவு' என்று சொல்றதோ? ;)
அன்புக்கு அளவே இல்லையா? நன்றி நன்றி நன்றி..
ஆனால் 'அண்ணா'???? ஓவரா இல்லை?
நம்ம நடிகர் சயந்தன், கீத் கிருத்திகனுக்கும் வாழ்த்துக்கள்.
எஸ் சக்திவேல் said...
அப்படியே எத்தினாவது பிறந்தநாள் என்று சொன்னால் புண்ணியமாகப்போகும் :-)
3:55 PM, June 05, 2011
கிருத்திகன் said...
நன்றி நன்றி நன்றி..
@எஸ்.சக்திவேல்... என்றும் 65..சீ சீ.. 16
//
yes :) repeat :)
ஆங் அப்ப என்னைவிட நீங்களெல்லாம் ஆக நாலைந்து வயதுதான் இளையவர்கள் :-)
மூவருக்கும் என் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)
Post a Comment