அரசியல்
உலகம்
சில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.
முபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிடம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்தியா
இன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே? ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரசியும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும்.
எகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா? இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?
பயணமும் யுத்தம் செய்யும்
பயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.
பாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை.
யுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.
அந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது.
பொன்னியின் செல்வன்
கல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை.
தற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது.
மணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை.
கிரிக்கெட்
உலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது.
ஒரு கண்டனம்
ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களின் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.
வாழ்த்து
எங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.
ரசித்தது
கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...
சுஜீவன் இராஜேந்திரம் (பேஸ்புக்கில்)
பவனுக்காக
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
13 கருத்துக் கூறியவர்கள்:
வணக்கம் குருவே...
அரசியல்: தெரியாது.
இந்தியா: பணபலத்தால் திமுக வெல்லும் என்றால் வாக்குகளைப் பெற்றுத்தானே?
வாக்களிக்காமல் விடலாமே?
பயணம்+யுத்தம் செய்: இலக்கியவாதிகள் வாழ்க.
பொன்னியின் செல்வன்: ஏன் ஆரம்பத்திலேயே?
ஒவ்வொரு படைப்பாளிக்கும் உரிமை இருக்கிறதல்லவா?
இராவணன்? திரித்து சொதப்பியது? இராமாயணமே திரித்து சொதப்பியது என்கிறார்களே?
கிரிக்கெட்: :-)))
கண்டனம்: மின்னஞ்சல் ஒன்று அனுப்புங்களேன்?
பவன்: வாழ்த்துக்கள் பவன்.
ஸ்ரேற்றஸ்: அதேமாதிரி உங்களுக்குப் பக்கத்தில இருக்கிற அக்காவும் நினைப்பா.
இத்தினை வடிவான ஆம்பிளயள் நிக்கிறியள், இவ்வளவு நாள் எங்கடா போயிருந்தியள் எண்டு.
ஞாபகம் வச்சிருந்தாச் சரி. ;-)
அண்ணா இன்றும் அருமை.. இருக்கிற சூடு போதாதென்று பவனுக்காகு படம் வேறய.... ஹ...ஹ..ஹ..
பவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
நீ சொல்வது போல பயணம் ஒரு சிறப்பான திரைப்படம்...சூப் அருமை..
கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
.....கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நமது கற்பனைத் திறன் படி, மனதுக்குள் உருவாகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதை மணிரத்தினம் சார் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது, சிறிது வருத்தமாகத் தான் இருக்கும். இருந்தும் படம் வந்த பின் தான் தெரியும்...
yameeee yaaaaaammmeeeee
வந்தி…!
யாழ்ப்பாணத்தில் நேற்று நண்பரொருவருடன் 40 நிமிடங்கள் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது, மணிரத்னம் ‘பொன்னியின் செல்வனை’ படமாக எடுக்கவிருப்பது மற்றும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்கின்றார் என்ற செய்தி தொடர்பில் கதை வந்தது. அப்போது, நான் குறிப்பிட்டேன். இந்தச் செய்தியைக் கேட்டு நம்மட வந்தி கொதித்துப்போயிருக்கும் என்று. இன்று காலை கொழும்பு வந்து வலைப்பக்கம் வந்தால் உங்களின் குமுறலைக் காணமுடிகிறது. பரவாயில்லை உங்களின் மனத்தை கடுகளவாவது படித்திருக்கிறேன்.
வந்தியத்தேவன் said...
//ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது.//
மணிரத்னத்தின் அந்தப்படங்களில் கூட அவர் கதை/திரைக்கதையமைப்பில் தான் சிறிது சறுக்கியிருப்பாரேயொழிய பாத்திரத் தேர்வுகளிலல்ல.
வந்தியத்தேவன் said...
//பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம்.//
நிச்சயம் இப்போதய காலகட்டத்தில்(>2011) ரஜினி, கமல் இப்படத்துக்குப் பொருந்தமாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், அவர்களது வயது இந்தக் கதைக்குப் பொருந்தாது. அது கதைக்கு ஒரு செயற்கைத் தன்மையை உருவாக்கிவிடும்.(வந்தியத்தேவன் இருபதுகளின் முடிவில்/முப்பதுகளில் இருக்கும் ஒரு பாத்திரம்)
வந்தியத்தேவன் said...
//அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது. //
எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எந்நேரமும் துடிப்புடன் இருப்பதுதான் வந்தியத்தேவன் பாத்திரத்தின் முக்கியமான சிறப்பு.
Screen இல்(முந்தைய படங்களில்) விஜயின் துடிப்புத்தன்மையும், அலட்டிக்கொள்ளாத்தன்மையும் விஜயின் படங்களை ரசித்துப் பார்க்கும், பொதுவான சினிமா ரசிகர்களுக்குத் தெரியும்.
இதுவே சிலவேளைகளில் மணிரத்னத்துக்கு impress பண்ணியிருக்கலாம்(இந்த வதந்தி/செய்தியின்படி)
எகிப்து போல தெற்காசியாவில் நடப்பது சாத்தியங்குறைவு. அங்கேயிருக்கிற பிரச்சினை வேற, இங்கை பிரச்சினை வேற. இங்க ஆட்சியக் கவுக்க மக்கள் “எல்லாரும்” ஒன்று பட மாட்டினம்.
பயணம் - நல்ல ஒரு திரைப்படம்! ராதாமோகன் தன்னுடைய படம் என்றால் நம்பிப் பார்க்கலாம் எண்டு மீண்டும் நிரூபித்திருக்கிறார். நாகார்ஜீனிடமிருந்து எங்கட தமிழ் இளைய, முதிய, குட்டி, ஸ்டார்கள் எல்லாம் படிக்க வேண்டிய ஒரு பாடமும் இந்தப் படத்திலுண்டு - அதுதான் என்ன பெரிய ஸ்டாரா இருந்தாலும் பாத்திரத்திற்குத் தேவையான அளவான நடிப்பைக்கொடுத்தாப் போதும். படித்தில இது உட்பட பல விஷயங்களுக்கு நல்ல கிழி.
தி.மு.க. - திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இப்பிடித்தான் “படம்” காட்டியே காலத்த ஓட்டீட்டார், இனி வரும் சந்ததியிடம் அது கொஞ்சம் கஷ்டம் மாதிரிதான் கிடக்குது... பார்க்போம்.
யுத்தம் செய் - இன்னும் பாக்கேல.
மணிரத்னம் படங்கள் - நீங்கள் சொன்ன படங்களை, குறித்த விடயங்களின் ரீமேக் என்ற மனநிலையுடன் நான் பார்க்கேல, எனக்கு அந்த 3 படங்களும் பிடிச்சிருந்தது. இருவர் மிகநல்லாப் பிடிச்சிருந்தது அடுத்தது ராவணன்!
இன்றும் அருமை....பொன்னியின் செல்வன் படமாகாமல் இருப்பது சிறப்பு..பல காரணங்கள்!
வாழ்த்துகள் பவன்..
பவனுக்கான படம்...ha ha ha..
அரசியல் - ம்...
பயணம்+யுத்தம் செய்: இரண்டுமே அருமை. முக்கியமாக பயணம் படத்தை விமர்சனங்கள் படித்தபின்னரே பார்த்தேன். சில விமர்சனப் புண்ணாக்குகள் மீது எரிச்சல்தான் வருகிறது
கிரிக்கெட் - எல்லா டீமுமே இங்கிலாந்து என்று நினைத்தால் எப்படி? ;-)
பவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளும் :)
வேற படம் கிடைக்கேல்லையா மாம்ஸ்?
“நிலவின்” ஜனகன் said...
//பொன்னியின் செல்வன் படமாகாமல் இருப்பது சிறப்பு..பல காரணங்கள்!//
ஆம்.
எமது மனங்களில் வாழும் பாத்திரங்களை நாம் நேரில்/திரையில் காணும் போது பெரும்பாலும் அது ஏமாற்றத்தையே தரும். ஏனெனில், எமது மனங்களில் அந்தப் பாத்திரங்கள் செலுத்தியிருக்கும் தாக்கம் அவ்வளவு.
(இன்னும் பல காரணங்கள் உண்டு)
பார்ப்போம்....
கடைசியில போட்டிருக்குற நடிகையின் புகைப்படம் மொத்த பதிவையும் மறைக்குதே... என்ன காரணம்...???
கிரிக்கெட் - வெயிட்டிங் போ தி வேர்ல்ட் கப், இம்முறை விக்கிரமாதித்தன் யாருக்கு ஆப்பு வைக்கப்போறாரோ தெரியாது..:P
//அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை//
உரலை என்றால், URLஆ?
வாழ்த்து - அவ்வ்வ்வ்வ்வ்வ்.. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மாம்ஸ்.:)
வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..:D
ரசித்தது - மீ டூ ரசிக்கிங்..:D
பவனுக்காக - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-o
Post a Comment