இலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.
அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.
அவுஸ்திரேலியா
நடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.
கவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்
எதிர்வுகூறல் : அரை இறுதி
வங்கதேசம்
சொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.
கவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்
எதிர்வுகூறல் : கால் இறுதி
கனடா
தங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.
கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்
எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்
இங்கிலாந்து
ஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.
கவனிக்கவேண்டியவர் : பீட்டர்சன்
எதிர்வுகூறல் :கால் இறுதி
இந்தியா
ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.
கவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்
எதிர்வுகூறல் :இறுதிப்போட்டி
அயர்லாந்து
இன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.
கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)
எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்
கென்யா
2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.
கவனிக்கவேண்டியவர் :ஸ்டீவ் ரிக்கலோ
எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்
நெதர்லாந்து
இன்னொரு சாதாரண அணி அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.
கவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)
எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்
நியூசிலாந்து
பாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.
கவனிக்கவேண்டியவர் :டானியல் வெட்டோரி
எதிர்வுகூறல் :கால் இறுதி
பாகிஸ்தான்
உட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.
கவனிக்கவேண்டியவர் : அப்ரிடி
எதிர்வுகூறல் : கால் இறுதி
தென்னாபிரிக்கா
இதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.
கவனிக்கவேண்டியவர் :ஜாக் கலீஸ்
எதிர்வுகூறல் :அரை இறுதி
ஸ்ரீலங்கா
போட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.
கவனிக்கவேண்டியவர் :முரளிதரன்
எதிர்வுகூறல்: இறுதிப் போட்டி
மேற்கிந்தியத்தீவுகள்
ஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.
கவனிக்கவேண்டியவர் :சந்திரபோல்
எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.
சிம்பாவே
இன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.
கவனிக்கவேண்டியவர் :பிரன்டன் டைலர்
எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.
எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
14 கருத்துக் கூறியவர்கள்:
:-)))))
இப்படி வந்தால் சந்தோசம் தான்
இறுதிப்போட்டி: இலங்கை எதிர் இந்தியா
கவனிக்கப்படவேண்டியவர் - முரளி
எதி்ர்வுகூறல் - இலங்கை வெற்றி பெறும்..:D
எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.
.....உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குது!
:-)))))
வாழ்த்துக்கள் மாமா. நீங்கள் உண்மையில் ஒரு ஞானி தான் இன்று இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று இதேபோல தங்கள் ஆய்வை பிரசுரித்திருந்தது. நீங்கள் முந்தியதால் நீங்களே சிறந்தவர். வாழ்த்துக்கள்.
ம்ம்ம்ம் பார்ப்போம்..
// கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன் //
ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் கூட விளாசியது நினைவில் இருக்கிறது...
// கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்) //
ஆல் ரவுண்டர் என்றும் சொல்லலாம்...
ஆக, இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியா...?
அண்ணா நான் இறுதிப்போட்டி மட்டும் பார்க்கலாம் என்று யோசிக்கின்றேன்..ha ha
அவதானிப்பு சரியாதான் இருக்கு.... பார்ப்போம்...
:)
No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
Post a Comment