எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. என்னை ஞாபகம் இருக்கின்றதா? ம்ம்ம் நீண்ண்ண்ண்ட நாட்களாக வலையுலகம் எனக்கு அந்நியப்பட்டிருந்தது. சில பதிவுகள் மட்டும் வாசித்துவிட்டு போய்விடுவேன், திரட்டிகளைக் கூட மறந்து(கடவுச் சொற்களையும் தான்) போனேன். எல்லாம் காலம் செய்த கோலம்.
வாழ்க்கையில் சில விடயங்கள் தீடிரெனத் தான் நடக்கும் என்றைக்கோ எதிர்பார்த்த விடயம் சரிவராது என மனம் தளர்ந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என இருந்த விடயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தேறிவிட்டது, கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில நண்பர்களுக்கு சொல்லமுடியாமல் விமான ஏறிவிட்டேன். இதனால் வலையுலகம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்தும் சில நாட்கள் மறந்து போய்விட்டேன்.
அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது. ஆகவே அந்நியனாக மாறிவிட்டேன். அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.
என்னதான் விடுப்பு எடுத்தாலும் தட்டிய கீபோர்ட்டும் கிளிக்கிய மெளசும் சும்மா இருக்கவிடவில்லை அதனால் இடையிடையே எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதுவேன். என்ன இனி திரைவிமர்சனம் உடனடியாக எழுதமுடியாது. இங்கே படம் பார்க்கின்ற காசுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே படம் பார்க்கலாம்.
இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கேயிருக்கும் பதிவர்கள் மாயாவும் கரவைக்குரலும் என்னுடன் தொடர்புகொண்டார்கள். கரவைக்குரல் பகிடியாக இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடத்த இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்றார்.
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்பது இன்னொரு நாட்டில் வசிக்கும் போதுதான் தெரிகின்றது. ஒரு சில சுதந்திரங்கள் கிடைத்தாலும் இலங்கையில் வாழ்ந்ததுபோல் இல்லை. ஒரு சோர்ட்சும் ரீசேர்ட்டும் என இங்கே குளிரில் திரியமுடியாது. அப்படிக் குளிர் வாட்டுகின்றது. விரைவில் சமர் வரும் வெயில் கொடுமையாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.
என் நாட்டையும் நண்பர்களையும் குறிப்பாக பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். ஒன்றை இழந்துதான் இன்னொன்று கிடைக்கும் என்பதாலும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு முறைகளாலும் கொஞ்சம் மனத்திருப்தி.
சச்சினின் இரட்டைச் சதம்,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவு கிராக்கி இல்லை. கடும் குளிரிலும் மஞ்செஸ்டர் யுனைட்டடும் செல்சியும் ஒரு பந்துக்காக அடிபடுவதை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றார்கள் பின்னர் அது பற்றித்தான் செல்லும் இடம் எல்லாம் விவாதிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது.
இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்(இந்தப் பதிவு எழுதி முடிக்கவே 4 நாட்கள் எடுத்தன).
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
22 கருத்துக் கூறியவர்கள்:
ரசித்தேன்..
நானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன்.
இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
.......... :-)
..., ரஞ்சிதா, நயந்தாரா... என இழந்தவை பல.
பப்ளிக்கிலுமா?
மீண்டுமொருமுறை அதுவும் மிக நெருங்கிய காலப்பகுதியில் சந்திப்போம் தானே.... அப்பொழுது பேசிக்கொள்ள நிறைய விடயங்கள் எம் வசம் உள்ளன. :-)
wel come back sir,
மீண்டும் பதிவுலம் எங்கள் வந்தியை வருக வருக வென அழைக்கிறோம்..
இனி மேல் கும்மிகளுக்கு பஞ்சமிருக்காது
வணக்கம் வந்தி அண்ணா...
வெளிநாட்டுக்கு போனாலும் போனீங்க இங்கே உங்கள் ரசிகர்கள் (அதுதான், நித்தியானந்தா ஸ்வாமிகள் , கல்கிபகவான் .... etc) அவர்கள் உங்களை மிஞ்சும் அளவுக்கு விளையாட் தொடங்கி விட்டார்கள்.....
இது சரிப்பட்டு வராது.... உங்கள் வேட்டையை தொடங்குங்கள்......
ஸ்டார்ட் தி மியூசிக்.....
//எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே.
//
நல்லா ஜம்முன்னு இருக்கோம் பாஸ்:)
//என்னை ஞாபகம் இருக்கின்றதா? //
ம்ம் கொஞ்சம் லைட்டா :)))
/பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். //
நானெல்லாம் அப்படி ஒண்ணும் ஃபீல் பண்ணல வாங்க டிவிட்டடித்து கும்மிடலாம் :))
//,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. //
இன்னுமா அந்த வீடியோ லிங்க் கிடைக்கல பாஸ்!
ஒ மைகாட் !!!! நீங்க தகவல்கள் பெறும் தூரத்தில் இல்லையோ??
///இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்//
முடிந்தால் போட்டோக்களுடன் :) -
கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் போட்டோக்கள் :))
மீண்டும் பதிவோன்றோடு வந்தியை சந்திப்பதில் சந்தொஷமிருந்தாலும், நாம் தந்த எச்சரிக்கை ஞாபகமிருக்கட்டும்.
நிறையவற்றை மிஸ் பன்னுகிறேர்கள் என உங்கள் எழுத்திலேயே தெரிகிறது.
நாம் மிஸ் பண்ணுவது வந்தியையும் வாந்தியால் கலகலப்பான பதிவுலகையும் தான்..
//மீண்டுமொருமுறை அதுவும் மிக நெருங்கிய காலப்பகுதியில் சந்திப்போம் தானே.... அப்பொழுது பேசிக்கொள்ள நிறைய விடயங்கள் எம் வசம் உள்ளன. :-)//
ரிப்பீட்டு
அவ்வப்போதேனும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
//எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. //
நல்லா இருக்கிறோம் அண்ணா....
//என்னை ஞாபகம் இருக்கின்றதா? //
அவ்வளவு இலகுவில மறந்துடுவமா என்ன?
// கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. //
அதாவது ஏகனில அஜித் கல்லூரிக்குப் போற மாதிரி? :P
அஜித்த கேவலப்படுத்தீற்றமொ? :P :D
//அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.//
:)
//ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது. //
என்ன கொடுமை இது.... எதுக்கும் கன்கொன்னைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள்... :P
உங்களைப் பதிவினூடாக சந்தித்ததில் மகிழ்ச்சி வந்தியண்ணா...
இங்கிலாந்தில் நீங்கள் ஆங்கிலப் பதிவு எழுதுவதாக ஒரு கதை உலாவுகிறது.... :)
நானும் 1 கிழமைக்கு பிறகு இ்பதான் வாறேன்.. நீங்கள் இல்லாத குறை தெரியுது.. படிப்பை கோட்டை விட்டுடுடாம அப்பப்ப வாங்க..:)
வந்தாச்சா? வாங்கோ, வாங்கோ
//நிறையவற்றை மிஸ் பன்னுகிறேர்கள் என உங்கள் எழுத்திலேயே தெரிகிறது.//
றிப்பீட்டு
//மீண்டுமொருமுறை அதுவும் மிக நெருங்கிய காலப்பகுதியில் சந்திப்போம் தானே.... அப்பொழுது பேசிக்கொள்ள நிறைய விடயங்கள் எம் வசம் உள்ளன. :-)//
இந்தப் புலம்பெயர் ஈழத்தமிழரிடம் இவர் என்ன பேசப்போறாரோ?
வாங்கோ வந்தியண்ணா ....நீண்ட இடைவெளிக்குப் பிறகு !
புதுசா பதிவுகளை எதிர் பார்த்தாலும், இந்த வயசுக்கு மேல நீங்கள் பாடங்களில அரியஸ் வெய்ப்பதை தமிழ் கூறும் நல்லுலகு விரும்பாததால் ஆறுதலா ஹோம் வேர்க் எல்லாம் செஞ்சு போட்டு பதிவு எழுதும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.....
எண்டாலும் மிஸ் பண்ணுறம் ........
ஆ அண்ணா தமிழ்மண விருதுகளுக்கு பிறகு இப்பதான்....
வணக்கம்,
உங்களை நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
//அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது.//
ம்ம்... 100% உண்மை! நானும் பதிவு எழுதி நீண்ட காலம்:(
நேரமின்மை...?
கொஞ்சம் கிட்ட வந்தமாதிரி இருக்கு!
நேரமிருக்கும்போது ஒருக்கால் கதைக்கலாமே!
கனநாளாக கதைக்கவில்லை.
4 சிங்கங்களில் ஒரு சிங்கம் எஸகேப்போ?.....
வணக்கம் அண்ணா!
கிட்ட வந்திட்டியள் இருந்தாலும் இன்னும் வடிவாக் கதைக்கேல்ல ... கோவிக்காதேங்கோ!(போன கிழமை போட்ட இந்தப்பதிவை இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் கிடைச்சிருக்கு). தொடர்பு கொள்ளுறன்...
அப்புறம் படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?..
வணக்கம் வந்தி! எப்படிச் சுகம்?? லண்டனிலை என்ன படிக்கப் போறீங்கள்?
நாங்களும் உங்களைத் தொடர்பு கொள்ளுவோமில்லை.....
பி.கு: கவனம் சாமியார்கள் உங்கள் சைட் பொக்கற்றை உருவி விடுவார்கள்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment