இன்றைக்கு எதேச்சையாக தமிழ்மணத்தை வழக்கம் போல் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு தெரிந்த பெயர் லெனின் பொன்னுசாமி. முதலில் யாரோ நகுலன் பொன்னுசாமி என்ற எழுத்தாளரின் உறவினரோ என்ற அச்சம் ஆனாலும் இவரின் ஒரு பதிவின் தலைப்பான ஜோடிப்பொருத்தம்..சீசன் - தேனிலவு இது எனக்குத் தெரிந்த லெனின் தான் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த வலையைப் பார்த்தால் சாட்சாத் எங்கள் அனைவராலும் செல்லமாக பூக்குட்டி என அழைக்கப்பட்ட லெனின்.
ஏற்கனவே இவர் குழந்தைகளை கவரும் பெயரில் ஒரு வலை வைத்திருந்தார் என்ன காரணமோ அதனை விட்டுவிட்டு அல்லது வேறு யாருக்கோ விற்றுவிட்டு புதிதாக ஆரம்பித்துள்ளார்.
லெனினுடனான என் உறவு 2006 ஏப்ரலில் ஒரு விவாதக் களத்தில் ஆரம்பித்தது. நான் வலை ஆரம்பிக்க காரணமாக இருந்த கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அத்துடன் என் வலையை அழகுபடுத்தித் தந்த கலைஞர் இவர்.
சிறந்த எழுத்தாளாராக அதிலும் எந்த சீரியசான விடயத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய ஒருவர். நிச்சயம் இவரின் வலை பேசப்படும். இதற்க்கு இரண்டு காரணங்கள் :
முதலாவது இவரிற்க்கு மொக்கை போடுவது கும்மி அடிப்பது கைவந்தகலை.
இரண்டாவது சீரியாசகவும் பல சிந்திக்கத் தக்க விடயங்கள் எழுதுவார்.
வாழ்த்துக்கள் லெனின் இனி தினம் தினம் உன் வலையில் கொண்டாடு.
http://leninonline.blogspot.com/
Box Office Report-Aug 5
-
இந்த வாரம்
மதராசி, காந்தி கண்ணாடி, பேட் கேர்ள், காஞ்சூரிங், காட்டி ஆகிய புதிய படங்கள்
வெளியாகி இருக்கிறது. இத்துடன் சென்ற வாரம் ஹிட் படங்கள் ஆன லோகா
ஹிர...
1 day ago
3 கருத்துக் கூறியவர்கள்:
ற்கனவே இவர் குழந்தைகளை கவரும் பெயரில் ஒரு வலை வைத்திருந்தார் என்ன காரணமோ அதனை விட்டுவிட்டு அல்லது வேறு யாருக்கோ விற்றுவிட்டு புதிதாக ஆரம்பித்துள்ளார்.///
அப்படியும் பண்ணலாமா
நன்றி வந்தி..:)
பெரிய பங்கு, எங்க பங்கும் வந்தாச்சு..இனி எங்க ராஜ்ஜியம் தான்..
Post a Comment