இன்று விடுமுறை என்பதால் சன் டிவியின் அதீத விளம்பரத்தினால் காதலில் விழுந்தேன் பார்க்க கிடைத்தது.(திரையில் அல்ல சிடியில் தான்). எத்தனையோ விமர்சனம் வாசித்திருந்தாலும் குருவி, சத்யம் போன்ற படங்களை விடவா கொடுமைப் படுத்தப்போகின்றது என்ற அசட்டுத்துணிவில் களத்தில் இறங்கினேன்.
இப்படிக்கொடுமையான ஒரு படத்தை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை.
இதனைப்போய் சன் டிவியின் டாப் டென்னில் முதலாவது இடத்தில் வைத்திருக்கும் கலாநிதி மாறனின் ரசனையை என்ன சொல்வது.
இந்தப் படத்திற்க்கு எல்லாம் விமர்சனமா ஐயோ சாமி ஆளைவிடுங்க.
சர்வேசன் போன்ற எதற்க்கும் துணிந்தவர்கள் சன் குழுமத்தின் அடுத்த படமான தெனாவட்டையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இதனால் என்னைப்போன்றவர்கள் பலர் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு சன் குழுமம் விருது கொடுத்து கெளரவிக்கவேண்டும்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்க்கு என்ன படம் பார்க்கலாம்?
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
2 கருத்துக் கூறியவர்கள்:
நம் தலைவர் படம் எதையாவது பார்த்து தெளிவடையுங்கள்
அதே தான் மைக்கல் மதன காமராஜன் பார்த்தேன் உலகநாயகனின் நடிப்பும் திரைக்கதை உத்தியும் மீண்டும் வியப்படைய வைத்தது.
Post a Comment