மேல்மாகாண சாகித்திய விழா கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நாளை(24.11.209) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் பல ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெறுகின்றார்கள்.
அந்த வகையில் வலையுலகில் அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவியும் ஒலி/ஒளிபரப்பாளரான பா.வாமலோஷனனும் விருது பெறுகின்றார்கள்.
மேமன்கவி
மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
லோஷன்
ஒலிபரப்பாளன் என்பது எனது தொழில்.. வலைப்பதிவன் என்பது எனது முழுநேரப் பொழுதுபோக்கு எனக் கூறிக்கொள்ளும் வாமலோஷனன்(ஜீன் 5 ) என்ற ஏஆர்வி லோஷன் பிரபலமான அறிவிப்பாளர் மட்டுமல்ல பிரபலமான வலைப்பதிவரும் ஆவார். அறிவிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இவர்கள் இருவருடன் விருது பெறும் ஏனைய கலை, இலக்கிய ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பிறப்பில் பாகுபாடு ஏன்?
-
எத்தனை யுகங்களைக் கடந்து,
எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும்,
ஆண் பிள்ளை என்றால் அங்கீகாரம்,
பெண் பிள்ளை என்றால் இளக்காரம்
இன்னும் தொடரத்தான் செய்கிற...
1 day ago

