கமலின்
இன்னொரு நண்பர் ஆர்.சி.சக்தி தனக்கு பிடித்த
கமலின் 10 படங்களைப் பற்றி சில வரிகள்
சிலாகித்திருக்கின்றார். இரா.முருகனின் கட்டுரை
இன்னொரு விருமாண்டி படம் பார்த்தது போல
இருந்தது. தொ.பரமசிவன், நா.மம்ம்து, வண்ணநிலவன் போன்ற இலக்கியவாதிகளின் கட்டுரைகள்
மலருக்கு மேலும் காத்திரம் சேர்க்கின்றன.
ஜெயமோகனின் கட்டுரை மட்டும் எனக்கு
புரியவில்லை(ஜெமோவை வாசிக்க நான்
இன்னும் வளரணுமா மம்மி).
அத்துடன்
உலகநாயகனின் கவிதைகள் இரண்டும் சில கட்டுரைகளும் குறிப்பாக
எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரைகள் அக்மார்க்
கமல் ஸ்டைல்.
விஜய் தொலைக்காட்சியின் கமல் 50ல் ரஜனிகாந்த்,
மம்முட்டி, மோகன்லால், பிரகாஸ்ராஜ் ஆகியோர் ஆற்றிய உரையினை
அப்படியே போட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். அத்துடன்
கே.பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி,முத்துராமன்
ஆகிய கமலின் விருப்புக்குரிய இயக்குனர்களின்
கட்டுரைகள் நடிகர்
சத்யராஜ் கட்டுரை ஆகியன ரிமேக்
கட்டுரைகளாக இருக்கின்றன(முன்னைய குமுதங்களில் வந்தகட்டுரைகளின்
தொகுப்பு).
சந்தோஷ்ராஜ்.ஜீ.வெங்கட்ராம் ஸ்டில்ஸ்
ரவி ஆகிய புகைப்படப்காரர்கள் எடுத்தபடங்கள்
மலருக்கு அழகூட்டினால் ஓவியர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில்
கலைஞானியின் ஓவியங்கள் அழியா அழகாக இருக்கின்றன.
கமலின்
நண்பர்கள் கிரேசி மோகன், நிகில்
முருகன், பேராசிரிய்ர் ஞானசம்பந்தன், விருமாண்டி புகழ் சண்முகராஜன் ஆகியோரின்
கட்டுரைகள் கமலை நேசிப்பவர்களுக்கு அறிந்தவர்களுக்கு
எந்தவிதமான புதிய செய்தியையும் கொடுக்கவில்லை.
நடிகர்கள்
சார்லி, ரமேஸ்கண்ணா, மனோபாலாவின் கட்டுரைகள் ஏனைய கட்டுரைகளுடன் ஒப்பிடும்போது
மிகவும் சிறப்பானவை.
உலகநாயகனின்
இன்னும் மூன்று நண்பர்களின் கட்டுரைகள்
இருந்திருந்தால் மலர் இன்னமும் சிறப்பாக
இருந்திருக்கும். இருவரிடம் கட்டுரை வாங்க அரங்கனிடம்
தான் செல்லவேண்டும் இரண்டு ரங்கராஜன்களும்(கவிஞர்
வாலி. எழுத்தாளர் சுஜாதா), இன்னொருவர் இசைஞானி இளையராஜா.
மொத்தத்தில்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் பிடிக்கும் இந்த உலகநாயகன் 60.
புத்தகம் வாங்கிய கதை :
குமுதம் வெளியிட்ட கமல் 60 பற்றி ஏற்கனவே இணையங்களில் சிலாகிக்கப்பட்டாலும் நேற்று நண்பர் கானா பிரபா அந்தப் புத்தகத்தை ஆஸியில் வாங்கிவிட்டு ரேடியோஸ்பதியில் விமர்சித்தார் கூடவே என்னையும் இன்னொரு கமல் ரசிகரான நண்பர் லோஷனையும் டக்கியிருந்தார். அந்த போஸ்ட்டில் லோஷன் தன் பங்குக்கு தானும் புத்தகத்தை வாங்கிவிட்டேன் என தன்பங்கிற்க்கு என்னை இன்னமும் சூடேத்தினார்.
உடனே கொழும்பிலிருக்கும் அப்பாவிற்கு கோல் பண்ணிப் புத்தகம் பற்றிச் சொல்ல இப்போதான் தான் பூபாலசிங்கம் புத்தகசாலைப் பக்கமிருந்து வருவதாகவும் மீண்டும் அங்கே செல்வது மழையில் கடினமெனவும் கூறினார்.
இன்று எனக்கு வேலை ஓய்வு நாள் என்றபடியால் காலை மழை அடித்து ஓங்கி ஓய்வெடுத்த சின்ன இடைவேளையில் திருகோணமலையில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு போனால் அங்கே கலைஞானி சிரித்துக்கொண்டிருந்தார், கூடவே பக்கத்தில் இசைஞானியும் தன் பங்குக்கு புன்னகைத்தார். இருவரையும் வாங்கிக்கொண்டு வந்து ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.
3 கருத்துக் கூறியவர்கள்:
கலக்கல் குஞ்சியப்பு
இனித்தான் வாங்கிப்படிக்க வேண்டும்.
சிறந்த கண்ணோட்டம்
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
Post a Comment