2012ல் இந்தப் பதிவுடன் வெறும் ஐந்தே ஐந்து பதிவு எழுதிய பெருமை என்னையே சாரும். 2011 டிசம்பரில் இருந்து மேற்கு வேல்ஸில் வசித்தபடியால் வேலைப்பளு காரணமாக பெரிதாக எழுதவில்லை. வாழ்க்கையில் சில படிப்பினைகள் பல அனுபவங்கள் எல்லாம் கற்றபெற்ற இடமாக வேல்ஸ் என்னை மாத்தியது. அன்பான மனிதர்கள் அமைதியான கடல் குட்டிக்குட்டி மலைகள் நிறைந்த அழகான நகரம் வேல்ஸ்.
2012ல் மறக்கமுடியாத பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் இடம்பெற்றாலும் குறிப்பிடுச் சொல்லும்படியான வரலாற்று நிகழ்வு லண்டன் 2012 ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டமும் வேக நடையும் நேரடியாக பல்லின மக்களுடன் பார்த்து ரசித்ததுதான். ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட் கிடைக்காதபடியால் போகமுடியவில்லை, ஆனாலும் ஒலிம்பிக் ஆரம்பமாவதற்க்கு முன்னர் பெரியப்பு கானாபிரபா, மாயா இருவருடனும் ஒலிம்பிக் கிராமத்தை சுத்திபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.(லண்டனில் எம்மைச் சந்தித்த சரித்திர நிகழ்வை ஏனோ பெரியப்பு கானா இன்னும் எழுதவில்லை).
என் வாழ்க்கையின் நீண்ட நாள் ஆசை ஒன்று இந்தவருடம் நிறைவேறியது, கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்க டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் நேரடியாக பார்த்தேன். ஒரு புனித தலத்திற்க்கு சென்ற பீலிங் எனக்கு ஏற்பட்டது.
சென்ற ஆண்டில் நான் ரசித்த சில விடயங்கள்
கங்கம் ஸ்டைல்
தென்கொரிய பாடகர் Psy யினால் கடந்த ஜூலையில் பரபரப்பரப்பாக பாடப்பட்டு யூடூயூப்பில் பல மில்லியன் ஹிட் அடித்த பாடல். தென்கொரியர்களின் மேற்கத்திய மோகத்தை நக்கலடித்த பாடல். இதனை இன்னும் பிரபலமாக்கியது மேற்கிந்திய வீரர் கிறீஸ் கெய்ல். வழக்கம் போல இதனையும் ஹாரீஸ் ஜெயராஜ் விட்டுவைக்கவில்லை, துப்பாக்கி கூகுள் கூகுள் பாடலில் கொஞ்சம் சுட்டுவைத்திருக்கின்றார்.
Fifty Shades of Grey
E.L.James இனால் 2011ல் எழுதப்பட்டு 2012ல் சக்கைபோடு போட்ட நாவல், பெரியதொழிலதிபர் கிறே மீது பல்கலைக்கழக மாணவி அனஸ்தீசியா ஸ்டீலுக்கு ஏற்படும் காதல் மிகவும் அழகாக எழுதியிருக்கின்றார். காதலும் அதனூடு சேர்ந்திருக்கும் காமத்தையும் ஆபாசமின்றி எழுதியிருப்பதனாலோ எனவோ பெரும்பாலான பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது. பிரித்தானியாவில் ரயில்கள் பஸ்கள் என சகல போக்குவரத்துகளிலும் பிரயாணிக்கும் பெரும்பாலன பெண்களின் கைகளில் இந்தப் புத்தகம் சிலகாலம் தஞ்சமடைந்திருந்ததை அவதானித்தேன்.
மைந்தன் சிவா
மைந்தனின் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் பெரும்பாலும் அரசியல், விளையாட்டு, மொக்கை, சினிமா என பலதையும் பேசும் சில நேரங்களில் காரசாரமான விவாதங்களும் நடைபெறும். பெண்கள் பற்றிய கருத்துக்களை எந்தவிதமான பயமின்றி தெரிவிக்கும் மர்மம் இன்னும் பிடிபடவில்லை.
முகனூலர் (காதல்)
தங்கமயில் புருஷோத்தமன்
காதலாகிக் கசிந்து இவர் இடும் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் கெளதம் வாசுதேவ மேனன் படங்கள் போலவே இருக்கும். காதல் அனுபவம் இல்லாமல் இவரால் இப்படி எழுதமுடியாது என்பது வெளிப்படை உண்மை, ஆனாலும் சிங்கம் இன்னும் சிங்கிளாக இருப்பதாகவே அடிக்கடி அறிக்கை விடுகின்றார்.
கீச்சர்
திருக்குமார்
திருக்குமார் அண்ணாவின் கீச்சுக்களில் பெரும்பாலும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். இடையிடையே ராஜா ரகுமான் என சீரியசாக கீச்சினாலும் அண்மைக்காலமாக அவரின் கீச்சுகள் குறைந்துவிட்டன, அவரின் இந்தக் கீச்சின் பின்னர் நிலைமை மாறியிருக்கலாம்
Thirukkumar @Thirukkumar
நேற்று எங்கள் திருமண நாள் இன்று தான் ஞாபகம் வந்தது #பூகம்பம்
பெரும்பாலும் பிடித்தமான வலைகளையும் காத்திரமான வலைகளையும் வாசித்தாலும் அவற்றிற்கு பின்னூட்டம் இடுவது என்பது மிகவும் குறைவு, பேஸ்புக்கில் அவர்கள் அதனை பகிர்ந்திருந்தால் ஒரு லைக்குடன் விட்டுவிடுவேன். அதனால் இந்தம்முறை எனக்குப் பிடித்தவலை என எதையும் குறிப்பிடமுடியாமல் உள்ளது. இதேவேளை படித்த பதிவு என்றால் கங்கோன் தனது லப்டொப் காணமல் போனது பற்றி தனது மொபைலில் இருந்து இட்ட ஆங்கிலப் பதிவு.
Being careless doesn’t help
படம் : நண்பன்
பாடல் : அஸ்கு லஸ்கா : படம் : நண்பன்
சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி(பீட்ஷா)
சிறந்த நடிகை : சமந்தா ( நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (நண்பன்)
சிறந்த இயக்குனர் : ஏ,ஆர், முருகதாஸ்(துப்பாக்கி)
சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி(நண்பன்)
தொலைக்காட்சித் தொகுப்பாளர் : இந்த வருடம்எவரும் பெரிதாக என்னைக் கவரவில்லை, கோபிநாத் அழகாகப் பேசினாலும் எதிரில் இருப்பவர்களின் பெயரைக்கூட ஒருநாளும் கேட்பதில்லை மஞ்சள் சட்டை போட்டவர் சொல்லுங்கள், கட்டம் போட்ட சட்டை போட்டவருக்கு இன்றைய பரிசு என்பார், இது என்ன நாகரீகமோ கோபிக்குத் தான் வெளிச்சம். ஹாலிவூட் கிங் தொகுத்துவழங்கும் வெங்கட் பிரபு ஓரளவு நல்லாச் செய்தாலும் தங்கள் குடும்ப விடயங்களையும் தலை பற்றியும் ரொம்ப ஓவராகப் பேசுகின்றார்.
சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்
வேறை யாருமல்ல வழக்கு பாயுதே புகழ் பாடகிதான்.
வடபோச்சே
மாயன் கலண்டரின் படி உலகம் அழியப்போவதாக நினைத்த சிலரை ஏமாத்திய மாயன் கலண்டர்.
அனைத்து நட்புகளுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2013 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை வழங்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றேன்.
வடபோச்சே
மாயன் கலண்டரின் படி உலகம் அழியப்போவதாக நினைத்த சிலரை ஏமாத்திய மாயன் கலண்டர்.
அனைத்து நட்புகளுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2013 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை வழங்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றேன்.