இன்று தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை பத்தாம் முறையாக கொண்டாடும் இலங்கையின் மூத்த வானொலியாளர், வலைப்பதிவர், கிரிக்கெட்டர், ட்விட்டர் லோஷன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
1. இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் என்பது இவரின் முழுப்பெயர் எந்த மொழியிலாவது ஒரே தடவையில் எழுதமுடியாது, அப்படி எழுதிக்காட்டுபவர்களுக்கு லோஷன் ஒரு பிட்ஷா அன்பளிப்புச் செய்வார்.
2, சிறுவயதில் குட்டிப் பிரபுபோல நல்ல சதைப்பிடிப்பான கன்னத்துடன் இருந்தபடியால் பல ஆண்டிமாரின் கிள்ளல்களுக்கு உள்ளானது இவரின் அப்பிள் கன்னம்.
3. கணித பாடம் படித்தாலும் அன்று முதல் தமிழ் மேல் தீராத காதல் இவருக்கு (தமிழ் கூடப்படித்த பெட்டை என நினைக்கவேண்டாம்)
4. சின்ன வயதில் இருந்தே சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தில் சில வருடம் சங்கீதம் கற்றார் பிடித்த இராகம் கீரவாணி.
5. ஆக்சன் படங்களை விரும்பிப்பார்ப்பார் விஜயகாந்த் படங்கள் என்றால் அலாதி ப்ரியம் அசப்பில் தான் வெள்ளை விஜயகாந்த் என நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவார்
6. குஷ்பு நமீதா ஹன்சிகா மொத்துவாணி போன்ற குண்டு நடிகைகளை மிகவும் பிடிக்கும்
7. நயந்தாராவால் பெருமை அடைந்தவர்களில் இவரும் ஒருவர் பின்னே நயந்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா என ஒரு பதிவு போட்டு ஹிட் அடித்தவராச்சே.
8. கிரிக்கெட்டில் இவர் எந்த அணியை ஆதரிக்கின்றாரோ அந்த அணி மண்ணைக் கவ்வும் இதனால் தான் என்னவோ பல சூதாட்ட முகவர்கள் இவரின் முகவரி தேடி அலைந்தார்கள்.
9.கடந்த வருடம் பெந்தோட்டை பீச்சில் நண்பர்களுடன் நீச்சலடிக்கப் போய் பக்கத்து வீட்டில் வாளி வாங்கி அள்ளிக்குளித்த பெருமை இவரையே சாரும்
10. வெள்ளவத்தை மனிங் பிளேஸ் 141 பஸ் நிலையம் மிகவும் பிடித்த இடம்.
11. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. ஐஸ்வோர்ட்டர், ஐஸ்கிரீம், பிட்ஷா என எல்லாம் சாப்பிடுவார்!
12. சாப்பாட்டுப் பிரியன் பறக்கிறதிலை விமானமும் மிதக்கின்றதிலை கப்பலையும் தவிர அனைத்தையும் ரசித்து உண்பார். பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்.
13. பிடித்த உணவகம் பம்பலப்பட்டி சைனீஸ் ட்ராகன். ஹாட் அண்ட் சவர் சிக்கன் சூப் மிகவும் பிடிக்கும்.
14. கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டியை ரசிக்க மும்பைக்கு பறந்தவர் ஆனால் போட்டியின் முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்திருந்த இன்னொன்றும் எதிர்மாறாக நடந்தது ரொம்ப கவலை.
15. தன்னை விட வயதில் அதிகம் குறைந்த பச்சிளம் பாலகர்களுடன் ஊர் சுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் பலருக்கு இன்னும் புரியவில்லை.
16. நாஸ்திகராக இருந்தாலும் ஏனைவர்களின் மனதுக்காக கோயில் குளம் எல்லாம் போகும் நல்ல மனசுக்காரன்.
17. வருங்காலத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்பது இவரின் கனவு
18. நிறைய வாசிப்பவர் இன்றைக்கும் ஆதர்சன எழுத்தாளர் சுஜாதா தான். அண்மையில் ரசித்து வாசித்தது ஷீரோ டிகிரி.
19. ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தவர் விரைவில் கதாநாயகனாக ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகின்றார்.
20. என்னைப்போன்ற வயதில் குறைந்தவர்களுக்கு வாழ்க்கையின் பல விடயங்களை உணர்த்தியவர் இதனால் எனக்கு இவர் ஒருவகையில் குருவும் ஆகின்றார்.
21. நண்பர்கள் எதிர்பாரத நேரங்களில் அடிக்கடி அதிர்ச்சி கொடுப்பவர் சிறந்த உதாரணம் அனு ரோயல் ஹொஸ்பிட்டல் .
22.சீனியப்பு, நமீ அங்கிள் விஜயகாந்த் அங்கிள், ஆண்டி ஹீரோ, மன்மதன், தொப்பையப்பன், விக்கி இவை நண்பர்களால் அழைக்கப்படும் செல்லப்பெயர்கள்.
23.வயது முதிர்ச்சியினாலோ இல்லை வேலைப் பளுவினாலோ இப்போ அடிக்கடி கோபம் வந்தாலும் ஓரளவு பொறுமையானவர்
24. கிரிக்கெட் வர்ணனை பதிவு கட்டுரை மட்டுமல்ல சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட அத்துடன் கிரிக்கெட் தவிர கால்பந்து டெனிஸ் பார்க்கபிடிக்கும்.
25. விரைவில் லண்டன் ஒலிம்பிக்கில் இவரைக் காணலாம் (விளையாட்டு வீரனாக இல்லை ஒரு ஊடகவியளாளராக சுத்திப்பார்க்க வருகின்றார்).
இன்று தன் பிறந்தநாளை புதியவீட்டில் கொண்டாடி மகிழும் என் நண்பன் ஹர்சுவின் தந்தை லோஷன் அங்கிள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்.
பின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்.
11 கருத்துக் கூறியவர்கள்:
/////இன்று தன் பிறந்தநாளை புதியவீட்டில் கொண்டாடி மகிழும் என் நண்பன் ஹர்சுவின் தந்தை லோஷன் அங்கிள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்./////
அட ராமா ஏன் இந்த பசங்க கூட எல்லாம் கூட்டுச் சேர வைக்கிற? வந்தியருக்கு இருக்கிற குசும்பு இருக்கே...? விடுங்க ஏதாவது சொல்லிடப்போறன்.
////பின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்./////
சத்தியமாக எனக்கு ஏதோ டபிள்மீனிங் தான் இதுக்குள்ள இருக்கிறதாகப் படுகிறது. லோஷன் இனியாவது சுதாகரித்துக் கொள்ளுமய்யா. பப்பிளிக்கில போட்டுக்குடுக்கிறார் உங்கட சீனியர் (ஒரே வகுப்பில் படித்தாலும் ஒரு வயது அதிகமென்பதால் வந்தியர் உங்களுக்கு சீனியர் தானே:P)
பதிவு கலக்கல்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணே
நல்லாதான் சொல்லியிருக்கீங்க...
க க க போ...
இன்னுமா லோஷன் அண்ணா விழிக்கவில்லை?
//ஆக்சன் படங்களை விரும்பிப்பார்ப்பார் விஜயகாந்த் படங்கள் என்றால் அலாதி ப்ரியம் அசப்பில் தான் வெள்ளை விஜயகாந்த் என நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவார்//
//வெள்ளவத்தை மனிங் பிளேஸ் 141 பஸ் நிலையம் மிகவும் பிடித்த
இடம்.//
//சாப்பாட்டுப் பிரியன் பறக்கிறதிலை விமானமும் மிதக்கின்றதிலை கப்பலையும் தவிர அனைத்தையும் ரசித்து உண்பார். பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்//
//கிரிக்கெட்டில் இவர் எந்த அணியை ஆதரிக்கின்றாரோ அந்த அணி மண்ணைக் கவ்வும் இதனால் தான் என்னவோ பல சூதாட்ட முகவர்கள் இவரின் முகவரி தேடி அலைந்தார்கள்//
செமை :-)
//கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டியை ரசிக்க மும்பைக்கு பறந்தவர் ஆனால் போட்டியின் முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்திருந்த இன்னொன்றும் எதிர்மாறாக நடந்தது ரொம்ப கவலை//
அதென்ன?
//தன்னை விட வயதில் அதிகம் குறைந்த பச்சிளம் பாலகர்களுடன் ஊர் சுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் பலருக்கு இன்னும் புரியவில்லை.//
தாங்கள்?
இந்த இடையில் அனுஅண்ணாவும் மாட்டிகொண்டாரே? :p
///3. கணித பாடம் படித்தாலும் அன்று முதல் தமிழ் மேல் தீராத காதல் இவருக்கு (தமிழ் கூடப்படித்த பெட்டை என நினைக்கவேண்டாம்)///
நினைக்கலயே =D
//9.கடந்த வருடம் பெந்தோட்டை பீச்சில் நண்பர்களுடன் நீச்சலடிக்கப் போய் பக்கத்து வீட்டில் வாளி வாங்கி அள்ளிக்குளித்த பெருமை இவரையே சாரும்///
LMAO..=P
//பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்.//
எனக்கு இன்னும் ரெண்டு பிட்ஷா பாக்கியிருக்கு =P
//19. ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தவர் விரைவில் கதாநாயகனாக ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகின்றார். ///
அந்தப் படத்தில அவர் பேசவிருக்கிற பஞ்ச் டயலாக்ஸ் வெளியாகிருக்கு அதைப் பார்வையிட இங்க போங்கோ - http://nbavan7.blogspot.com/2012/06/happybirthdayloshan.html
யோவ் பாதி புழுகு பாதி புரட்டு அல்லது பாதி பொய் பாதி புகழ்ச்சி என்று போட்டு வறுத்து எடுத்திருக்கிறீரே.. இலங்கை வருகிற எண்ணம் இல்லையோ? ;)
ஆனாலும் நன்றி வாழ்த்துக்கு..
உங்களைப் போல அயசில் மூத்தோரின் வாழ்த்துக்கள் என் போன்ற இளைஞரின் வளர்ச்சியில் வழிகாட்டும் :)
யோவ் பாதி புழுகு பாதி புரட்டு அல்லது பாதி பொய் பாதி புகழ்ச்சி என்று போட்டு வறுத்து எடுத்திருக்கிறீரே.. இலங்கை வருகிற எண்ணம் இல்லையோ? ;)
ஆனாலும் நன்றி வாழ்த்துக்கு..
உங்களைப் போல அயசில் மூத்தோரின் வாழ்த்துக்கள் என் போன்ற இளைஞரின் வளர்ச்சியில் வழிகாட்டும் :)
அந்தப் படத்தில அவர் பேசவிருக்கிற பஞ்ச் டயலாக்ஸ் வெளியாகிருக்கு அதைப் பார்வையிட இங்க போங்கோ - http://nbavan7.blogspot.com/2012/06/happybirthdayloshan.html//
அடப் பாவி இப்பிடி ஒரு வெளம்பரமா?
நல்ல வருவாய் ராசா நீ
இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_856.html
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_856.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
Post a Comment