சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.
கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.
திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.
வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.
இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.
ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.
தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.
சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.
ஐஸ்வர்யா ராய் :
உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.
பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.
இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.
ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.
கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது.
எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.
சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.
கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.
ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.
மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்
டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.
படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.
எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
19 கருத்துக் கூறியவர்கள்:
// இராம நாரயணனின் கதை போன்ற ஒரு //
ஷங்கர் இரசிகர் என்று சொல்லிக்கொண்டு ஷங்கரை ஏனிப்படி அவமானப்படுத்திகிறீர்கள்? ;-)
// விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா //
நீங்கள் கமல் இரசிகரே தான். ;-)
// ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன். //
ஜீன்ஸின் திரைக்கதை சறுக்கலா? ;-)
அப்போது போய்ஸ்? ;-)
ஏன் சிவாஜியின் திரைக்கதை அசத்தல் இரகமோ? ;-)
// முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் //
அவ்வ்வ்வ்வ்...
அதப் பிரதி பண்ணப்படாது.
அது எனக்குப் பிடிச்ச காட்சிகளில ஒண்டு. ஆமா.
// ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர். //
நா.முத்துக்குமாரின் கவிதைகள் எப்போதும் அருமையானவை. :-)
// ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். //
ஏனுங்ணா இப்பிடி ஆங்கிலப்படம் ஆங்கிலப்படம் எண்டு உசிர விடுறீங்கள்?
நம்மட திரையுலகில சில குப்பைகளத் தவிர்த்தா அதுவே நல்லாத்தானுங்கோ இருக்கும்.
// அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை //
அப்ப எனக்குப் பிடிக்கும். :-)
// விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் //
ரஜினிய நக்கலடிக்கிற மாதிரி இருக்குது. :P
ரஜினி இரசிகர்கள் கோபமடையப் போறாங்கள்.
// ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. //
ரஜினி இரசிகர்களிடம் அடிவாங்க வாழ்த்துக்கள்.
// ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை //
டண்டணக்கா...
இதுக்கும் வாழ்த்துக்கள்.
// தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது //
குசேலனில் பின் காட்சிகள் சிலவற்றில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
// உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி //
உங்கட வயசுப்(?) பிரச்சினை.
வயசு போட்டுது குருவே.
ஆள மாத்துங்கோ.
// ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் //
உங்கட இரசனையே தனிதான் குருவே.
ஒண்டில் 37 வயசு, இல்லாட்டி 47 வயசு...
அவ்வ்வ்வ்வ்வ்....
// ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். //
நிவிஉசி...
வந்தியண்ணா வாழ்க...
// திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை. //
நீங்கள் தொடர்ந்தும் திண்டுக்கல் சாரதியையும், கருணாஸையும் ஏளனம் செய்வதற்கு என் கண்டனங்கள். :@
// ச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும். //
வெறும் கல்லுத்தானா? :P
// பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. //
இது தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உண்டு.
யாழ்ப்பாணத்தில் தொடங்கி, கொழும்பிலிருந்து இலண்டன் வரை எங்களை நாங்கள் நாகரிகமுடையவர்களாகவே மாற்ற முயற்சிக்கவே மாட்டோம்.
எங்களைப் பொறுத்தவரை நாகரிகம் என்பது அணியும் ஆடையில் மாத்திரம் தான் உண்டு.
// இனி மன்மதன் அம்பு தான் திரையில். //
நான் எதிர்பார்க்கிறேன்.
அதைவிட மருதநாயகம் எப்படியாவது எடுக்கப்பட்டு வெளியாகிவிட வேண்டும்.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இந்தப் பின்னூட்டம் முழுக்க வெட்டிக்காகவே இடப்பட்டது. வந்தியண்ணாவோ, ரஜினி இரசிகர்களோ சீரியஸாய் எடுத்துவிடாதீர்கள். வெறுமனே நகைச்சுவைக்கு மட்டும்.
அண்ணே கலக்கலான நடுநிலை விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்!!!
பல இடங்களில் எனக்கு ரஜனி,சுஜாதா,ரஹுமான் ஆகியோர் தான் தெரிஞ்சாங்க!!! அடுத்த சங்கர் படத்துக்கு காத்திருப்பு அவர் சுஜாதா இல்லாமல் என்ன செய்வார் என்று பார்க்க!!
வழமையான ரஜனியை காணமுடியவில்லை!!! ஆனால், அவர் நடித்து இருக்கிறார் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.
//எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//
ஏன் அண்ணா??? இலங்கையில் இப்படி பேசினா ஏத்துக்குபிங்க!!! இதே வெளிநாட்டுல பண்ணினா அனுதாபங்களா???
//ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை//
அவரேதான் :). தமிழில் பேசி நடித்திருக்கிறார்.
//ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை//
போங்க மாம்ஸ், போய் அவங்களுக்கு பொன்ட்ஸ் ஏஜ் மிராக்கிள் வாங்கிக்கொடுங்க. வயசாயிட்டிருக்கிறது க்ளோசப்பில் அப்படியே தெரியுது, நீங்க வேற :p
நல்லதொரு கச்சிதமான விமர்சனம். வாழ்த்துகள். நன்றி.
கொஞ்சம் கமல் ரசிகர் என்ற வட்டத்திலிருந்து வெளியிலும் வந்துப் பார்த்திருக்கலாம்
//கன்கொன் || Kangon said...
ஷங்கர் இரசிகர் என்று சொல்லிக்கொண்டு ஷங்கரை ஏனிப்படி அவமானப்படுத்திகிறீர்கள்? ;)//
அடப்பாவி இராம நாராயணனும் நல்ல படங்கள் இயக்கிய திறமையான இயக்குனர்.
//நீங்கள் கமல் இரசிகரே தான். ;)//
நன்றி, விக்ரம் படத்தை இப்போது எடுத்தால் இன்னும் கலக்கலாக இருக்கும்.
//ஜீன்ஸின் திரைக்கதை சறுக்கலா? ;)//
தம்பி ஜீன்ஸ் வந்தபோது நீ ஐந்தாம் வகுப்போ ஆறாம்வகுப்போதான் படித்துக்கொண்டிந்தாய், இரண்டாம் பாதியில் நாசரின் பிளாஷ் பேக்கில் நித்திரை வந்தது.
//அப்போது போய்ஸ்? ;)//
பாய்ஸ் கரு பிழையானதாக இருந்தாலும் படம் வேகமானது.
//ஏன் சிவாஜியின் திரைக்கதை அசத்தல் இரகமோ? ;)//
சிவாஜியைப் பற்றிச் சொல்லி ரஜனி ரசிகர்களிடம் அடிவாங்கவேண்டுமா?
//அவ்வ்வ்வ்வ்...
அதப் பிரதி பண்ணப்படாது.
அது எனக்குப் பிடிச்ச காட்சிகளில ஒண்டு. ஆமா.//
உனக்கு மட்டுமல்ல பலருக்கு அந்தக் காட்சியும் தேவயானி கமல் காட்சியும் ரொம்ப பிடிக்கும்.
//ஏனுங்ணா இப்பிடி ஆங்கிலப்படம் ஆங்கிலப்படம் எண்டு உசிர விடுறீங்கள்?
நம்மட திரையுலகில சில குப்பைகளத் தவிர்த்தா அதுவே நல்லாத்தானுங்கோ இருக்கும்.//
உண்மைதான் ஆனால் நாம் எதையும் இன்னொன்றுடன் ஒப்பிட்டே பழக்கப்பட்டவர்கள். கொழும்பில் குடிக்கும் தமிலியை விட யாழ்ப்பாண இளநீர் நல்லது என்கின்றவர்கள் அதனால் தான் ஆங்கிலப் பட உலகத் த்ர ஒப்பீடு.
//அப்ப எனக்குப் பிடிக்கும். :)//
ஹிஹிஹி அப்போ உனக்கு பிடித்த ரஜனி படம் ஸ்ரீ ராகவேந்திரா.
//ரஜினிய நக்கலடிக்கிற மாதிரி இருக்குது. :P
ரஜினி இரசிகர்கள் கோபமடையப் போறாங்கள்.//
குருத் துரோகம் கூடாது.
//ரஜினி இரசிகர்களிடம் அடிவாங்க வாழ்த்துக்கள்.//
ஏற்கனவே அவர்கள் அடிக்கின்றார்கள் இதில் போட்டுக்கொடுப்பு வேறை
//டண்டணக்கா...
இதுக்கும் வாழ்த்துக்கள்.//
யாமார்க்கும் குடியல்லோம்.
//குசேலனில் பின் காட்சிகள் சிலவற்றில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.//
இதுவரை நான் பாராத ஒரே ஒரு ரஜனி படம்.
//உங்கட வயசுப்(?) பிரச்சினை.
வயசு போட்டுது குருவே.
ஆள மாத்துங்கோ.//
வயசானாலும் அழகு அழகுதான். கண்ணாடி வேண்டிப் பார்க்கவும்.
//உங்கட இரசனையே தனிதான் குருவே.
ஒண்டில் 37 வயசு, இல்லாட்டி 47 வயசு...
அவ்வ்வ்வ்வ்வ்....//
இதுதான் சொந்த செலவில் சூனியன் என்பது சும்மா வாயைக் கொடுத்து நொந்துபோனேன்.
//நிவிஉசி...
வந்தியண்ணா வாழ்க...//
அரசியல்வாதி வந்தியண்ணா வாழ்க என இருந்திருக்கவேண்டும்.
//நீங்கள் தொடர்ந்தும் திண்டுக்கல் சாரதியையும், கருணாஸையும் ஏளனம் செய்வதற்கு என் கண்டனங்கள். :@//
ஷப்பா நீ கருணாசின் ரசிகனா? வாழ்த்துக்கள்
//வெறும் கல்லுத்தானா? :ப்//
மைல் கல் என்றால் அர்த்தம் வேறை. தமிழ் அறிஞர்களை அர்த்தம் கேட்கவும்.
//இது தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உண்டு.
யாழ்ப்பாணத்தில் தொடங்கி, கொழும்பிலிருந்து இலண்டன் வரை எங்களை நாங்கள் நாகரிகமுடையவர்களாகவே மாற்ற முயற்சிக்கவே மாட்டோம்.
எங்களைப் பொறுத்தவரை நாகரிகம் என்பது அணியும் ஆடையில் மாத்திரம் தான் உண்டு.//
கடுப்பைக் கிளப்பும் பெண்கள் பாகம் இரண்டை நீ ஏன் புல்லட்டுக்காக எழுதக்குடாது.
//அதைவிட மருதநாயகம் எப்படியாவது எடுக்கப்பட்டு வெளியாகிவிட வேண்டும்.//
மருதநாயகம் எப்படியும் வெளிவரும்.
//நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இந்தப் பின்னூட்டம் முழுக்க வெட்டிக்காகவே இடப்பட்டது. வந்தியண்ணாவோ, ரஜினி இரசிகர்களோ சீரியஸாய் எடுத்துவிடாதீர்கள். வெறுமனே நகைச்சுவைக்கு மட்டும்//
நான் சீரியசாக எடுக்கமாட்டேன்.

/கன்கொன் || Kangon said...

உன் பின்னூட்டமே ஒரு பதிவு அளவிற்க்கு வந்துள்ளதாடா ரொம்ப கொடுமை
//Anuthinan S said...
அண்ணே கலக்கலான நடுநிலை விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்!!!//
நடுநிலையான விமர்சனமா? இது என் விமர்சனம். ஏதும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்றால் தான் நடுநிலை கடைநிலை எல்லாம் தேவை. இந்த விமர்சனத்தை நடுநிலை என்றமைக்கு நன்றிகள்.
//பல இடங்களில் எனக்கு ரஜனி,சுஜாதா,ரஹுமான் ஆகியோர் தான் தெரிஞ்சாங்க!!! அடுத்த சங்கர் படத்துக்கு காத்திருப்பு அவர் சுஜாதா இல்லாமல் என்ன செய்வார் என்று பார்க்க!!//
நானும் காத்திருக்கின்றேன், சுஜாதா இல்லாத குறை வசனங்களில் பிரதிபலித்தது.
//வழமையான ரஜனியை காணமுடியவில்லை!!! ஆனால், அவர் நடித்து இருக்கிறார் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.//
புரியவில்லை யாரால் ஜீரணிக்கமுடியவில்லை.
//ஏன் அண்ணா??? இலங்கையில் இப்படி பேசினா ஏத்துக்குபிங்க!!! இதே வெளிநாட்டுல பண்ணினா அனுதாபங்களா???//
எங்கே என்றாலும் பொது இடத்தில் கதைக்க ஒரு வரம்பு இருக்கு.
//Subankan said...
அவரேதான் :). தமிழில் பேசி நடித்திருக்கிறார்.//
அப்படியா அவரின் குரலும் ஐஸ்கிறீம் போல் இருக்கின்றது.
//ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை//
//போங்க மாம்ஸ், போய் அவங்களுக்கு பொன்ட்ஸ் ஏஜ் மிராக்கிள் வாங்கிக்கொடுங்க. வயசாயிட்டிருக்கிறது க்ளோசப்பில் அப்படியே தெரியுது, நீங்க வேற :ப்//
அடப்பாவியளா அது வயசு அல்ல ரெசலோசன் பிரச்சனை. அதுதான் வயது போனது போல் தெரிகின்றது.

//மஞ்சூர் ராசா said...
நல்லதொரு கச்சிதமான விமர்சனம். வாழ்த்துகள். நன்றி.//
நன்றிகள் நண்பரே
//தர்ஷன் said...
கொஞ்சம் கமல் ரசிகர் என்ற வட்டத்திலிருந்து வெளியிலும் வந்துப் பார்த்திருக்கலாம்//
தர்ஷன் இதில் எங்கே கமல் வருகின்றார். எனது பார்வையில் படம் எப்படி என்றுதான் சொன்னேன். சும்மா கமல் ரசிகன், திருப்ப்தியில்லாத விமர்சனம் என சொல்லவேண்டாம். கமல் இந்தப் படத்தில் நடித்திருந்தால் கூட இதுதான் என் விமர்சனம். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
எங்கள் பவர் விளங்கியதா?
http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/02-tuticorin-theatre-owner-attack-rajini-fans.html
same feel.. same blood.. :)
எந்திரன் பாடல் விமர்சனத்தை வழங்கிய போது அண்ணன் வந்தி பல தரப்பிலும் இருந்து விமர்சனங்களைச் சம்பாதிக்க வேண்டி இருந்தது. ஆனால் பட விமர்சனத்தில் அதைச் சரி செய்து பகைவரையும் நண்பர்களாக்கி விட்ட அண்ணன் வந்தி வாழ்க
Post a Comment