அரசியல்
இலங்கை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 20 மாதச் சிறைத் தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர்களில் சரத்தும் ஒருவர், ரணில் என்ற மண்குதிரையை நம்பி பலம்வாய்ந்த மஹிந்த ராஜபக்சாவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் நின்றதன் பயனை இப்போ சரத் சிறையில் நன்றாகவே அனுபவிக்கின்றார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களின் காணமல் போனமை கொலைக்கு காரணமானவர்களின் சரத்தும் ஒருவர் என பலர் கூறுகின்றார்கள். சரத்தின் மனைவி அனோமாவோ தன்னுடைய கணவன் ஒரு புண்ணிய ஆத்மா என்பதுபோல் கோயில் கோயிலாகப் போகின்றார். பாவம் அவருக்கு தமிழில் உள்ள முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி தெரியாது. இவருக்கு நியூட்டனின் 3ஆவது விதி தெரிந்திருந்தால் சரத் தமிழர்களின் மேல் காட்டிய அடாவடிகளுக்கு இன்னமும் அனுபவிப்பார் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருக்கும். தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது.
இராணுவத் தளபதி என்ற சிறப்புடன் ஓய்வு பெற்றிருக்கவேண்டிய சரத் இன்றைக்கு துரோகி என்ற பட்டத்துடன் சிறையில் இருக்கின்றார். பேசாமல் மஹிந்த சகோதரர்களின் சொற்படி கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்குமா? சேராத இடம் தன்னில் சேர்ந்து தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம். இல்லையென்றால் முன்னால் பாகிஸ்தான் அதிபர் முஷார்ப் போல் இராணுவப் புரட்சி செய்திருக்கவேண்டும், அதைச் செய்யும் தைரியமும் அவரிடம் இல்லை. இப்போ சிறையில் இருக்கும் சரத் தான் அந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிருழுந்திருக்கலாம் தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும் என நினைக்கலாம். எது எப்படியோ வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.
இந்தியா
கடந்த வார ஜூனியர் விகடனில் கார்த்தி சிதம்பரம்(ப.சிதம்பரம் மகன்) திருமாவளவனுக்கு தனியே சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுக்காட்டும் படி சவால் விட்டிருக்கின்றார். பல விகடன் வாசகர்கள் பின்னூட்டங்களில் பின்னிவிட்டார்கள். விகடனும் இனிமேல் கார்த்தி சிதம்பரம் போன்ற வாரிசு கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்காது என நினைக்கின்றேன். பலர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் எப்படிக் கடந்த தேர்தலில் வென்றார், முடிந்தால் கார்த்தி தன்னுடைய தந்தையை திமுக, அதிமுக கூட்டு இல்லாமல் தனித்து வெற்றி ஈட்டிக்காட்டட்டும் எனக் காட்டமாக எழுதி இருக்கின்றார்கள். ராஜிவ் காந்தி சிலைக்கு செருப்பு அணிவித்த சம்பவம் தொடர்பில் தன்மானத் தமிழன் வெறுமாவளவன் மன்னிக்கவும் திருமாவளவன் தனக்கும் தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தன் வளர்ப்பு அன்னை சோனியாவிற்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம். இதை எல்லாம் பார்க்கும் போது எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது.
கொமன்வெல்த் போட்டிகள் ஒருமாதிரி நிறைவு பெற்றுவிட்டன, தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.அதே நேரம் இந்தியா பதக்கப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல்களால் நிகழ்ந்த இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு நிறையவே இருந்தாலும் வரும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார்களா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இடையில் கல்மாடி போன்றவர்கள் குறுக்கிட்டால் இந்தியா பேக்கப் தான்.
விளையாட்டு
கிரிக்கெட் என்றாலே இப்போ சூதாட்டம் தான் நினைவுக்கு வருகின்றது. பாகிஸ்தான் அணிக்குள் நடந்த குத்துக்கள் வெட்டுகள் ஆறமுன்னர் ரெய்னா மேல் பூதம் பாய்ந்திரருக்கின்றது. ரெய்ணா நல்ல துடிப்பான இளைஞர் வேகமாக ஓட்டங்கள் எடுக்ககூடிய்வர். அவரிடம் இருந்து இப்படியான முடிவு மாற்றும் செய்ல்களை நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது. சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.
சின்னத் திரை
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட நிகழ்ச்சி இறுதிப்போட்டியில் நடனத்திற்குப் பதில் நெஞ்சில் கல்லுடைப்படு நெருப்புக்குள் பாய்வது போன்ற சாகசம் செய்தவர்களுக்குத் தான் பரிசு என நினைத்து கலா மாஸ்டர் பாலா, ஸ்வேதாவிற்க்கே அந்த வீட்டை கொடுத்துவிட்டார். யாராவது ஒருவருக்கு பலத்த காயம் அல்லது இழப்பு வந்தால் தான் இந்த சாகசங்கள் பநிறுத்தப்படும். இவர்களின் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வைக்க இடம் போதாமல் அபுதாபியில் இடம் பெற்றது. இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான்.
சில நாட்களுக்கு முன்னர் விகடனில் ஒரு பாடகர் தன்னை ஒரு பாடுப்ப்போட்டி நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் நடுவராகப் பணியாற்றச் சொல்லிக் கேட்டதுடன் தாம் கொடுக்கும் கொமென்ட்ஸைத் தான் சொல்லவேண்டும் என வற்புறுத்தினார்களாம். அவரோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தன்பாட்டுக்குச் சென்றுவிட்டார். ரியாலிட்டி ஷோக்களும் மெஹா சீரியல்கள் போல் மக்களை பேக்காட்டவே பயன்படுகின்றது.
பதிவுலகம்
நீண்ட நாட்களாகச் சந்திக்காத இலங்கைப் பதிவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை விஹாரமகாதேவிப் பூங்காவில் அல்லது காலிமுகத்திடலில் சந்திக்கப்போவதாக பதிவர் ஆதிரை தெரிவித்திருன்ந்தார். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார். அத்துடன் இந்தச் சந்திப்பில் சில ஓய்வுபெற்ற பதிவர்கள் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறினார். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இணைப்பாளர்களில் எவரையாவது தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறவும்.
சுய புலம்பல்
அண்மையில் நண்பர் ஒருவர் சும்மா வெட்டியாக இருப்பவர்கள் தான் பதிவு எழுதுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நக்கலாகச் சொன்னார். பாவம் அவருக்குத் தெரியாது பெரும்பாலும் பதிவுலகில் வேலைகளுடன் அதிலும் ஐடியுடன் தொடர்புள்ளவர்கள் மட்டும் தான் எழுதுகின்றார்கள். சுவாரசியமாக எழுதினாலே பலர் உங்களை உற்றுக்கவனிப்பார்கள் என்ற உண்மை அந்த நண்பனுக்குத் தெரியாது. நான் கூட நீண்ட நாட்களின் பின்னர் எழுதக் காரணம் கல்வி சக வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை.
குட்டிக் கதை
அண்ணேன்டா
என் நண்பன் ஒருவன் தன்னுடன் கூடப்படித்த பெண் ஒருத்தி மேல் கொஞ்சம் காதல். இறுதிநாள் ஏஎல் சோதனை முடிந்தபின்னர் அவளுடன் கதைக்கவேண்டும் என ஆசைப்பட்டு காலிவீதியில் அவளுடன் சோதனை எப்படி? போன்ற சமூகப் பிரக்ஞ்சை உள்ள கேள்விகளைக் கேட்டு அவளையும் கூட நின்ற எம்மையும் கடுப்படித்தான், எல்லாவற்றிற்க்கும் அமைதியாகப் பதில் சொன்ன அந்தப் பெண் கடைசியாக போயிட்டுவாறன் அண்ணா எனப் பதில் அளித்து என் நண்பனுக்கு அங்கேயே மோஷன் போற நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள்.
பாஸ் என்கின்ற பாஸ்கரனில் எப்படி சந்தானம் ஆர்யாவை நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்.
படித்தது :
விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்.
ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
21 கருத்துக் கூறியவர்கள்:
நான் தான் முதல் கதை
me the first...awsome food man, ha...ha... yummy...
///ஐஸ்வர்யா ஆண்டிக்கும்///
ஒரு காக்கா அண்டங்காக்காவப் பாத்து...
வேண்டாம். நான் ஒண்டும் சொல்லேல :))
//இலங்கை அரசியல்
:|
//இந்திய அரசியல்
சும்மா காமடியெல்லாம் எழுதாதீங்க வந்தி
//சின்னத்திரை
நயந்தாராவை கள்ளக்காதலி என்று சொன்னதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
//பதிவுலகம்
சந்திப்பா...! சொல்லவே இல்லை...!
//சுய புலம்பல்
Off license ல Till ல நிக்கேக்க கொஞ்சம் நேரம்கிடைக்குமே....!
//விளையாட்டு
சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.//
நிச்சயமாக அண்ணா!!! அதனால்தான் இனி கிரிக்கேட்டை பார்வையாளனாக மட்டும் பார்ப்பதுடன் நிறுத்தி கொள்ள போகிறேன்.
//சின்னத் திரை//
எல்லாமே வணிகம் என்று ஆகிய பின்பு, பார்க்கும் மக்கள் பற்றி யார்தான் கவலைபடுவார்கள்??
//பதிவுலகம்
இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார்.//
நன்றி நன்றி, இப்படியாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.
//சுய புலம்பல்//
இந்த கருத்து சில காலங்களுக்கு முதல் எனக்கும் இருந்தது. நான் பதிவுலகுக்கு வந்த பின்பு மாற்றி கொண்டேன்.
//அண்ணேன்டா
இது வெறும் புனைவுதான்.//
இதை நம்ப மனம் மறுக்கிறது.
//எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். //
எனது வாழ்த்துக்களும்!!!
கிறிக்கட் - :(
//பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான். //
LOL
அண்ணேன்டா - அண்ணேன்டா..:P
//விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம். //
ஆஹா..:)
//1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் //
பேஸ்புக் சீனாவை முந்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது..:P
//நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
கமல் ஜீக்கு பெரிய்ய்ய்ய வாழ்த்துப்பதிவு வரும் என எதிர்பார்க்கிறோம்..;)
நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்!
இலங்கை அரசியல்: :-))
இந்திய அரசியல்: // தன்மானத் தமிழன் வெறுமாவளவன் //
இந்தச் சொற்பிரயோகத்தை இரசித்தேன். :-)
விளையாட்டு: ரெய்னா விடயம் அடங்கிவிட்டது.
எனக்குக் கவலை என்னவென்றால் BCCI இன் நடவடிக்கைகளால் இப்போது ரெய்னாவிற்கும் கெட்ட பெயர்.
பேசாமல் நேர்மையாகச் செயற்பட்டிருந்தால் ரெய்னா தவறு செய்யவில்லை என்றும் முடிவு வந்திருக்கலாம். இப்போது சந்தேகப்பார்வையில்லல்லவா இருக்கிறார்.
// அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, //
இரவு, அடித்தல், இறங்குதல்???
ஐசிசி இற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.
வெறுமனே ESPNcricinfo தளத்தின் தெரிவு.
சின்னத்திரை: பார்ப்பதில்லை.
பதிவுலகம்: என்ன கொடுமை ஐயா இது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
சுயபுலம்பல்: சொன்னவருக்கு என்னப் பற்றி சொல்லிவிட வேண்டாம். ;-)
விடுங்க குரு, இப்பிடித்தான். :-)
அண்ணேன்டா: யார் எண்டு நான் கண்டுபிடிச்சிற்றன். ஹி ஹி....
கதைக்கு நன்றி. :P
படித்தது: :-)
ரசித்தது: :-)))
ஐஸ்வர்யா அன்ரிக்கும், கமல் அங்கிளிற்கும் எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :D
// தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.//
ஹி ஹி ஹி... ;-)
ஹிந்தியர்கள் எண்டெல்லாம் இல்லை.
ஒட்டுமொத்த உலகத்திற்காகத்தான் கேட்டார்.
அதன் பின்புலம் ஒருபுறமிருக்க, செம்மொழிப்பாடலுக்கு மன்னிப்புக் கேட்காதது ஏன் என்ற கேள்விக்கு ரஹ்மான் விசுவாசிகளின் பதில்களுக்குக் காத்திருக்கிறேன். :D
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ..
///அரசியல்
இலங்கை////
இலங்கை அரசியலுக்கும் நமக்கும் ரொம்ப தூரமப்பா
/// எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது."///
கவுண்டமணி எப்போ உங்கள் தலைவர் ஆனார்????
////ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை//////
உலக தமிழர்களின் தானை தலைவன், தங்க தமிழன், தன் மான சிங்கம் ............ (இடைவெளியை நிரப்பி கொள்ளவும்) கலைஞர் கருணாநிதியின் தேவைக்கேற்பவே செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது, ஆகவே தயவு செய்து ரகுமானை பிழை சொல்ல வேண்டாம், ரகுமான் அம்பு மாத்திரமே
/////அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது
////
இப்பட்டியலை வெளியிட்டிருப்பது ஐசீசீ அல்ல, கிரிக்”இந்தியா“போ இணைய தளம், அவர்களின் நடுநிலைமை உலகறிந்த விடயம்
///// இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான். /////
ஐயா இது ஒளிபரப்பாவது தமிழக முதல்வரி தொலைக்காட்சியில், அதில் காட்டப்படும் அனைத்தும் சட்ட ரீதியானவையே, இதிலே கள்ள எனும் சொல்லை பயன்படுத்தியதை கண்டிக்கிறேன்
/////பதிவுலகம் - சந்திப்பு//////
பதிவர்களை சந்திக்க மிக்க ஆசை ஆனால் இவ்வாரம் என்னால் முடியாது என நினைக்கிறேன்
////வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை. /////
சேம் பிளட், இந்த பின்னூட்டமும் அதிக வேலைகளுக்கு இடையில் அலுவலகத்தில் தட்டச்சுகிறேன்
/////நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்./////
புனைவு என்பதை நம்பமுடிய வில்லை, சொந்த கதை போலிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு மூத்த அண்ணன்டா
/////அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்./////
நல்ல வேளை நான் இத்தாலியிலில்லை
/////
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் /////
3ம் இடத்தில் நானும் உள்ளேன் ஐயா, மிக்க மகிழ்ச்சி
/////அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்/////
அழகி, அக்காவாகி, இப்போ ஆண்டியாகி விட்டாரா? நீங்கள் அந்த ஆண்டியின் பரம விசிறி என்பது உலகறிந்த விடயம், இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பரவாயில்லையே ! ஏ ஜோக் இல்லாமலேயே இப்படியும் எழுதும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அதற்கு ஓட்டுப் போடவும் வாசகர்கள் இருக்கிறார்கள்...நல்லாருக்கு ! அவ உங்களுக்கு ஆண்டி என்றால் எனக்கு அம்மம்மா....
////
Anuthinan S சொல்வது:
//விளையாட்டு
நிச்சயமாக அண்ணா!!! அதனால்தான் இனி கிரிக்கேட்டை பார்வையாளனாக மட்டும் பார்ப்பதுடன் நிறுத்தி கொள்ள போகிறேன்.
////
அப்போது 2011 உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டீர்களா??
அரசியல் - ஹா ஹா ஹா.. இலங்கையில் இருந்து இதையே எழுதியிருந்தால் சல்யூட் அடித்திருப்பேன் :)
ஆனாலும்
//தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது. //
உண்மை
இந்தியா - நீங்களே உங்கள் தலைவர் பற்றி சொன்னபிறகு நான் சொல்ல என்ன இருக்கு?
ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை//
மாமா.. உங்க வயசுக்கு நீங்க இளையராஜா ரசிகராக இருக்கலாம்.. அதற்காக ரஹ்மானைக் கண்டமேனிக்குத் தாக்குவது அவ்வளவு நன்றாக இல்லை.
(எப்பிடி.. கொளுத்திப் போட்டிட்டம் இல்ல?)
//ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது,// ஹா ஹா ஹா.. அனலிஸ்ட் இது பற்றி சொல்லிவிட்டார்.
கிரிக்கெட்டை விளையாட்டாக ரசியுங்கள்.உள்ளே இறங்கினால் ஏமாளி ஆவீர்கள்.
சின்னத்திரை -
இன்னுமா உந்தக் கருமம் எல்லாம் பார்க்கிறீர்கள்?
படியுங்கள் ஐய்யா..
இல்லாவிட்டால் எமக்கு மாமியையாவது தேடுங்கள்.
பதிவுலகம் - அப்படியா? சந்திக்கலாம். நீங்களும் வரலாமே..
சுயபுலம்பல் - அவரவர் வேலையைப் பார்ப்போம்.
குட்டிக்கதை - அட ஆச்சரியமே.. நாங்கள் உயர்தரம் படித்தபோதும் எங்களுடன் இரண்டு,மூன்று வயது மூத்த 'அங்கிள்' ஒருவர் படித்தார்.அவரும் இப்படியே ஒரு எங்கள் வயது பெண்ணிடம் மூக்குடைபட்டார்.
அவரே வந்தி சாரி வந்து சொந்த அனுபவம் சொன்ன மாதிரி இருந்தது. வந்தி அண்ணே.. ;)
சொந்த செலவில் சூனியம் வைப்பது எப்படி என்று உங்களிடம் பாடம் மற்றவர்கள் கற்கவேண்டும் மாமா ;)
இத்தாலி விஷயம் கவலையோ? ;)
ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் //
சீனாவை மற்ற இரண்டும் போகிறபோக்கில் பின் தள்ளிவிடும் போலத் தெரிகிறது.
//அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும்//
இரண்டு விஷயம் ஓவர்..
ஒன்று அழகு - இன்னுமா?
இரண்டாவது நீங்கள் அவரை ஆண்டி என்பது.. ;)
கமலுக்கான வாழ்த்துக்கு எனக்குக் காலம் இருக்கு... ;)
இம்முறை விசேஷமாக வாழ்த்த எண்ணுகிறேன்..
கலக்கல் சூப் மாமா..
அரசியல் - ஆள விடுங்க சாமி
விளையாட்டு - ம்.. ம்..
சின்னத்திரை - இதெல்லாம் இன்னுமா பாக்கறீங்க?
பதிவுலகம் - சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள் ;)
அண்ணேன்டா - அட மாமா :p
மினிஸ்கேர்ட் - வட போச்சே புலம்பலா?
//ஐஸ்வர்யா ஆண்டிக்கும்//
மாம்ஸ் எங்களுக்குத்தான் அவங்க ஆன்டி. உங்களுக்குத் தங்கச்சி :p
வணக்கம் வந்தி,
ஏஆர்.ரஹ்மான் தன்னுடைய திறமையை சரியாக அடையாளம் கண்ட அற்புதமான- நேர்மையான இசைக்கலைஞன். விமர்சனங்களை சரியாகவே உள்வாங்குகிறார். அவருக்கு இன மத தேசிய அடையாளங்கள் பூசிப்பார்ப்பது தேவையற்றது.
அதுபோல, ரஹ்மானின் திறமையை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ஒப்பீடுகள் சரியாக அமைந்துவிடுவதில்லை. இளையராஜாவையும், ரஹ்மானையும் ஒப்பிடுவது மிகவும் மோசமான விடயம். அது அவசியமற்றதும் கூட. இருவரும் வல்லவர்கள். இங்கு யார் பெரியவர் என்ற வாதங்களும் தேவையற்றது.
சொம்மொழி பாடல் வெளியான தருணத்தில் ரஹ்மான் மீது விமர்சனங்கள் அதிகம் வைக்கப்பட்டது. வந்தி உங்களினாலும் அப்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பேஸ்புக்கில் தீவிரமான கருத்துமோதல்கள் இடம்பெற்றதையும் பார்த்திருக்கிறேன்.
அதுதாண்டியும், ரஹ்மான் ‘ஸ்லம்டோக் மில்லியனர்ஸ்’ படத்துக்காக பெற்றுக்கொண்ட ஒஸ்கார் விருதுகள் பின்பக்ககதவுகளினால் சென்று பெறப்பட்டது என்ற காட்டமான இல்லை கேவலமான விமர்சனங்களையும் வலைப்பதிவுகளில் பார்த்திருக்கிறேன்.
நியாயமாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் வரவேண்டியது அவசியம். அதுவே, அந்த கலைஞனை வளர்க்கும். ஆனால், ஒருவரின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக வருவது சரியான விமர்சனமாக இருக்க முடியாது.
ரஹ்மானின் எல்ல பாடல்களும் எனக்குப் பிடித்துவிடுவதில்லை. ஏன், நீங்கள் குறிப்பிட்ட செம்மொழிப் பாடல் எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சில பாடல்களை வைத்துக்கொண்டு ஒரு கலைஞனின் திறமையை மதிப்பிடுவது சரியாக அமையுமா தெரியவில்லை.
அதுபோல, ஏஆர்.ரஹ்மான் பெரிய குதிரைகளின் மீதே சவாரி செய்கிறார் என்று தங்களின் பதிவொன்றில் அண்மையில் வாசித்தேன். (எந்திரன் தொடர்பானது என்று நினைக்கிறேன்) இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ரஹ்மானே பெரிய குதிரைதான். அவரின் இசைக்கான வர்த்தகம் அதிகம்.
ஷங்கரும், அமீர்கானும் ஏன் கமலும் கூட ரஹ்மானை நாடுவதற்கு என்ன காரணம். பெரிய முதலீடுகளைக் கொண்ட படத்தினை எடுக்கின்ற போது அதற்கான வர்த்தக எல்லைகளை தொடவேண்டியிருக்கிறது அப்போது ரஹ்மான், கமலுக்கும் தேவைப்படுகிறார். அண்மையில் கைவிடப்பட்ட மர்மயோகிக்கும் ரஹ்மானோ இசையமைப்பதாக இருந்தது.
4 கோடி ரூபாய் முதலீடு உள்ள படத்தில் ரஹ்மானின் இசை இடம்பெறுவது தற்போதைய வர்த்தக உலகில் சாத்தியமில்லைத்தானே. ரஹ்மானின் சம்பளமே 3 கோடி தொட்டுவிட்ட நிலையில் அது எவ்வாறு சாத்தியம். ஓவ்வொருவருடைய திறைமைக்கான அறுவடையும் வர்த்தக உலகினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
விமர்சனங்கள் நேர்மையாக வரவேண்டும். அதுவே, என்னுடைய எதிர்பார்ப்பு தலைவா……!
////அதுபோல, ஏஆர்.ரஹ்மான் பெரிய குதிரைகளின் மீதே சவாரி செய்கிறார் என்று தங்களின் பதிவொன்றில் அண்மையில் வாசித்தேன். (எந்திரன் தொடர்பானது என்று நினைக்கிறேன்) இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ரஹ்மானே பெரிய குதிரைதான். அவரின் இசைக்கான வர்த்தகம் அதிகம்.////
எந்திரன் விமர்சனமொன்றுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிந்தீர்கள்.
//அண்ணேன்டா//
Super!! :))
அது சரி.. ஐசுவர்யா ஆன்டியின் படம் போட்டிருக்கிறீர்.. நம்ம உலக நாயகன் படம் எங்கயய்யா?
ஆன்டிட இதவிட அழகான ;-) படம் இல்லையோ..
சரத்தின் மனைவியை நக்கலடிக்கிறீர் அதுவும் லங்காவில் இருந்து கொண்டு.. கவனமய்யா .. ஊருக்குள்ள கனக்க வெள்ளை வான் ஓடுதாம்..
எங்கே சகோதரா பதிவொன்றையும் காணல.. வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
உங்களை உங்களுக்கு விருப்பமான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடரவும்.
கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்
http://yovoicee.blogspot.com/2010/12/10.html
Post a Comment