அரசியல்
கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.
தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.
கிரிக்கெட்
இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.
அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.
ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.
சினிமா
எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.
எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.
ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,
சின்னத் திரை :
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:
இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.
எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,
சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
23 கருத்துக் கூறியவர்கள்:
//அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷா//
இப்படியெல்லாம் ஒட்டு மொத்தமாக சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டேன். கவுதமி, குஷ்பு அதுக்கும் மேல சிலுக்கு அப்போவும் பீல்டில் தான் இருந்தாங்க.
தூக்குத்தண்டனை - ஆமாம்.
ஆனால் கட்சி, சாதி, இனம், குலம் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே தீர்ப்பாக இருக்க வேண்டும்.
அதிமுக ஆதரவாளர்கள் என்பதால் திமுக ஆட்சியிலும், இனி அதிமுக வந்தால் அவர்களின் ஆட்சிக்காலத்தில் திமுக ஆதரவாளர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுத்தால் அதற்குப் பெயர் பழிவாங்கல்...
கிறிக்கற் - இங்கிலாந்துப் பத்திரிகைகள் பிரித்து மேய்வதாக அறிந்தேன்.
ஆனால் மொகமட் ஆசிஃவை இளம் வீரர்கள் என்பது தான் இடிக்கிறது.
பரவால்ல, நீங்க தானே சொன்னீங்கள். ;-)
ஐ.பி.எல் ஐயும் சாதாரண கிறிக்கற் போட்டிகளையும் ஒப்பிட வேண்டாம்.
ஷேன் வொட்சன் விடயம் பழசு...
இப்ப சும்மா சொல்கிறார்கள்.
சினிமா - ம் ம் ம்...
எங்கயோ இருந்து கொலை அச்சுறுத்தல் வந்ததும் எந்திரன் பாடல்கள் நல்லா வந்திட்டுது என? ;-)
அண்மையில் எங்கயோ இருந்து அழுத்தம் வந்ததை நான் அறிவேன். ம் ம்... நடக்கட்டும் நடக்கட்டும்.
அரசியல்வாதி வந்தியண்ணா வாழ்க... ;-)
சின்னத்திரை - கருத்தில்லை, ஆர்வமில்லை.
இளவரசி - கருத்து இல்லை, மிகுதிப் பின்னூட்டவாதிகளுக்காகக் காத்திருக்கிறேன். ;-)
குறிப்பாக ஆதிரை அண்ணா அல்லது லோஷன் அண்ணா. ;-)
பாடல் - கேட்கிறேன்.
சந்தேகம். -
தவறான புரிதல்.
இஸலாமையும், கிறிஸ்தவத்தையும் எதிர்ப்பவர்கள் ஏராளம் உண்டு.
ஆல் இன் ஆல் தளத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் அந்தத் தளம் தங்களுக்கு எதிராக மட்டுமே இயங்குகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து இந்து மதத்தை தமிழர்கள் பெரும்பாலானோர் பிரதானமாக எதிர்க்கக்காரணம்,
பெரும்பாலானோர் பிறப்பால் இந்து மதம், இப்படி பிறப்பால் இந்து மதத்தினர்கள் வேறு மதத்தை விமர்சிக்கப் புறப்பட்டால் 'முதலில் உன் மதத்தில் உள்ள ஓட்டைகளை பார்' என்ற விடை வரும்.
மற்றும்படி ஆங்கிலத்தில் உள்ள நாத்திகர்கள் இஸ்லாத்தையும், கிறிஸ்வத்தையும் தான் விமர்சிக்கிறார்கள், இந்து மதத்தை விமர்சித்து நான் கண்டதில்லை...
:-)
சூப்பில இலையான் விழுந்துபோட்டுது, கவனமா சூப் தயாரிக்கவும். ;-)
///// எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.//////
எனக்கும் அது போதும், என்னையும் நேற்று ஒருவர் தொடர்பு கொண்டு மூன்று நோபோல் போட சொல்லியிருக்கிறார், இன்னமும் என்ன எமௌன்ட் என பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்ஃ
/////புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார்/////
அந்த பாடலில் பாலா, ரகுமான், கதீஜா 3 பேரின் குரலும் வெவ்வேறு பரிணாமத்தை தருகிறது. அதிலும் பாலாவின் குரல் வரும்போது பாடல் சட்டென்று எங்கோ போகிறது. அந்த குரலை மீள்நிரப்ப இப்போதைக்கு யாருமில்லை.
////// எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது. ///////
உங்கட ஆள் திருமதி. பச்சன் இருக்கிறார், கட்டாயம் அவருக்காகவாவது படத்தை முதல் நாள் பார்த்து விடுவீர்கள்.
/////இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.//////
எல்லாம் காசு காசு காசு. டயானா என்னும் பெயரை இருக்கும் போதும் இறந்த போதும் நன்றாக விற்று சம்பாதிக்கிறார்கள். பல பேரை காதலித்த அவர் காதல் இளவரசியாம்.
/////எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். ////// எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும், அதிலும் அந்த பாடலில் கமலின் சேட்டைகள் பிடிக்கும்? சூரசம்ஹார மீசையும் ரொம்ப பிடிக்கும்.
//அரசியல்//
இந்த விடயம் எனக்கு புதிது அண்ணா!!
//கிரிக்கெட்//
//நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.//
ம்ம்ம் சில கெட்ட விடயங்கள் மட்டும் எப்படி பல நல்ல விடயங்கள் இருக்கின்றவற்றை வெறுக்க வைத்து விடுகின்றன.
//இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்//
இப்படி எல்லாம் எடுத்த எடுப்பில் சொல்ல முடியாது அண்ணா! உங்களுக்கு 5000 பவுண்ட் வழங்க குறைந்தது ஆமிர் அல்லது ஆசிப் போல் பந்து வீச தெரிந்து இருக்க வேண்டும்!!!!
//எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான்.//
உண்மைதான் அண்ணா!!
//பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி//
எனக்குதெரிந்து அதிகக நாத்திகவாதிகளை இந்து மதம்தான் கொண்டு இருக்கிறது போலும்... அதுதான் வேறு மதம் பற்றி கதைப்பது இல்லை!!! விடுங்க அண்ணா ஏன் இந்த சந்தேகம் முதலில் நமக்குள் இருக்கும் சந்தேக்காகளை தீர்த்து கொள்ளுவோமே!!!
சூப் உண்மையில் கொட்தான்
சூப் சுவையாக இருந்தாலும் 'சூடாக' இல்லையே மாம்ஸ் ;)
//கிரிக்கெட் - பாகிஸ்தான்//
ஹிஹி.. ஹிஹிஹி.. ஹிஹிஹி
//எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.//
ஹாஹா நானெல்லாம் 5ருபாகூட வாங்காமயே ஒரு ஓவருக்கு ஒரு நோபோலாவது கட்டாயம் போடுவேன்..:D
எந்திரன் - ஓடாத படத்தையே ஓட்டுகிறார்கள் சன்பிக்சர்ஸ் இது தலைவர்(ரஜினி) படம் SO எப்பிடியும் ஓடும்..;)
ஜோடி சம்பர் வன் - பார்த்தேன் நல்லாயிருந்தது..;)
சூப் கொஞ்சம் சூடு இல்லாத மாதிரி..
புலம் பெயர்ந்த பிறகு அட்ஜஸ்ட்மென்ட் ரொம்பவே பழகிவிட்டது போலும் ;)
//எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.
//
உங்கள் பகுதி சின்னப் பையன்களிடம் அவ்வளவு பணமிருக்குமா? ;)
//எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான்.//
ஹா ஹா.. :)
வந்தியியல்.. ;)
ஜோடி நம்பர் வன்.. பெரிதாக ஆர்வமில்லை..
இளவரசி டயனா- என் எல்லோரும் இவ்வளவு தூக்கிப் பிடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை..
உங்களுக்கு ரொம்பப் பிடித்தவரோ?
அருண்மொழி எனக்கு மிகப் பிடித்த பாடகர்களில் ஒருவர்.நிரோஷாவை அக்னிநட்சத்திரம்,சூர சம்ஹாரம் படங்களில் மட்டும் ரசித்தேன்.
இந்தப் பாடல்; அருமை.
சின்ன சந்தேகம் :// தெரியாத விஷயங்களில் தலையிட்டு சொ.செ.சூ வைத்துக் கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம். :)
ஆனால் மூடநம்பிக்கை,முட்டாள்தனம் எங்கே இருந்தாலும் யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம்.
இன்னவர் இதைப் பற்றி மட்டும் தான் எழுதலாம் என்றில்லை.
அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி//
அனுபவம்? ;)
அவர்களுக்கு தூக்குத்தண்டனைதான் வழங்கவேன்ன்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவரகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென வரும் பதிவுகளை பார்க்கையில் வருத்தமாய் இருக்கிறது. என்ன என்னுடைய வருத்தமெல்லாம் அவர்களை இன்னமும் உயிரோடு விட்டு வைத்திருப்பதும் தூக்கிலே தொங்கினால் சில நிமிட வலியோடு அவர்களின் துடிப்பு அடங்கி விடுமென்பதுதான். ஒரு மாறுதலுக்கு அவர்களையும் உயிரோடு எரித்தால் என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றி என்ன பேச ? வீரர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம். ஒரு நாட்டின் அரசியல் நிலைமை சரியில்லா விட்டால் எல்லாமே அவ்வளவுதான்.
//தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.//
ஒரு விளம்பரத்துக்குதான் மலேசியாவில் நடத்தியிருப்பார்கள், ஏன் "விண்ணைத் தாண்டி வருவாயா"வின் ஆடியோ ரீலிசை லண்டனில் நடத்தினார்கள் என யாரும் கேட்கவில்லை பார்த்தீர்களா? அல்லது ஒரு சர்வதேச கவன ஈர்ப்பை பெறும் முகமாகவும் இருக்கும்.
கலைஞர் வாழ்த்து சொன்னதில் என்ன ஆச்சரியம் சினிமா விழாக்களில் பங்கேற்பதைதான் அவர் தமது உறவுகளுக்குள் சமரசம் செய்து வைப்பது, எதிர்கால நலனுக்கு தேவையான சொத்து சேர்ப்பது, கடிதம் எழுதுவது, பாராட்டு விழாக்களில் கலந்துக் கொள்வது ஆகியவற்றுக்கு அடுத்தப் படியாக வைத்திருக்கிறார். கமலின் தசாவதாரம் சென்னையில் நடந்ததால் கலந்துக் கொண்டார். இது மலேசியாவில் என்பதால் வாழ்த்தனுப்பியிருக்கிறார்.
//ஷாங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும்//
அது என்ன சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் தலைவர் நடிப்பிலும் அசத்துவார் பாருங்கள்
பெரும்பாலும் நாத்திகம் பேசுபவர்கள் பிறப்பால் ஹிந்துக்கள் தாம் சார்ந்த மதத்தின் அபத்தங்களை அறிந்தவர்களாதலால் எதிர்க்க முடிகிறது. மற்றும்படி எல்லா மதமும் குப்பையே . நீங்களே சொல்லுங்கள் உயிர் பலியை எல்லாம் எப்படி ஞாயப்படுத்துவது

மரண தண்டனை - எப்பேர்ப்பட்ட குற்றத்திற்கு அது தண்டனையாகாது - அது வெறும் பழிவாங்கலே....
கிரிக்கட் - இப்ப சனத் முன்பு 0 விற்கு அவுட் ஆனதைக் கூட சந்தேகிக்கத் தோன்றுகிறது....
சினிமா - ம்! கிளிமஞசாரோ எனக்கும் மிகப் பிடித்திருக்கிறது ஆனால் மிகவும் பிடித்தது இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ... ஸ்வீட் வைன்!
விஜய் - உள்ளதுக்குள்ள வள்ளிசாய் ஒரு அலைவரிசை!
டயானா - பாவம்...
பாடல் - முன்பு கேட்டதில்லை....
சந்தேகம் - இலங்கையில் மஹிந்தவை விமர்சிப்பவர்கள் கூட ஏன் கோதாவை விமர்சிப்பதில்லை? அமெரிக்காவை விமர்சிப்பவர்கள் ஏன் சீ.ஐ.ஏ யை விமர்சிப்பதில்லை? இஸ்ரேலை விமர்சிப்பவர்கள் ஏன் இலங்கையை விமர்சிப்பதில்லை? எப்போதுமே இதெல்லாம் இப்படித்தான்.... after all, all are human....
அன்பிற்கினிய நண்பரே...,
சுவையான சூப்.
/ /...பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை?../ /
அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது... + நமது நாட்டில்(நாடுகளில்) பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்து மதத்தில் இருந்துதானே வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இந்து மதத்தை பின்பற்றுவதால் மதவாதிகளின் எதிர்ப்பு நீர்த்துபோகிறது. அதனால் ஆட்டோ வருவதும் கிடையாது.
நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.
அன்பிற்கினிய நண்பரே..,
/ /...எனக்குத் தெரிந்து இந்து மதத்தை தமிழர்கள் பெரும்பாலானோர் பிரதானமாக எதிர்க்கக்காரணம்,
பெரும்பாலானோர் பிறப்பால் இந்து மதம், இப்படி பிறப்பால் இந்து மதத்தினர்கள் வேறு மதத்தை விமர்சிக்கப் புறப்பட்டால் 'முதலில் உன் மதத்தில் உள்ள ஓட்டைகளை பார்' என்ற விடை வரும்.../ / - நண்பர் கன்கொன்
நமது நாட்டில்(நாடுகளில்) பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்து மதத்தில் இருந்துதானே வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இந்து மதத்தை பின்பற்றுவதால் மதவாதிகளின் எதிர்ப்பு நீர்த்துபோகிறது. - எனது கருத்து இருப்பது தற்செயலாக நடந்தது.
நான் பின்னூட்டம் இடும் போது உங்கள் பதிவில் எந்த பின்னூட்டமும் வரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.
@ S.ரமேஷ்:
:-)
அறிவேன்....
அந்த சின்னச்சந்தேகம் எனக்கும் எப்போதும் உள்ளதுதான். நாம் பிறப்பால் ஒரு இந்துவாக இருந்தபடியால்த்தான் பௌத்தறிவினையும், நாத்திகவாதத்தையும் சுதந்திரமாக பரப்பக்கூடியதாக உள்ளது என பல நாத்திகவாதிகளும் கூறியுள்ளமை குறிப்பிட்டத்தக்கதொன்றே.
இந்த சந்தேகத்திற்கான ஓரளவு விளக்கம் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசனால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
எந்த மதத்தில் என்றாலும் கால ஓட்டத்திற்கும் காலமாற்றத்திற்கும் ஏற்றால்ப்போல் முட்டாள்த்தனமான சட்டங்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும்.
மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் காதுகளும் மூக்கும் அறுக்கப்பட்ட ஆயிஷா என்ற ஒரு பெண்ணின் கோரமானகதையினையும் அனைவரும் கேள்விப்பட்டிருப்பார்கள்.
நான் பார்க்க மிஸ் பண்ணிய ஆட்டம்.. நன்றி..
எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். //
அட்ரா அட்ரா அட்ரா
இலங்கையில் ரசி(கை)கர்கள் மத்தியில் எழுந்த புயலைத் தொடர்ந்து வந்தியின் இந்த ஸ்டேட்மெண்ட் வந்ததா டயலொக் பட்சி சொல்லுது ;)
அட உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? ;)
ஓ.. நீங்களும் நேரடி சாட்சி இல்லையா? ;)
///பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்?///
பிறப்பால் இந்துவான நாத்திகவாதிகள் என்று வரவேண்டும் வந்தி... எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றைப் பற்றித்தானே நான் விமர்சிக்கலாம், இல்லையா?
எந்திரன் இசை வெளியீடு விழா லண்டனில் நடக்க காரணம், சன் நிறுவனத்தாரின் அரசியல் காரணதாலகும், சென்னையில் நடந்தால் அங்கு தானை தலைவர் கருணாநிதியை மாத்திரம் புகழ வேண்டும், லண்டனில் நடந்தால் தங்க தலைவர் இந்தியன் பில் கேட்ஸ் "கலாநிதி மாறனை" வாழ்த்தலாம், தானை தலைவர் நேரடியாக வந்திருந்தால் விழாவுக்கு வந்தவர்களால் தங்க தலைவரை வாழ்த்த முடியாமலிருக்கும்
உளறுகிறேன் என்று சொன்னாலும் உளறல் மாதிரி தெரியலியே அருமையாக அல்லபா இருக்கிறது... வெளிச்சத்துக்க வராத எந்திரன் பாடல் பற்றி நானும் ஒன்று எழுதியிருக்கிறேன் நேரம் கிடைத்தால் பாருங்கள்..
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_19.html
Post a Comment