2008 தமிழக அரசு விருதுகள்

2009ல் நடைபெறவிருக்கும் விருதுவழங்கும் வைபத்திற்கான ஒரு முன்கூட்டிய செய்தி.

2008ல் வெளிவந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் நேரு உள்ளரங்கத்தில் கடந்தவாரம் இடம் பெற்றது. முதல்வர் கலைஞர் அவர்களின் கைகளினால் தமிழ்திரைத்துறை சார்ந்தவர்கள் விருது பெற்றார்கள்.

க‌லைஞ‌ர் டிவி தொகுப்பாளினி பிரியதர்சினி நிகழ்ச்சிகளை தன் அடைத்த குரலினால் தொகுத்து வழங்கினார்.

உல‌க‌ சினிமா வ‌ர‌லாற்றில் தாத்தா கையால் பேர‌ன் வாங்கும் விருது இதுவாகும். இன்னாள் முத‌ல்வ‌ர் வ‌ருங்கால‌ முத‌ல்வ‌ருக்கு விருது அளிக்க‌ இருக்கின்றார்.

சிறந்த படம்: குருவி.

சிறப்பு விருது : குசேலன்.

சிறந்த நடிகர் விருது : இளைய தளபதி விஜய்.(குருவி)

சிறப்பு விருது : சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த்.(குசேலன்)

சிறந்த நடிகை : திரிஷா(குருவி)

விருது வாங்கிய பின்னர் இளையதளபதி விஜய் பேசும்போது:
ங்ண்ணா இந்த விருதை நான் எதிர்ப்பார்த்தேன். நான், தரணி, திரிஷா, வித்யாசாகர் கூட்டணி ஒருபோதும் சோடை போனதில்லை என்பதை நாம் மீண்டும் நிருபித்துவிட்டோம் மீண்டும் ஒரு முறை நாம் இணைய இருப்பதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இணையத்தில் எம்மை கிண்டல் செய்தவர்களுக்கு இந்த விருதின் மூலம் நாம் பதிலடி கொடுத்துள்ளோம். என் நண்பர்கள் சிலர் இந்தப்படம் தேசிய விருது பெறும் தகுதி இருப்பதாக கூறினார்கள். என்னை வாழ‌வைக்கும் ர‌சிக‌ர்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள்.


அடுத்த‌ நாள் தின‌ம‌ல‌ரில் திரிஷாவின் ப‌ட‌ம் ஒன்றுட‌ன் கீழ்வ‌ரும் செய்தி பிர‌சுர‌மாகும்:

விருது வ‌ழ‌ங்கும் விழாவில் அரைகுறை ஆடையுட‌ன் திரிஷா. முத‌ல்வ‌ர் முன்னாள் மீண்டும் ஒருமுறை அரைகுறை ஆடைப் பிர‌ச்ச‌னை போர்கொடி பிடிக்கின்ற‌து க‌லாச்சார‌ அமைப்புக‌ள்.

டிஸ்கி: வெறும் ந‌கைச்சுவையே ஒழிய‌ வேறு எந்த‌ நுண்ண‌ர‌சிய‌லும் இல்லை.

சச்சினும் கங்குலியும்

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி மிக இலகுவாக வென்றது அனைவரும் அறிந்ததே. இந்த மேட்சில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா இந்த போட்டியில் தான் தன் அதிரடியைக் காட்டினார். அவர் 50 அடித்தபோது கூட இருந்த சச்சின் சும்மா ஒரு போமலிட்டிக்காக அவரது கைஉறையில் ஒரு தட்டு மட்டும் தட்டினார். மற்றவர்கள் போல் கட்டி அணைக்கவில்லை. பின்னர் சச்சின் அவுட்டானதும் ஜெய‌சூரியா சதமடித்து போட்டியை நிறைவு செய்தபின்னர் போலக் போன்ற வீரர்கள் ஜெயசூர்யாவை கட்டி அணைத்துப்பாராட்டினார்கள் ஆனால் சச்சின் ஜஸ்ட் ஒரு சிரிப்புடன் கைகொடுத்து மட்டும் விட்டுவிட்டார். என்ன காரணமோ?





இதற்கு முதல் நாள் கோல்கத்தாவில் நடந்த போட்டியில் கங்குலியின் கோல்கத்தா சேவாக்கின் டில்லை அணியை வென்றதும் அதற்க்கு காரணமான பாகிஸ்தானின் வேகம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரை கங்குலி ஷாருக்கான் உட்பட அனைவரும் கட்டி அணைத்தது ஒருவர் மேல் ஒருவர் தாவியும் தங்கள் அன்பையும் பாராட்டையும் செலுத்தினார்கள். இத்தனைக்கும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய வீரரான சேவாக்கை டக் அவுட் செய்ய ஈடன் கார்டனில் ஏற்பட்ட மக்களின் சத்தம் ராவல்பிண்டிக்கே கேட்டிருக்கும்.

கங்குலிக்கு இருக்கும் பெரும்தன்மை ஏன் சச்சினுக்கு இல்லை?