சிவப்பழகிற்கு (பெண்களுக்கு மட்டும்)

பலருக்கும் தாம் சிவப்பாக இருக்கவேண்டும் என ஆசை, என்ன செய்வது திராவிடனாகப் பிறந்தால் இதுதான் நம்ம கலர் என நினைத்த காலம் மலையேறிப்போய் பலகாலம். இப்பொழுது சகல கடைகளிலும் சிவப்பழகு பூசுமருந்துகள்(கிறீம்) கிடைக்கின்றது. அதனைப் பூசி சிவாஜி ரஜனிபோல் வெள்ளையாக மாறியவர்கள் இருக்கிறார்கள். இந்த மருந்துகளை விட சீனமருத்துவம் இன்னொரு மருந்தை சிபாரிசு செய்கிறார்கள்.

உங்கள் முகம் சிவப்பழகாக மாற நண்பர் நிர்ஷன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்கு தருகின்றேன். செய்முறை விளக்கம் ஒன்றும் தேவைப்படாது என நினைக்கின்றேன். காரணம் ஒவ்வொரு படமும் மிகவும் அழகாக என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

டிஸ்கி: இதனை நீங்களும் செய்துபார்த்து முகம் சிவப்பாக வந்தால் எனக்குச் சொல்லவும் வேறு பின்விளைவுகளுக்கு நண்பர் நிர்ஷனை அனுகவும்.







6 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

நீங்க சொன்னதை எல்லாம் உண்மை என்று யாராவது செய்து தொலைக்கப்போகிறார்கள்

நம்முடைய பிறப்பு நிறத்தை மாற்றவே முடியாது, எனவே போலி விளம்பரங்களை கண்டு பணத்தை வீணாக்க வேண்டாம். மேலும் இப்படி தயாரிக்கப்படும் க்ரீம்களால் தோல் சுருக்கம், அலர்ஜி எல்லாம் ஏற்பட்டு 'முதலுக்கே மோசமான நிலை' ஏற்படுகிறது.

ஆனால் காம்ப்ளெஷனை பொலிவாக்க சில சின்ன சின்ன சிகிச்சைகள் செய்யலாம். தினமும் உடற்பயிற்சி செய்தல் தோலுக்கு இயற்கையான glow தருகிறது.

காட்டாறு சொல்வது:

பாவங்க.. கரப்பான் பூச்சி என்ன பண்ணிச்சி?

சைனீஸ்ல என்ன எழுதியிருக்காங்கன்னா... இது மாதிரி பதிவு எழுதி பெண்களை ஏமாத்த முடியாதுன்னு... சும்மா... வம்பு. :-)

கருப்பன் (A) Sundar சொல்வது:

பெண்களுக்கு கரப்பான் பூச்சி... ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியா???

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வணக்கம் வந்தி.
படங்களை பதிவிலேயே இட்டுவிட்டீர்கள். ம்ம்ம்.. சீனப்பழங்குடியினரிடம் இவ்வாறான வழக்கங்கள் உண்டு. கடலின் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் வாழும் கடல் உயிரினங்களின் செதில்களைச் சேமித்து குறிப்பிட்ட சில காலம் மூலிகைகளுடன் கலந்து வைத்திருந்து மேனியில் பூசி அழகு பார்ப்பதும் இன்னும் வழக்கத்திலுள்ளது.

வந்தியத்தேவன் சொல்வது:

ரம்யா. காட்டாறு, கருப்பன், நிர்ஷன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்,

//கருப்பன்/Karuppan said...
பெண்களுக்கு கரப்பான் பூச்சி... ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியா???//

ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியல்ல தேள்

மங்களூர் சிவா சொல்வது:

enna solla??

kali muthi pOchu.