தினக்குரலில் வந்தியத்தேவனின் உளறல்கள்.

தினக்குரலில் வந்தியத்தேவனின் உளறல்கள்.இன்றைய ஞாயிறு தினக்குரலில் என்னுடைய வலையைப் பற்றி நண்பர் க.தே.தாசன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது. சென்ற வாரங்களில் டொக்டர்.முருகானந்தன், பிரபல எழுத்தாளர் உடுவை, இலங்கை வலைப் பதிவாளர்களில் மிகவும் பிரபலம் பெற்ற மாயா ஆகியோரின் வலைப்பதிவுகளுக்கு அடுத்ததாக என்னுடைய வலைப்பதிவும் வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

தினக்குரலுக்கும் தாசனுக்கும் மிக்க நன்றிகள்.

சும்மா இணையத்தில் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்த என்னை ஏதாவது எழுது எனத் தூண்டிய இனிய தமிழக உறவுகள் பூக்குட்டி, லக்கிலுக் ஆகியோருடன் புலம் பெயர்தேசத்தில் வாழும் இன்னொரு உறவான லீனா அண்ணாவுக்கும், கானாப் பிரபாவுக்கும் நன்றிகள்.

இலங்கையிலிருக்கும் அனைத்து வலைப்பதிவாளர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தம்பி மாயாவுக்கும்(எனக்குப் வலைஉலக தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தவர்) ந‌ன்றிகள்.

அத்துடன் ஊக்கம் கொடுத்த வர்மா அவர்களுக்கும் நன்றிகள்.

மேலும் இணையத்தில் எனக்கு பின்னூட்டம் இட்டத்துடன் தனிப்பட்ட முறையில் ஊக்கமும் பாராட்டுக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.

15 கருத்துக் கூறியவர்கள்:

மாயா சொல்வது:

வாழ்த்துக்கள் தோழரே :)

Anonymous சொல்வது:

வாழ்துக்கள்!!

கானா பிரபா சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்

தாசனின் புண்ணியத்தில் உங்கட படமும் பார்த்தாச்சு

Unknown சொல்வது:

இனிய நல்வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்...!

வந்தியத்தேவன் சொல்வது:

மாயா, மயூரேசன்,பிரபா,ரிஷான் ஷெரீப் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

//தாசனின் புண்ணியத்தில் உங்கட படமும் பார்த்தாச்சு//
என்ன லொள்ளா? இதுதான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு அழகான(?) படம்.

லெனின் பொன்னுசாமி சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியண்ணா..:)

Anonymous சொல்வது:

அன்புத் தம்பி இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும்.

தொடுவாய்......

பூக்கடையின் வாசம் இப்போ நாட்டையும் தாணி மணக்கிறது.

மீண்டும் வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி. பணி தொடரட்டும்.

பகீ சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்

லக்கிலுக் சொல்வது:

'சான்றோன் எனக்கேட்ட தாய்' நிலையில் இருக்கிறேன் நண்பா. மேன்மேலும் தங்கள் புகழ் தமிழ் போல் வளர வாழ்த்துக்கள்!!!

வந்தியத்தேவன் சொல்வது:

அன்புத் தம்பி பூக்குட்டி உன்னுடைய உதவியில்தான் என்னுடைய வலை கொஞ்சமேனும் அழகாக இருக்கின்றது, நன்றிகள்.

லீனா அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்,

நிர்ஷன், பகீ வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள்.

லக்கி ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் கொடுத்த ஊக்கத்துக்கும் கருத்துக்களுக்கும் என்றென்றும் நன்றிகள்.

Anonymous சொல்வது:

பெரியபங்கு, எனக்கும் பங்குக்கும் நன்றி கூறாததால் இந்த முறை பங்கில் உங்க பங்கு குறைவு தான் என சொல்லிக்க விரும்புறோம்.. கிகிகி


பெருமையா இருக்கு வந்திண்ணா :)

ARV Loshan சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி.
அது சரி, இந்த டெர்ரர் படத்தை என் தெரிவு செய்தார்கள்? ;)

உங்களது அருமையான வேறு பதிவொன்றைப் பத்திரிகையில் இட்டிருக்கலாம்..

மகிழ்ச்சி என்னவென்றால் கல்வியினால் கொஞ்சக்காலம் பதிவிடாமல் இருந்த உங்களுக்கு இது நல்ல ஒரு பூஸ்ட் என நம்புகிறேன்.. :)

Bavan சொல்வது:

வாழ்த்துக்கள் குரு..;)))

SShathiesh-சதீஷ். சொல்வது:

வாழ்த்துக்கள் மாமா. லண்டனில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் பதிவெழுத இருக்கும் என் மாமனை நினைத்தால் மனது புல்லரிக்கின்றது.