காவலன் ஜெயந்தி

 இலங்கைப் பதிவுலக அதிகார மையத்தின் தலைவரும், பீப்பீமாமா, தலை, மங்காத்தா, வண்டிமாமா , அக்கா என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படுபவரும் பெண் பெயரில் எழுதி வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் எங்கள் அருமை அண்ணன் மாலவனுக்கு (நீருஜா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் தலைவர் பற்றிய சில ஞாபகச் சிதறல்கள். 

 தன் சொந்த நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் சில்க் கட் பேர்ப்பிளையும் சிமிர்னோவையும் விட்டு விட்டு புலம் பெயர் தேசத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிவந்த ஒரே ஒரு நாட்டுப்பற்றாளன் இவர்.

 இந்துக்களின் முழுமுதல் கடவுளாகிய பிள்ளையாரைப் போல உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் விசாலமானவர்.

 நாதஸ்வரம், ரம்பெட் போன்ற ஊதுகுழல்களின் தாய் பூவரசமிலைக் குழல் என்பதை இன்றைக்கும் மறக்காமல் அடிக்கடி பூவரசமிலைக் குழல் ஊதி பீப்பீ மாமா என யாழ்ப்பாணத்தில் பட்டம் பெற்றவர்.

 ஃபோர்ஸ்க்யூரில் தான் எங்கே நிற்கின்றேன் என்பதை நண்பர்களுக்கு மட்டுமல்ல தன் நேசத்துக்குரியவருக்கும் அடிக்கடி நினைவூட்டுகின்றவர்.
லண்டன் பிக்காடிலி சேர்கஸின் பெருமைகளை சதீஸுக்கு விளங்கப்படுத்தி சதீஸை சில நாட்கள் பிக்காடிலி பைத்தியம் பிடிக்க வழி சமைத்த வழிகாட்டி எங்கள் மால்ஸ்.

 உலகில் பயணம் செய்ய எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் புகை வண்டியில் பயணம் செய்வதே இவர் ஸ்டைல்.

 குழந்தைப் பிள்ளைகளால் குண்டு மாமா, வண்டி மாமா, தொந்திமாமா என அன்பாக அழைக்கப்படுகின்றவர் எங்கள் மால்ஸ்.

 தன் தொந்தியும் தலை அஜித்தின் தொந்தியும் ஒன்றெனச் சொல்லி இப்போ புதிதாக மங்காத்தா எனவும் பட்டம் பெற்றுக்கொண்டவர்.

 பெண்களின் காவலனான அனுதினனின் காவல் குரு இவர். தன்னுடன் படித்த வேலை செய்கின்ற பெண்களை பத்திரமாக பஸ் ஏத்தி சிலவேளைகளில் அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிலையம் வரை சென்று பாதுகாப்புக்கொடுப்பதில் இவர் ஒரு கறுப்புப்பூனை.

சீதனக் கொடுமைகளை புலோலியூறாக எடுத்தியம்பிய ஜாவாப் பாரதி இவர்.

 நண்பர்களுடன் குறிப்பாக புதுமாப்பிள்ளை சித்தப்பூவுடனும் நவீன வாத்ஸ்யாயனர் மதுவுடனும் வேலை செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அலுவலகத்திலையே ஜாவாவுடன் குடும்பம் நடத்துகின்றார்.
அண்மைக்காலமாக சித்தப்பூ கோ ஜீவா போல் மாறியதால் மாலின் வண்டவாளங்கள் அலுவலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
அன்னக்கிளி உன்னைத் தேடுது மற்றும் அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க... மால்ஸின் மனம் விரும்பிய பாடல்கள்..

 நண்பர் லோஷனுடன் போட்டிக்கு குனிந்தபடியே தன் கால் விரலை இலகுவாகத் தொட்டு சாதனை படைத்தவர், (லோஷனுக்கும் அடி சறுக்கும்).

 நீரூஜா என்ற புனைபெயரில் எழுதி புல்லட் மருதமூரான் இருவரையும் மையல் கொள்ளவைத்த பெருமை எங்கள் அக்காவிற்கே சேரும். 

அண்மையில் பெந்தோட்டையில் கடல்குளியலுடன் சித்தமருத்துவ
முறைப்படி மணல் குளியலும் குளித்த கோமகன் எங்கள் மால்ஸ். 

அண்மையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதி இவரைப் பாடாய்ப்படுத்துகின்றது.


கடைசியாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர் சந்திப்பில் அன்னாசி ஜீஸ் குடிச்சும் பின்விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தப்பிய ஒரே ஒரு ஜீவராசி இவர் தான்.

தன் பிறந்தநாளை ஒட்டி பிறந்தநாளுக்கு முதல் நாள் (நேற்று), இன்று, நாளை என மூன்று நாட்கள் நண்பர்களுக்கு விருந்து தந்து அசத்திக்கொண்டிருக்கின்றார்.


மீண்டும் அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரூண்டி வாழ்க நண்பா.

8 கருத்துக் கூறியவர்கள்:

கன்கொன் || Kangon சொல்வது:

:D
கலக்கல் மாமா.

அதிகாரமையத் தலைவர் மாலவன் அண்ணருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மயூரேசன் சொல்வது:

//பெண்களின் காவலனான அனுதினனின் காவல் குரு இவர். தன்னுடன் படித்த வேலை செய்கின்ற பெண்களை பத்திரமாக பஸ் ஏத்தி சிலவேளைகளில் அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிலையம் வரை சென்று பாதுகாப்புக்கொடுப்பதில் இவர் ஒரு கறுப்புப்பூனை.//
இந்த மாட்டர் எங்களுக்குத் தெரியாதே?? :D ஹி...ஹி.. ;)

ADMIN சொல்வது:

நகைச்சுவையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்தது பதிவு..!!


>>>கடைசியாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர் சந்திப்பில் அன்னாசி ஜீஸ் குடிச்சும் பின்விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தப்பிய ஒரே ஒரு ஜீவராசி இவர் தான்.<<<<

நகைச்சுவை வரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பகிர்வுக்கு நன்றி..!!

Bavan சொல்வது:

எங்கள் காவல் தெய்வத்துக்கு, நடமாடும் உருளைக்கிழங்கு நிருசா அங்கிளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))

எத்தனையாவது ஜெயந்தி விழா என்று குறிப்பிடாமைக்கு கண்டனங்கள் :P

இப்படிக்கு
அண்ணனின்/அக்காவின் அடிபொடிகள் :P

ARV Loshan சொல்வது:

அட மாமா.. பதிவு???
ஆச்சரியமாக் கிடக்கு..

எங்கள் காவல் கிழங்கு இனிதாகப் பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடியது :)
மீண்டும் வாழ்த்துக்கள்.

தகவல் எல்லாம் சும்மா விரல் நுனியில் வச்சு அசத்துறீங்கள்.

தன் தொந்தியும் தலை அஜித்தின் தொந்தியும் ஒன்றெனச் சொல்லி இப்போ புதிதாக மங்காத்தா எனவும் பட்டம் பெற்றுக்கொண்டவர்.//
ஹா ஹா

ஆனால் போகிற போக்கில் இன்னும் சிலரையும் கலாய்த்தத்ர்குப் பதில் எங்காவது வரும் கவனம் ;)

Subankan சொல்வது:

//அண்மையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதி இவரைப் பாடாய்ப்படுத்துகின்றது.
//

ஓகோம், ஏர் பாக் இருந்தால் சீற் பெல்ட் தேவையில்லை எண்டு எவ்வளவு சொன்னாலும் இலங்கைப் போலீசுக்குப் புதியுதே இல்லை எண்டு கவலைப்பட்டவர் :p

அன்புடன் மலிக்கா சொல்வது:

இனிய வாழ்த்துகள்..

http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html

rishvan சொல்வது:

ண்ணருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com