முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.
அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.
மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.
கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.
டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?
பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.
டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்
லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?
வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்
லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.
கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.
டொன்லீ : அருள்மொழிவர்மனாக லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.
வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.
கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?
வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,
வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து
கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.
லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,
ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.
நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.
வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.
கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?
டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.
அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.
வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.
தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென
கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.
வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.
கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.
மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.
வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.
கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.
மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?
லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.
கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?
டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.
கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.
வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.
லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.
வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.
ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.
கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.
லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.
டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.
நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.
லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.
கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.
வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.
வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்
லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.
பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.
லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி
கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.
மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்
லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.
டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.
கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.
டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.
கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.
ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?
வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.
லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.
எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
23 கருத்துக் கூறியவர்கள்:
வாவ். நான் எதிர்பார்த்ததை விட நல்லா வந்திருக்கு :-)
// கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா? //
:-|
:))))
பொன்னியின் செல்வன் என்றால் என்ன?
Superb
எனக்குக் கதாநாயகியைப் போடாமல் புறக்கணித்த உங்களுக்காக இந்தப் பதிவையும் புறக்கணிக்கிறேன் :P
வாவ்.. மாமா கலக்கிட்டீங்கள்..
கல்கியின் ஆவியை விடுங்கோ.. பொன்னியின் செல்வனின் ஆவியென்று ஒன்றிருந்தால் அது முதலில் உங்களை மன்னிப்பதாக..
பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்..
தமன்னா, அமலா பால், பூனம்.... எல்லாத்தியும் கேட்க சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவைப் பார்த்து சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருதுங்கோவ்.. :)
//வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம். //
இதோ ஆதாரம்.. நன்றி மாம்ஸ்.. :)நீங்கள் ஒரு தெய்வம்.
//லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.// ஐந்தாம் திகதியுடன் மஹேல வந்தால் இந்தக் கூற்று வாபஸ் :)
LOSHAN
www.arvloshan.com
:)
அருள்மொழிவர்மனைத் தான் பொன்னியின் செல்வன் என்கின்றார்கள். லோஷனோ இளம்பெண்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர், உங்கள் படத்தின் தலைப்போ கன்னியில் செல்வன் இதில் ஒரு உள்குத்தும் இல்லையா?
மிக அருமை. :D :D
// Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
மிக அருமை. :D :D
//
அப்ப பாருங்கோவன் :D
அவ்வ்வ் என்னை பேசாம பழுவேட்டரையரின் வாளுக்கு இரையாக்கியிருக்கலாம்
அமலாவும் நந்தினி கரெக்டருக்கு எடுப்பா இருப்பா தானே வேணுமெண்டா நாகர்ஜீனாவோட நான் பேசிப்பார்க்கிறன்
நானே வில்லனாகவும் நாயகனாவும் நடிக்கேலாதோ? வேணுமெண்டா மூஞ்சியில் ஒரு கறுத்த பொட்டு மச்சம் வைக்கிறேன்
//நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.//
முதல்வரியை வாசிக்கும் போதே என் மனதில் ஓடியதை அப்படியே போட்டிருக்கிறீங்கள்
//பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்//
சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்க என்ன தேவை #டவுட்டு
//லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி//
அவ்வ்வ்வ்
//வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பாண்டிய மன்னனுக்கு யாருமே இல்லையே!!! அந்த character எனக்கு ok..... நந்தினிக்காக......
:)
தாமதத்திற்கு மன்னிக்கணும் நல்ல கலக்கல் பதிவு அண்ணே
கோபிக்கு நாடகத்திலையாவது ஒரு பொண்ணை சோடியாக்கியிருக்கவேண்டும் அவனும் பாவம்தானே
தாமதத்திற்கு மன்னிக்கணும் நல்ல கலக்கல் பதிவு அண்ணே
கோபிக்கு நாடகத்திலையாவது ஒரு பொண்ணை சோடியாக்கியிருக்கவேண்டும் அவனும் பாவம்தானே
//ஆதிரை சொல்வது:
பொன்னியின் செல்வன் என்றால் என்ன?
//
சேம் டவுட்டு..:P
//லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.//
அண்ணே பிட்சா பெட்டு பிடிப்பமா?..:P
எப்ப வந்தியண்ணா இம்புட்டும் நடந்தது... பாவம் மணிரத்தினம்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
அண்ணா பாத்திங்களா பாத்திங்களா உங்க சந்திப்பொன்றிலும் நான் இல்லை என்பதற்காக தங்கள் படத்தில் நான் வெளிநடப்பா...
நானும் ஒரு இலங்கை பதிவர் தானுங்கோ ஹ..ஹ..ஹ..
>முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.
பொறுத்திருந்து பார்த்துக் களைத்துப் போனேன். எங்கே அந்த அடுத்த non -மொக்கைப் பதிவு?
Post a Comment