விரோதி

இன்னும் சிறிது நேரத்தில் விரோதி என்னும் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. பெயரே பயங்கரமாக இருக்கின்றது. இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அகில உலகமே ஈழத்தமிழர்களின் அவல‌த்தை வெளியுலகிற்க்கு கொண்டுவந்துள்ளது.

சகல இடங்களிலும் ஏதோ ஒருவகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் வடக்கு கிழக்கில் கொடிய யுத்தத்தாலும், ஏனைய இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் தமிழர்கள் கஸ்டப்படுகின்றார்கள்.

புலம்பெயர் நாடுகளில் கொட்டும் மழையில் மத்தியிலும் உறவுகளுக்காக குரல் கொடுக்கின்றார்கள்.

ஆகவே இப்படியான ஒரு சூழ்நிலையில் புதுவருட வாழ்த்துக்கள் என்பது வேண்டப்படாத ஒரு விடயம்.

க‌டந்த பல வருடங்களாக சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி நின்றோம் ஆனால் இதுவரை அவை இரண்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராமல் இம்முறையும் வேண்டி நிற்போம், நம்பிக்கைதான் வாழ்க்கை.

பின் குறிப்பு : இது எண்ணிக்கையில் எனது நூறாவது பதிவு.

6 கருத்துக் கூறியவர்கள்:

ஆயில்யன் சொல்வது:

//க‌டந்த பல வருடங்களாக சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி நின்றோம் ஆனால் இதுவரை அவை இரண்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராமல் இம்முறையும் வேண்டி நிற்போம், நம்பிக்கைதான் வாழ்க்கை//

எதோ ஒரு அதிசயம் நிகழத்தான் போகிறது.தமிழினம் அங்கு விடுதலை பெறத்தான் போகிறது - நம்பிக்கையோடு நாங்களும் இருக்கின்றோம் !

ச.பிரேம்குமார் சொல்வது:

//விரோதி //

பெயரே டெரராத்தான் இருக்கு :(

ஒவ்வொரு நாளும் நான் வேண்டிக்கொள்வது இதுதான்.... ‘உலகெங்கும் அமைதி நிலவட்டும்’.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...

எதோ ஒரு அதிசயம் நிகழத்தான் போகிறது.தமிழினம் அங்கு விடுதலை பெறத்தான் போகிறது - நம்பிக்கையோடு நாங்களும் இருக்கின்றோம்//

ஆயில்யன் உங்களைப்போன்றவர்களின் ஆறுதல் தரும் பேச்சுக்கள் தான் எமக்கு என்றைக்கும் நம்பிக்கையைத் தருவது,

//பிரேம்குமார் said...


பெயரே டெரராத்தான் இருக்கு :(

ஒவ்வொரு நாளும் நான் வேண்டிக்கொள்வது இதுதான்.... ‘உலகெங்கும் அமைதி நிலவட்டும்’. //


ஆமாம் பிரேம்குமார் பெயரே டெரர்தான். உலக அமைதிக்காக நாம் வேண்டிக்கொண்டால் மட்டும் போதுமா வேண்டவேண்டியவர்கள் என்றைக்கும் அதுபற்றிச் சிந்திப்பதில்லை.

வாழ்த்துக்கள் நன்றிகள்.

ARV Loshan சொல்வது:

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் !!!

‘உலகெங்கும் அமைதி நிலவட்டும்’//

நம்பிக்கையோடு இருக்கின்றோம் !

ராஜன் சொல்வது:

//இது எண்ணிக்கையில் எனது நூறாவது பதிவு//

நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...

Anonymous சொல்வது:

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்கான விரோதி ஆண்டுதான். காலத்தால் மறக்க முடியாத ஆண்டு.